Saturday, January 21, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --௫௩ ஐம்பத்திமூன்று


    ராவணனின்  ஆட்சியில்  அடுத்தவன்  செல்வம் ,
  அடுத்தவனின்மனைவி யை     விரும்புபவர்கள்,
  துஷ்டர்கள்,திருடர்கள்,சூதாட்டக்காரர்கள்
  மிகவும் அதிகம் ஆகிவிட்டனர்.

 மக்கள் தாய்-தந்தை மற்றும் தேவர்கள்
 சொல்வதை ஏற்கவில்லை.
 சாதுக்களுக்கு சேவை செய்யாமல்
 சாதுக்களிடம் இருந்து சேவை பெற்றனர்.

சிவன் பவானியிடம் சொன்னார் ---
இப்படிப்பட்ட நடத்தை உள்ளவர்கள் ,
அப்படிப்பட்ட மிருகங்களை அரக்கர்கள் என்றே கருதவேண்டும்.

  இவ்வாறு  தர்மத்தின் மேல் விருப்பமும்
  நம்பிக்கையும் இல்லாதவர்களின்
கடும் செயலால்  பூமி அதிகமாக கவலைப்பட்டது.

பூதேவி  நினைத்தாள்--மலைகள்,நதிகள்,கடலின் சுமை ,
எனக்கு அதிக சுமையாக இல்லை.
  ஆனால் மற்றவர்களுக்குத் துன்பங்கள்
 செய்பவர்களைப்  பொறுக்கமுடியாது.
 பூமியில் எல்லாமே அறத்திற்கு
எதிராக இருப்பதை பூதேவி  பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனால்
ராவணனின் பயத்தால் ,  எதுவும் பேசமுடியவில்லை.

இறுதியில்  நன்கு சித்தித்து  பசுவாக மாறி
 எல்லா தேவர்களும் முனிவர்களும்
 மறைந்திருந்த இடத்திற்குச் பூமாதேவி சென்றாள். அங்கே
பூமிதேவி  அழுது  தன் துன்பத்தைக் கூறியது.
ஆனால் யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்பொழுது தேவர்கள் , முனிவர்கள், கந்தர்வர்கள்
எல்லோருமாக சேர்ந்து
பிரம்மலோகத்திற்குச் சென்றனர்.
பயத்தில் பீதியுடன் வியாகூலமான
பூமிதேவியும் பசு வடிவத்தில் அவர்களுடன் சென்றார் .
பிராம்மா அனைத்தும் அறிந்துகொண்டார்.
பிரம்மா மனதில் தன்னால் எதுவும் முடியாது
 என்பதை யூகித்து அறிந்தார்.
அப்பொழுது அவர் பூமிதேவியிடம்  சொன்னார் --
நீ யாருக்கு அடிமையோ அவர்தான்
 எங்களுக்கும் உனக்கும்உதவியாளர்.

நீ மனதை தைரியமாகக் கொண்டு
ஹரியின் பாதங்களை நினைவில் கொள்.
பிரபு தன்  தாசர்களின் மனவேதனைகளை  அறிவார்.
அவர் உன்னுடைய கடினமான ஆபத்திலிருந்து காப்பாற்றுவார். .
பிரபுவை எங்கே சென்று பார்த்து
 நமது வேதனைகளைக் குற்றம் சாட்டுவது என்று
 அனைவரும் யோசித்தனர்.
 சிலர் வைகுண்டம் செல்வதற்கும் ,
சிலர் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானைப் பார்ப்பதற்கும்
யோசனை சொன்னார்கள்.
   பக்தனின் பக்தி மேலும் அன்பின் அடிப்படையில்
 இறைவன் அப்படியே காட்சி அளிப்பார்.
 பார்வதி! அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூறினேன்---
"இறைவன் எல்லா இடங்களிலும் சமமாக வியாபித்து இருக்கிறார்.
அன்பினால் அவர் வெளிப்படுவார். என்பதை நான் அறிவேன்.
சொல்லுங்கள் கடவுள் இல்லாத நாடு,
திக்குகள், திக்கற்ற இடம் எது?
அவர் எல்லாஇடத்திலும்  அசைவன அசையாதவன என
அனைவரிடத்திலும்
இருந்தாலும்  இல்லாதவராகிறார்.
அவருக்கு எதிலும் பற்றில்லை.
அவர் அன்பினால் வெளிப்படுவார்.
நெருப்பு இல்லாத இடமில்லை .ஆனால்
 எங்கு அது வெளிப்படனுமோ அங்கு வெளிப்படுகிறது.
 அப்படியே இறைவனும்."
 நான் சொன்னது எலோருக்கும் பிடித்திருந்தது.

எல்லோரும் பிரம்மாவும் என்னைப் புகழ்ந்தார்.
பிரம்மா மிகவும் மகிழ்ந்தார்.
அவர் கண்களில் இருந்து ஆனந்தக்கண்ணீர் வடிந்தது.
 பிரம்மா  தீரமான அறிவுடன்  கைகூப்பி இறைவனை துதித்தார்.

  தேவர்களின் ஸ்வாமியே!
தொண்டர்களுக்கு சுகமளிப்பவரே!
சரணடைந்தவர்களைக்  காப்பவரே!
 நீங்கள் வாழ்க!
பசுக்களுக்கும் அந்தணர்களுக்கும்
 நன்மை அளிப்பவரே!
அசுரர்களை அழிப்பவரே!
சமுத்திரத்தின் மகள் லக்ஷ்மிக்கு காதலரே!
உங்களுக்கு ஜெயமே.
தேவர்களையும் பூமியையும் வளர்ப்பவரே!காப்பவரே!
உங்கள் லீலை மிகவும் அற்புதமானது.
 உங்கள் ரகசியத்தை யாரும் அறிய மாட்டார்கள்.
 குணத்தால் இயற்கையாக கிருபை உள்ளவரே!
ஏழைகளைக் காப்பவரே!
நீங்கள் எங்கள் மீது கிருபை காட்டுங்கள்.
நீங்கள் அவினாஷி !
எல்லோரின் இதயத்திலும் இருப்பவர்.
சர்வலோகங்களிலும்  வியாபித்திருப்பவர் .
மிக ஆனந்தவடிவமானவர்!
புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.
மாயை இல்லாதவர்,
முக்தி  அளிப்பவர்.
நீங்கள் வாழ்க!
உலகப்பற்றுக்களை எல்லாம் துறந்த
 ஞானம் பெற்ற முனிவர்களும்  மிகவும்
 பற்றும் பாசமும் அன்பும் கொண்டு
இரவும் பகலும் உங்களை தியானம் செய்கின்றனர்.
உங்களுடைய புகழ்ப்பாடல் பாடுகின்றனர்.
 அந்த சச்சிதானந்த மூர்த்திக்கு ஜயம் உண்டாகட்டும்.
 அவர் தனியானவர்.
திரிகுண ரூபி,
 பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றின்
ஒன்றுபட்ட உருவம்,
 மூன்றுவித சிருஷ்டிகளை சிருஷ்டித்தவர்.
காரணமின்றி சிருஷ்டிக்காதவர்,
பாவங்களை அழிக்கும்
கடவுளே !எங்களை சற்று நினைக்கவும்.
எங்களுக்கு பக்தியும் பூஜையும் தெரியாது.
 உலகத்தின் பயத்தைப் போக்குபவர்.
முனிகளின் மனதை ஆனந்தப்படுத்துபவர்.
விபத்துகளைப் போக்குபவர்
. நாங்கள் எல்லா தேவர்களும்   உங்களிடம்
 அடைக்கலமாக வந்துள்ளோம்.

    பகவானே !வேதங்களின் கூற்றுப்படி  உங்களின்
சத்தியமான தோற்றத்தை வேதங்கள் சொல்லவில்லை.
சரஸ்வதி, சேஷன்,அனைத்து ரிஷிகள்  யாரும் அறிந்திருக்கவில்லை.
அப்படியிருக்கின்ற பகவானாகிய நீங்கள்
எங்கள் மீது தயவு காட்டுங்கள்.
கடைவதற்கு நீங்கள் மந்தராச்சல வடிவம் எடுத்தீர்.
சகல குணங்களும் கொண்ட சர்வேசா!
எல்லாதேவர்களும்  பயத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறோம்.
உங்களை வணங்குகிறோம்.
  தேவர்களும் பூமி மாதாவும் பயமும் பீதியுடனும்  இருப்பது
அறிந்து அவர்களின் சந்தேஹங்களைப்போக்க
அசரீரி ஒலித்தது-----
முனிவர்களே!சித்தர்களே!தேவதைகளே!
தேவர்களுக்கு சுவாமிகளே!
 பயப்படாதீர்கள்.
  உங்களுக்காக  நான் பவித்திரமான  சூரிய குலத்தில்
  என்  அம்சங்களுடுடன்    அவதாரம்  எடுப்பேன்.
காஷ்யப முனிவரும் அதிதியும் மிகப் பெரிய தவம் செய்தனர்.
நான்  முதலிலேயே  அவர்களுக்கு வரம் கொடுத்திருக்கிறேன்.
அவர்கள் தான் தசரதர்-கௌசல்யா தம்பதிகளாக மனிதவடிவத்தில்
அயோத்தியா புரியில் தோன்றியுள்ளனர்.
அவர்களுக்கு நான் ரகு குலத்தில்  சிறந்த நான்கு சகோதரர்களாக
அவதாரம் எடுப்பேன்.
நாரதர் சொன்னது அனைத்தும் சத்தியமாக்குவேன்.
நான் என் தேவியுடன் தோன்றுவேன்.
நான் பூமியின் எல்லா துன்பங்களையும் போக்கிவிடுவேன்.
தேவர்களே!நீங்கள் பயப்படவேண்டாம். தேவவாணி கேட்டு அனைத்து தேவர்களின் மனம் குளிர்ந்தது.   அவர்கள் உடனே தங்கள் இடத்திற்குத் திரும்பிச்சென்றனர்.
பிரம்மா பூமியிடமும் விளக்கினார். அதுவும் மனதில் மிக
நம்பிக்கை கொண்டு திரும்பியது.
பிரம்மா தேவர்களிடம்," நீங்கள் வானரங்களாக  வேடமிட்டு
இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள்." என்றார்.

அனைத்து தேவர்களுக்கும் மனதில் சாந்தி கிடைத்தது.
பூமியில் அவர்கள் வானரர்களாக தோன்றினர்.
அவர்களிடம் அதிக பலமும் வீரமும் இருந்தது.
எல்லோருமே சூர-வீரர்களாகத் திகழ்ந்தனர்.
மலைகள், மரங்கள் மேலும் நகங்கள் தான் அவர்களுடைய ஆயுதங்கள்.
அவர்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

No comments: