Friday, December 22, 2017

தியான யோகம் --கீதை

    சந்நியாசி    கர்ம  பலனை  எதிர்பார்க்க மாட்டான்.

ஆனால்    செய்ய  வேண்டிய 
 செயல்களை  செய்துகொண்டே இருப்பான்.
வேள்விகள்  செய்வதும் கர்மங்கள் செய்வதும்
அவனது   திட  சங்கல்பமாக  இருக்கும். 
   அவனே  யோகி.

 இதில்   தியான யோகம் ,
தியான சித்தி 
என்ற இருநிலைகள். 
 தியான   யோகிக்கு 
 பலன் எதிர்பாரா வினைகளைச் 
செய்ய    வேண்டும்.
தியான   சித்தி  அடைந்தவன்
செயலற்று இருக்க  வேண்டும்.

ஒருவன்   உலக   விஷயங்களில்
பற்றற்று  இருக்க வேண்டும்.
தன் கர்மங்களில் ஈடுபடும்
எண்ணங்களை  விட்டுவிட  வேண்டும்.

அப்பொழுது அவன்  யோகத்தில்
மட்டுமே கவனம் செலுத்துவான் .
அப்பொழுது அவன் யோகாரூடன் ஆவான்.

அப்படி  அவன் யோகத்தில்     மூழ்கி
தியானம் பக்குவமடைந்து
வரும்    நிலைக்கு சமாதி  நிலை
எனப்படும்.
இந்த     நிலை அடைந்த யோகாரூடன் 
அதாவது  யோகத்தின்    மூலம்
தெய்வ   நிலையை  அடைகிறேன்.

அவன்     தியான  யோகம்   விடுத்து
உலகியல் ஆசைகள், தொடு  உணர்வு ,
அனைத்தையுமே விட்டுவிடுவான்.

அவன் தன்னைத் தானே
 உயர்த்திக்கொள்ளும்
நிலைக்கு  வந்து விடுவான்.
 அவன்   தனி  ஒருவனாகி
 தனக்குத்தானே
நண்பனாகவும் ,
தனக்குத்த்தானே
  பகைவனாகவும்
தானே     அனைத்துமாகவும் 
 கருதத்   தொடங்கி விடுவான்.
தன்னைத்  தானே  வென்று
அவன்    தனக்குத் தானே  உறவினன்.

 இப்படித் தன்னைத்தானே வென்று

தெளிவான சிந்தனை உடையவன்

இன்னல்கள் , இனியவகைகள்
 புகழ்ச்சி , இகழ்ச் சி ,
அனைத்திலும்    இறைவனேயே  காண்பான்.

அவனுக்கு  கல்லும் பொன்னும் ஒன்றே.
யோகிக்கு சமாதி நிலையில்  உறுதி  இருக்கும்.

ஞானம் , அறிவியலில்    மன  நிறைவு   அடைந்து
புலன்களை வென்ற நிலை யோக நிலை.

இந்த நிலையை  அடைந்தவன் 
 நல்ல  எண்ணமுடையவன் .
நண்பர், பகைவர், அலட்சியப்படுத்துபவர் ,
நடுநிலையுடையோர்,  புண்ணியாத்மாக்கள் ,
பாவாத்மாக்கள், உற்றார் ,உறவினர்,
அனைவரையும்   சமமாகக் கருதுபவன்.
மிக உயர்ந்தவன். மகான்.

 

No comments: