Wednesday, February 15, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -எண்பது

     தசரத மகாரா மாப்பிள்ளை ஊர்வலம் அனைவரையும்

வியக்க வைத்தது. குதிரைகள், ரதங்கள், யானைகள் ஒவ்வொன்றும் மிக தெய்வீக அழகுபெற்று விளங்கின.

அழகான யானைகளின் மேல் அம்பாரிகள் இருந்தன,   ஆவணி மாத  மேகக்கூட்டங்கள்  செல்வதுபோல்
மணி ஓசைகளுடன் சென்றன.
அழகான பல்லாக்குகள், சுகமாக அமர இருக்கைகள்
இவைகளில் உயர்ந்த அந்தணர்கள் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . வேதங்களின் பாடல்களே வடிவம் எடுத்ததுபோல் இருந்தன.
பாடகர்கள், இசைப்பவர்கள் ,கவிகள் தங்கள் தகுதிக்கான சவாரியில் சென்றனர்.
பல இனத்தைச் சேர்ந்த கோவேறிக்கழுதைகள்,
ஒட்டகங்கள் ,காளைமாடுகள்  ஆகியவற்றில்
எண்ணிக்கையிலடங்கா பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன.
வேலைக்காரர்கள் காவடிகளில் பல பொருள்கள் எடுத்துச் சென்றனர். எல்லோரும் தன் தன் சமூகத்துடன் சென்றனர்.
  எல்லோருடைய இதயத்திலும் அளவில்லா ஆனந்தம் .
எல்லோருக்கும் நீண்ட நாட்களாகாக் காணாத ராம-லக்ஷ்மன்னரை பார்க்கவேண்டும் என்ற ஆசை. பார்க்கப்பூகிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
யானைகளின் பிளிறல்,அவைகள் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை ,நாலாபக்கங்களிலும் தேரோடும் கட-கட சத்தம் ,
குதிரைகளின் கனைப்பு ஒலிகள், முரசொலிகள் மிக ஆனந்தமாக இருந்தன. எங்குமே வேற்றுமை    காணவில்லை .
 மகாராஜா தசரதரின் வாயிலில் அதிகக் கூட்டம் .
அதில் கல் எறிந்தால் அது அறைக்கப்ப்ட்டுவிடும்.
மாடியில் ஏறிய பெண்கள் மங்கள தாம்பாளத்தில்  ஆரத்தி
எடுத்துக்கொண்டிருந்தனர்.
 பலவிதமான மனங்கவரும் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது மந்திரிகள் இரண்டு தேர்கள் அலங்கரித்து
சூரியனின் குதிரைகளையே தோற்கடிக்கும்
குதிரைகளைப் பூட்டினர்.
இரண்டு தேர்களையும் அரசரிடம் கொண்டுவந்தனர். ஒரு தேரில் அரசாங்கப்போருட்கள் ஏற்றப்பட்டன.
அடுத்தது சக்தியின் உருப்பெற்று மிக அழகாக இருந்தது.
அந்த அழகான தேரில்  ராஜா குரு வசிஷ்டரை மகிழ்வுடன் அமரவைத்து சிவன்,பார்வதி, கணேஷ் ,குரு அனைவரையும்
நினைத்து வணங்கி தேரில் ஏறி அமர்ந்தார்.

வசிஷ்டருடன்  மகாராஜா அமர்ந்திருக்கும் அழகு தேவகுரு
ப்ரஹஸ்பதியுடன் இந்திரன் அமர்ந்திருந்ததுபோல் இருந்தது.
 வேதங்களின் முறைப்படி குழப் பழக்க வழக்கப்படி எல்லா காரியங்களும் செய்துவிட்டு , எல்லோரும் எல்லாவிதத்திலும்
அலங்கரித்து வருவதைப் பார்த்து ,
ஸ்ரீ ராமச்சந்திரரை ஸ்மரித்து  ,குருவின் அனுமதி பெற்று
பூமிபதி தசரதர் சங்கு முழங்கினார். அந்த மாப்பிள்ளை ஊர்வலம் பார்த்து தேவர்கள் மகிழ்ந்தனர்.
அழகான மங்களம் தரும் மலர்கள் எடுத்துத் தூவினர்.
 குதிரைகள் கனைத்தன. யானைகள் பிளிறின .
ஆகாயத்திலும் ஊர்வலத்திலும் இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன,
தேவலோகத்துப்  பெண்களும் பூலோகப் பெண்களும் அழகான மங்களம் தரும் பாடல்கள் பாடினர். இனிமையான ரகத்தில்  சஹானாய் வாத்தியம் வாசிக்கத் தொடங்கினர்.

No comments: