Tuesday, April 25, 2017

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று

ராம சரித மானஸ்--அயோத்யகாண்டம் --இருபத்தி மூன்று .

     அம்மாவிற்கு  எதிரில் ராமர் சீதையிடம்
பேசத் தயங்கினார்.
 மனதில் இதை நினைத்து  சொன்னார் --
ராஜகுமாரி !நான் சொல்லுவதைக் கேள் .
 மனதில் வேறு எதையும்  வேறுவிதமாக   புரிந்து கொள்ளாதே.
  உனக்கும் எனக்கும்  நல்லது நினைத்தால் ,
 நான்  சொல்லுவதைக்  கேட்டு  வீட்டில்  இரு.
பெண்ணே!
என்னுடைய    கீழ் படிந்த மனைவி யாகவும் ,
 மாமியாருக்குத்
தொண்டு செய்யவேண்டும்.
 வீட்டில் இருப்பதால் சகலவித
நன்மையையும் உண்டாகும்.

   மரியாதையுடன்   மாமியாருக்கும்,
  மாமனாருக்கும்  சேவை  செய்வதைத்
 தவிர    வேறு  அறம்  எதுவும்  கிடையாது.

அம்மாவிற்கு  எப்பொழுதெல்லாம் நினைவு வருமோ,.   அன்பு
மிகுதியால்    கவலையின்    காரணமாக  ,
அவள் தன்னையே மறந்துவிடுவாள்.
 அழகியே!  அப்பொழுதெல்லாம் , நல்ல சொற்கள் மூலம்
பழைய கதைகளைக் கூறி    அவருக்கு விளக்கவும்.

நான் உன்னை என் அம்மாவிற்காகத்தான்
  வீட்டில்   விட்டுவிட்டு செல்கிறேன்.
என் ஆணைகேட்டு   வீட்டில்  இருந்தால்,
 குரு மற்றும்   வேதத்தின்    மூலமாக  சொல்லப்படும்
 எல்லா பலன்களும்  எவ்வித துன்பமுமின்றி
உனக்குக்  கிடைத்துவிடும் .

ஆனால்  பிடிவாதத்தின் காரணமாக ,
கலாவ்  முனியும் ,  ராஜா  நஹுஷும்
  கஷ்டங்களையே   சஹிக்கின்றனர்.
 அழகான  முகமுடையவளே!
 நான்  அப்பாவின் வாக்கை
சத்தியமாக்கி சீக்கிரமாக   திரும்பிவிடுவேன்.
   நாட்கள்   வேகமாக சென்றுவிடும்.
நான் சொல்வதைக்    கேள் .
பெண்ணே! அன்பின் வசத்தால்  பிடிவாதம்    செய்தால் ,
அதன்  பலனாக   துன்பத்தை    அனுபவிப்பாய்.
 வனம் மிகவும்  பயங்கரமானது.
 கஷ்டங்கள்  அதிகமானது.

அங்கு  வெயில், குளிர்,மழை,மற்றும்    காற்று   போன்றவையும் பயங்கரமாக இருக்கும்.
 சாலையில்   தெர்பையும், கல்லும் முள்ளும்
அதிகமாக     இருக்கும்.   வழியில்  பெரிய-பெரிய
மலைகளைக்   கடக்க  வேண்டியிருக்கும்.
மலைகளில்   குகைகள், கணவாய்கள்,    நதிகள் , கால்வாய்கள் வாய்க்கால்கள் இருக்கும் .
அதைக் கடப்பது மிகவும்  கடினம்.
அவை மிக ஆழமானதாக இருக்கும்.  
கரடி,  புலி,  ஓநாய்,
சிங்கம்,யானை    போன்றவைகளின்   பயங்கர
  சத்தங்கள் இருக்கும்.  
அதைக்    கேட்டால்    தைரியம் போய் விடும் .

அங்கு  தரையில்  தூங்க    வேண்டும்.
 மரப்  பட்டை  ஆடைகள் அணியவேண்டும் .
கிழங்கு , வேர், பழங்களையே  உணவாக
சாப்பிட வேண்டியிருக்கும்.   அவைகளும்  எல்லா   நாட்களிலும்     கிடைக்காது.  அதுவும்   காலத்திற்கு      ஏற்றபடியே   கிடைக்கும்.

மனிதனையே சாப்பிடும் ராக்ஷசர்கள்
 இரவில் உலாவுவார்கள்.
 அவர்கள் கோடிக்கணக்கில் கபட    நாடகம்
நடத்துவர்.   காட்டாற்று    மழை   வெள்ளம் பெருக்கெடுக்கும்.
அங்குள்ள ஆபத்துக்கள்   அதிகம்.
 
மான்விழியாளே!

நீ   இயற்கையிலேயே  பயந்தவள்.
அன்னம் போன்று   ந டப்பவளே !  
 நீ  காட்டில்  வசிக்கத் தகுதியற்றவள்.
நீ காட்டிற்குப்  போகும்    செய்தி கேட்பவர்கள்  
  எல்லோருமே    என்னைத்  திட்டுவார்கள்.
என் புகழுக்கு   களங்கம்  உண்டாகும் .
 மானசரோவர் அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீர்
 குடித்து  வளர்ந்தவள் ,
அன்னப்பறவை  போன்ற  நீ,
  உப்புநீர்  கடலில் செல்ல  முடியுமா ?
மாந்தோப்பில்      இருக்கும்   குயில்,
 கசப்பான  மரம்  உள்ள    காட்டில் அழகு  பெற  முடியுமா ?

சந்திரமுகியே!    இதயத்தில்    இதெல்லாம்  எண்ணி வீட்டிலேயே    இரு.
 வனத்தில்  மிக கஷ்டம்  அதிகம்.

இயற்கையாக  நன்மை    விரும்பும்
 குருவும் சுவாமியும்   சொல்வதை சிரமேற்கொண்டு நடக்கவேண்டும். இல்லை  எனில்   மனதில் மிகவும்  வருந்த  வேண்டியிருக்கும்.
 நிச்சயம் நன்மைக்குப் பதில்  தீங்கே உண்டாகும்.

No comments: