Sunday, May 7, 2017

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -முப்பத்தொன்று

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -முப்பத்தொன்று

ராமரின் அன்பான வேண்டுகோளைக் கேட்டு
அரசர் ராமரின் தோள்களைப் பற்றி
அருகில் அமரவைத்துச்   சொன்னார் --
"மகனே! ஸ்ரீராமர் அசைவன     அசையாதன    என்ற
அனைத்திற்கும்  எஜமானர்  என்று
முனிவர்கள் பகர்கிறார்கள்.
நல்ல தீய செயல்களுக்கு ஏற்ற பலனை
 கடவுள்   நமக்கு   அளிக்கிறார்.
செயலாற்றுபவன்  தான்  பலனை பெற்று
பலனை அனுபவிக்கிறான்.
எல்லோரும்  இது வேதத்தின் நீதி   என்று
சொல்கிறார்கள். ஆனால் இன்றைய சூழலில்
குற்றம் செய்வது ஒருவன் .
பலன் பெறுவது    ஒருவனாக    இருக்கிறான்.
பகவானின் லீலை    மிகவும்     விசித்திரமானது.
அதை அறியும்    தகுதி  பெற்றவன்
உலகில் யாருமே  கிடையாது.
இவ்வாறு   ராமருக்கு  வஞ்சனை தவிர  அனைத்து
வழிகளையும்  சொன்னார். அவர்   தர்மத்தின்   அச்சான
ராமரின் தீரத்தையும் புத்திசாலித்தனத்தையும்
அறிந்து கொண்டார்.
அரசர்  சீதையை   ஆலிங்கனம் செய்து அன்புடன்
உபதேசம்  செய்தார். காட்டின் சகிக்க    முடியாத
துன்பங்களை விளக்கினார்.
மாமனார், மாமியார், தந்தையுடன்  இருக்கும்
சுகங்களையும் எடுத்துரைத்தார்.
அமைச்சர்  சுமித்திரனின்  மனைவியும் ,
குரு  வசிஷ்டரின்  மனைவியும் ,
மற்ற  குலப் பெண்களும்   மிகவும் அன்புடன்
வனவாசம்  செல்லவேண்டாம், உனக்கு வனவாசம் கொடுக்கவில்லை  என்றனர். மாமானார், குரு, மாமியார்
போன்றோர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு  அதையே செய் என்றனர்.
இந்த குளிர்ச்சியான,இனிமையான ,  நன்மை தரக்  கூடிய,
அறிவுரை  சீதைக்கு பிடிக்கவில்லை.
சீதையின் மனம் ராமரை    விரும்பியதால்
வீடு பிடிக்கவில்லை.  கானகச்சூழல்  பயங்கரமாகத்
தெரியவில்லை.
ஆனால்   அனைவருமே   காட்டின் பயங்கரத்தை விளக்கினர்.
ஆனால்  சீதைக்கு குளிர்கால பௌர்ணமி நிலவில் சாகவி என்ற ஒருவகை  பறவை  கலக்கமடைவதுபோல்   சீதை
கலக்கமடைந்தாள்.
சீதை  வெட்கத்தின் காரணமாக பதில் எதுவும் கூறவில்லை.
இவர்கள் சொல்லுவதை எல்லாம்  கேட்டு ,
கைகேயி வேகமாக  எழுந்து
முனிகளின் வஸ்த்திரங்கள், நகைகள், கமண்டலம்
போன்றவற்றை ராமரின் முன்னாள்    வைத்துவிட்டு
மென்மையான  குரலில்சொன்னாள்--

ரகுவீரா!  அரசருக்கு   உன்  மேல் தன்   உயிரைவிட  அன்பு அதிகம் . அன்பினால்  கோழை யான  அரசர் ஒழுக்கத்தையும்
அன்பையும் விட மாட்டார்.
புண்ணியம் , அழகு, புகழ் , பரலோகம்
அனைத்தையும் விட்டுவிடவும் தயாராக இருப்பார்.
உன்னை  கானகம் செல்ல    அனுமதிக்க  மாட்டார்.
இதை எண்ணி உன் விருப்பப்படி  செய்.
அன்னையின்  இந்த  சொற்களால்  ராமருக்கு   மகிழ்ச்சி
உண்டாகியது.
ஆனால்   அரசருக்கு       அம்புகள் தைத்ததுபோல்  இருந்தன.
அவர்    இன்னும்  என்    உயிர்  போகவில்லையே
நான் துரதிர்ஷ்ட சாலியாக உள்ளேனே  என்று
நினைத்தார்.
அரசர்   மயக்கமுற்றார். மக்கள் கலக்கமடைந்தனர்.
என்ன செய்வதென்று  தெரியாமல்   திகைத்தனர்.

ராமர்     உடனே   முனிவர்   வேடமிட்டு   தாய்-தந்தையை  வணங்கி  சென்று    விட்டார். 

Saturday, May 6, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --முப்பத்தொன்று

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --முப்பத்தொன்று

தசரதர்  மிகவும்  அமைதியற்ற நிலையில் ,
ராமரையும் இலக்ஷ்மணரையும் பார்த்து
ஆரத்தழுவினார். அவரால் அன்பு வேதனை
இரண்டும்  சேர்ந்து    பேச விடாமல்  தடுத்தது.
அப்பொழுது ரகுகுல திலகம்  ராமர்   மிகவும்
அன்புடன்  காலில்  விழுந்து  வணங்கி
கானகம் செல்ல அனுமதி கேட்டார்.
தந்தையே!  என்னை ஆசிர்வதியுங்கள்.
மகிழ்ச்சியான  நேரத்தில்   ஏன்  சோகமாக  
இருக்கிறீர்கள். அன்பின்    காரணமாக  
கடமை   ஆற்றுவதில்   குறை -தவறு
ஏற்பட்டால்   உலகில்   புகழ்    போய்விடும் .
நிந்திக்கப்படுவார்கள். 

Friday, May 5, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம் முப்பது.

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம்  முப்பது.

        தாயிடம்  ஆசிபெற்று   லக்ஷ்மணன்
  ஜானகியின் இருப்பிடத்திற்குச் சென்றான்.
 ராமரையும் சீதையையும் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தான். சீதையையும்  ராமனையும்  வணங்கினான்.
மூவரும் ஒன்றாக  அரண்மனையை அடைந்தனர்.

 ஆண்டவன் நன்றாக படைத்து  விஷயத்தைக் கெடுத்துவிட்டார்.
அவர்களின்     உடல்     மெலிந்து  விட்டது.
மனதில் வேதனை தெரிகிறது.
முகத்தில் வருத்தம் தெரிகிறது  என்று    நகர மக்கள்  தங்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
தேன்    எடுத்த  பிறகு  தேனீக்கள்
கலக்கமடவதுபோல்   கலக்கமடைந்து
 காணப்படுகின்றனர்.
அரண்மனை      வாயிலில்   மிகப்பெரிய கூட்டம்  கூடியது.

எல்லையில்லா  துன்பத்தில்   அனைரும்  கையை  பிசைந்து
கொண்டிருந்தனர்.
இறக்கையில்லா   பறவைகள் துடிப்பதுபோல் கலக்கத்தில்  இருந்தனர்.

ராமர் வந்திருக்கிறார்  என்ற  செய்தி அறிந்து  அமைச்சர்  அரசரை தூக்கி உட்காரவைத்தார்.

அரசர்  சீதையுடன் ராமரைப் பார்த்து கலக்கமடைந்தார்.







 கொண்டிருந்தனர்.
தலையில்   அடித்துக்கொண்டு  வருத்தப் பட்டுக்கொண்டிருந்தனர். i

Thursday, May 4, 2017

ராமசரித மானஸ்--அயோத்யகாண்டம் --பக்கம் இருபத்தொன்பது

             ராமசரித மானஸ்--அயோத்யகாண்டம் --
                                பக்கம் இருபத்தொன்பது 
*********************************************
ஸ்ரீ ராமரின்  பக்தனைப் பெற்ற  தாயார் தான் புண்ணியவதி.
சத்புத்திரனைப்    பெற்றவள். அப்படி இல்லையென்றால்
ராமனைப் பிடிக்காத   மகனை தனக்கு  நல்லது என்று
நினைப்பதைவிட  மலடி யாக  இருப்பதே  நல்லது.
மிருகங்கள் குட்டி போடுவது  போல்  குழந்தையைப்
பெற்றெடுப்பது வீண்.

உன்னுடைய புண்ணியத்தால்  தான்  ராமர் கானகம் செல்கிறார். வேறு எந்த காரணுமும்    இல்லை.
சீதாராமரின் பாதாரவிந்தங்களில்  இயற்கையான அன்பு இருப்பதே எல்லா  புண்ணியங்களையும் விட பெரும்
புண்ணிய பலனாக  கிடைத்திருப்பதாகும்.
அன்பு  ,கோபம், பொறாமை, ஆணவம் ,  மோஹம்,
ஆகியவற்றிற்கு கனவிலும் வயப்படாதே.
எல்லாவித மான விகாரங்களை விட்டுவிட்டு ,
மனம் ,வாக்கு, செயலால் ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்.
உனக்கு வனத்தில்    எல்லாவித  சுகமும் கிடைக்கும்.
நான் உனக்குக் கூறும்  அறிவுரை  உன்னால்
ராமனும் சீதையும்  தாய்,தந்தை,அன்பான குடும்பம் ,
நகரம் போன்ற  நினைவுகளையும்  மறந்து  விட  வேண்டும்.
உன்னால் அந்த  இருவருக்குமே சுகமே கிடைக்கும் செயல்கள்  தான் செய்யப்படவேண்டும்.
சுமித்திரை இவ்வாறு அறிவுரைகள் கூறி லக்ஷ்மணனை
காட்டிற்குச் செல்ல  அனுமதி அளித்தாள்.
சீதை மற்றும் ராமரின் மேல்  உன்னுடைய
புனித அன்பு   ஆழ்ந்த  அன்பு தினந்தோறும் புதியதாகவே இருக்கட்டும் என்று ஆசிகள் வழங்கியதாக  துளசிதாசர் சொல்கிறார்.
அம்மாவின் அறிவுரையும் ஆசியும் பெற்று ,
வேறு எந்தவிதமானஅடிகளும் வரக்கூடாது என்று
எண்ணிய  இலக்குமணன்  வலையில் சிக்கிய மான்,
வலையை அறுத்தெறிந்தது ஓடுவதுபோல் ஓடினான். 

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம் இருபத்தெட்டு


ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம்  இருபத்தெட்டு

இரக்கக் கடலானா ஸ்ரீ ராமர் மிகவும் மென்மையான
பணிவான சொற்களைக் கேட்டு ,
அன்பினால்   அச்சமுடன் இருப்பதை  அறிந்து  ,
அவரை நெஞ்சுடன் தழுவி   சொன்னார் --
"சகோதரா! சீக்கிரம் அம்மாவிடம் விடைபெற்று ,
கானகம் செல்ல ஏற்பாடு   செய் .
இந்த ரகுகுலத்தில் மேன்மையான
தன் சகோதரரின்  கூற்றைக் கேட்டு ,
லக்ஷ்மணன்   ஆனந்தமடைந்தார்.
மிகப்பெரிய தீங்கு விலகிவிட்டது.
மிகப்பெரிய  பயன் ஏற்பட்டுவிட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன்  , குருடனுக்கு மீண்டும்
கண் கிடைத்த       பேரானந்தத்துடன்
அன்னை சுமித்திராவிடம் ஆசி பெறச் சென்றான்.
ஆனால் மனம் முழுவதும்   ரகுகுலத்துக்கு ஆனந்தம்   தரும்
ஸ்ரீ  ராமர்      மற்றும் ஜானகி  யே   நிறைந்து இருந்தனர்.

அங்கு அன்னையின் வருத்தமான  நிலை  கண்டு ,
லக்ஷ்மணன்       அனைத்து   விவரத்தையும்  சொன்னார்.
இந்த கடின செய்தி கேட்டு நான்கு பக்கமும்    தீ
சூழ்ந்து இருந்து பயப்படும் பெண்  மான்  போன்று
அன்னை சுமித்திரா பயந்துவிட்டார்.

அன்னையின் அச்சம் கண்டு  லக்ஷ்மணன்   நினைத்தான் ---
"இன்று அனர்த்தம் ஏற்பட்டுவிடுமோ ?
அன்பின் காரணமாக கானகம் செல்ல    தடை  ஏற்படுமோ" ?
அம்மா !செல்ல  அனுமதிப்பாளோ இல்லையோ
  எனத் தயங்கினான்.
 சுமித்திரை  ஸ்ரீ ராமர் மற்றும்  சீதையின் அழகு  கண்டு ,
அவர்கள் மேல்  தசரதனின் அளவற்ற  அன்பையும்  நினைத்து ,
தலையில் அடித்துக்கொண்டு ,
"பாவி கைகேயி மிகவும்  துரோகம்  செய்துவிட்டாள்
என்று  சொன்னாள்.

மீண்டும் ராமர் இருக்கும் இடமே  அயோத்தியா .
எங்கு சூரிய  ஒளி  உள்ளதோ அங்குதான்  பகல்.
சீதையும்  ராமனும் காட்டிற்குச்  செல்கிறார்கள்  என்றால்
உனக்கு   அயோத்தியாவில்  வேலை  இல்லை.
 குரு, அன்னை, தந்தை சகோதரர்கள் , எஜமானர்
 ஆகிய  அனைவருக்கும்  சேவை  செய்ய  வேண்டும்.

ஸ்ரீ ராமர் நமக்கு உயிரைவிட மேலானவர். அன்பானவர்.
அவர் அனைவருக்கும்  சுயநலமற்ற தோழர்.
உலகில் மிகவும் வணங்கத்தக்க பிரியமானவர்கள்
அனைவருமே  ராமரின் உறவினர்கள்.
இதை அறிந்து   அவர்களுடன்     கானகம்  செல்.
உலகில் வாழும்  பயனைப் பெறவும்.
நீ மிகவும் சௌபாக்ய சாலி.
உன்னுடைய மனம் ராமரின் சரணங்களில் இடம்   பெற்றுவிட்டது. நானும் அதிர்ஷ்டசாலிதான்.
நானும் தியாகம் செய்கிறேன்.

Wednesday, May 3, 2017

அயோத்யகாண்டம் ராமசரிதமானஸ் --பக்கம் இருபத்தேழு

அயோத்யகாண்டம்    ராமசரிதமானஸ் --பக்கம் இருபத்தேழு

       அன்பின் வசத்தால்   லக்ஷ்மணனால்
  எதுவும்  பேச முடியவில்லை.அவன்  மிகவும்  கவலை  அடைந்து   ராமரின் காலில்  விழுந்து  சொன்னான் ---

  நான்  உங்களுக்கு அடிமை. நீங்கள்  எனக்கு      சுவாமி.
நீங்கள் என்னை இங்கேயே விட்டுவிட்டு சென்றால்    நான்  என்ன  செய்ய  முடியும் ?

எனக்கு நல்ல உபதேசம் செய்துள்ளீர்கள் .  ஆனால் நான் கோழை . சாஸ்திரங்கள், நீதி இவை எல்லாம் மேன்மை பொருந்திய வீர தீரர்களுக்கே  உரிமையானவை. தர்மத்தின்  அச்சாணியாக  உள்ளவர்களுக்கே   உரியவை.
     நான் பிரபுவின்   அன்பில்    வளர்ந்த  சிறிய குழந்தை  நான்.

எங்காவது  அன்னப்பறவையால்,  மந்திரமலையையும் ,சுமேரு மலையையும்    தூக்க முடியுமா ?
எனக்கு உங்களைத்தவிர  குரு,    அன்னை, தந்தை, யாரையும்   தெரியாது.  எனக்கு எல்லாமே தாங்கள்  தான்.
அன்பின் சம்பந்தம்   ,    அன்பு , நம்பிக்கை   இவைகளைப் பற்றி   வேதங்களும் புகழ்ந்திருக்கின்றன.
புகழ்,  ஐஸ்வர்யங்கள், நற்கதி போன்றவை
 விரும்புவோர்களுக்குத்    தான்     அறம்   மற்றும்  நீதியின்
உபதேசங்கள்  வேண்டும்.     மனம், சொல், செயலால்
விரும்பும் ஒருவனை விட்டுவிடுவது  சரியா ?

    

Tuesday, May 2, 2017

அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் -இருபத்தாறு

அயோத்யா காண்டம் --ராமசரிதமானஸ் -இருபத்தாறு

        மாமியார் கௌசல்யா   சீதைக்கு
  பலவகைகளில் ஆசியும்    உபதேசங்களையும்  வழங்கினார்.
  சீதை மிகவும் அன்புடன்  அடிக்கடி தலை  வணங்கி விட்டு
சென்றாள்.

        இலக்குமணன் செய்தியைக் கேட்டதுமே ,
மிகவும் கவலைப் பட்டு , வருத்தமான முகத்துடன் ஓடினான்.
அவர்   உடல்  நடுங்கியது. உடல் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் பெருகியது.
அன்பினால்   ஓடிவந்து தைரியம் இழந்து    ஸ்ரீ ராமரின் கால்களைப் பிடித்துக்கொண்டான்.

     அவனால்     எதுவும் பேசமுடியவில்லை.
 தண்ணீரில் இருந்து எடுத்த     மீன்  போன்று துடித்தார்.

இறைவனே என்ன  நடக்கப்போகிறதோ ?
நம்முடைய  எல்லா புண்ணியமும்
 சுகமும் போய்விட்டதா ?

ஸ்ரீ   ரகுநாதர்   என்ன  சொல்வார்? உடன்  அழைத்துச் செல்வாரா  வீட்டில் விட்டுவிட்டுச் செல்வாரா ?
 இலக்குமணன்   கை கூப்பி  வீட்டையும் எல்லா உறவையும்   முறித்துக் கொண்டு நிற்பதை ராமர் பார்த்தார்.
நீதியில் நிபுணரும் ஒழுக்கம் , அன்பு ,  எளிமை , சுகத்தின்
சாகரமான  ஸ்ரீ ராமர் சொன்னார் ---தாய்,  தந்தை  ,குரு , சுவாமியின்     உபதேசத்தை   சிரமேற்கொண்டு பின்பற்றுபவர்கள்   பிறவிப்பயனைப்  பெறுவார்கள். இல்லையென்றால்   உலகில் பிறவிஎடுப்பது  வீணானதே.
பலனின்  ஆனந்தத்தை மனதில்  வைத்து அன்பின் வசத்தால் தைரியத்தை   இழந்து விடாதே.

              நீ இவ்வாறு அறிந்து தெளிந்து  நான் சொல்வதைக் கேள்.  தாய் -தந்தைக்கு பணிவிடை செய். பரதனும் சத்துருக்கனனும் வீட்டில்  இல்லை. மகாராஜா வயதானவர்.
அவர் எனக்காக  மிகவும் வருந்திக்கொண்டிருக்கிறார்.
 இந்நிலையில் நான்  உன்னை அழைத்துக்கொண்டு
காட்டிற்குச்  சென்றால்  அயோத்தியா அனைத்து விதங்களிலும்   அனாதையாகி   விடும் .
குரு,   தந்தை , அம்மா ,குடிமக்கள் .குடும்பம் அனைவருமே
சகிக்க முடியா துன்பத்தை  அடைவார்கள்.
ஆகையால்  நீ இங்கேயே  இரு . எல்லோரையும் மகிழ்வித்து
திருப்தி அடையச்  செய்.  அப்படி செய்யவில்லை என்றால்
பெரிய தோஷம் ஏற்படும்.
அன்புக் குடிமக்கள் , வருத்தப் படும்    நாட்டில்
அரசன் கட்டாயம் நரகத்தை அடைவான்.
இதை   எண்ணி நீ  வீட்டில்  இரு.  
இதைக்கேட்டதும்  லக்ஷ்மணனுக்கு  மிகவும் கவலை ஏற்பட்டது.   இந்த குளிர்ந்த அன்பான சொற்கள் கேட்டு அவர் முகம் வாடியது.
 தாமரை பனியால் வாடுவதுபோல் வாடினான்.