Tuesday, January 10, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -முப்பத்தேழு

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -முப்பத்தேழு

 முனிவரே!  ராமரின் புகழை பலகோடி ஷேஷன்களாலும்வர்ணிக்கமுடியாத அளவுக்கு மஹா சமுத்திரம். நான் கேட்ட  கதையை சொல்லின் சுவாமி, வில்லேந்திய  ராமரின் திதி பாடி சொல்கிறேன்.
   சரஸ்வதி கைப்பாவை போன்றவள்.  அந்தரயாமியான ஸ்ரீ ராமச்சந்திரர்
நூல் பிடித்து அந்த கைப்பாவையை இயக்கம் இயக்குனர்.
தன் பக்தானாக ஏற்ற  கவிக்கு கிருபை காட்டி இதயம் என்ற முற்றத்தில் வைத்து ஆட்டுவிக்கிறார்.
அந்த கிருபை உள்ள  ஸ்ரீ ரகுநாதரை நான் வணங்குகிறேன்.
அவருடைய களங்கமற்ற கதையைச் சொல்கிறேன்.
 கைலாய மலை மிகவும் மேன்மை பொருந்தியது.
அங்கு சிவனும் பார்வதியும்   எப்பொழுதும்  வசிக்கிறார்கள் .
சித்தர்கள் , தவசிகள், யோகிகள்,கின்னரர்கள், முனிவர்கள்
அங்கு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோருமே புண்ணியாத்மாக்கள்.ஆனந்தத்தின் மூலமான
சிவபெருமானுக்கு பூஜை செய்கிறார்கள்.
 அறத்தில் பற்றும் அன்பும் இல்லாதவர்களை ஸ்ரீ விஷ்ணுவும் சிவனும் பார்ப்பதில்லை. அவ்வாறு அதர்மம்
 செய்பவர்கள் கனவிலும் அங்கு செல்ல முடியாது.
அந்தமலையில்  மிகப்பெரிய ஆலமரம் உள்ளது.
அது தினமும் ஆறு பருவகாலங்களிலும் அழகாக இருக்கிறது.
அங்கு குளிர்ந்த,மந்தமான,மனமுள்ள காற்று  மூன்றுவிதமாக வீசுகிறது.
அதன் நிழல் குளிர்ந்து இருக்கும்.
அது சிவன் ஓய்வு எடுக்கும் மரம்.
ஒருநாள் சிவபெருமான் அந்த இடத்தில் பெரும் ஆனந்தத்தை உணர்ந்தார்.
தன்னுடைய கையாலேயே புலித்தோல் ஆடை விரித்து அதில் அமர்ந்தார்.
அவருடைய அழகான வெண்மையான உடல்  மல்லிகைபோன்றும்
நிலவு போன்றும் , வெண்சங்கு போன்றும் மிளிர்ந்தது .

மிகப்பெரிய புஜங்கள் , முனிகளைப்போன்று  ஆடை தரித்திருந்தார்.
பாம்பும் சாம்பலும்தான் அவரது அணிகலன்கள். பாதங்கள் புத்தம் புதிதாக மலர்ந்த தாமரை போன்று இருந்தது. நகத்தின் ஒளி பக்தர்களின் இதய
அறியாமை இருளைப் போக்கவல்லது.
அங்கு ரஹசியமான தத்துவங்களும்  மறைக்க முடியாது.
இறைவா! நீங்கள் சகலமும் அறிந்தவர்,
சாமார்த்தியமானவர்,நன்மையின் உருவமானவர்.
சகல கலைகள் மற்றும் குணங்களின் இருப்பிடம்.
யோகம், வைராக்கியம், ஞானம் போன்றவற்றின் களஞ்சியம்.
உங்கள் பெயர் தங்களை சரணடைந்தவர்களுக்கு  கற்பகத்தரு.
நீங்கள் சுகத்தின் நிதி. நீங்கள் என்னை விரும்பி மகிழ்ந்து அடிமையாக
தொண்டராக ஏற்றிருந்தால் ,  ஸ்ரீ ராமச்சந்திரரின்
பலவித கதைகளைச் சொல்லி என்னுடைய  அறியாமையைப் போக்குங்கள்.
 கற்பகத்தருவின் கீழே  குடியிருப்பவர்கள்
தரித்திரத்தால் உண்டாகும் துன்பத்தை எப்படி சகிப்பார்கள் ?
சசிபூஷணான சிவபகவானே !என் நாதரே!
 என் அறிவின் மிகப்பெரிய
ஐயத்தைப் போக்குங்கள்.

இறைவனே!   பிரம்மஞானம் பெற்றவர்களும் , பேச்சாளர்களும்
முனிவர்களும் , ஸ்ரீ ராமச்சந்திரரை  அநாதி பிரம்மம் என்றே கூறுகின்றனர்.
சேஷன் ,வேதங்கள், புராணங்கள் அனைத்துமே ராமரின் புகழ் பாடுகின்றன.

கமானின் விரோதியான  நீங்களும் இரவும் பகலும் ராமரை ஜபிக்கிறீர்கள் .
பிறவியில்லாத, உருவமற்ற , அசையாத ராமர் வேறு ஒருவர் இருக்கிறாரா?
அவர் அரசகுமாரர்  என்றால் பிரம்மா எப்படி ?
அவர்  பரபிரம்மம் என்றால் மனைவியின் பிரிவால் ஏன் பைத்தியமாகவேண்டும்.?
இங்கே இருக்கின்ற ராமரின் குணத்திற்கும்
அங்கு  புகழப்படும் ராமரின் ேமகிமையும்  கேட்டு தலை சுற்றுகிறது.

தேவர்களின் சுவாமியே! மிகவும் கெஞ்சிக்கேட்கிறேன், நீங்கள்
நிர்குண பிரம்மா ராமர்  சகுண ராமராக (உருவமற்ற வர் உருவமுள்ளவராக )
அவதாரமெடுத்த அவசியமான காரணம் என்ன ?
 நீங்கள் ராமரின் கதையும் , அவருடைய பாலகனாக இருந்தபோது
இருந்த குணத்தையும் சொல்லுங்கள். அவர் சீதையை எப்படி மணந்தார் ?
நாட்டை ஏன் விட்டுவிட்டு சென்றார்?

   அவர்  வனத்தில் இருந்து செய்த லீலைகள்,
ராவணவதம் ,அரியணையில் அமர்ந்து புரிந்த செயல்கள்,
  மக்களுக்கு செய்த நன்மைகள்  ,
ஞானிமுனிகள்எந்த தத்துவத்தில் அவரிடம் இவ்வளவு பக்தியில்
மூழ்கி  இருக்கின்றனர்,  ஆகிவற்றை விளக்கிக் கூறுங்கள்.
பக்தி, ஞானம், அறிவியல், வைராக்கியம் ஆகிய துறைகளையும்
விரிவாக எடுத்துரையுங்கள். ராமரின் ரகசியங்களையும் கூறுங்கள்.
நீங்கள் தூய அறிவுடையவர். எதையும் மறைக்காமல் நான்
கேட்டவைகளுக்கு    விளக்கம் தாருங்கள்.
   வேதங்கள் உங்களை மூவுலகத்திற்கும் குரு என்றே சொல்லியிருக்கின்றன. மற்ற பாமரர்கள் எப்படி அறிவார்கள்?
   பார்வதியின்  இயற்கையான அழகான கள்ளம் கபடமற்ற கேள்விகளைக்கேட்டு  சிவபகவனனுக்கு அவரை மிகவும் பிடித்துவிட்டது.
 அவர் மனத்தில் ராமரின் சரித்திரம் வந்து விட்டது. அன்பின் காரணமாக அவர் உடல் ஆனந்தம் அடைந்தது. கண்களில் கண்ணீர் வந்தது.
ஸ்ரீ ரகுநாதரின் உருவம் இதயத்தில் பதித்தது. பரமானந்த  வடிவமான
சிவனுக்கு எல்லையில்லா ஆனந்தம் உண்டாகியது.

  அவர் இரண்டு நாழிகை தியானத்தில் இருந்தார். பிறகு மனதை வெளி உலகிற்கு  கொண்டுவந்தார். பிறகு மகிழ்ச்சியுடன் ஸ்ரீ ராமரின் கதையை
வர்ணிக்கத் தொடங்கினார். 

No comments: