Thursday, November 30, 2017

பகவத் கீதை --கர்மயோகம் -8

  கர்மயோகம்

மனிதன்  மனதளவில்
 பல எண்ணங்களில்
ஆசைகளில்
  செயல்களில்
ஈடுபடுகிறான் .

புலன்கள் அவனை
 செயலாக்கத் தூண்டுகிறது .

ஆனால் அவன் தன்
ஆத்மாவை
 நேசித்தால்
அவன் வினை ஓய்கிறது.
ஆத்மாவில் மகிழ்ந்தால்
அவன் மனம் பற்றற்று
மன நிறைவுடன்
லௌகீகக் கர்மங்களை
விட்டுவிட்டு
ஆத்மா நிறைவுடன்
ஆத்மா பரமாத்மா
ஐக்கிய நிலையில்
சாந்தியுடன் இருக்கிறது.

ஆத்மானந்தத்தில்
 லயித்தவர்களுக்கு
வினைப்பயன் ,இழத்தல் ,
சார்ந்திருத்தல்
போன்றவை இல்லவே இல்லை.

ஆகையால் நமது வினைகள்
 பற்றற்று இருக்கவேண்டும்.
ஆனால் நமக்கு
 இறைவனளித்த
 கடமையை   ஆற்றவேண்டும்.
பற்றற்ற பற்றுள்ள வாழ்க்கை.
தாமரை இலை  தண்ணீர் போன்று.
 மகாராஜா   ஜனகர்  தன்
 நல் வினைகளால்
முக்திபெற்றார்.
அவரைப்போன்றே
 பலர்  நல்வினைகள்
செய்து  நற்பயனை
அடைந்திருக்கிறார்.
ஆகையால்  ஜீவாத்மாவின்
கடமையைச் செய்யாமல்
 விடுவது சரியில்லை.

No comments: