Saturday, December 23, 2017

தெய்வம் உள்ளதா ?






Image may contain: 1 person

தெய்வம் உள்ளதா ? இல்லையா ?
என்பதல்ல கேள்வி?
சமுதாயம் ஆன்மீக சுயநலமிகள்
யதார்த்த இறை சக்தி மறைத்து
பரிகாரங்கள் செய்தும் இன்னல் 
இறைவன் தீர்க்கவில்லை என்ற ஆதங்கம்.
சர்ப்ப தோஷமா ?அபார்சன் தோஷமா ?
சொல்லத்தயங்கும் ஜோதிடர்கள்.
இஸ்லாமியர் செய்வதில்லை அபார்சன் .
ஹிந்துக்கள் இயற்கை உடல் அமைப்பைக்
கெடுத்து விடுகின்றனர்.
வேள்வி செய்தும் நேரடி மகனில்லை.
மனைவி இல்லா தங்க சிலை வேள்வி .
இந்திய சட்டங்கள் போல்
அனைத்திலும் விதிவிலக்கு.
தெய்வம் ஒரே ஜாதகம்
ஜோதிடர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு கடவுள் .
ஒவ்வொருக்ஷேத்திரம்
விதவித பரிகாரங்கள்.
அனைத்தும் செய்தும் விதிப்படிதான் நடக்கிறது .
கர்ம வினை யாரையும் விடுவதில்லை.
வென்றதாக காட்டுவது
ஒரு மாயை.
ஒரு கருப்பான மனிதன்
பரிகாரத்தால் வேள்வியால் வெள்ளை யாக முடியாது.
அதிகார ,பண பலம் வெல்வதென்றால்
லாலுக்கு தண்டனை ,கனிக்கு விடுதலை
சசிக்கு தண்டனை , ஜெயாவிற்கு மன்னிப்பு
இறந்த தீர்ப்பு.
நமக்கு இறைவன் தான் அனைத்தும் என்று
நம்பி வாழும் ஞானம் இல்லை.
இறைவனுக்கும் நமக்கும் இடையில்
ஒரு தரகர் தேவையே இல்லை.
பிரஹலாதனுக்கு தரகர் இல்லை.
துருவனுக்குத் தரகர் இல்லை .
வால்மீகிக்கு மரா என்ற நாரதர் வழிகாட்டி.
துளசிதாசருக்கு மனைவியின்
கோபாவேச அறிவுரை,
நந்தனார், கண்ணப்பர்,ஏகலவ்யன் ,
விதுரன் அனைவருக்கும் திறமை
நாம் இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
முழு சராணாகதி அடைய வேண்டும்.

No comments: