Wednesday, August 2, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யாகாண்டம்-முப்பத்தாறு.

 
சீதை ,சுமந்திரன் , லக்ஷ்மணன் ,
ஸ்ரீ ராமர் நால்வரும் பழங்கள் , கிழங்குகள் ,
சாப்பிட்டுவிட்டு படுத்துகொண்டனர்.
லக்ஷ்மணன்   ரமாரின் கால்களை  பிடித்து விட்டார்.
 ராமர்   தூங்கியதும்  அமைச்சரையும்  தூங்கச்சொல்லி
லக்ஷ்மணன்     வில்லும்  அம்பும்  எடுத்துக்கொண்டு
 காவல்   காக்கத்துவங்கினார்.
குகனும் நம்பிக்கையுள்ள  காவல் காரர்களை
 அங்கங்கு  நிறுத்திவைத்தான்.
அவனும்  அம்பும் வில்லும் எடுத்துக்கொண்டு   லக்ஷ்மணனுக்குஅருகில்  அமர்ந்தான்.
ராமச்சந்திர பிரபு  தரையில் படுத்து
உறங்குவதைப்  பார்த்து    குகன்
மிகவும்  கவலைப்பட்டான் .
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அவன் லக்ஷ்மணனிடம் அன்புடன் சொன்னான்--
மஹாராஜா  தசரதனின்  அரண்மனை இயற்கையிலேயே  இந்திரனின் அரண்மனையை  விட  உயர்ந்தது.
அதில் அழகான மணிகள் பதித்த
மாடி பங்களா மன்மதனே     தன்  கரங்களால்  கட்டியிருப்பதுபோல் இருக்கும்.  அங்கு பூக்களில் நறுமணம் வரும்.   அழகான  கட்டில் ,அது
மணிவிளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
எல்லா வசதிகளும்  இருக்கும்.
விரிப்புகளும்  போர்வைகளும்  தலையணைகளும்     மெத்தைகளும்  இருக்கும். அவை பாலின்  நுரைபோல்
மேன்மை யாகவும் வெண்மையாகவும்
அழகாகவும்    இருக்கும் .அப்படிப்பட்ட இடத்தில் சீதையும்   ராமரும்    தூங்குவார்கள் .  அந்த அழகைக்  கண்டு
ரதியும் காமதேவனும்      தன்  கர்வத்தை இழந்தனர்.
இன்று அதே   ராமரும்      சீதையும் புல்
தரையில்   தூங்கு கின்றனர்.    இந்த
நிலையில்    அவர்களை     பார்க்க   முடியாது.
தாய், தந்தை, குடும்பத்தினர்,  நகரமக்கள், நண்பர்கள்,
வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் என    அனைவருக்கும்
நன்மை செய்யும் ராமர்     இன்று     தரையில்
படுத்துக்கொண்டிருக்கிறார். ஜனகர்    உலகப் புகழ் பெற்றவர்,  அவருடைய  மகள்  ஜானகி ,  
இந்திரனின்    நண்பர் தசரதர்  அவரின்  மருமகள்     ஜானகி
ராமரின் மனைவி ஜானகி 

இன்று தரையில் படுத்து  உறங்குகிறாள்.
இவர்கள் இவ்வாறு உறங்க , இன்னலுற யார்  காரணம் ?
கர்ம வினையா ?
கைகேயி என்ற பெண்ணின் ஈன புத்தி தானே  காரணம்.
அவள் சூரியகுலம்  என்ற மரத்திற்கு கோடாலி
ஆகிவிட்டாள். அந்த தீய அறிவுள்ளவளால்  இன்று
வையகம்  முழுவதும்  வேதனைப் படுகிறது.
இருவரையும் பார்த்து குகனுக்கும்  அளவு கடந்த வேதனை.
அப்பொழுது   ஞானியும்,  பக்தனும் , யோகியுமான
லக்ஷ்மணன்  குகனிடம் சொன்னான்--
 யாரும் யாருக்கும்  சுகமோ  துன்பமோ கொடுப்பவனல்ல.
எல்லோரும்  தான் செய்த கர்மத்தின்   பலனை
அனுபவிக்கிறார்கள். லக்ஷம ணனின் இனிமையான
மென்மையான  குரலில்  சொன்னார் ,
சேர்த்தல் ,பிரிதல், நல்லது கேட்டது
அனுபவித்தல்
விரோதம் , நட்பு எல்லாமே
 ஒரு    பிரமையால்  ஏற்பட்ட வலை.
பிறப்பு-இறப்பு ,சொத்து-ஏழ்மை , விபத்து,
கர்மம் , காலம்  ஆகிய   அனைத்துமே   சிக்கல்  தான்.
பூமி,  வீ டு,    செல்வம் , சுவர்க்கம் -  நரகம் ,
இதெல்லாம்  நடைமுறையில்    பார்க்க, கேட்க,
மனதில்   எண்ணிப்பார்க்க,  வருகின்றன,
இதற்கெல்லாம் அறியாமை தான் அடிப்படை  ஆதாரம்.
உண்மையில் இவை எல்லாம்    இல்லை.
கனவில்  ராஜா  பிச்சைக்காரனாக லாம் .
ஏழை சுவர்க்கத்தின்   அதிபதி   இந்திரனாகலாம் ,
ஆனால்   விடிந்தால்  இது  வெறும் கனவு தான்.
அப்படியே   இந்த காட்சி  உலகத்தை  இதயத்தில்  காண  வேண்டும்.
இப்படி  எண்ணிவிட்டு  கோபிக்கக் கூடாது.
யாரையும்  வீணாக  குற்றம் சாட்டக் கூடாது.
எல்லோரும் மோகம்  என்ற  இரவில்  தூங்கி ,
பலவித    கனவுகள்  காண்பவர்கள்  தான்.
பலவித    கனவுகள்  தென்படுகின்றன.
இந்த     உலகில்   யோகிகள் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்காக   வாழ்பவர்கள்.
உலக  மாயையில்     இருந்து    விடு பட்டவர்கள். உலகில்
ஜீவன்கள்    விழித்திருக்கிறார்கள்  என்றால்  அவர்கள்
அனைத்து உலக இன்பங்கள் வைராக்கியங்களில்     இருந்து
விடுபடவேண்டும்.
அறிவு / ஞானம்   இருந்தால்     மோகம்  என்ற  பிரமை
பயந்து  ஓடிவிடும்.  ஸ்ரீ ரகுநாதரின் மீது அவரின் பாதங்களின்  மீது  பற்று உண்டாகும்.
தோழனே!   மனம்  , வாக்கு , செயலால்   ராமரின்  சரணங்களில்  அன்பு ஏற்படுவது தான்  ஆண்மையாகும்.
ஸ்ரீ ராமர் பரபிரம்மம். அவரை    அறிவது    கடினம்.
சாதாரண  பார்வையால் பார்க்கமுடியாது. ஆரம்பம் இல்லாதவை.  ஒப்பிடமுடியாதவர்.
எந்த மாற்றமும்   இல்லாதவர்.  ரகசியம் எதுவும் இல்லாதவர்.
வேற்றுமை  இல்லாதவர்.  இது -அது என்று சொல்ல முடியாதவர்.  பிரம்மம் சத்தியம். உலகம்  மாயை என்று கூறுபவர்.  கடவுள் பஞ்சபூதங்கள்  இல்லை. பஞ்சேந்திரியங்கள் இல்லை. மனம், புத்தி , ஆணவம் இல்லை,
இவற்றை  எல்லாம்  கடந்தவர்.
அந்த ராமர் மனித  அவதாரம்   எடுத்து    பக்தர்கள், பூமி, அந்தணர்கள், பசுக்கள், தேவர்கள் நன்மைக்காக    திருவிளையாடல் பண்ணுகிறார்.  அதைக் கேட்டாலே
  சிக்கல் தீர்ந்துவிடும்.

No comments: