Monday, July 24, 2017

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ் .

அன்பு என்றும்   இரண்டுபேருக்கே  என்பதல்ல.
காதல் என்பது இருவருக்கும்  இடையில் .
 மீரா - கிருஷ்ணன் ,
ஆண்டாள் - ஆண்டவன்    காதல்.

பக்தி  -சிரத்தை ஆட்களைக் கூட்டுகிறது.
காதல் ஒருவழிப் பாதைபோல்
மூன்றாவது ஆளுக்கு  இடம் விடுவதில்லை.
இப்படிப்பட்ட அன்பில் திளைத்தவர்களில்
பிரதானமானவர்கள்  பக்ததியாகராஜர்  ,
ரமண மஹரிஷி, யோகிராஜ் சரத் குமார் , சீரடி சாய்.
இந்த நேரடி அன்பில் ஆண்டவன் அருள்
அன்பால் ஈர்க்கப்பட்டு , காதலால் மலர்ந்து ,
பக்தியால் பூத்து-காய்த்து, பழுத்து ,
பார் முழுவதற்கும் நல்வழி காட்டி
சாந்தி, மகிழ்ச்சி , திருப்தி அளித்து,
அகிலத்தை பொறாமை ,கோபம் ஆணவம் ,பெண் ஆசை
முதலிய தீய குணங்களை விரட்டி அடித்து,
வையகம் வாழ வழி   வகுக்கிறது.
     ஓம்  கணேசாய நமஹ.
  ஓம்  கார்த்திகேயாய நமஹ
  ஓம்  நமஹ சிவாய.
  ஓம் துர்காயை  நமஹ.

 இறைவன் நாமம் பிராணாயாமம்
பகவான் அருள் பெறலாம்.
 பகவானால் இரட்சிக்கப்படும்
ஒருவனை யாராலும்
அடிக்க முடியாது.
வையகமே எதிர்த்து ,
 தனி ஒருவனாக நின்றாலும்
மயிரைக்கூட பிடுங்க முடியாது.
 (---படிக்காத பக்தர்  கபீர்தாஸ்  

No comments: