Friday, April 21, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம் இருபது

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் --பக்கம்   இருபது

         ரகுகுலத்தில் மேன்மையான    ஸ்ரீ ராமச்சந்திரரின்

 மிகவும் பணிவான இனிய  சொற்கள்
அன்னை கௌசல்யாவின்   இதயத்தில் அம்புகள் தைத்ததுபோல் வேதனை  அளித்தன.
 அந்த குளிர்ந்த மென்மையான ராமனின்   வேண்டுகோள்

 மழை பெய்ததும் வாடும்    ஆமணக்கு (ஜவாசா ) செடி போல கௌசல்யா    மனம்   வாடியது.

     மனவேதனைகளைச்  சொல்ல முடியாது.
  அவள் நிலை சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பெண்மான்       மருட்சி    அடைந்தது    போல்  இருந்தது.
கண்களில் கண்நீர்ததும்பியது.
உடல்   நடுங்கியது.
  மீன்  முதல்  மழை  நுரை சாப்பிட்டு
பெரு மூச்சு விட  கஷ்டப்படுவது போல்  அவள்  நிலை.
பிறகு மனதை திடப்படுத்தி   தைரியத்தை வரவழைத்துக்கொண்டு    மகனின் முகத்தைப்  பார்த்து

சொன்னாள்--"மகனே!  உன்  தந்தை   உன்னைத்   தன் உயிரை விட அதிகமாக  நேசிக்கிறார்.
உன் குணங்களையும்    பார்த்து

  தினமும் மிக  மகிழ்வார். அவர் தான்  உனக்கு நாட்டை  ஒப்படைக்க  நல்ல நேரத்தைக் குறிக்கச் செய்தார்.

இப்பொழுது உன்  அபராதம் என்ன ?
மகனே! எனக்கு இந்த
காரணத்தை மட்டும்  சொல்லிவிடு.
 சூரிய வம்ச மரத்தை  எரிக்கும்
 நெருப்பாக யாரானார்கள் ?
அப்பொழுது ராமரின் தயக்கத்தைக்  கண்ட
 அமைச்சரின்   மகன்  ,  எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.
அந்த நிகழ்ச்சிகளைக்  கேட்டு   கோசலை ஊமையானாள்.
அவளின் நிலையை  வர்ணிக்க இயலாது.
 அவளால் ராமனை வைத்துக்கொள்ளவும் முடியாது.,
காட்டிற்குப்போ  என்று   சொல்லவும்  முடியாது.
இரண்டு விதமாக வும்   இதயத்தில்  மிகப்பெரிய துன்பம். கடவுளின் செயல் எப்பொழுதும் எல்லோருக்குமே   வளைந்து நெளிந்துதான்  இருக்கும்.
 நிலவு என்று எழுதத் தொடங்கி ,
ராஹு என்றும்  எழுதிவிட்டார்.
அறமும் அன்பும்  கௌசல்யாவின்
 அறிவை சூழ்ந்துகொண்டது.
அவர்  தர்ம சங்கடத்தில்  இருந்தார்.
அறமும் அன்புக்கும் இடையில்  போராட்டம்.
 பிடிவாதமாக  மகனை வைத்துக்கொண்டால்
 அறம் கெட்டுவிடும் . சகோதரர்களுக்குள்  விரோதமும்  சண்டையும்   வந்துவிடும்.

ராமனை காட்டுக்கு  அனுப்பினால்
 மிகப்பெரிய   தீங்கு  வந்துவிடும்.
அறிவுள்ள  கௌசல்யா  பெண்ணின் குணம்
புரிந்து தெளிந்து    ராமனையும் பரதனையும் தன்  மகன்களாக   பாவித்து   ராமரிடம்  சொன்னாள்--
மகனே!    நான்    உனக்காக   அனைத்தையும்
 தியாகம் செய்கிறேன். நீ      நல்லதே    செய்துள்ளாய் .  அப்பாவின் கட்டளையை     ஏற்று
நடப்பதுதான்   எல்லா அறங்களிலும்
உயர்ந்த  அறம்.  
நாட்டுக்கு  அதிபதி  ஆக்குகிறேன் என்றவர் காட்டுக்கு  அனுப்புகிறார்.இதனால்    எனக்கு எதுவும்   வருத்தம்  இல்லை. நீ   இன்றி   பரதனுக்கு ,மகாராஜாவிற்கும், குடிமக்களுக்கும்

மிகவும்   வேதனையாக  இருக்கும்.  அப்பாவின்   கட்டளை தான்  என்றால்,   அம்மாவை  அப்பாவை  விட  பெரியவர் என்று நினைத்து  காட்டிற்கு செல்லாதே. அம்மா-ஆப்பா இருவரும் கட்டளையிட்டால்  நீ செல்லும்   காடு நூற்றுக்கணக்கான அயோத்தியாவிற்குச் சமம்.

   

No comments: