Tuesday, April 18, 2017

ராமசரிதமானஸ் --அயோத்தியா காண்டம் --பக்கம் பதினாறு

ராமசரிதமானஸ் --அயோத்தியா காண்டம் --பக்கம் பதினாறு

   
ராமர் அப்பாவை   அன்பின்   கட்டுப்பாட்டில்
இருப்பதைப் பார்த்து ,கைகேயி மீண்டும் அப்பாவின் மனதை புண்படுத்தும் பேச்சுக்கள்  பேசக்கூடாது  என அறிந்து ,
தேச  ,கால  ,சந்தர்பத்திற்கு ஏற்றவாறு  எண்ணி   பணிவான சொல்லில்  சொன்னார் - அப்பா, நான் சொல்வதை அதிகப்பிரசிங்கித்தனம் என  எண்ண  வேண்டாம். நான் உசிதமில்லாமல் பேசுவதை    என்னை    பாலகன் என்று கருதி  மன்னித்துவிடுங்கள்.
இந்த சின்னஞ்சிறு   விஷயத்திற்காக  , இவ்வளவு வருத்தமா ?
இந்த விஷயத்தை     எனக்கு  முதலிலேயே  சொல்லவில்லை.
நீங்கள் இந்த நிலையில்  இருப்பதைப்  பார்த்து நான்   அம்மாவிடம்  கேட்டேன்.அவர் சொன்னதைக்  கேட்டு எனக்கு  மிகவும்  மகிழ்ச்சி. உள்ளம் மிகவும் குளிர்ந்து விட்டது.
அப்பா!  இந்த மங்களமான  நேரத்தில்  கவலையை விட்டுவிடுங்கள்.  மன மகிழ்ச்சியுடன் எனக்கு கட்டளை இடுங்கள்.  இதைக் கூறும்போதே  ராமரின் உடல் முழுவதும்  ஆனந்தமாக  இருந்தது. மகனின் நல்ல குணமும் நடத்தையும்  தந்தைக்கு மிகவும்  ஆனந்தம் தருபவை. தாய்-தந்தையை

உயிரைவிட அதிகமாக நேசிப்பவன்  நான்கு பலன் களுக்கும் உரியவன் . அறம் ,    பொருள் ,    இன்பம் , வீடு நான்குமே அவர்கள்  கைப்பிடியில் .

தந்தையே!   உங்களின்  கட்டளையை  கடைப்பிடித்து ,
இப்பிறவிப் பயனைப் பெற்று சீக்கிரம் நான்  சீக்கிரம் வந்துவிடுவேன், எனக்கு கானகம் செல்ல அனுமதி கொடுங்கள்.   நான் அம்மாவிடம் அனுமதி பெற்று வருகிறேன். பிறகு உங்கள் பாதங்களை வணங்கி
வனவாசம் செல்வேன்.
 ராமர் அங்கிருந்து சென்றுவிட்டார்.  அரசர் சோகத்தின் காரணமாக எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த மிகவும்
கசப்பான செய்தி , தேள்   கொட்டியதும்  உடல்  முழுவதும் விஷம்  பரவியதுபோல்   தேள் விஷம் உடல் முழுவதும் பரவுவது  போல்  நகரம் முழுவதும்  பரவியது.

  காட்டுத் தீயால்   கொடிகளும் மரங்களும் வாடியதுபோல்
ராமர்  கானகம் செல்லும் செய்தி கேட்டு நகரத்தில்  உள்ள  எல்லா  ஆண்களும்   பெண்களும்   கவலைப்பட்டனர்.
யார்   எங்கிருந்தாலும்   செய்தி கேட்டு அங்கேயே  தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினர். மிகவும் துன்பம் பரவியது. யாருக்குமே தைரியம் வரவில்லை.
எல்லோரின் முகமும் வாட்டமாக இருந்தது.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாளாத்துயரில் மூழ்கினர்.  கருணை ரசத்தின்  அயோத்தியாவில் முரசு கொட்டி  இறங்கியதுபோல் தோன்றியது.

 எல்லாம் சரியாக நடக்கும் போது, கடவுள் அனைத்தையும்
கெடுத்துவிட்டார்.  எல்லா  இடங்களிலும்  மக்கள் கைகேயியைத் திட்டத் தொடங்கினர்.  இந்தப் பாவி  நல்ல வீட்டில்  நெருப்புவைத்துவிட்டாளே.  அவள்  தன் கைகளாலேயே   தன் கணங்களைப் பிடுங்கி குருடாகிக்கொண்டிருக்கிறாளே.  அமிர்தத்தை எரிந்து விட்டு விஷத்தை ருசி பார்க்கரிம்புகிறாளே. இந்த கொடுமைக்காரியான  தீயபுத்தி உள்ள துரதிர்ஷ்ட சாலியான கைகேயி ரகுவம்சம் என்ற மூங்கில் வனத்தை  எரிக்கும் நெருப்பு ஆகிவிட்டாளே.
இலையில் உட்கார்ந்து மரத்தை வெட்ட   ஆரம்பித்து விட்டாள்.
சுகத்தில்   சோகம்வந்து   சூழ்ந்துவிட்டது.  ராமர் இவளுக்கு உயிரைவிட  மிக  அன்பானவர். அப்படியிருந்தும் இந்த கொடூரமான    நடத்தைக்குக்  காரணம்   தெரியவில்லையே.
பெண்ணின் குணம் எப்படிப் பார்த்தாலும் புரியமுடியாது.
பெண்ணின்  நடத்தையை அறிய முடியாது. நாம்  நிழலைகூட  பிடித்துவிடலாம்.  ஆனால்  பெண்ணின் மனம் புரிந்துகொள்ள    முடியாது.  என்று கவிஞர்கள் பாடியது சத்தியவாக்காகிறது.


No comments: