Friday, March 3, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -எண்பத்திநான்கு.


  புவியாளும் அரசர் தசரதர் முனிவரை
  பலமுறை வணங்கினார்.

 விஷ்வாமித்திரர் அவரை அணைத்து ஆசீர்வாதம் செய்தி
நலம் விசாரித்தார்.  பிறகு இரண்டு சகோதரர்களும் தன தந்தை தசரதரின் பாதங்களில் விழுந்து வணங்கினர்.
புத்திரர்களைத் தூக்கி இதயத்துடன் அணைத்து
சகிக்க முடியாத துன்பத்திலிருந்து விடுதலை பெற்றார்.
அவரின் இறந்த உடலுக்கு உயிர் கிடைத்தது போன்ற  புத்துணர்வு ஏற்பட்டது.
பிறகு வசிஷ்டரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
முனிவரும் அன்பின் ஆனந்தத்துடன் அணைத்து ஆசிகள் வணங்கினார்.
இரண்டு சகோதரர்களும் எல்லா அந்தணர்களையும்  வணங்கி ஆசிகள்  பெற்றனர்.
பரதனும் சத்துருக்கனனும் ராமனை வணங்கினர்.
இரண்டு சகோதரர்களையும் பார்த்து லக்ஷ்மணனும்
ராமரும் மகிழ்ந்தனர்.

  பின்னர் மிகவும் கிருபையும் பணிவும் உள்ள ராமர்
அயோத்தியா மக்களையும் , குடும்பத்தினரையும்
யாச்சகர்களையும் , அமைச்சர்களையும்  நண்பர்களையும்
சந்தித்தார்.
 ராமரின் பிரிவால் துன்புற்ற அயோத்தியாவாசிகள்
ராமரைப் பார்த்து  வணங்கினர்.  அவர்கள் மனம் குளிர்ந்தது.
அன்பின் முறையை வர்ணிக்க முடியாது.
  அரசனருகில் அமர்ந்த  நான்கு மகன்களும்

அறம்,பொருள் , இன்பம் ,வீடு நான்கும்
  உடல் தரித்து அழகுடன் காட்சி
அளிப்பது போல் இருந்தனர்.
  அரசருடன்  நான்கு மகன்களும் ஒன்றாக  இருப்பதைப் பார்த்து   அயோத்தியாவாசிகள் மிகவும் மகிழ்ந்தனர்.
ஆகாயத்திலிருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
முரசுகள் முழங்கின. தேவலோக அழகிகள்
ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
 வரவேற்க வந்தவர்கள் மற்ற அந்தணர்கள் ,அமைச்சர்கள்,
அரசர்  தசரதர் அனைவருக்கும்  தக்க மரியாதை செலுத்தி
 அனுமதி பெற்று சென்றனர்.
மணமகன் வீட்டார் மூர்த்த லக்னத்திற்கு முன்பே வந்ததால்
ஜனகபுரியில் அதிக ஆனந்தம் அடைந்தனர்.
அவர்களின் ஆனந்தம் பிரம்மானந்தமாக இருந்தது.
அனைவரும் ராமரின் அழகையும் சீதையின் அழகையும்
பற்றியே பேசிக்கொண்டும் புகழ்ந்துகொண்டும் இருந்தனர்.
 ஜனகரின் புண்ணியவடிவமாக  சீதையும் ,
தசரதரின் புண்ணியவடிவமாக ராமரும் தோன்றி உள்ளதாகப் புகழ்ந்தனர்.
 இவர்களைப்போல உலகில் யாரும் பிறக்கவில்லை.
எங்கும் இல்லை, எதிர்காலத்திலும் உண்டாக மாட்டார்கள்.
நம் எல்லோரின் புண்ணியத்தின் நிதியாக உலகத்தில் தோன்றி ஜனகபுரியின்  புண்ணியமே.
ஜானகி -ராமச்சந்திரரின்  அழகை  நேரடியாகப் பார்த்த  புண்யாத்மாக்கள் ஜனகபுரி மக்கள் போல் உலகில் யார் இருக்கமுடியும்?
நாம் ரகுநாதரின் திருமணமும் பார்ப்போம் . அதன் பயனும் பெறுவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர்.
இனி அடிக்கடி ராமரின் வருகை ஜானகி --ராமர் திருமணத்தின் காரணமாக ஜனகபுரிக்கு கிடைக்கும்
என்ற மகிழ்ச்சியில் ஜனகபுரி மக்கள் இருந்தனர்.
 ராம-லக்ஷ்மணர் போல் பரதனும் சத்துருக்னனும்
அழகாகத்தான் இருக்கிறார்கள் என்றும் மகிழ்ந்தனர்.
லக்ஷ்மணனும் சத்ருக்னனும் ஒரே மாதிரியாக உள்ளனர் .
இருவரின் இருவரின் அழகுக்கு  மூவுலகத்திலும்  உவமை இல்லை.

     துளசிதாஸ் ,கவிகள் ,வித்வான்கள் அனைவருமே இவர்களுக்கு ஒப்பானவை வையகத்தில் இல்லை என்றே கூறினார்கள். பலம் ,பணிவு, கல்வி, ஒழுக்கம் , அழகு இவர்களுக்கு இணை இவர்களே என்றனர்.
ஜனகபுரியின்  பெண்கள்  அனைவரும் முந்தாணை விரித்து  இந்த நால்வரின் திருமணமும் இங்கேயே நடக்கவேண்டும் என்று
இறைவனைப் பிரார்த்தித்தனர்.
அன்புக் கண்ணீர்  மல்க  , பெண்கள்  ஒருவர் மற்றவரிடம்
இரண்டு அரசர்களுமே புண்ணியத்தின் சமுத்திரம் .
முக்கண்ண1ன் சிவன் இவர்களுடைய மனவிருப்பத்தைப்
பூர்த்திசெய்வார் என்று கூறினர்.  பெண்கள் தங்கள்
மன விருப்பத்தை மனதில் நினைத்தே ஆனந்தமாக இருந்தனர்.
சீதையின் சுயவரத்திற்கு வந்தவர்களும் நான்கு சகோதரர்களின் தோற்றம் கண்டு ஆனந்தமடைந்தனர்.
ராமரின் களங்கமற்ற புகழைப் புகழ்ந்தனர் .
ஜனகபுரி மக்களும் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்களும்
ஆனந்தமாக இருந்தனர்.
  திருமணநாளின் லக்ன நாள். பின் பனிக்காலம் .அழகான
கிரஹங்கள்,தேதி,நக்ஷத்திரம் யோகம் ,கிழமை அனைத்திலும்  மேன்மையான நாள். பிரம்மா குறித்தநாள்.






No comments: