Tuesday, March 21, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --தொண்ணூறு .

       ஸ்ரீ ராமச்சந்திரரின் அழகு இயற்கையானது.
அவரின் எழில் கோடிக்கணக்கான ரதி-மன்மதர்களை
நாணும் படி செய்யக்கூடியது. அவருடைய தாமரைப் பாதங்களில் முனிவர்களின் மனம் என்ற வண்டு எப்பொழுதும் மொய்த்துக்கொண்டிருக்கும்.
 பரிசுத்தமான மஞ்சள் வேஷ்டி காலைநேர சூரியன் மின்னலின் ஜ்யோதியை விட அழகாக இருந்தது.
இடுப்பில் அழகான காப்புக்கயிறு ,கச்சை ,
விஷாலமான புஜங்களில் அழகான நகைகள் .மஞ்சள் நிற பூணூல் .கையின் மோதிரம் , அனைத்துமே ஈடு இணையற்ற அழகாக காட்சி அளித்தது.மஞ்சள் துண்டு பூணுல் போன்றே
இருந்தது. இரு முனைகளிலும் முத்துக்களும் மணிகளும்
இணைக்கப்பட்டு பின்னப்பட்டு இருந்தன.
அழகான அகன்ற மார்பில் அழகான அணிகலன்கள் ஜொலித்தன.
தாமரை போன்ற அழகான கண்கள், காதுகளில் குண்டலங்கள், அழகின் கஜானா  போன்றே  இருந்தன.
அழகான புருவங்கள் எடுப்பான மூக்கு , நெற்றியில் திலகம் ,
நெற்றியில் அழகைக் கூட்டின.
எல்லா நகரப் பெண்களும் தேவ அழகிகளும் மணமகனைப் பார்த்து  திருஷ்டி கழித்தனர். ஆரத்தி எடுத்தனர். ராமரின் புகழ் பாடினர்.

சுமங்கலிப்பெண்கள் , குமாரர்கள் ,குமாரிகள்  அனைவரும்
மிக அன்புடன்  பாட்டுப்பாடினர்.   பார்வதி ஸ்ரீ ராமருக்கு மணமகன் -மணமகள் பரஸ்பர உறவை சொல்லிக்கொடுத்தார். சரஸ்வதிதேவி சீதைக்குக் கற்றுக்கொடுத்தாள். அந்தப்புரமே சிரிப்பும் கும்மாளமும் கேளிக்கைகளிலும் மூழ்கி ராமரையும் சீதையையும் பார்த்து
தங்கள் பிறவிப்பயனை அடைந்தனர்.

சீதை தன கையில் உள்ள மணிகளில் ஸ்ரீ ராமரின் பிரதிபிம்பம் பார்த்து பிரிவு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தன்னுடைய புஜம் என்ற கொடியையும் கண்களையும் அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் . பிறகு வரங்களையும் வதுக்களையும் மணமகன் வீட்டார் தங்கும்
இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது நகரம் முழுவதும்  தேவலோகத்தில் இருந்தும் ஆசிர்வாதங்கள் முழங்கின.நான்கு ஜோடிகளும் சிரஞ்சீவியாக  இருக்கவேண்டும் என்று ஆசிர்வதித்தனர்.
யோகிகள் , முனிவர்கள், தேவர்கள் மிகவும் மகிழ்ந்து ஆசிர்வதித்து  ஜய ஜய முழக்கத்துடன் தன்  தன் லோகத்திற்குச் சென்றனர்.

நான்கு குமாரர்களும் மனைவிகளுடன்  தந்தைக்கருகில் வந்தனர். தங்குமிடத்தில் மிக ஆனந்தம் பொங்கியது.

  பலவித உணவுகள் சமைக்கப்பட்டன.
 ஜனகர் மணமகன் வீட்டாரை அழைத்தார்.
ராஜா தசரதர் மகன்களுடன் விருந்துக்குச்  சென்றார்.

 அங்கு ஜனகர் அன்பும் பணிவும் உருவானவர் போல்
அனைவரின் பாதங்களைக் கழுவி , தகுந்த ஆசனங்களில் அமரவைத்தார். ஜனகர் அயோத்திய நாட்டின் அரசர் தசரதரின் பாதங்களைக் கழுவி பாத பூஜை செய்தார். பிறகு   சிவனின் இதய கமலங்களில் மறைத்திருக்கும் ராமரின் பாதங்களுக்கு பூஜை  செய்தார். பரிமாறுபவர்கள் வந்தனர்.
மரியாதையுடன் இலைகள் போடப்பட்டு  பருப்பு சாதம் பசுவின்  நெய் பரிமாறப் பட்டது.
எல்லோரும்   பிராணாய ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யாநாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, என்று போஜனத்திற்கு முன் சொல்லும்  மந்திரம் சொல்லி  ஐந்து  முறைப்படி சாப்பிடத்  தொடங்கினர்.
பலவிதமான  அமிர்தம் போன்ற பலகாரங்கள் , உணவு வகைகள் , பரிமாறப்பட்டன.
அந்த பலாகரங்களின் பெயர்கள் ,சுவை வர்ணிக்க இயலாதது .
சிறந்த திறமை வாய்ந்த சமையல் நிபுணர்கள்
மென்று சாப்பிடுவது, உறுஞ்சி சாப்பிடுவது , நக்கிச் சாப்பிடுவது , குடித்து அருந்துவது என சாப்பாட்டு முறைப்படி பண்டங்கள் தயாரித்தனர். அறுசுவை  உண்டி , . ஒவ்வொரு சுவைக்கும் பல ரக  உணவுகள். மிகவும் சுவை மிக்கவை.
உணவு அருந்தும் பொது புகழ்மிக்க இனிய பாடல்களைப்
பெண்கள் பாடினர். இந்த முறையில் அனைவரும் உணவு சாப்பிட்டு ஆசமனம் செய்தனர்.
பிறகு வெத்தலை கொடுத்து ஜனகர் சமூகத்துடன் தசரதர் பூஜை செய்தனர். அனைத்து அரசர்களிலும்  மேலான தசரதர்
மகிழ்ச்சியுடன் மணமகன் தங்குமிடத்திற்கும் சென்றனர்.

ஜனகபுரியில் தினந்தோறும் புதிய  மங்கள நிகழ்ச்சிகள்
நடந்துகொண்டிருக்கின்றன. இரவும் பகலும் நொடி போன்று கழிந்துகொண்டிருந்தன. அதிகாலை அரசர் தசரதர் எழுந்தார். அவர் அரசர்களுக்கெல்லாம் மேலானவர். யாசகர்கள் அவரைப் புகழ்ந்து பாடினர்.
நான்கு மகன்களையும் மருமகள்களையும் பார்த்து தசரதர் மிக ஆனந்தமடைந்தார். மனதில் மிக ஆனந்தத்துடன் வசிஷ்டரைப் பார்க்கச் சென்றார்.
முனிவரை வணங்கி மிகவும் பணிவுடன் சொன்னார் ---
முனிவரே!உங்களின் கிருபையால் எனது வேலை முழுமை
அடைந்தது.  அனைத்து அந்தணர்களையும் அழைத்து அவர்களுக்கு நகைகள் துணிகளால் அலங்கரித்த பசுமாடுகளைத் தானமாகக் கொடுங்கள்.
இதைக்கேட்டு முனிவர் ராஜாவைப் பாராட்டி முனிவர்களை அழைக்க ஆட்களை அனுப்பினார்.
அப்பொழுது  அங்கே வாமதேவர், தேவரிஷி நாரதர்,ஜாபாலி, விஷ்வாமித்திரர் போன்ற மேன்மைக்குரிய முனிவர்கள் அங்கே வந்தனர்.  அரசர் அவர்களை வணங்கி உத்தமமான இருக்கையில் அமரவைத்தார். காமதேனுவைப்போன்று நல்ல குணம் உடைய நான்கு லக்ஷம் உத்தமமான மாடுகளை வரவழைத்தார். அந்த பசுமாடுகளை நன்கு அலங்கரித்து
அந்தணர்களுக்குத் தானமாக அளித்தார்.
அரசர் வாழ்வின் பயன் பெற்றதாகக் கருதினார்.
ஆசிகள் பெற்று அரசர் ஆனந்தமடைந்தார்.
எல்லோரின்  விருப்பத்திற்கு இணங்க  தங்கம் , ஆடை, மணி, குதிரை போன்றவைகள் தானமாக கொடுக்கப்பட்டன.

No comments: