Thursday, February 2, 2017

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --அறுபத்தேழு

ராமசரித மானஸ்-பாலகாண்டம் --அறுபத்தேழு

  சீதையும் தோழிகளும்   பேசிக்கொண்டிருக்கும் போதே ,

இரண்டு சகோதரர்களும் கொடி மண்டபத்தில்  இருந்து

வெளிப்பட்டனர்.
 அவர்கள்  இருவரும்  இரண்டு களங்கமற்ற நிலவுகள் மேகங்களின்  திரையை  விலக்கி வந்தது போல் இருந்தனர்.
இருவருமே அழகின் எல்லை. அவர்களின் உடலழகு  நீலத்தாமரை மஞ்சள் தாமரை போன்றிருந்தனர்.
தலையில் அழகான மயிலிறகு அழகாக இருந்தது . நடுநடுவில்  பூக்களின் மொட்டுக்கள் பதிக்கப்பட்டிருந்தன.
நெற்றியில் திலகமும் வேர்வைத்துளிகளும்  அழகுக்கு மெருகூட்டின.காதுகளில் மிக அழகான காதணிகள் ,வளைந்த புருவங்கள் , சுருட்டை முடி , புதிய செந்தாமரைபோல் சிவந்த கண்கள் என அழகின் திருஉருவாய் காட்சி அளித்தனர்.
தாடை,மூக்கு,கன்னங்கள் ஆகியவை மிக அழகாக இருந்தன.
சிரிப்பின் அழகு மனதை விலைக்கிவாங்கிவிடும்.
முகத்தின் அழகைக் கண்டு அநேக காமதேவதைகள்
நாணிவிடும்.

மார்பில் மணிமாலை . சங்கு போன்ற கழுத்து,காமதேவனின் யானைக்குட்டியின் தும்பிக்கை போன்ற கைகள், அவை பலத்தின்இறுதி எல்லையாகக் காட்சி அளித்தன.

இடதுகையில் பூவுடன் கூடிய பூக்கூடை.  அந்த கருநீல குமாரன் உண்மையிலேயே அதிக அழகு உள்ளவன்.
சிங்கம் போன்று  இடுப்புள்ளபட்டாடை அணிந்துள்ளவர்கள்,
அழகும் ஒழுக்கமும் நிறைந்த சூர்யகுலத்தின் ஆபரணங்கள் .
ஸ்ரீ ராமச்சந்திரரைப் பார்த்து தோழிகள் தன்னையே மறந்து நின்றனர். .
ஒரு கெட்டிக்கார தோழி சீதையின் கைபிடித்து சொன்னாள்--
கிரிஜா தேவியை பிறகு தியானம் செய்யலாம். ராஜகுமாரனை முதலில் பார்க்கலாம்.

அப்பொழுது  சீதை தயங்கிக்கொண்டே கண்களைத் திறந்தாள். ரகுகுல திலகங்கள் இருவரும் தனக்கு முன்னால்
நிற்பதைப் பார்த்தாள்.நகம் முதல் சிரம் வரை ராமரின்
அளகைப்பார்த்தாள். பின்னர் தந்தையின் சபதத்தை   நினைத்து  மிகவும் வருத்தமடைந்தாள்.
அப்பொழுது தோழிகள் சீதையின்  பரவசத்தைக் கண்டனர்.
அப்பொழுது எல்லோரும் பயந்து  ,  நேரமாகிவிட்டது. நாளை இதே நேரத்தில் இங்கு வருவோம்  என்று சொல்லி மனதிற்குள்
சிரித்தனர்.
தோழிகளின் இந்த ரஹசியமான சொல்லைக்கேட்டு சீதை நாணமடைந்தாள் . வெகுநேரமானதால் அம்மா திட்டுவாளே என்ற பயம் பற்றியது. தான் அப்பாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்ந்து ஸ்ரீ ராமரை நினைத்துக்கொண்டே
வீட்டிற்குச் சென்றாள். மான்,பறவைகள் மரங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் சாக்கில் ராமரைப் பார்க்க அடிக்கடி வந்தாள். பார்க்கப்பார்க்க காதல் மிகவும் அதிகரித்தது.
  சிவதனுஷ் மிகவும் உறுதியானது என்று அறிந்து மனதில் ராமரை நினைத்து மனதிற்குள்ளேயே  வருந்தினாள்.
இந்த ராமர் வில்லை எப்படி முறிப்பார்?ஆனால் இறைவனின் நினைவு வந்ததுமே நம்பிக்கையால் மகிழ்ச்சியடைந்தாள்.

ராமரும் அன்பு,அழகு,அடக்கம்,ஒழுக்கம் நிறைந்த  சீதை போவதைப் பார்த்து அன்பு என்ற மென்மையான மையால்,
சீதையின் உருவத்தை தன்னுடைய அழகான மனம் என்ற
திரைச்சீலையில் தீட்டிக்கொண்டார்.
     சீதை பவானி கோவிலுக்குச் சென்று, கரங்களைக் கூப்பி வேண்டினாள்---
"மேன்மை பொருந்திய மலையரசனின் மகளே!
தாங்கள் வாழ்க!
மகாதேவனின் முகம்  என்ற  நிலவை
கண் இமைக்காமல் பார்க்கும் சகோரி பறவை போல் இருக்கும் தேவியே!
 தாங்கள்  வாழ்க! யானை முகமுள்ள கணேசன் மற்றும் ஆறுமுகம் கொண்ட சுவாமி கார்த்திகேயனின் தாயாரே!ஜகஜ்ஜனனியே!
மின்னல் போன்று ஒளிமிக்க தேஹம் உடைய  தேவியே!! தாங்கள் வாழ்க!
தங்களுக்கு ஆரம்பம், நடு,முடிவு என்று எதுவுமே இல்லை.
உங்கள் எல்லையில்லா மகிமையை வேதங்களும் அறியா.
தாங்கள் உலகைப் படைத்து அழிப்பவர்.
உலகைத்தைக் கவருபவர். சுதந்திரமாக சுற்றுபவர்.
கணவனை இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்ட பெண்களில் ,
அன்னையே!உங்களுக்கு முதலிடம்.
உங்களுடைய எல்லையில்லா பெருமையை ஆயிரம் சரஸ்வதி களாலும். சேஷன் களாலும்  வர்ணிக்க இயலாது.

பக்தர்கள் கேட்கும் வரம்  அளிக்கும்  தேவியே!
மூன்றுலகு க்கும் தேவன் சிவனின் பத்தினியே!
தங்களுக்குத் தொண்டுபுரிந்தால் தர்ம,அர்த்த,காம,மோக்ஷம் என்ற நான்கு பலன்களும்   எளிதாக  கிட்டும்.
தேவியே! உங்கள் சரணகமலங்களை  பூஜித்து ,
தெய்வம், மனிதன்,முனிவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைவார்கள்.
  என்னுடைய மப விருப்பத்தை  நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
நீங்கள் எப்பொழுதும் எல்லோருடைய இதயம் என்ற நகரத்தில் வசிக்கிறீர்கள். இந்த காரணத்தால் நான் என் விருப்பத்தை  வெளியிடவில்லை. இவ்வாறு சொல்லி தேவியின் பாதங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
 தேவி பார்வதி , சீதையின் பணிவிற்கும் அன்பிற்கும் வயப்பட்டு ,  தன மாலையை நழுவவிட்டாள். பின் புன்னகை பூத்தாள்.
சீதை மிகவும் சிரத்தையுடன் அந்த பிரசாதத்தை தலையில் சூட்டிக் கொண்டாள். கிரிஜா மகிழ்ந்து சொன்னாள்--"சீதா!
என்னுடைய உண்மையான ஆசிகளைக் கேள் .
உன்னுடைய மன விருப்பம் நிறைவேறும். ராரதரின் வார்த்தைகள் சத்தியமானது. சாத்தியமாகக் கூடியது. யாரை உன் மனது விரும்புகிறதோ ,அவரே உன் மணவாளன் ஆவார். அவர் இரக்கத்தின் கஜானா. (பொக்கிஷம் }சகலமும் அறிந்தவர். உன்னுடைய  நல்ல ஒழுக்கத்தையும், அன்பையும் நன்கு அறிந்தவர். இவ்வாறு ஸ்ரீ கிரிஜா தேவியின் ஆசிர்வாதம்
கேட்டு ஜானகியும் தோழிகளும் மிகவும் மகிழ்ந்தனர்.

துளசிதாசர்  சொல்கிறார் ---"பவானி யை   மீண்டும் மீண்டும் வணங்கி   சீதை மிக மகிழ்ச்சியுடன்  அரண்மனைக்குத்
திரும்பினாள், கௌரியின் அனுகூலமான ஆசிகளை நினைத்து சீதையின் மனத்தில் அதிக ஆனந்தம் ஏற்பட்டது.
அழகான நன்மையின் அடையாளமாக இடது அங்கங்கள்
துடிக்கத்தொடங்கின.

ராமரும் லக்ஷ்மணனும் சீதையின் அழகைப் புகழ்ந்து கொண்டே   குரு  இருந்த மாளிகைக்குச்  சென்றனர்.
ஸ்ரீ ராமர் விஷ்வாமித்திரரிடம் எல்லாமே சொன்னார்.
அவருடைய எளிய சுவபாவம் . எதையும் மறைக்கவோ,
யாரையும் ஏமாற்றவோ விடாது.
புஷ்பங்களைப் பெற்று முனிவர் பூஜை செய்தார்.
பிறகு இரண்டு சகோதரர்களையும் ஆசீர்வதித்தார்.
உங்கள் மனவிருப்பம் வெற்றிபெறும் என்றார்.
இருவரும் மகிழ்ந்தனர்.
ரிஷி உணவருந்தி விட்டு சில
பழமையான கதைகளைச் சொன்னார்.
பகல் பொழுது கழிந்தது.
 குருவின் அனுமதி பெற்று இருவரும்
 சந்தியா வந்தனம் செய்யச் சென்றனர்.
கிழக்கில் நிலவு தோன்றியது.
 ராமர் நிலவை சீதையின் முகம்  என்று
  நினைத்து மகிழ்ந்தார்.
 பிறகு அவரின்னா எண்ணம் மாறியது
இந்த நிலவு சீதையின் முகம் போல்
அழகாக இல்லையே என்று நினைத்தார்.
 இந்த  நிலவு உப்பான சமுத்திரத்தில் இருந்து தோன்றியுள்ளது.
விஷமே இதன் சகோதரன்.
 கருப்பான களங்கமும் உள்ளது.
 இந்த  நிலவு சீதையின் முக அழகுக்கு ஈடாகாது. இணையாகாது.
சீதையின்  முகத்தை நிலவோடு ஒப்பிட்டால்
என்னுடைய உவமை சரியில்லாமல் ,
நான் ஒரு குறை உள்ளவனாகிவிடுவேன் .
இவ்வாறு சீதையின் முகத்தையும் ,
நிலவையும் ஒப்பிட்டுவர்ணித்து
 சிந்தித்தே இரவு வெகு நேரமாகிவிட்டது.   ரிஷியிடம்

அனுமதி  பெற்று ஓய்வெடுக்கச் சென்றார்.
 இரவு முடியும்  போதும் அண்ணன் விழித்திருப்பதைக்
கண்டு  லக்ஷ்மணன் இருகரங்கள் கூப்பி
  பிரபுவின் மகிமையைப்  புகழ்ந்து சொன்னான் ---
சூரியோதயம் ஆனதுமே அல்லி வாடுவதுபோல் ,
நக்ஷத்திரங்கள் ஒளி இழப்பதுபோல் ,
உங்கள் வருகையைக் கேட்டு அனைத்து அரசர்களும் தங்கள்
பலத்தை இழந்துவிட்டனர்.
எல்லா அரசர்களும் ஒளி இழந்து கலை இழந்து காணப்பட்டனர்.

  இரவு முடிந்ததும்  தாமரை,சக்ரவாகைப் பறவை, வண்டுகள், மற்றும் பலவிதப் பறவைகள் மகிழ்கின்றன.
அவ்வாறே நீங்கள் தனுஷை உடைத்ததும் ,
உங்களுடைய அனைத்து பக்தர்களும் மகிழ்வார்கள்.
சூரியோதயம் ஆனதும் இருள் விலகுகிறது.
நக்ஷத்திரங்கள் மறைந்து விட்டன. உலகம் மிக பிரகாசமாகிவிட்டது.
அண்ணா ரகுநாதரே!சூரியன்  உதயமாகி  ,எல்லா அரசர்களுக்கும்  தங்கள் பிரதாபத்தைக் காட்டியிருக்கிறது.
உங்கள் பசங்களின் வலிமையைக் காட்டவே  , இந்த வில்
உடைக்கும்  போட்டி உருவாகிஉள்ளது.
 சகோதரரின் கூற்றைக்  கேட்டு  பிரபு புன்சிரிப்பு சிரித்தார்.
பிறகு காலைக் கடன்களை முடித்துவிட்டு ,
ஸ்நானம் செய்துவிட்டு ,  குருவிடம் சென்றார்.
 குருவின் சரணங்களில் தலை வணங்கினார்.
   இங்கே ஜனகர்  சதானந்தத்தை  அழைத்து ,
அவரை விஷ்வாமித்திரரிடம் அனுப்பினார்.
அவர் விஷ்வாமித்திரரிடம்   ஜனகரின்
 வேண்டுகோளைச் சொன்னார்.
  விஷ்வாமித்திரர் மகிழ்ந்து இரண்டு
சகோதரர்களையும்   அழைத்தார்.
     ராமர் சதானந்தரை  வணங்கி
 ரிஷியின் அருகில் அமர்ந்தார்.
 முனிவர் ராமரிடம்  ஜனகரின் அழைப்பைச்
சொன்னார்.  

No comments: