Tuesday, December 26, 2017

த்யானயோகம் --கீதை

       த்யானயோகம்    என்பது 
      அளவோடு உண்பது.
    அளவோடு    வினைகளை  ஆற்றுவது,
     காலையில்   எழுவதும்  இரவில்   தூங்குவதும்
     ஒரே நேரத்தில்  முறைப்படி   செய்வதிலும்  உள்ளது.

   இப்படி  அனைத்திலும்    நியமத்தைக் 
   கடைப்பிடித்தால்
  இன்னல்    இடையூறு  இன்றி
   தியானம்    நடைபெறும்.
இதுவே  யோகத்திற்கு
 வெற்றியின்  ஆதாரமாகும் .

 ஆசைகள்   அடக்கி ஒருமனதுடன்
   தியான  நிலையில் இருப்பவன் .
  தீப ஜோதி    காற்றில்லா  இடத்தில்  அசையாத
  நிலை போன்ற    நிலையில்  அமர்வதே தியானம்.

 


      

Sunday, December 24, 2017

மனிதநேயம் வளர்ப்போம்

அனைவருக்கும்
காலை வணக்கம்.
மகிழ்ச்சியான
கிறிஸ்தவர்கள் நாள்.
மனிதநேயம் மனித சேவை, 
அனைவருக்கும் கல்வி ,
தான தர்மம் நோக்கம் பெரிது.
தெரசா சேவை, அநாதை இல்லம்
வாழ்க சஹோதரர்கள்
மதம் என்பது சேவைக்காக .
மனிதர்களின் ஒற்றுமைக்காக.
மதம் அறவழி காட்ட.
மதம் அன்பு வழி காட்ட,
மதம் மனித சேவைக்கு.
தேவனைக்கானவேண்டும்
தேவனருள் பெறவேண்டும்.
பாகவனானைக் காண வேண்டும்
பகவானருள் பெறவேண்டும்.
இறைவனிடம் கையேந்தவேண்டும்,
இவ்வுலகில் இன்பங்கள் பெறவேண்டும்.
கருத்தடை கூடாது .
கருத்துக்குத் தடை கூடாது.
ஏழைக்கு உதவவே பணக்காரர்கள்
ஆண்டவனின் படைப்பு.
தேவாசீகள் பெறுவோம்.
மதங்கள் வழிகாட்டுவது
மனித நேயத்திற்கே .
இன்சானியத் ஜிந்தாபாத்.
அவனியில் அமைதியாக ,
வையகம் வாழ மதங்கள் வழிகாட்டட்டும்.
காந்தியின் பிரார்த்தனை--
ரகுபதி ராகவா ராஜாராம்
சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !
ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !
ஹிந்து முஸ்லிம் சீக் ஈசாயீ
ஆபஸ் மென் ஹை பாஈ- பாஈ
ஹிந்துக்கள் -முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் -சீக்கியர்கள் அனைவருமே சகோதரர்கள்.
இவர்களுக்குள் சண்டைகள் ஏற்படுத்துவது
சுயநல வெறிதான்.
இன்றைய கிறிஸ்துமஸ் புனிதநாள்
மதவெறிகள் , ஜாதி வெறிகள் சுயநலம் ஒழித்து
மத மார்க்கங்கள் தனித்தனி,
ஆனால் இறைவன் ஒன்றே.
அன்பு ,சத்தியம் ,அஹிம்சை , மனிதநேயம்.
ஆகையால் மத நல்லிணக்கத்தோடு
வையகத்தை குடும்பமாக .
வையகத்தின் அனைவரையும் சகோதரர்களாகக்
கருதி அன்பும் பண்பும் அமைதி யும்
உள்ள சுவர்க்கமாக
இப்புவியை மாற்றி மகிழ்வாக வாழ
ஏசுவைத தொழுவோம். பிரார்த்திப்போம் துதிப்போம்.

Saturday, December 23, 2017

தியான யோகம் --கீதை-2


யோகி  என்பவன்  தனியாக இருப்பான்.
அவன்  மனத்தையும் ,உடலையும்    அடக்கி
ஆசைகளை  விட்டு   யாரின் கண்களுக்குப்
படாமல்  வசிப்பவன்.

  யோகி அமர்ந்து  தியானம் செய்யும்
 ஆசனம்  துணி ,மான்  தோல், தர்ப்பை
  பரப்பிய  ஆசனம்.
நல்ல தூயமான சூழல்.
புலனடக்கம் ,மன  அடக்கம்
.யோகநிலை  தியானம்.
 அந்த யோக  நிலையில்  தேகம் , தலை ,கழுத்து ,
நேராக இருக்கும். 
 நாசியின்   முனையில் அவன் 
பார்வை  இருக்கும்.
மற்ற திக்குகளில்  அவன்  பார்வை  செல்லாது.
 அவனுக்கு அச்சம் என்பதே  இருக்காது.
பிரமச்சரிய விரதம்  காப்பவன். 
அவன் சித்தம் முழுவதிலும்
ஸ்ரீ கிருஷ்ணனே  இருப்பான்.
இந்த  நிலையில்  பகவானை மட்டுமே 
,தியானத்து   அவன் அருள்  பெற்று 
முக்தி   பெற்று  சாந்தி    அடைகிறான்.

தெய்வம் உள்ளதா ?






Image may contain: 1 person

தெய்வம் உள்ளதா ? இல்லையா ?
என்பதல்ல கேள்வி?
சமுதாயம் ஆன்மீக சுயநலமிகள்
யதார்த்த இறை சக்தி மறைத்து
பரிகாரங்கள் செய்தும் இன்னல் 
இறைவன் தீர்க்கவில்லை என்ற ஆதங்கம்.
சர்ப்ப தோஷமா ?அபார்சன் தோஷமா ?
சொல்லத்தயங்கும் ஜோதிடர்கள்.
இஸ்லாமியர் செய்வதில்லை அபார்சன் .
ஹிந்துக்கள் இயற்கை உடல் அமைப்பைக்
கெடுத்து விடுகின்றனர்.
வேள்வி செய்தும் நேரடி மகனில்லை.
மனைவி இல்லா தங்க சிலை வேள்வி .
இந்திய சட்டங்கள் போல்
அனைத்திலும் விதிவிலக்கு.
தெய்வம் ஒரே ஜாதகம்
ஜோதிடர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு கடவுள் .
ஒவ்வொருக்ஷேத்திரம்
விதவித பரிகாரங்கள்.
அனைத்தும் செய்தும் விதிப்படிதான் நடக்கிறது .
கர்ம வினை யாரையும் விடுவதில்லை.
வென்றதாக காட்டுவது
ஒரு மாயை.
ஒரு கருப்பான மனிதன்
பரிகாரத்தால் வேள்வியால் வெள்ளை யாக முடியாது.
அதிகார ,பண பலம் வெல்வதென்றால்
லாலுக்கு தண்டனை ,கனிக்கு விடுதலை
சசிக்கு தண்டனை , ஜெயாவிற்கு மன்னிப்பு
இறந்த தீர்ப்பு.
நமக்கு இறைவன் தான் அனைத்தும் என்று
நம்பி வாழும் ஞானம் இல்லை.
இறைவனுக்கும் நமக்கும் இடையில்
ஒரு தரகர் தேவையே இல்லை.
பிரஹலாதனுக்கு தரகர் இல்லை.
துருவனுக்குத் தரகர் இல்லை .
வால்மீகிக்கு மரா என்ற நாரதர் வழிகாட்டி.
துளசிதாசருக்கு மனைவியின்
கோபாவேச அறிவுரை,
நந்தனார், கண்ணப்பர்,ஏகலவ்யன் ,
விதுரன் அனைவருக்கும் திறமை
நாம் இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
முழு சராணாகதி அடைய வேண்டும்.

Friday, December 22, 2017

தியான யோகம் --கீதை

    சந்நியாசி    கர்ம  பலனை  எதிர்பார்க்க மாட்டான்.

ஆனால்    செய்ய  வேண்டிய 
 செயல்களை  செய்துகொண்டே இருப்பான்.
வேள்விகள்  செய்வதும் கர்மங்கள் செய்வதும்
அவனது   திட  சங்கல்பமாக  இருக்கும். 
   அவனே  யோகி.

 இதில்   தியான யோகம் ,
தியான சித்தி 
என்ற இருநிலைகள். 
 தியான   யோகிக்கு 
 பலன் எதிர்பாரா வினைகளைச் 
செய்ய    வேண்டும்.
தியான   சித்தி  அடைந்தவன்
செயலற்று இருக்க  வேண்டும்.

ஒருவன்   உலக   விஷயங்களில்
பற்றற்று  இருக்க வேண்டும்.
தன் கர்மங்களில் ஈடுபடும்
எண்ணங்களை  விட்டுவிட  வேண்டும்.

அப்பொழுது அவன்  யோகத்தில்
மட்டுமே கவனம் செலுத்துவான் .
அப்பொழுது அவன் யோகாரூடன் ஆவான்.

அப்படி  அவன் யோகத்தில்     மூழ்கி
தியானம் பக்குவமடைந்து
வரும்    நிலைக்கு சமாதி  நிலை
எனப்படும்.
இந்த     நிலை அடைந்த யோகாரூடன் 
அதாவது  யோகத்தின்    மூலம்
தெய்வ   நிலையை  அடைகிறேன்.

அவன்     தியான  யோகம்   விடுத்து
உலகியல் ஆசைகள், தொடு  உணர்வு ,
அனைத்தையுமே விட்டுவிடுவான்.

அவன் தன்னைத் தானே
 உயர்த்திக்கொள்ளும்
நிலைக்கு  வந்து விடுவான்.
 அவன்   தனி  ஒருவனாகி
 தனக்குத்தானே
நண்பனாகவும் ,
தனக்குத்த்தானே
  பகைவனாகவும்
தானே     அனைத்துமாகவும் 
 கருதத்   தொடங்கி விடுவான்.
தன்னைத்  தானே  வென்று
அவன்    தனக்குத் தானே  உறவினன்.

 இப்படித் தன்னைத்தானே வென்று

தெளிவான சிந்தனை உடையவன்

இன்னல்கள் , இனியவகைகள்
 புகழ்ச்சி , இகழ்ச் சி ,
அனைத்திலும்    இறைவனேயே  காண்பான்.

அவனுக்கு  கல்லும் பொன்னும் ஒன்றே.
யோகிக்கு சமாதி நிலையில்  உறுதி  இருக்கும்.

ஞானம் , அறிவியலில்    மன  நிறைவு   அடைந்து
புலன்களை வென்ற நிலை யோக நிலை.

இந்த நிலையை  அடைந்தவன் 
 நல்ல  எண்ணமுடையவன் .
நண்பர், பகைவர், அலட்சியப்படுத்துபவர் ,
நடுநிலையுடையோர்,  புண்ணியாத்மாக்கள் ,
பாவாத்மாக்கள், உற்றார் ,உறவினர்,
அனைவரையும்   சமமாகக் கருதுபவன்.
மிக உயர்ந்தவன். மகான்.

 

Tuesday, December 19, 2017

அனை வரு ம் அந்தணர்

அந்தணர்   அந்தணராக
வா ழ் ந்தா ல்
அரச னு ம் அடி பணி வா ன்.
 அந்தணர்கள் அனை வரு ம்
தேவ நா கர ரி  லிபி  தெ ரி ந்து
அதி ல் எழு தப் படு ம்  ஷ் லோ கங் கள்
 படி க் க வே ண்டு ம்.
 தே வா ரம் ,தி ரு வா சகம் ,  நாலாயிர திவ்ய பிரபந்தம்  ஆகிய   ஆன்மீக நூற்களைப் படிக்க வேண்டும்.
 கே ட்க வே ண்டும்.
ந  வீ ன அறி வி யல் உலகி ல்
இவை  கூ கு ல்  யூ ட்யூ ப்
 இவற்றி ல்  உள்ளன.
 கம்ப் யூ ட்டர் வி ளை யா ட் டு
பா ர்க் காமல்   இவை களி ல்
ஈடு பட்டா ல்  தெ ய் வீ கம்  உண்டா கு ம்.
 அனைவரும்  அந்தண ரா கலம்.
 ஹீ லர் பா ஸ் கர் கு ரு
ப் ரா ஹ்ம ணீ யம் என்று
சொ ல்  லா மல்
 சி த்தர்கள்,  அந்த ணர் கள் , 
ரி ஷி  மு னி வர்கள் ஆகி யோ ரை
பி ன் பற்ற  வே ண்டும் என்பதை
சூ சகமா க  தா டி  வை த் த வன்,
கொ ட் டை  போ ட் டவன்,
  பட்டை   (விபூதி) போ ட்டவன்
 நா மம்  போ ட்டவன்
உணவு  ,உடை, சந்தியா  வந்த னம்
யோ கா  இவை களை ப் பி ன் பற்ற
வலி உறு த் து கி றா ர்.

 உடல்,  மனம், புலனடக்கம்,
மன நி லை ப்பா டு, அனை த் தி ற்கு ம்
 அந்த ஆசா ரங்கள் பி ன்பற் ற
வே ண்டு ம் .
 உணவு  சாப்பிடு ம்
மு ன் இலை யி ல்  கை யி ல் ஜலம் ஊற்றி
 சு ற்றி  உண்ண வே ண் டும்
என்பதற் கா ண  அறி வி யல் வி ளக்கம்
பா மரர் பு ரி யு ம் தமி ழி ல் வி ளக்கம்.
  கூ கு ளி ல் யூ டியூப் பி ல்
ஜா தி  மத வே று பா டு  இன்றி
கே ட் டா ல்  பு ரி யு ம்.
 வா ழ்க அந்த ணர்,
 வளர்க அந்த ணரி யம்.
 வி ளை யாட்டு  வி டு த்து  யூ டியூப்
ஆன் மீ க வழி கா ட்டு தலை
கேட்கச் செ ய் யு ங்கள்.
   பள்ளி களி ல் கா ம ஆசை களை த்
 தூ ண்டு ம்  அங்க அசை வு  திரைப் பா டல் ளை
ஆட  தங்கள் மழலை களு க்கு
  பயிற்சி  அளி க் கா தீ ர்கள்.
 மா யை  உலகி யல் வி டு த் து,
சா த் தா ன்/ சை த்தா ன்
கவர் ச்சி யி ல்  இரு ந்து
தப்ப ஆன்மீ க மா ர்க்கம்,
பஞ் சே ந் தி ரி ய அடக்கம் அதாவது வது  ஐம் பு லன்கள் அடக்கம் அவசியம்

தி ரு க் கு றள்:
 ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற் றின்
 எழு மை யு ம் ஏமாப்புடைத்து  .

   பொறி வா யி ல் ஐந்த வி த் தா ன். பொய் தீ ர்  ஒழு க்க
    நெ றி நி ன் றா ர் நீ டு வா ழ் வா ர்.

 தி ரு க்கு றள் உலகப் பொ து ம றை.
 வா ழ்க வை யகம்.
சர்வே ஜ னா சு கி னோ பவந்து.
 வை யகம்  ஒரு  கு டு ம் பம்.

சனிப்பெயர்ச்சி பலன்

இன்று சனிப்பெயர்ச்சி .
ஆலயங்களில் கூட்டம் அதிகம்.
சனி பெயர்ச்சி பூஜைகள்.
அதைவிட அதிக கூட்டம் .
நம்மை நக்ஷத்திர பலன் படி
சனி ஆட்டிவைப்பானா ?

கடவுளின் பக்தர்கள்
 பூஜை செய்கிறோம் .
பூஜை செய்வதால்
 மட்டும் பலன் கிட்டுமா ?

தங்கக்குடம் கொடுத்தவர்கள் ,
பல வேள்விகள் செய்தவர்கள்
அஸ்வமேதயாகம் செய்தவர்கள்
எல்லோருமே நம் கதைகளில் படித்த

படி பார்த்தால் அவதார புருஷர்களாக

 இருந்தாலும் இன்னல் அனுபவித்திருக்கிறார்கள்.

நமது இன்னல்களுக்கு யார் காரணம்.
கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்.
நான் படைக்கிறேன் .
 யாருடைய புண்ணிய பாவங்களையும்

 நான் கவனிப்பதில்லை.
அவன் கர்மமே அவனுக்கு தண்டனை
அல்லது
பரிசு அளிக்கிறது.
இன்பமளிக்கிறது.
 இன்னல் அளிக்கிறது.
இவற்றையும் கடந்து மனம்.
மனசஞ்சலம்.
மனதில் எழும் ஆசைகள்
 பேராசைகள் ,பொறாமை
ஆகியவைகளும்
இன்னல்களைத் தருகின்றன.

அறிவு/ ஞானம் மனிதனுக்கே உண்டு.

 அதை ஞானமுள்ளதாகவும்
 ஞானமற்றதாகவும் ஆக்குவது

ஞான சூன்யமாகவும் மாற்றுவது

அவனுடைய ஆசைகள் .கர்மங்கள்.


நாம் நம் கடமையைச் செய்யவேண்டும் .
நாணயமாக ,நடுநிலையாக ,
 மனசாட்சிப்படி
செய்யவேண்டும்.
 தான-தர்மங்கள் செய்யவேண்டும்.
இன்னலும் இன்பமும் அவன் தருபவை.

கர்ம வினைகள் போக்க நாம்
 பகவானை வழிபட வேண்டும்.

ஆனால் நம் வினைகள்

நல் வினையாக மாறவேண்டும்.
அப்பொழுது நமக்கு
 சனித்தொல்லை இருக்காது.


Monday, December 18, 2017

பகவா ன்

பகவா னே  உன் பா தம்  
     பணி கி ன் றே ன் .
பாரி னில்  நீ  வரு வது 
பி ரளயத் தி ன் போ தே .
பி ற ப்பது  அறி யவி ல் லை. 
இறப்பு  அறி ய வி ல் லை .
இரண்டு க்கு ம்  இடை யி ல் 
  வாழ்க்கை  ஓர் போ ராட்டம்.
அன்பு   மட்டு ம் போ து ம்
 என்றா ல் 
ஆசை கள் எதற்கு.
இன்ன லே  வாழ்க்கை  என்றா ல்
இறை வன் எதற்கு .
இறை வன் மு ன்
அனை வருமே  
சமம்  என்றால்
  பா வி கள்  எதற்கு?
புண் ணி யம்  எதற்கு.
நல்லவர்  நா ண
 தீ யவர் 
உயர்வு  எதற்கு?
ஒரு வர் உழை ப் பு 
பலர் உண்டு களி ப்பு.
மு து மை யி ல் தவி ப்பு. 
என்றால்  இரக்க மற்ற  
இறை வன் படை ப் பு.
கர்ம வி னை  என்ன?
கிரு ஷ் ணர்  கு சே லர்
 நட் பு  என்ன? 
உயர்வு  என்ன? 
தா ழ் வு  என்ன? 
பு ரி யா த பு தி ர்
இப் பா ரி னி ல்
பகவா னி ன் லீ லை. 
அவன ரு ளா ல்
  வை யகம் இயக்கம். 
அவன ரு ளா ல்
 வா ழ்க்கை  இன் பம். 
வை யகம் தவிர் த் து 
வை  அகம்
 வையகம் படை த்த 
வை யக நாதன் மே ல்.
கர்மம்  செ ய். 
பலன் நமக்கு
  வே ண் டி ய து  
கி டை க் கு ம்.
பகவானின் லீ லை 
மி க    நுண்ணிய  லீ லை.
அறிவது மெத்தக்கடினம்.

Sunday, December 17, 2017

சந்நியாச யோகம் தொடர்ச்சி கீதை

    யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும்  உள்ள  வேறுபாடு

யோகி  வினையாற்றுகிறான்.
ஆனால் பலனில் சற்றும்
 விருப்பமின்றி  வாழ்கிறான்.

  அவன் மனம் எப்பொழுதும்
நிறைவாக  சாந்தியாக  இருக்கும்.

உடல் வேறு .ஆத்மா  வேறு. 

தன்னை வசப்படுத்தியவன்

கர்மங்களை  எல்லாம் ஒதுக்கிவிட்டு ,

ஒன்றும்  செய்யாது

மகிழ்ச்சியாக    இருக்கிறான்.


 கர்மங்களில்    நித்திய கர்மங்கள் -
அதாவது அன்றாடம்
கட்டாயமாக    செய்யவேண்டியது.
அந்த   கர்மங்களை  செய்தால் 
 புண்ணியமில்லை,ஆனால் செய்யாவிட்டால்
 உடல்  இன்னலுறும் .
காலைக்கடன் ,நீராடுவது,வழிபடுவது .
அன்றாடம் செய்யவேண்டும்.

காரண கர்மம்--  இது  விஷேசகாலங்களில்  செய்யப்படும்
கர்மமாகும்.

காம்ய கர்மம் --விருப்பத்திற்காக பலன்களை எதிர்பார்த்து
செய்யப்படும்   வினைகள்.

நிஷித்த கர்மம்--தடை செய்யப்பட கர்மங்கள்.

இவைகளைச் செய்யவே கூடாது.

இந்த வினைப்பலன் என்பது தெய்வீகமல்ல.
இயற்கையாக இயல்பாகச்   செய்ய வேண்டியவை.

 
  பரமாத்மா இவ்வுலகில்  செய்யப்படும்
 புண்ணிய -பாபங்களை  கவனிப்பதில்லை.
   இங்கு ஞானம்   உள்ள  மனிதனின் 
அக்ஞானத்தால்  ஞானம் மறைக்கப்படுகிறது .


திருமண பந்தம்  வேண்டுமா ? வேண்டாமா ?

என்ற  வினா எழும்    போது   வேண்டும் 
என்பதே இயல்பு.  அப்படித் தன்னை
 லௌகீகத்தில்  இணைத்துக் கொள்ளும்போது

அவன் உலகியலில் கட்டுப்படுகிறான். 
சித்தார்த்தர் கட்டுண்டார் .
ஆனால் விலகிச் சென்றார்.    அவர்  யதார்த்த

நிலையில்  இருந்து ஒரு  ஆதர்சத்தைத் தேடி

 தனது அனைத்து  ராஜபோகங்களையும் துறந்தார். 
அவர் இயற்கை  பந்தத்தில்
இருந்து  விடுபட்டார். 
இதில் தான் வேதாந்த சாரம் அடங்கியுள்ள து. விவேகானந்தர், ஆதி சங்கரர்
இயற்கை ஆசாபாச பந்தங்களை விடுத்து
தெய்வீக  அதாவது அலௌகீக பந்தங்களில் ஈடுபட்டனர்.
ஸ்ரீ ரமண மகரிஷியும் அப்படியே.

சூரியன்  உதித்தால்  இருள்  விலகுகிறது.
 அவ்வாறே ஞானமும்  அக்ஞானத்தை
அளிக்கும் ஒளியாகும் .

ஆத்மஞானம்    என்பது பரபிரம்ம    ஞானமே.

  ஞானம் வந்தபின் பிரம்மமே 
அனைத்தும் என்ற  எண்ணம் 
மேலோங்கும். 
அதையே அவர்கள் புகலிடம்   என்று
பிரம்மத்தில்  உறுதியாக  இருப்பார்கள்.
 ஞானத்தால்  பாவங்களைப்  போக்கிவிடுவர்.

அத்தகையோருக்கு  மறு பிறவி இருக்காது.
 ஞானம் பெற்ற   ஞானிக்கு  தன்   மனதில்
உலகியல் படைப்புகள்  அனைத்துமே 
 சமம் தான்.
 அறிவில்    சான்றோன் 
அந்தணன்,பசு ,யானை நாய்,
நாயையே உண்ணும் கீழோன்
என     அனைத்தையும்   சமமாகவே
 நோக்குவார்கள். கருத்துவார்கள்.


மனம்  சம  நிலை அடைந்து விட்டால்
 மனத்தை உறுதிப்படுத்திவி ட்டால்,
இம்மையில்   இயல்பான
குணத்தை ,இயற்கையை 
 வென்றவனாகிறான்.
பிரம்மம்   சமநிலையுடையது. 
எவ்வித குற்றம்  குறை
   இல்லாதது. 
 ஞானிகள்  இதை  அறிந்து  பிரம்மத்தில்
நிலைத்து ஐக்கியமாகி விடுகின்றனர்.

இந்த   ஐக்கிய   ஞானம் 
 பெற்றபின்   
 அவன் குழப்ப  நிலையில்  இருந்து
  முற்றிலும்   விலகிவிடுகிறான்.

அவனுக்கு பிரியமானவைகள்
பெறுவ தால்  இனிமையும் இல்லை.
பிரியமில்லாததைப் பெறுவதால்  இன்னலும் இல்லை.

மனதில் அனைத்தும்  சமநிலை  ஆக்கியதும்
இயற்கை ,   இயல்பை ,  வென்றுவிடும்
உயர்  நிலைக்கு   வந்து  விடுவான்.

பிரம்மம்  எவ்வித மாசும்  இல்லாதது.
 குற்றமும்  இல்லாதது.   ஞானிகள்
பிரம்ம நிலையை  அடைந்து  விடுகிறார்கள்.

இந்த பிரம்மா ஐக்கிய நிலை  பெற்றவன் ,
உறுதியான  அறிவுடையவன்.
 அவன் மனநிலையில்
எவ்வித     சிக்கலும்   இருக்காது.
எவ்வித குழப்பமும்  இருக்காது.

அன்பான விஷயங்களால் ஆனந்தமடையும்
இயல்புநிலையைத் துறந்து விடுகிறான்.

அன்பில்லாத் தொடர்பால் வரும் துன்ப
இயல்பையும்    துறந்து  பிரம்மானந்தத்தில்
தன் நிலை   மறந்து    கிரியா சக்தியை
மாயையாகக் கருதி , நிஷ்கிரியா   சக்தியை 
பிரம்மமாக  ஏற்று வாழ்பவன்  தான் ஞானி.

இப்படிப்பட்ட  ஞானிக்கு   புறப்பொருள்களில்
எவ்விதப்  பற்றும்  இருக்காது.  ஆத்மாவில்
தெளிவான    ஆத்மசுகம்  பெறுகிறான்.
சமாதி  நிலையில்  பிரம்மானந்தமடைகிறான்.

புலன்களால் ஏற்படும்  போகங்களே   உலகத் துன்பங்களுக்குக் காரணம்என்ப தை   அறிந்த
ஞானிகள்   அதில் சற்றும்  நாட்டமில்லாதவர்கள்.

ஞானிகள்    பெண்ணாசையான  காமத்தை   வென்றவர்கள்.

குரோதம் ,  விரோதம்  பாராட்டாதவர்கள். பொருட்படுத்தாதவர்கள்.
ஆத்மாவில்   இன்பம்  பெற்று  ,
ஆன்ம ஒளி  பெற்று   பிரம்மமாகி 
பிரம்ம    முக்தி  பெறுபவனே  யோகி.

   இப்படிப்பட்ட ஞான யோகியின் 
மனதில் எவ்விதத்  தீய
 எண்ணங்களும் இருக்காது.
தீமைகளை   அழிக்கும் 
சக்திபெற்றவன் ஞான   யோகி.

அவனின் யோக  நிலையில்    பிராண ,அபான

வாயுக்களைச்  சமப்படுத்தி , கண்களைப் புருவங்களுக்கிடையில்  அமர்த்தி  ,
இயற்கையான புலன்களின்   இன்பம் ,
மனம் , அறிவு அனைத்தையும்   தன் கட்டுப்பாட்டில்
அடக்கி , மோக்ஷத்தை நாடுபவனே    யோகி /ரிஷி/ முனி.

இப்படிப்பட்ட ஞான யோகிகள்    வேள்வி , தவம்  என்று   ஈடுபட்டுத்    தன்னை உலகனைத்துக்கும் ஈசனாகவும்
உயிரினங்களுக்குத்   தன்னை  நண்பனாகவும்
 அறிந்து   சாந்தி அடைவதில் ஆனந்தம்  அடைகிறான்.

Friday, December 15, 2017

சந்நியாச யோகம்

  ஸ்ரீ கிருஷ்ண  பகவானின்   கர்ம யோகம் ,
ஞானகர்ம  சந்நியாசயோகம்
இரண்டையும் கேட்டு   அர்ஜுனன்
தெளிவடைய வில்லை .

  அவன் மேலும்  விளக்கம் கேட்க  ஆரம்பித்தான்.

கர்மத்தை செய்யச் சொல்கிறீர்கள்.
கர்மத்தை விட்டுவிடச் சொல்கிறீர்கள் ,
இந்த இரண்டிலும்  எது  சிறந்தது  என 

உறுதி நிச்சயக்கிப்பட்டதை எனக்குச்    சொல்லவும். என்றான். 

ஸ்ரீ கிருஷ்ணர்     மேலும்  விளக்க  ஆரம்பித்தார்.


       இதற்கு   கர்ம சந்நியாச யோகம், கர்மயோகம் ஆகிய  இரண்டுமே  மிகச் சிறப்பைத் தரக்கூடியது தான்.
 ஆனால் இரண்டையும் ஒப்பிடும்போது 
சந்நியாசத்தை  விட  கர்மயோகம்  மேலானது.

  வெறுப்பையும்  விருப்பையும் 
  மனதில்  வைத்துக்   கொள்ளாது
 இருப்பவன்
நித்திய   சந்நியாசி.
இவ்வுலக   வாழ்க்கையும் ,
அவ்வுலக   வாழ்க்கையும் 
 அதாவது  இம்மையும் ,மறுமையும்   
 சம  நிலையாக  எவ்வித  பற்றும்  இல்லாதவன் 
  எளிதாக  உலகியல்  பந்தங்களில் இருந்தும்
 விடுபட்டு  உயர்ந்த   நிலையை 
அடைந்து விடுகிறான்.
 சிறு குழந்தைகள்  தான்   
கர்மசன்னியாசமும்  சாஸ்த்திரத்தின்  ஆழ்ந்த    கருத்துக்களையும் அறியாமல்
இரண்டையும்  வேறாகக்    கருதுவர்.
 இரண்டும் ஒன்றே ஆகும். 
ஒன்றை   பின்பற்றி   இரண்டின்     பலனையும்   அறியலாம்.      அறிவினால்  இயற்கையின்      இயல்பை 
அறிவதே    சாங்க்யம்,   
 இதுவே  ஞான மார்க்கமாகும்.
கர்மயோகத்தில்   ஈடுபடாமல் 
   கர்மத்தின்    துறவறம் 
இன்றியமையாதது. 

 கர்ம  யோகத்தில்  ஈடுபட்டவன்
     தெளிவான  மனதுடையவன்.
   உடலின்பங்ககளை  வென்றவன்.
புலன்  அடக்கம் உடையவன். 
அனைத்தும்   ஆத்மாவெனக்  காண்பவன்.
   உலக  மாயையில் இருந்து விடுபட்டவன்.

   அவன்     தத்துவம்  அறிந்த   யோகி.
 அவன் தன்  ஒவ்வொரு  செயலையும் 
  தானே  செய்வதாக    அறிய  மாட்டான். 

பார்த்தல்,கேட்டல்,    தொடுதல்  ,நடத்தல், தூக்கம்,  சுவாசம்,
பேச்சு ,  என அனைத்திலும்     தன்   
தொடர்பு    இல்லை  என்று   கருதுபவன்.
   கண் மூடி தியானம் செய்தாலும்
  திறந்தாலும்
 புலன்கள்  அதன் போக்கில்
போகின்றவை  என்று அறிந்தவன்.
 ஆகையால் அவன் செயல்கள்
அவனால் செய்யப் படுவதில்லை
 என   உணர்ந்தவன். 
ஒவ்வொரு செயலின் கர்த்தா  இறைவனே  என்று     இறைவனைச் சார்ந்து 
பற்றுதல்களை புறந்தள்ளி 
   தாமரை  இலை 
தண்ணீர்     போன்று    பாவங்களில்
   இருந்து  முக்தி அடைந்து     
கர்மங்களில்  ஈடுபடுவான்.

யோகிகள்    பற்றுக்களைத்  துறந்து   
மனத் தூய்மைக்காக 
 உடல்,உள்ளம் ,அறிவால்,
புலன்களால் கர்மங்களை  செய்கிறான்.

Wednesday, December 13, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்-௬


       அபான வாயுவில் பிராணவாயுவையும் ,
பிராணவாயுவில்  அபானனையும்
ஆகுதி செய்து இவ்வாயுக்களின் போக்கைத்தடுத்து பிராணாயாமத்தில்  ஈடுபடவேண்டும்.

பிராணாயமம் செய்தால் சுவாசம் சீரடைகிறது.



  இந்த மூச்சுவிடுவதில்  நம் உள்ளத்தின் உண்டாகும் மனோபாவங்கள் வெளிப்படும்.  சாதாரண    உடற் பயிற்சி
ஓட்டத்தில் வரும்  மூச்சுக்காற்று  ஒருவிதமாக இருக்கும்.
பயத்தில் ஓடும்போது ஒருவிதம், காமத்தில் ஒருவிதம்,
கோபத்தில் ஒருவிதம் , அன்பில் ஒருவிதம், நோயில் ஒருவிதம்
என மன நிலைக்கேற்ற  மூச்சு. இதைக்கட்டுக்குள்
கொண்டுவர பிராணாயமம் தேவைப்படுகிறது.

நமது  சுவாசம் மூக்கு வழியாகவே   இருக்கவேண்டும்.

மூக்கில்   உள்  செல்லும் வாயு  அபானன் . இதை பூரகம் என்பர்.

.வெளிப்படுத்தும் வாயு   பிராணன்.  இதை ரேசகம் என்பர்.
பிராணவாயுவை உள்ளே வெளியே அடக்குதல் கும்பகம்.
 இந்த  பிராணாயாமப்  பயிற்சி முறைப்படி செய்யவேண்டும்.

  இப்படியே   வேள்விகளும்  முறைப்படி  செய்தால் பாபத்தைப்  போக்கலாம்.  முனிவர்கள் இப்படியே  வேள்வியால்    பாவத்தைப் போக்கியுளனர்.
வேள்வி செய்யாதவர்களுக்கு  இவ்வுலகமும் இல்லை.
அவ்வுலகமும்  இல்லை. வேதத்தில் பலவித வேள்விகள்
விளக்கப்பட்டுள்ளது. 
  இந்த  வேள்விகளில் பொருட்களைக்கொண்டு  செய்யும் வேள்வியை   விட ஞானத்தால்  செய்யப்படும் வேள்வியே மிக  உயர்ந்தது.  உலகியல்     கர்மம்  ஞானத்தில்  முற்றுப்பெறுகிறது.

ஞான வேள்வியை பணிந்தும் ,கேட்டும், பணிவிடைய செய்தும்  அறிந்து செய்யவேண்டும்.

அந்த ஞானம்  பெற்றால்  உலகியல் மயக்கம் ஏற்படாது.
அனைத்தையும்  ஒன்றாக  ஒரு  பரம்பொருளாகக் காண்பது
ஞானம்.   மிகப்பெரிய பாவிகளும்  ஞானம் பெற்றால் பாபா விமோசனம்  பெறுவார்கள்.  ஞானக்கனல் நமது தீய நல்ல 
கர்மங்களையெல்லாம்  எரித்துவிடும். விறகுகள் தீயில் எரிந்து சாம்பலாவது போல.
இவ்வுலகில்  ஞானத்திற்கு    இணையானது எதுவுமே இல்லை.
 ஞானம்  பெறுபவன்   மிகச் சிரத்தையுடவன். ஐம்புலன்களை  அடக்கியவன்,  பரத்தைச் சார்ந்திருப்பவன்.   அவன்  ஞானத்தால் சாந்தி அடைகிறான்.

     அறிவில்லாதவன் , சிரத்தை இல்லாதவன் ,
சந்தேகப் படுபவன் , இவ்வுலகிலும் அமைதி பெறாதவன் . அவ்வுலகிலும்   அமைதிபெறமுடியாதவன்.
அவனுக்கு எங்கும் சுகம் இல்லை. 

யோகத்தால் கர்மத்தை விட்டுவிடவேண்டும். 
ஞானத்தால் சந்தேகத்தை விட்டுவிடவேண்டும்.
ஆத்ம சொரூபத்தில் திளைத்திருந்தால் கர்மங்கள்
மீண்டும்  செய்யத் தூண்டப் படுவதில்லை.

அஞ்ஞானத்தை  விட்டு  ஆத்மாவின் ஐயத்தைப் போக்கி
 ஞானம் பெற வேண்டும்.

   ஞான கர்ம சந்நியாச யோகம்.

Tuesday, December 12, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை

     பாவத்தை அடையாதவர் யார் ? என்பதை பகவான் கூறுகிறார் --
ஆசையற்றவன்,
 பற்றற்றவன் ,
புலன்களையும்  மனதையும் அடக்கியவன்.
 செல்வங்களைத் துறந்தவன் ,
உடலால் கர்மங்களைச்செய்பவன்  ,பலனை எதிர்பார்க்காதவன் ,
எதிர்பாராமல் கிடைப்பதில் மகிழ்பவன்,
பொறாமை   இல்லாதவன் , வெற்றி -தோல்விகளைச் சமமாக நினைப்பவன் ,
நடுநிலையாளன் ,கடமையை வேள்வியாகச் செய்பவன்,
ஞான வேள்வியில் அனைத்தையும்
பிரம்ம   ஸ்வரூபமாக  நினைப்பவன் ,
ஐம்புலன்களை  அடக்குதல்,
ஐம்புலன்களிலும்  இறைவனையே காண்பவன் , கேட்டால் இறைவனின் செய்திகள், பார்த்தால் அங்கிங்கெனாதபடி  எங்கும் எதிலும்
பகவானே .
 வள்ளுவர்  கடவுள் வாழ்த்தில் -

பொறிவாயில்  ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்  என்கிறார்.

மனதை ஆத்மாவிற்காகவே   ஒதுக்குதல் , அடக்குதல்,

திரவிய யக்ஞம் , தபோ யக்ஞம் ,யோக  யக்ஞம் .
இந்த வேள்வியில் தன்னிடம் இருப்பதை எடுத்து வழங்குதல்.
ஞானத்தைக்  கொடுத்தால் ஞானம் வளரும் , திரவியம்   கொடுத்தால்  திரவியம் கிடைக்கும், ,
இந்த ஞான   வேள்வி  யின் யதார்த்தம் இதுதான்.

ஞான கர்ம சந்நியாச யோகம் -கீதை -௪.

           இவ்வுலகில்  ஞானிகளால் 
 பண்டிதன் என்று  புகழப்படுபவன்,
ஆசையற்றவன்.
 அவனது செயல்கள்
ஞானாக்னியால்    எரிக்கப்பட்டவை.
 எவ்வித உறுதிமொழி
யும்  ஏற்கப்படாதவை.
 அத்தகையோர்  வினைப்பயனை 

எதிர்பாப்பதில்லை.
 யாரையும்  சார்ந்திருப்பதில்லை.
 அத்தகையோர்    செய்யும்  கர்மம்  கர்மமாக  ஏற்றுக்கொள்ளப்  படுவதில்லை. 

ஆசிரியர்  நன்கு எழுதிய  மாணவனுக்கு
அதிக  மதிப்பெண் தருகிறார்.
  சரியாக  எழுதாத மாணவன்
குறைந்த மதிப்பெண் பெறுகிறான்.
அதிக மதிப்பெண்   பெற்ற  மாணவனின்
   பெற்றோர்கள்  மகிழ்கிறார்கள்.
குறைந்த     மதிப்பெண் பெற்ற 
மாணவனின்   பெற்றோர்கள்
வருந்துகிறார்கள். 
இதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல.
 மகிழ்வு ,வேதனைக்கு    ஆசிரியரின்
 கர்மா பொறுப்பல்ல,

Monday, December 11, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

  பகவானை  அறிய வழி என்பதை
 ஸ்ரீ கிருஷ்ணன்  கூறுவது;-

பக்தனுக்கு  வினை யாற்றுவதில் 
 வினைப்பலனில்  
கடுகளவிலும்  ஆசை
   இருக்கக் கூடாது.
  கர்மங்களில் ஈடுபடுவதால் 
கர்மபலனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
கர்ம பலனானால்
 ஆசைகள் அதிகரிக்கின்றன.
 பகவான் கர்மங்களுக்கும் 
ஆசைகளுக்கும் அப்பாற்பட்டவர்.
அவ்வாறே  பகவானின் வடிவை
அருளைப் பெற விரும்புபவர்கள்
ஆணவமற்று,ஆசையற்று  இருக்கவேண்டும்.
எந்த கர்மங்களும் கட்டுப்படுத்தக்  கூடாது.

     முமுக்ஷு என்று முடிக்கிறவனுக்குக்
கொடுத்திருக்கும் லக்ஷணங்கள் ,
அவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு
ஸாதனையில் உச்சிக்குப் போனவன் என்று
 
   தன்  தெய்வத்தின்  குரலில்  மஹா பெரியவா கூறுகிறார்.
அந்த முன்னாளைய முமுக்ஷுக்கள்  இதை அறிந்தே
கர்மங்களைச் செய்தனர்.
இப்படி தொன்று தொட்டு வரும் முறையையே
ஸ்ரீகிருஷ்ணர்    அர்ஜுனனுக்கு சொல்கிறார்.
 மனம் என்ற ஒன்று இல்லை
என்ற   நிலைக்கு  வரவேண்டும்.
 கர்மங்களில்  ஆசைகள் இருக்கக் கூடாது.

  மனிதர்களுக்கு  கர்மம் எது
?அகர்மம் எது ? என்று தெரிவதில்லை.
 ஞானிகளே   இவ்விஷயத்தில்   தெளிவடைவதில்லை.
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மங்களைப் பற்றியும் ,
கேடுகளில் இருந்து விடுபடுவது பற்றியும்   விளக்குகிறார்.

  நாம் செய்யும் கர்மத்தின் போக்கைத் 
தெரிந்து  கொண்டால் ,
விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரிந்துவிடும்.
இதில்  கர்மம்  என்பது 
 உடலால் நடைபெறும் செயல்களாகும் .

அகர்மம் என்பது ஞானத்தால் செய்யபடுவது.
  சரீர கர்மங்கள் சில இயற்கையாக ஏற்படுவது,
அதில் சில காலைக்கடன் போன்றவை
  கட்டாயம் கழிக்கக் கூடியது.
இதைத் தடுக்க முடியாது.
ஆனால்  பாலின  கவர்ச்சி என்பதைக்
 கட்டுப்படுத்தலாம்.
வீணாக ஒழிந்து ஒட்டு கேட்கக் கூடாது.
தீயவைகளைப்பேசி  பரப்பக்கூடாது.
என்று புலன்களைக் கட்டுப்படுத்தும் போக்கில் 
நாம்  நம் கர்ம வினைகளின் நல்ல
தீய போக்கை அறிந்துகொள்ளலாம்.

 மாற்றான் மனைவியை நோக்குதல் சரீர பாவம்.
  அவதூறு பொய்யாக பரப்புதல் நாக்கின் தவறு .
 இதை எல்லாம்  நாம்  தவிர்த்து  ஆசையில்லாமல்
இருப்பதையே  முமுக்ஷுக்கள் செய்து முக்திபெற்றனர்.
 ஞானம் பெற்றனர்.

 கண்ககள் நல்லவைகளைப் பார்க்கும் போது
 நம்  செயல் போக்கு நமக்கு உணர்த்தும் .
 தவறான பார்வை  கெட்டபார்வை என்பது
 எதைப்    பார்க்கக் கூடாதோ அதைப்பார்ப்பது.
 ஞானத்தால் செய்யப்படும்    செயல்  அறிந்தே   செய்யப்படுவது.

அறிந்தே செய்யப்படும் காரியங்களின்
போக்கில்   நமது தீய வினை  புரிந்து விடும்.

ஊழல் புரிந்து பணம் சேர்ப்பது , அறிந்து பொய் பேசுவது ,

கையூட்டு பெறுவது, கடமையில்  கவன மின்மை,

 அலட்சியப்போக்கு , நேர்மையற்ற செயல் இவை
 தெரிந்தே   செய்வது. இதில்  வெற்றி  கிட்டினாலும் 
ஆண்டவனின்  தண்டனையில் இருந்து தப்ப    முடியாது.


ஆகையால் நமது வினைகள் உடலாக இருந்தாலும் சரி ,
அறிவால்  செய்யப்படும்  கர்மமானாலும் சரி 
அதன் தன்மையை ஸ்ரீ கிருஷ்ண பகவான்   அறிந்து
அதற்கேற்றபடி    அருள் புரிவார்  என்பதே
இந்த கர்ம   வினைப்  பயனாகும்.

கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில்  கர்மத்தையும் காண்போன்  மக்களுள்  மேதாவி.
அவனே  யோகி.
அவனே   எல்லாம்  செய்து  முடித்தவன் .
என்று ஸ்ரீ பகவானே அர்ஜுனனுக்குத் 
 தெளிவு படுத்துகிறார்.

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை 

  வழிபடுவது என்பது  எளிதல்ல.
ஒவ்வொருவரும்  ஆண்டவனிடம்
ஒவ்வொருவித  வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு  பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை  அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின்  கருணை    என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான்  அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின்  கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி  சரணம் . நானே உன்    குழந்தை .
எனக்கு  நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே   மாயை.
கர்மவினைப்படி  இறைவா!
என்னைப்படைத்த  நோக்கம் அறிந்தவன்  நீ.
உன் விருப்பப்படி   என்னை    வழி நடத்திச்  செல்.
 என்று முற்றிலும் அவனை நம்பி 
   எவ்வித  ஆசையும் இன்றி  ஆத்மஞான  பிரார்த்தனை. முடியுமா ?
இதையெல்லாம் கண்காணித்தே 
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
 கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை  அளிக்கிறார்.

   தங்கள் கர்ம   பலனை  உடனடியாக  பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
 உலகில்  பணியாற்றியதும்  ஊதியம்
கிடைக்கிறது. 
  வழிபடாமல்  எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில்     இருக்கிறார்கள் .
 
 இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம்  .பலவிதத்தில் இறைவன்
 ஆராய்ந்து  உயர் ,  தாழ்     நிலைகளில் 
வைப்பதாக
 ஸ்ரீ கிருஷ்ண    பகவான்   தான் தான்
  அனைத்தும்   என்கிறார்.


  அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
 ஆகியவற்றின்  அடிப்படையில்     நான்கு 
வர்ணங்களைப்  படித்ததாகக்
கூறுகிறார்.  ஆனால் நிறம் கொண்டு  பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே  பிரிக்கிறார்.

ஞான கர்ம சந்யாச யோகம் --கீதா-௧.


ஞான கர்ம  சந்நியாச யோகம்.௧.


ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யோகத்தை 
 விவஸ்வானுக்கு  கூறியிருந்தார்.


இதை  விவஸ்வான் மனுவுக்கு கூற ,
மனு இக்ஷவாகுக்குக்  கூறினான்.
விவஸ்வான்  சூரியன்.
மனு ஸ்ம்ரிதியை  இயற்றியவர்.
மனு தன்  புத்திரன்  இக்ஷவாக்குக்குக் கூறினான்.
இக்ஷவாகு சூரியகுலத்தின்   முதல் அரசன்.
 இந்த ஞான கர்ம சந்நியாச யோகம்
இகபரஸௌபாக்கியத்தை  அளிப்பது.
வையகம் காக்கும்  பூபாலகர்களுக்கு  வலிமை தருவது.
இது பரம்பரையாக  வந்துள்ள ராஜரிஷிகளுக்கு
தெரிந்திருந்தது. காலப்போக்கில் வழக்கழிந்த  இந்த
யோகத்தை  பக்தனும் தோழனுமாகிய
அர்ஜுனனுக்கு  ஸ்ரீ க்ரிஷ்ணபரமாத்மர்
மீண்டும் உபதேசித்தார்.
இந்த யோகம் தகுதியில்லாதவர்களுக்கு 
என்றைக்கும்
மறை பொருளாகவே  இருக்கும்.

அர்ஜுனனுக்கு சந்தேகம்.
ஸ்ரீ கிரிஷ்ணருக்கு முன்பே
விவஸ்வான்  பிறந்துள்ளான்.
அவருக்குப்பின்பே பிறந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர்,
ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு எப்படிக் கூறியிருக்க முடியும்.?

அர்ஜுனனின் ஐயம் போக்க  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறினார் :-

நானும் பல பிறவிகள் எடுத்துள்ளேன்.
நீயும் பல பிறவிகள் எடுத்துள் ளாய்.
அனைத்தும் அறிந்தவன்  நான்.
அவதார புருஷனாகிய கிருஷ்ணருக்கு
அனைத்தும் தெரியும்.
ஸ்ரீ கிருஷ்ணர்  இறைவன்.
இறைவனுக்கு பிறப்பும் இல்லை.
இறப்பும் இல்லை. ஆனால்
அவர் அவதரிப்பதன் அதிசயம் ஏன்?
என்று நாம் நினைப்போம் .
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே பதில் அளிக்கிறார்.
நாட்டில் ,உலகில்  தர்மம் அழிந்து அதர்மம்
தன்  எல்லை கடக்கும்போது
பாரதத்தைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர்

 ஆத்மமாயையால்   அவதரிக்கிறார்.
நல்லவர்களைக் காப்பதற்கும்
தீயவர்களை ஒழிப்பதற்கும்
தர்மத்தை நிலைநாட்டவும்
ஒவ்வொரு யுகத்திலும்
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரிக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரின்  தெய்வீகப்
பிறப்பை அறிந்தவர்களுக்கு
இவ்வுலகை விட்டு நீங்கிய பின் 
மறு பிறவி என்பதே இல்லை.
ஆசை ,பயம்,கோபம்  ஆகியவை
அவர்களிடமிருந்து
தானாக வெளியேறிவிடுகிறது.
அவர்கள் ஞானம் பெற்று ,
பவித்திர ஆத்மாக்களாக
இறைவனின் இயல்பையே அடைந்து விடுகின்றனர் .

என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
அர்ஜுனனிடம் கூறினார்.









Sunday, December 10, 2017

கர்மயோகம் ..பகவத்கீதா.௧௨

  அர்ஜுனன்  ஸ்ரீ  கிருஷ்ணனிடம்  மனிதன்
 விரும்பா விட்டாலும்
  ஈன  பாபச் செயலில் ஈடுபடுவது ஏன்?
 என்று  வினவ, பகவான் பகர்கிறார்..


      ரஜோ குணத்தில்  காமம் என்பது
   மிகவும் அபாயகரமானது.
  குரோதம்  அதனுடன்   இணைந்தால்
  பெரும் பாவம் செய்யத்   தூண்டி  விடும்.
 ஆகவே காமமும் குரோதமும்  எதிரி
என்பதைத் தெரிந்து கொள்.


 அவைகளை மனதில் இருந்து அகற்றி விடு.

  புகை சூழ்ந்த நெருப்பு,
 தூசி  படிந்த  கண்ணாடி ,
,கருப்பையினால் மூடிய சிசு,.

இவைகளைப் போல
 ஞானம் ஆசையினால்
மூடப்பட்டிருக்கிறது.
ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.
 அதை அணைத்து விட வேண்டும்.
 கரு மேகம்  சூரியனை  மறைத்து  விடுகிறது.
அவ்வாறே காமம் என்ற மாயை
கடவுளை மறைத்து விடுகிறது.
ரஜோ குண ஆசை களை முயற்சி  செய்து  வென்று விடலாம்.

தமோகுண ஆசைகள் கருப்பையில்
இருக்கும் குழந்தை போன்றது.
அதைப்போக்க காலமும் ஆயத்தமும் அவசிய மாகிறது.


அதை சுத்தப்படுத்தவேண்டும்.
இந்த மாயைகள்   அகன்றால்
 ஞானமும் வைராக்கியமும் உண்டகும்.
அதன்  பயனால் பகவானின் தரிசனம் கிட்டும்.


  அதை அகற்றிவிட்டால் ஞானம் வந்துவிடும்.
ஐம்புலன்கள் ,மனம்,  அறிவு இவைகள் 
 காமத்திற்கு  இருப்பிடமாகிறது.

இவைகள்  ஞானத்தை  மறைத்து
அஞ்ஞானத்தை  வளர்க்கின்றன.

இந்த ஆசையை வெல்வது எப்படி?
ஐம்புலன்களை அடக்கவேண்டும்.
அதற்கு ஆசைகளை ஒழித்துவிடவேண்டும்.

ஐம்புலன்கள் இந்த  உடலை விட பெரியவை.
 மனம் அதற்கும்  மேலானது.
அறிவு மனத்தைவிட உயர்ந்தது.
அறிவுக்கும் மிக உயர்ந்தது ஆத்மா .
அந்த ஆத்மஞானம்  பெற
ஆசைகளைத் தூண்டும்
புலனறிவை அடக்கவேண்டும்.
 தேங்காய்  வேண்டும் என்றால்
மட்டையை உரிக்க வேண்டும்.
உடைக்க  வேண்டும்.
 உடைத்தபின் தேங்காய் ஓட்டிலிருந்து
உண்ணும் தேங்காய் பருப்பு எடுக்கவேண்டும் .
ஆசைகள் மட்டை,நார், ஓடு போன்றது.
மட்டை,நார் ,ஓடு  இவைகளில் இருந்தும்
அறிவைப் பயன்படுத்தி
புலன்களுக்கு  ஒரு  இன்பத்தை  ஏற்படுத்துவதே  ஆசை.
இவைகளைக்கடந்து  ஞானம் பெற  பற்றற்ற வாழ்வு ,
ஆசைகளை எல்லாம் ஒழித்துவிடும்
 வாழ்வைப் பெற வேண்டும்.
அறிவிலும்  மேலான ஆத்ம ஞானத்தால்
 காம,குரோத சத்துருக்களை
ஒழித்துவிட  வேண்டும். .
 கர்மயோகம்    இதுவே.










Thursday, December 7, 2017

கர்மயோகம்-பகவத்கீதை ---௧௧.11


   கர்மயோகத்தின்  கொள்கைகள் ,
சித்தாந்தங்களை  விடாது  
பின்பற்றுபவர்கள் 
பொறாமை ப்  படமாட்டார்கள்.
கர்மவினைகளிலிருந்து   விடுபட்டு
 பலன் எதிர்பாராத
கர்மங்களில்   ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் மனதில்  எவ்வித
சலனமும்  ஏற்படாது.
 இவ்வாறு கர்மயோகத்தில்
ஈடுபடுபவர்களுக்கு  பகவான்
அவர்கள் விரும்பியதை
அளித்து மகிழ்வார்.

பொறாமை ,பேராசை இரண்டுமே
மனதில்   உள்ளவர்கள் 
தன்னிடம் இல்லாத
மற்றவர்களிடம்  இருக்கும்
பொருள்கள்   தங்களிடம்  இல்லை என்றே
 வேதனையில்  மூழ்குவார்கள்.
அவர்கள் மூழ்கிய ஆழ்ந்த
ஆழத்தில் இருந்து 
வரவே முடியாது.

பகவானின்  கர்ம யோகத்தில்
 ஈடுபட்டவர்கள்
தீய எண்ணங்களில்
 இருந்து விடுபட்டு
பலனை     பகவானிடமே 
 ஒப்படைத்துவிடுவார்கள்.

இந்த இறைவனின் கோட்பாட்டை
 ஏற்காதவர்கள்
அறிவும் ஞானமும்  இல்லாத
 மூடர்களுக்கு
இணையாவார்கள்.

இயல்பான வாழ்க்கையில்
செயலாற்றுபவர்கள் ஞானிகள்.
அவர்களும்    தன் இயல்பான 
குணத்தை அறிவார்கள்.

நமது புலன்கள்  இயல்பாகவே
சில விருப்புகள் கொண்டவை.
மேலும் வெறுப்புகள் கொண்டவை.
நாம் புலன்களுக்கு அடிமையாகக்கூடாது.
நமக்கு    புலனடக்கம்  தேவை.
புலன்கள் நமது கர்மங்கள்,
 மானம் ,மரியாதைக்கு
எதிரிகள் .
 அவைகளை அடக்கியே
வைத்திருக்க வேண்டும் .


வள்ளுவரும்

ஆமைபோல் ஐந்தடக்கல் ,
ஆற்றில் எழுமையும்
ஏமாப்புடைத்து.--என்கிறார்.

நாம் நமது நமக்கு  என்ற
இயல்பான கர்மங்களைச்
 செய்யவேண்டும் .
நமக்கென்ற அறத்தில் செயலில்
மேன்மை   கிடைக்கும்.
 மற்றவர்கள் தர்மத்தில்  ஈடுபட்டால்
அச்சமே .
நாம் நம் சுய தர்மத்திலேயே 
 நிலைத்து  இருப்பது மேல்.

KARMAYOGAM BAGAVADGEETHA -10

கர்மயோகம் --பகவத்கீதை

         ஞானியின்  கடமை அனைவருக்கும்  மனதில்

ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே.
 ஞானியின் கடமை மக்களிடத்தில்
  மனக்கலக்கத்தை  ஏற்படுத்துவதல்ல.
ஞானி உலகியல் கர்மங்களில் ஈடுபட்டு ,
 மற்றவர்களையும்  ஈடுபடுத்த வேண்டும்.
ஆனால் ஞானி கர்மத்தை செய்யும்
போது   அதற்கான  பலனை  எதிர்பார்க்கக் கூடாது.

    இயற்கையாகவே   ஏற்படும்  குணங்கள்
 செயல்களை செய்விக்கின்றன.
  ஒருவனுடைய வெற்றிக்கு  காரணம்
அவனுக்கு இறைவன் இயற்கையாகவே
 கொடுத்த  திறமையாகும்.

 சிறந்த பாடகன் , ஓவியன் , மருத்துவன் ,எல்லாமே   இயற்கையாக  ஆண்டவன் அளித்த திறமைகள்.

ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த ஆசிரியர்
என்று பாராட்டுப்  பெறுவதில்லை,

சிறந்த ஆசிரியரிடம்  கல்வி பயிலும்
அனைவரும்   சிறந்த மாணவராவதில்லை.
 அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும்
 அனைவரும்  புதிய  கண்டுபிடிப்புகள்
   கண்டு பிடிப்பதில்லை.

ஆ னால் சிலர் அகம்பாவத்தால்
 பெற்ற  வெற்றியைத்   தானே   என்று    கருதுகிறார்கள் .
இது சரியல்ல.

   ஆனால் ஞானி  குண தர்மத்தின்
 குணங்களின்  இயற்கை அறிந்து
 எதிலும் பற்றுவைப்பது  இல்லை.

   அன்பாக இனிய குரலில் பேசுவது 
அனைவராலும் இயலாத காரியம். 
சிலரைப்பார்த்தாலே  மரியாதை தோன்றும்.

சிலரைப்   பார்த்தாலே பயம் தோன்றும்.
 சிலரைப் பார்த்தாலே  கிண்டலாகப் பேசத்தோன்றும் .
சிலரைப் பார்த்தாலே வெறுப்பு தோன்றும்.
இவை   எல்லாமே   இறைவனாகிய கிருஷ்ணனின்
 குணப் படைப்புகள்.

இவைகளெல்லாம் ஞானிகள்  அறிவதால்
  அவர்கள் உலகில்  பற்று இல்லாமல்
 செயலில்  இறங்குகின்றனர்,

  இயற்கையால் உண்டாகும் மோகத்தால்   அதில் பற்றுவைப்பவர்கள்  மந்த புத்தி உள்ளவர்கள்.

ஞானிகள் இவர்களைத்  தெளிய வைப்பவர்கள் .
அப்படி இல்லாமல்  அவர்களைக்
கலக்கமடையச் செய்வது
ஞானிகளுக்கு  அழகல்ல.

 நாம்  செய்யும்   கர்மங்கள்  அனைவற்றுக்கும்
 பொறுப்பு  இறைவனே.
ஆகையால்  நாம் செயல்கள் ஆற்றவேண்டும் .
 நமக்குத் திறமையை  அளித்த  இறைவனே
நம் வினைகளுக்கேற்ற  பலனை அளிப்பான் என்று அவனிடமே   பலனை  ஒப்படைத்துவிட வேண்டும்.




Tuesday, December 5, 2017

கர்மயோகம் --பகவத் கீதை --9


உலகில்  உயர்ந்தவர்கள்,
சான்றோர்கள் ,
மகான்கள் செய்கின்ற ,
சொல்கின்ற, 
 சான்றளிக்கின்ற
உயர் செயல்கள் ,
எண்ணங்கள்
யாவும் உலகத்தினரால்
பின்பற்றப்படுகின்றன.
அனைவரும் மகான்கள்
ஆவது எளிதல்ல.
அதற்கு இறைவனின்
 கருணை வேண்டும்.
உயர்ந்த எண்ணங்கள்,
கருத்துக்கள்
வெளியிடுவது எளிது.
அதையே நாம் பின்பற்றுகிறோமா ?
காந்தியடிகள்
எந்த ஒரு செயலையும்
தானே செய்வார்.
அதைப்பார்த்து 
மற்றவைகள் செய்வார்கள்.
அவர் செய் சொல்லாதே
என்றே அனுசரித்தார்.
சாலையில்  உள்ள மலத்தின்
அசிங்கத்தைஅவரே கூடையில்
எடுத்து சுத்தம் செய்தார்.
 அவர் மாகான் .
கிருஷ்ணருக்கு  MOOVULAKILUM
கடமை ஏதும் கிடையாது .
அவருக்கு எந்த இலக்கையும்
அடையும்
தேவையும் இல்லை.
இருப்பினும் அவர் செயல்
ஆற்றிக்கொண்டே  இருப்பார்.
இறைவன் தன்னுடைய
கடமையை
செயலை சரிவர
செய்யவில்லை என்றால்
மக்களும் எதுவும்
செய்யமாட்டார்கள்.
மரணம் ,நோய் ,  இளமை , மூப்பு ,
என்ற கர்மங்களை
இறைவன் இடைவிடாது
 செய்வதால்  தான்
மனிதர்களும் கர்மங்களில்
ஈடுபடுகிறார்கள்.
இயற்கையே  இறைவன் என்றால்
சூரியன் THAN  கர்மாவை
கடமையைச் செய்கிறான்.
வருணன் மழைபோழிவிக்கிறான்.
வாயு பகவான் காற்று வீசுகிறான்.
கோடை, வசந்தம்குளிர் ,இலையுதிர்
காலம் என்று   செயலாற்றி
 கடமையைச் செய்கின்றது.
இப்படி மனிதர்களும்
தன்  கர்மங்களை
கடமையைச் செய்யவேண்டும்.
இறைவன் தன் கடைகளைச்
செய்யாமலிருந்தால்
இவ்வுலகமே செயலற்று அழிந்துவிடும்.

பற்றுள்ள  மனிதர்கள் மட்டுமல்ல
ஞானிகளும் தங்கள்
 கடமைகளைச் செய்யவேண்டும்.