Tuesday, November 1, 2016

ராமசரிதமானஸ் --சுந்தரகாண்டம் -- பக்கம் --pathinelu

    துளசிதாசர்  கூறுகிறார் .

 அமைச்சர் ,மருத்துவர், குரு  மூவரும்
  அரசனை  மகிழ்விக்கவோ,
அரச கோபத்தில் இருந்து  பயந்து
தப்பிக்கவோ,  முகஸ்துதிக்காகவோ ,
தன் நலத்திற்காகவோ
 பொய்  பேசினால்  சீக்கிரமே
 மூவருக்கும்  நாசம்  ஏற்படும்.
அழிவிலிருந்து  தப்பிக்க   முடியாது.

    ராவணனுக்கும்  அதே  நிலை. 

அமைச்சர்கள்  அவனை புகழ்கிறார்கள் . 
 இது  நல்ல  சந்தர்ப்பம்  என்று 
 விபீஷணன்  வந்தார். 
அவன் ராவணனை  சிரம் தாழ்த்தி 
 வணங்கி தன்  ஆசனத்தில் 
 அமர்ந்து    அனுமதி பெற்று  கூறினார்:--

  நீங்கள்  என்னிடம்  கருத்து கேட்கிறீர்கள் .
 எனக்கு  அறிவிற்கு  தெரிந்த  உங்கள்  நன்மைக்கான  கருத்து  வெளியிடுகிறேன்.

     "மனிதர்கள்  தங்கள்  புகழ்,

நலம், நல்லறிவு , ஞானம் ,மோக்ஷம் 
 பெற  விரும்பினால் ,
 மற்றவனின்  மனைவிமேல்

  உள்ள  ஆசையை
விட்டுவிடவேண்டும்.

 நான்காம் பிறை கெடுதல்  என்று
 யாரும் பார்க்கமாட்டார்கள். 

அப்படியே நீங்களும்  மற்றவர்
  மனைவியின் முக  மோகத்தை
விட்டுவிட  வேண்டும்.
   நான்கு  புவனங்களின்  பேரரசனாக
  இருந்தாலும்
மற்ற  ஜீவன்களின் பகை கொண்டு வாழமுடியாமல்   அழிந்து விடுவான்.
எல்லா  குணங்களின்  கடலாக  இருந்தாலும்  கெட்டிக்காரத்தனமாக  இருந்தாலும்  ,
சிறிதளவு  பேராசை  கொண்டாலும்

 நன்மை  உண்டாகாது.
   காமம் ,குரோதம், பேராசை ,ஆணவம்  முதலிய    நான்கும்  நரகத்திற்கான  வழிகள் .
 இவைகளை விட்டுவிட்டு , நல்ல  புனிதர்கள்,  சாதுக்கள்  வழிபடும்
 இராமச்சந்திர  மூர்த்தியை
வழிபடுங்கள்.
  உயர்ந்தவரே !  ராமர் மனிதர்களுக்கு
அரசர்  அல்ல.
 அவர்  அனைத்து  உலகங்களுக்கும் அரசர்.
எமனுக்கே எமன்  அவர்.
அவர்  பகவான்.
எந்தவித  மாற்றமும்  இல்லாதவர்.
பிறவி இல்லாதவர்.
வெல்ல முடியாதவர்.
ஆரம்பமும்  முடிவும்  இல்லாதவர்.
அனைத்து  ஐஸ்வர்யங்கள், 

புகழ், செல்வம்,அறம், வைராக்கியம்  மேலும்  ஞானங்களின்  இருப்பிடம்.
சேமிப்புக்  கிடங்கு.
   அவர்  அனைவருக்கும்  நன்மை  செய்யவே  அவதரித்துள்ளார். 

இந்த  புவி, அந்தணர்கள், பசுக்கள்,தேவர்கள்  அனைவருக்கும் நன்மை  செய்பவர்.
சகோதரரே!   அவர்கள்  தேவர்களை

 மகிழ்விப்பவர். 
 தீயவர்களை  அழிப்பவர். 
 வேதங்களையும் அறத்தையும்  காப்பவர்.  அனைத்து  நல்லவைகளுக்கும்  ரக்ஷகர்.

 நீங்கள்  விரோதத்தை விட்டு  

அவரை  வணங்குங்கள். 
அவர்  சரணடைந்தவர்களை  காப்பவர்.
  துயரம் போக்குபவர்.

தலைவரே!  சீதாதேவியை  அவரிடம்  ஒப்படைத்து  அவரை வணங்குங்கள்.
  அகில உலகத்திற்கு  பாவம்  செய்தவர்களையும்  அவர்கள்  சரணடைந்தால்  காப்பவர்.
மூன்றுவித  தாபங்களையும்

  போக்குபவர்.
அந்த  சர்வேஸ்வரர் தான் .

 ராமனாக அவதரித்துள்ளார்.
 இதை  அறிந்து புரிந்துகொள்ளுங்கள்.

 பத்து சிரம்கொன்டவரே!
 உங்களை  மீண்டும் மீண்டும்  வணங்கி  அடிபணித்து  சொல்கிறேன் --
மானம் ,மரியாதை, ஆணவத்தை விட்டுவிட்டு
கோசலமன்னன்  ஸ்ரீ  ராமரை  பஜனை  செய்யுங்கள்..
  முனி  புலஸ்தியர்
  தன்  சீடன்  மூலம் அனுப்பிய
அறிவுரைதான்  இது.

 நல்ல சந்தர்பம்  அறிந்து 
 இந்த  விஷயத்தை 
 தங்களிடம் கூறிவிட்டேன்.

No comments: