Wednesday, November 2, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் பக்கம் பத்தொன்பது

   விபீஷணன்  இவ்வாறு
  சொல்லி  சென்றதுமே
  அரக்கர்களின்  மரணம்
  நிச்சயிக்கப்பட்டுவிட்டது.

  சிவபகவான்   பவானியிடம்  சொன்னார் --
  ஒரு  சாதுவை நல்லவனை
  அவமானம்  செய்தால்
 உடனே  நடக்கக்கூடிய அனைத்து
 நலமும்  நாசமாகிவிடும்.

    விபீஷணன்  ராவணனை
  விட்டுவிட்டு  சென்றதுமே
 அவன் ஒரு  துரதிர்ஷ்டசாலி  ஆகிவிட்டான்.
 அவனுடைய  வைபவங்கள்
 எல்லாம்  போய் விட்டன.
     விபீஷணன்  மிக்க  மகிழ்ச்சியுடன்
    மனதின்  பலவித
  கனவுகளுடன்
  ஸ்ரீ ராமனிடம்  சென்றான்.

 விபீஷணன்   , ராமபகவானின்
 மென்மையான  சிவப்புவண்ண
அழகான  தாமரைக்கால்களை பார்ப்பேன்.
அதுதான்  தொண்டர்களுக்கு சுகம்  அளிக்கக்  கூடியது.

அந்த  பாதங்கள்  பட்டு
 கல்லான  அஹல்யாவிற்கு
 மோக்ஷம்  கிடைத்தது,
தண்டகாரன்யவனம் புனிதமாகியது .

சீதையின்  இதயத்தில்  இடம்
 பெற்ற  சரணங்கள் அவை.
 கபடமான  பொன்மானை  விரட்டிச்  சென்ற  பாதங்கள்  அவை.
 அந்த  தாமரை  சரணங்கள் சிவபகவான்  இதயத்தில்  இடம்பெற்றுள்ளன.
 என்  அதிர்ஷ்டம் அவரை  இன்று  தரிசனம்  செய்வேன்.
  பரதன்  தன்  மனதில்  இடமளித்த

பாதங்களை  இன்று
என்  கண்களால்  பார்ப்பேன்.
இவ்வாறு  நினைத்துக்கொண்டே
 மிக  விரைவாக  சமுத்திரத்தின்
அக்கரையை  அடைந்தான்.
வானரங்கள்  விபீஷணனைப்  பார்த்ததும்
அவனை எதிரியின்  தூதன்  என  நினைத்தன.

அவனை  காவலில்  வைத்துவிட்டு
சுக்ரீவனிடம்  செய்தி சொன்னார்கள்.
சுக்ரீவன்  ராமரிடம்
 ராவணன் தம்பி விபீஷணன் உங்களை  சந்திக்க
 வந்துள்ளான்  என்றான்.
   ராமன் சுக்ரீவனின்
 கருத்தைக்  கேட்டான்.
சுக்ரீவன் , மகாராஜா!
அரக்கர்களின்  மாயை
அறிய  முடியாது.
அவர்கள்  ஏமாற்றுக்காரர்கள்.
தங்கள் விருப்பப்படி  உருவத்தை  மாற்றிக் கொள்வார்கள்.
இவன்  வந்த காரணம்  தெரியவில்லை.
இந்த  முட்டாள்  நம் ரகசியத்தை  அறிய  வந்திருக்கிறான்.
 இவனைக் கட்டிவைப்பதுதான் சரியெனப் படுகிறது என்றான்.

    ராமர்,  நண்பரே!
  நீ  நன்றாகவே   எண்ணியுள்ளாய்.
 உன்னுடைய நீதி சரியே.
 ஆனால்  அடைக்கலம் வந்தவனின்
 பயத்தைப்  போக்கவேண்டும்.

  ஸ்ரீ  ராமரின்  சொல்லைக்கேட்டு
 ஹனுமான்  மிகவும்  மகிழ்ந்தார்.
கடவுள்  சரணாகத்வத்சலர்  .
அதாவது சரணடைந்தவரை
 விரும்பு பவர்.
  ராமர்  மேலும்  சொன்னார் :--
  தனக்கு  வரும்  தீமையை  யூகித்து
 அடைக்கலமாக  வந்தவனை 

 விட்டுவிடுபவன்  பாமரன்.
அவன்  பாவி.
 அவனைப் பார்த்தாலே  பாவம். தீங்குவரும்.
  ஆயிரக்கணக்கான   அந்தணர்களைக்
  கொன்று பாவியாகவந்தாலும் ,
 அடைக்கலம்  என்றுவந்தால்
 அவனை விடமாட்டேன்.
  எந்த ஜீவனும்  என் முன்
  வந்தால் அவனின்  கோடிக்கணக்கான
  ஜென்மங்களின்
 பாவமும் போகிவிடும்.
  பாவிக்கு  என்மேல்  பக்தி  ஏற்படாது.
 அது  அவர்களின்  இயற்கை  குணம்.
ராவணனின் சகோதரன்
 தீய  மனமுள்ளவனாக  இருந்தால்
என்  முன் வரமுடியுமா ?
 களங்கமற்ற புனித  மனமுள்ளவனுக்குத்தான்
  என்னைப்  பிடிக்கும்.
எனக்கு  கபடமும் வஞ்சனையும்
 உள்ளவனைப்  பிடிக்காது.
அவன்  ராவணனின் உளவாளியாக  வந்தாலும்
எனக்கு  எவ்வித  தீங்கும்  ஏற்படாது.
 தோழனே! சுக்ரீவா! உலகில்  எத்தனை  அரக்கர்கள்
 இருந்தாலும்  ஒரு நொடியில்  என் தம்பி
 இலக்குவன்  அழித்துவிடுவான் .
அவன்  பயந்து  என்னிடம்   அடைக்கலமாக
 வந்தால் அவனைக்  காப்பாற்றுவேன்.
என் உயிர் போல்  கருதுவேன்.
  அவன்  தூதனாக வந்தாலும்
 நண்பனாக  வந்தாலும்
 அழைத்துவா.
 ராமரின்  ஆலோசனை  கேட்டு
ஹனுமான், சுக்ரீவன் மற்றும் அங்கதன்  மூவரும்
 "கிருபை  காட்டும் ராமருக்கு  ஜய்"
 என்ற  முழக்கத்துடன்  புறப்பட்டனர்.

    வானரர்கள் மிக்க  மரியாதையுடன்
 விபீஷணனை  ஸ்ரீ ராமரிடம்  அழைத்துச்  சென்றனர்.
  விபீஷனான்  ராம லக்ஷ்மணரை
   தொலைவில்  இருந்தே   பார்த்து
 மிகவும்  மகிழ்ந்தான்.
  இருவருமே  கண்டதும் சுகமளிக்கும்
  தோற்றப்  பொலிவு உடையவர்கள்.

      அழகின்  இருப்பிடமான  ராமரைக்
   கண்மூடாமல்  பார்த்து ஸ்தம்பித்து நின்றான்.
பகவானின்  நீண்ட விசாலமான புஜங்கள்,
  செந்தாமரைக்  கண்கள்,
   அடைக்கலமாக  சரணடைந்தவர்களின்
  பயத்தைப் போக்கும்  கருநீலநிறமுடைய  உடல்.

   சிங்கத்தின்  தோள்கள் , அகன்ற  மார்பு ,எண்ண முடியா
  காமதேவர்களின் மனதை  கவரும்

 ( மோஹிக்கும் )  முகம்.

   இந்த  அழகிய  முகம்  கண்டு
   விபீஷணனின்  கண்களில்
  அன்பும்  ஆனந்தமும்  நிறைந்த  கண்ணீர்
   பொங்கி வழிந்தது .
  மிகவும்  ஆனந்தமடைந்தான்,
  பிறகு  மன தைரியத்துடன்  சொன்னான்--
  அரசே !  நான்  பத்துத்தலை  இராவணனின்   சகோதரன்.
  தேவர்களைக்  காக்கும்  நாதா!
    நான்  அரக்கர்கள்  குலத்தில்    பிறந்துள்ளேன்.
 நான்  தாமச குணமுள்ளவன்.  
 ஆந்தைக்கு இரவில்  இருட்டு  எப்படி
  இயற்கையாக  விருப்பமோ   அவ்வாறே
  எனக்கு    பாவச்செயல்  மிகவும்  விருப்பம்.

  நான்  உங்களின்  புகழ்  கேட்டு  வந்துள்ளேன்.
 நீங்கள் பிறப்பு -இறப்பு   பயம்  போக்குபவர் .
  துயரப்படுபவர்களின்   துயரம்  போக்குபவர்.
  அடைக்கலமாக  வந்தவரை  காப்பாற்றுபவர்.
  என்னை  ரக்ஷியுங்கள்.

 விபீஷணனின் பணிவும் அடக்கமும் ,
வேண்டுகோளும் ஸ்ரீ ராமருக்கு மிகவும்  பிடித்திருந்தது.
அவர்  தன  விஷாலமான
புஜங்களால்     ஆரத்  கொண்டார்.
தன்னை  அருகில்  அமரவைத்து பக்தர்களின்
 பயம்  போக்கும்  கருணைகாட்டி  சொன்னார்--
  ஸ்ரீ  லங்கேச்வரா !  குடும்பத்துடன்  உன்  நலத்தைக் கூறு.
   நீ  இருக்குமிடம் கெட்ட  இடம்.
  இரவும்  பகலும் துஷ்டர்களின்  கூட்டத்தில் உள்ளாய்.

 நீ  எப்படி அறத்தைக் காக்க  ,
 கடைபிடிக்க  முடியும்.
 எனக்கு  உன்னுடைய  பழக்கவழக்க
  ஆசாரங்கள்  தெரியும்.
 நீ  மிகப்பெரிய  நீதிமான்.
 உனக்கு  அநீதி  பிடிக்காது.
 மகனே!நரகத்தில் இருப்பது  துஷ்டர்களின்
 சேர்க்கையில் இருப்பதைவிட சிறந்தது.

 ஸ்ரீராமரிடம்  விபீஷணன்  கூறினான்: --
  உங்களை  தரிசித்து நலமாக உள்ளேன்.
   நீங்கள்  என்னை உங்களது தொண்டனாக
  ஏற்று  தயவு  காட்டியுள்ளீர்கள்.

      பெண்ணாசை ,மற்ற  ஆசைகளை விட்டு
   ஸ்ரீ ராமபிரானை   ஜெபிக்கவில்லை  என்றால்,
   அவர்களுக்கு  நலம்  இல்லை.
  கனவில்  கூட  மனதிற்கு   அமைதி கிடைக்காது.

   ஸ்ரீ ராம  பகவான்    கருணைக்காக  மனதில் ,
  இதயத்தில்  வசிக்கும்  வரை    பேராசை. பொறாமை,
 ஆணவம்,காமம்  போன்ற பல  துஷ்டர்கள்
  இதயத்தில்  இடம்  பெற்று  இருப்பார்கள்.
  ஆசை  என்பது   இருண்ட  இரவு ,
 அது அன்பு-வெறுப்பு  என்ற  ஆந்தைகளுக்கு
  மனதில்  இடம் அளிக்கும்.
 ராமரின்  சூர்யோதயம் மனதில்  உதிக்கும்  வரை ஆசை  இருக்கும்.

  ஸ்ரீ  ராமச்சந்த்ரரே ! உங்களைப் பார்த்தது
  முதல்  என்  அச்சம்  போய் விட்டது.
  அருள்  கடலே!  உங்கள்  அனுக்கிரஹம்  பெற்றவர்களுக்கு
 ஆன்மீக,ஆன்மீகமற்ற ,உலகியல்  பயங்கள்
 மூன்றும் இருக்காது.
     நான்  மிகவும்  தாழ்ந்த  குணமுள்ள  அரக்கன்.
  நான்  நல்லமுறையில்  நடந்துகொண்டதே இல்லை.  
நீங்கள்  முனிவர்களின்  மீது  கூட
  கவனத்தைக்  காட்டவில்லை.
 என்னைப்  பார்த்து  மகிழ்ந்து
ஆரத்  தழுவினீர்.
  இது  என்னுடைய  பாக்கியம்  தான்.

 சிவனால் பூஜிக்கப்பட்ட  சரணங்களை
  இன்று  தர்ஷித்தேன்.






   .

No comments: