Thursday, April 20, 2017

ராமசரித மானசம் --அயோத்தியா காண்டம் -பக்கம் -பதினெட்டு.

ராமசரித மானசம் --அயோத்தியா காண்டம் -
           பக்கம் -பதினெட்டு.

நகரக் குலப்பெண்கள்   கைகேயிக்கு  அறிவுரை வழங்கினர்.

குலப்பெண்கள் கூறிய  அறிவுரை,
  இனிமைதரக்கூடியது.நன்மை தரக்கூடியது.
ஆனால் கொடிய மனம் படைத்த கூனியின் போதனைகள்
கைகேயியை   செவிடாக்கிவிட்டது.

  துளசி தாசர்   சொல்கிறார் --
சூரியன்  இன்றி   பகல் சோபிக்காது.
உயிரின்றி உடலால்  பயனில்லை.
நிலவின்றி இரவு  சோபிக்காது.
அவ்வாறே  ராமரின்றி   அயோத்யா  கலை  
இழந்துவிடும்.
அடி பெண்ணே! நீ இதயத்தில்
 இதை எண்ணி பார்த்தால்  சரி.

கைகேயி   எந்த   பதிலும்  பேசவில்லை.
அவள்  சஹிக்கமுடியாத
 கோபத்தின்  காரணமாக ,
தன் நிலை  மறந்து   நடந்துகொண்டாள்.
அவளுடைய  பார்வை  பசியான  புலி  மான்களைப்
பார்த்துக் கொண்டிருப்பது  போல் பயங்கரமாக இருந்தது.
அப்பொழுது   தோழிகள்    தீர்க்க  முடியாத  நோய் வந்துவிட்டது எனக் கருதி  விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
எல்லோரும்  அவளை முட்டாள், துரதிருஷ்டசாலி  என்று
சொல்லிக்கொண்டே சென்று விட்டனர்.
ஆட்சி  செய்யும் கைகேயியை
தெய்வம் பாழ் படுத்திவிட்டது.
இவள் செய்த இரக்கமற்ற செயலை வேறு யாரும்
செய்யமாட்டார்கள்.
நகரத்தின்  எல்லா    ஆண்களும்  பெண்களும்  அந்த  தீய  நடத்தை யுள்ள  கைகேயியை கோடிக்கணக்கான தகாத
வார்த்தைகளால்  திட்டி    புலம்பிக்கொண்டிருந்தனர்.
மக்கள் மனது பயங்கர வருத்தத்தால் எரிந்து கொண்டிருந்தது.  
ராமரின்றி  வாழும்   நம்பிக்கையே  இல்லை
என்று அனைவரும்      பெரு மூச்சு விட்டு சொல்லிக்கொண்டிருந்தனர்.
மிகப்பெரிய பிரிவு   ஏற்படும்  போது
 நீர்வாழ் பிராணிகள் தண்ணீர் வறண்ட நிலையில்  
துடிப்பதுபோல்   மக்கள்  வேதனையில்  துடித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராமச்சந்திரர்  அன்னை கௌசல்யாவிடம்  சென்றார்.
அவர்   முகம்    மிகவும்  மகிழ்ச்சியாக  இருந்தது.
மனதில் பல மடங்கு    உற்சாகம்  இருந்தது.
அவர் மனதில்  கவலை  இல்லை.
கைகேயி அன்னையின்    கட்டளை,
அப்பாவின் மௌனமான   சம்மதம்,
ராமரின் கவலை போய்விட்டது.

இப்பொழுது  ராமரின்  மனம்  புதியதாக  பிடித்த
யானையைப்  போன்றும் ,     பட்டாபிஷேகம்
அந்த யானையைக் கட்டும் முள்  சங்கிலி
 போன்றும்  இருந்தது.
காட்டிற்குச்  செல்ல வேண்டும்  என்பதைக் கேட்டு
தன்னை கட்டிலிருந்து விடுபட்டதாக  எண்ணி  ஆனந்தம்
அதிகரித்துவிட்டது.
  ரகுகுல திலகர்     ராமர்  இரு    கைகளையும்  கூப்பி
 ஆனந்தமாக அம்மாவின் சரணங்களில்     தலை
வைத்து    வணங்கினார். அம்மா அவருக்கு  ஆசிகள்  வழங்கினார் .  அன்புடன் ஆலிங்கனம் செய்தார்.
அவருக்கு  நகைகளும்  துணிகளும்  கொடுத்தார்.
அன்னை மீண்டும்  மீண்டும் ராமருக்கு முத்தமழை பொழிந்தார்.    கண்களில்  அன்புக் கண்ணீர் ஆனந்தக்கண்ணீராக  பெருக்கெடுத்தது.
அங்கம்ழுவதும் ஆனந்தமாக   இருந்தது.
அவரின்    அதீத  அன்பு     அழகான   ஸ்தனங்களில்
பால் ஊறி  ஓடத் தொடங்கியது.
அவருடைய  மகிழ்ச்சி    ஏழைக்கு குபேரன்  பதவி
கிடைத்தது போல்  இருந்தது.

No comments: