Tuesday, February 7, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் எழுபத்தி மூன்று --துளசிதாஸ்


ராமசரிதமானஸ் -பாலகாண்டம்
 எழுபத்தி  மூன்று --                துளசிதாஸ் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சீதை ஸ்ரீ ராமருக்கு  வரமாலை அணிந்த பின்னும் சீதையைப்பார்த்து சில மன்னர்களுக்கு ஆசை உண்டாகியது.
அவர்கள் துஷ்டர்கள். 
கெட்ட புத்திரர்கள்,
 முட்டாள் அரசர்கள்.
அவர்கள் மனதில் மிகவும்
கோபம் கொண்டனர்.
அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.
அவர்கள் எழுந்து தற்புகழ்ச்சி பேசி
உளற ஆரம்பித்தனர்.
சிலர் கத்தினர் --
"சீதையை எடுத்துக்கொண்டு ,
இரண்டு  அரசகுமாரர்களையும் கட்டி வையுங்கள்.
வில் முறித்ததால் மட்டும்
 அவர்கள் ஆசை நிறைவேறாது.
நாம் உயிருடன் இருக்கும் வரை சீதையை எப்படி
அவர்கள் மணக்க முடியும்.
போர் புரிந்து  இரண்டு சகோதரர்களுடன்
ஜனகரையும் தோற்கடித்து வென்றுவிடுங்கள்.
சாதுவான அரசர்கள் சொன்னார்கள் ---
"இந்த ராஜசபையில் நடப்பதைப் பார்த்து
நாணமே நாணிக் குனிகிறது. "
உங்களுடைய பலம் ,வீரம், பெருமை,பிரதாபம் ,
கௌரவம் எல்லாமே வில்லோடு சென்றுவிட்டது.
அந்த வீரம் போய்விட்டது. 
மீண்டும் எப்படி வந்தது?
இந்த துஷ்டத்தனமான  அறிவால்  தான்,
உங்கள் முகத்தில் பகவான்  களங்கம் ஏற்படுத்தி விட்டார்.
பொறாமை,கர்வம்,கோபம் அனைத்தையும்
விட்டுவிட்டு ஸ்ரீ ராமரை பாருங்கள்.
லக்ஷ்மணனின் கோபம் என்ற நெருப்பில் விழும் விளக்குப்பூச்சி ஆகி மாண்டுவிடாதீர்கள்.

சிலவற்றை விரும்பினாலும் பெற முடியாது.
இறைவன் படைப்பு அப்படி.
கருடனின் வேகத்தை காகம் பெற முடியாது.
சிங்கத்தை போன்று முயல் ஆக முடியாது.
காரணமின்றியே கோபப்படுபவன்
நலம் பெற முடியாது.
சிவபகவானை விரோதித்து ,
எல்லாவித செல்வங்களும் பெறமுடியாது.
பேராசை உடையவன்  நற்புகழ் பெற முடியாது.
காமுகன் களங்கமற்று இருக்கமுடியாது.
ஸ்ரீ ஹரியை விரும்பாத மனிதன்
 மோக்ஷத்தை அடைய முடியாது.
அவ்வாறே அரசர்களே!சீதையை அடைய நினைக்கும் உங்களுடைய பேராசை வீணானது.
அங்கு நடந்த இரைச்சலைக் கேட்டு
சீதைக்கு சந்தேகம் வந்துவிட்டது.
அப்பொழுது தோழிகள் சீதையை
அவள் அம்மாவிடம்  அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீ ராமர் மனதில் சீதையின் அன்பை வர்ணித்து
இயற்கையாக குருவிடம் சென்றார்.
 ராணிகளுடன் சேர்ந்து  சீதை வருத்தப்பட்டு
இறைவனின் சித்தம் என்ன ? என்று
சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அரசனின் சொல்லைக்கேட்டு ,
லக்ஷ்மணன் இங்கும் அங்கும் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால் ராமரின் மீதுள்ள மரியாதை கலந்த
அச்சத்தால் பேச முடியவில்லை.
லக்ஷ்மணனின் கண்கள் சிவந்தன.
புருவம் வளைந்தது.
மதம் பிடித்த யானைக் கூட்டம்
பார்த்து  சிங்கக் குட்டிக்கு உற்சாகம்
வந்ததுபோல் இருந்தது.
அங்குள்ள கலவரம் குழப்பங்களைப் பார்த்த
ஜனகபுரி பெண்கள் கவலைப்பட்டனர்.
அவர்கள் அந்த துஷ்ட அரசர்களைத் தட்டத் துவங்கினர்.
அந்த சந்தர்பத்தில் சிவதனுஷ் முறிந்ததைக் கேட்டு
பிருகு குலத்தின் தாமரையின் சூரியன் பரசுராமர்  வந்தார்.
பரசுராமரைப்  பார்த்து அனைத்து அரசர்களும்
கழுகைப் பார்த்து காடை பயந்து ஒளிந்ததுபோல்
நடுங்கினர்.
வெண்மையான உடலில் விபூதி மிகவும் அழகாய்த் தோன்றியது. அகன்ற நெற்றியில் விபூதியின் மூன்று
பட்டைகள் அழகை மெருகூட்டின.
தலையில் ஜடா முடி.
அழகான முகம் கோபத்தின்
 காரணமாக சிவந்திருந்தன.
 புருவங்கள் வளைந்து கண்கள் சிவந்திருந்தன.
 அவர் மிகவும் கோபமாக இருப்பதை
 அவர் தோற்றம் தெளிவாக்கியது.
காளைமாடு போன்று உயர்ந்த உறுதியான தோள்கள்,
மார்பும் புஜங்களும் அகன்று பெரியதாக இருந்தன.
அழகான பூணூல் அணிந்திருந்தார்.
 மாலை போட்டிருந்தார்.
மான் தோல் இருந்தது.
இடுப்பில் முனிவர்களுடைய மரவுரி தரித்திருந்தார்.
கையில் கோடரி இருந்தது.
அமைதியான தோற்றம் ,
ஆனால் செய்வது மிக
 கொடூர மானமான செயல்.
வீரரசமே முனிவர் உருவத்தில் வந்தது
போன்ற தோற்றம்.
பரசுராமரின் அச்சம் தரும் தோற்றம் கண்டு
அனைத்து அரசர்களும் எழுந்து நின்றனர்.
அவர்கள் பயந்து
அப்பாவின் பெயரையும் சொல்லி வணங்கினர்.
அனைவருமே பரசுராமரின்
பார்வையில் தங்கள்
 ஆயுள் முடிந்துவிட்டாதாகக் கருதினர்.
பிறகு ஜனகர் வந்து வணங்கினார்.
 சீதை அழைத்து வணங்க வைத்தார்.
பரசுராமர் சீதையை வாழ்த்தினார்.
தோழிகள் மகிழ்ந்தனர்.
அவர்கள் சீதையை அழைத்துச் சென்றனர்.
அங்கே விஷ்வாமித்திரர் வந்து
ராமரையும் இலக்ஷ்மணரையும்
வணங்கச் சொன்னார்.
அவர் இருவரையும் பரசுராமருக்கு
அறிமுகப் படுத்தினார்.
இவர்கள் தசரதரின் குமாரர்கள் என்றார்.
அந்த சகோதர ஜோடிகளின் அழகு
 அவருக்குப் பிடித்துவிட்டது.
அவர் இருவருக்கும் ஆசிகள் வழங்கினார்.
 காமனின் ஆணவத்தை அடக்கும் அழகான
தோற்றமுடைய ராமரைப் பார்த்து
பிரமிப்புடன் நின்றார்.
 அனைத்தும் அறிந்திருந்தும்
ஒன்றும் அறியாதவர்போல்
ஜனகரிடம்  ,
இங்கு ஏன் கூட்டம் சேர்ந்துள்ளது ?
என்று கேட்டார்.
கேட்கும் போதே கோபக்கனல் தெரித்தது.
ஜனகர் அனைத்தையும் விவரமாகக் கூறினார்.
ஜனகர் சொன்னதைக் கேட்டுத் திரும்பினால்
சிவதனுஷ் உடைந்து கீழே கிடப்பது தென்பட்டது.
அதைப்பார்த்ததும் கோபம் அதிகரித்துவிட்டது.
உடனே ஜனகரை ,
முட்டாளே!இதை யார் உடைத்தது?
சொல்! என்றார்.
என்னுடைய அரசாங்க எல்லை வரை உள்ள பூமியை திருப்பிவிடுவேன்.
அரசர் பயத்தின் காரணமாக பதில் பேசவில்லை.
இதைக்கேட்டு கொடிய  அரசர்கள் மனதில் மகிழ்ந்தனர்.
நகரத்தில் உள்ளவர்கள், ரிஷிகள்முனிவர்கள்,
எல்லோரும் பயந்தனர். கவலைப்பட்டனர்.
சீதையின் தாயார் மிகவும் வருந்தினார்.
கடவுள் செய்த வேலையை கெடுத்துவிட்டாரே
என்று நினைத்தார்.
பரசுராமரின் குணத்தைக்கேட்டு,
சீதைக்கு அரை நொடி போவது
 ஒரு யுகத்திற்கு இணையாக இருந்தது.
ராமர் அனைவரும் பயந்து இருப்பதைப் பார்த்து ,
 சீதையின் பயத்தையும் அறிந்து சொன்னார் --என்னுடைய மனதில் மகிழ்ச்சியும் இல்லை .  வருத்தமும் இல்லை. 

No comments: