Tuesday, November 22, 2016

அகிலம் காக்கும் ஆண்டவன் !அற்புதமே !

அகிலம்  பற்றி  அறிவது
ஆதி மனிதன்  முதல்  இன்றுவரை

அறிவியல்  வளர்ச்சி ,
ஆயுள் வளர்ச்சி ,
அனைத்தும்  இருந்தும்
மனிதன்  அறியா  மர்மங்கள்
மனிதனை   பலமிழக்கச்     செய்கின்றன.
அதுவே  ஆண்டவனை  நோக்கி
தியானம் , புனித  பயணம் , வேள்வி
என்றே   ஆன்மீகக்  கூட்டாம். .
விமானங்கள்  ,கப்பல்கள் மாயமாகும்
கடல்  பகுதிகள் ,
பணம் இருந்தும்    பதறவைக்கும்
இயற்கை  சீற்றங்கள்
இயற்கை  செயற்கை விபத்து  மரணங்கள்,
அறிவாளிகளையும் .
பெரும் பணக்காரர்களையும்
ஆட்டிப்படைப்பதால்
ஆண்டவன் ஆன்மீகம் தியானம்
தனித்தன்மை  தனி மகத்துவம்
மேலும் மேலும்   அதிகரித்தாலும்
இன்னும்  நேர்மை வளரா  நிலையம்
அற்புதமே,
Thursday, November 17, 2016

ஆண்டவனைத் தொழுவோம்

ஆண்டவனைத்தொழுவோம்  !
பேரானந்தமாக வாழ்வோம் !
 
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உள்ளம் ஊஞ்சல் ஆடாமல் இருக்கவேண்டும்
ஊர்உலகம் வளரவேண்டும்
இனிய காலைவணக்கம்.
இறைவனின் அருள் பெற
வணக்கம் .
இனியவைகள் வாழ்வில் பெற இறைவணக்கம்.
நேர்மைக்கு வணக்கம்
சத்தியத்திற்கு வணக்கம்.
கடமைக்கு வணக்கம்
மனக்கட்டுப்பாடு பெற வணக்கம் .
ஆசைகள் அடங்க வணக்கம்.
ஆணவம் ஒழிய வணக்கம்
   கபீர்
    ஆசைகள் விருப்பங்கள் இல்லை
என்றால்  கவலை என்பதில்லையே
ஆசைகள் விருப்பங்கள் இல்லாதவனே
அகிலத்தில் அரசனுக்கெல்லாம் அரசன்
பேரரசன்
வள்ளுவர்
ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து

Wednesday, November 16, 2016

ஆன்மீக நாடு

ஆன்மீக  நாடு
ஆலயங்கள்    அதிகம்.
அன்றாட செய்தித்தாள்கள்
கற்பழிப்பு ,கொலை , கொள்ளை
ஊழல், கருப்புப்பணம் .
நீதிபதிகள்    தீர்ப்பே  சரியில்லை -சொல்வது
ஒரு  நீதிபதி.
தான்    கொடுத்த  தீர்ப்புக்கு  தவறென்று கண்ணீர்.
மற்றொரு  நீதிபதி  தீர்ப்பு தவறு  என்று  வாதம்
என்னத்தைச்  சொல்ல.
எண்ணத்தை  பகர்கிறேன் .
ஊழலுக்கு  எதிரான ௫௦௦,௧௫௦௦ ரூபாய்கள்  செல்லாது  என  அறிவிப்பு.
மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் மாயா, மம்தா, ஸ்டாலின் ,கனி,லாலு
ஒன்று சேரப்போகிறார்களாம்.
ஊழல்   பேர்வழிகள்
இரண்டுஜி மூனுஜி என்னாச்சு?
காவேரி நீர்   பிரச்சனை  ஒன்று சேரா கட்சிகள்
கள்ள  நோட்டு  ஒழிப்பில்  ஒன்று சேர்கின்ற தாம்.
நாற்பதாண்டு மாறி மாறி  ஆட்சி  என்ன  ஆச்சு.
ஆன்மீக  நாடு  ஆலயங்கள்  அதிகம்
ஊழலும் அதிகம்.
நீதிமன்றம்  சரியில்லை .
சாமான்யன்   சொல்லவில்லை
நீதிபதி   சொல்லுகிறார்.
ஆன்மீக நாடு.
ஆலயங்கள்  அதிகம்.
ஊழல்கள் அதிகம் .
ஆலயங்கள்   தோறும்
ஏமாற்றுவோர்  அதிகம்.
திருடர்கள்    ஜாக்கிரதை.
மணிபர்ஸ் ஜாக்கிரதை
ஏமாற  வேண்டாம் ஏமாறவேண்டாம்
நான்   சொல்லவில்லை
ஒலிபெருக்கி  கூவுகிறது.
ஆங்காங்கே எழுதி வைத்த
  அறிவிப்புகள்
கூறுகின்றன.-நான் சொல்லவில்லை
நாளேடுகள்
சொல்கின்றன.
ஆன்மீக  நாடு
ஆலயங்கள்   அதிகம் .
ராவணர்களும்  அதிகம்
பீஷ்ம பிதா  மகன்களும் அதிகம்
சூர்ப்பனைகிகளும்  அதிகம்
பெண்கள்   கடத்தல் ,
மாற்றான்  மனைவி  கடத்தல்,
மாற்றான்  கணவன்  கடத்தல்
காவலர்கள் மோசம்
நான் சொல்லவில்லை
இந்த  சின்னத்திரை
  நாடகங்கள்  சொல்கின்றது.
ஆன்மீக   நாடு  ஆலயங்கள்  அதிகம்
ஊழல்கள்  அதிகம்
லஞ்சங்கள்  அதிகம்,
வைரக்கிரீடம் ,
தங்க   கவசம் ஊழல் பணத்தில்  வேள்வி
தேர்தல் வெற்றி, நீதிமன்ற தீர்ப்பு
எல்லாமே   சாதகம் -நான்
சொல்லவில்லை  நாடே சொல்லுது.
வாதங்கள்  முடிந்தும்
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதற்குள்ளே  ஒரு நாடகம்
நான்  சொல்லவில்லை
நாடே  பேசுது.
ஆன்மீக நாடு  ஆலயங்கள் அதிகம்
உண்மை   பேசினால் நாடு இழப்பாய் ,
மனைவி    விற் பாய் ,
சுடுக்காட்டு    காவலனாவாய் -எச்சரிக்கை
நான்  சொல்லவில்லை
கதை   சொல்லுது.
ஆன்மீக நாடு .
ஆலயங்கள்  அதிகம்
ஊழல்கள்   அதிகம் .
தமிழ்க்கடவுள்
சொக்காய்  போட்ட வட இந்தியக்  கடவுள்
மக்களுக்கு  பொதுவான  கடவுள் இல்லை
ஜாதிக்கு  ஒரு கடவுள்
சாதிக்க   கடவுள்  இல்லை
கிரிஷ்ணனை  வழிபடுவோருக்கு
கருப்பணசாமி  பிடிக்காது.
கிருஷ்ணன்   என்றால்  கருப்பு
வடமொழி  சொன்னால் கடவுள் கேட்கும்
தமிழ்   மொழி சொன்னால்
நாலாயிர  திவ்ய  பிரபந்தம்
வடகலை   தென்கலை கச்சேரிக்கு போகுது .
நாமம்  வதில்  சண்டை
நாமாவளி   சொல்லுவதில்  சண்டை
வடமொழி   அர்ச்சனை
தென்மொழி  அர்ச்சனை
தமிழில்  அர்ச்சனை
ஆண்டவனுக்கு   தெரிந்த  மொழி  எது?
சுப்பன்  என்றால்  தாழ்ந்த இனம்
சுப்பிரமணி  என்றால்  உயர்ந்த  இனம் .
ஆலயங்கள்    அதிகம்
ஆன்மிகம்  அதிகம்
வேற்றுமைகள்  அதிகம் .
இறைவா!  ஆண்டவா! பகவானே! கடவுளே !
இந்த   அழைப்பில் ஜாதி தெரியும்
மதம்     தெரியும்.
இனம்   தெரியும் .
வேற்றுமை    தெரியும்.
ஆன்மீக    நாடு,

ஆலயங்கள்  அதிகம் .

அருளப்பா ஆண்டவா

காலை வணக்கம்
ஓம் கணேசாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் நமச்சிவாய
ஓம் துர்காகாயை நம.:
அல்லா போற்றி
ஏசு வேபோற்றி
புத்தரே போற்றி
மஹாவீரரே போற்றி
உண்மை பக்தர்களே!
மனிதநேயம் வாழ்க!
அன்பே வாழ்க!
உண்மை வாழ்க!
நேர்மை வாழ்க!
தானதர்மம் ஓங்குக!
நேர்மை வாழ்க!
     ஊழல் ஒழிக!
லஞ்ச லாவண்யம் ஒழிக!
கருப்புபணம் ஒழிக!
   தேசப்பற்று வளர்க!
தேசீயம் வளர்க!
நாடு நலம் பெற
நல்லோர்கள் வளம் பெற
நாளும் துதிப்போம்.
விதிப்பயன் அவன்.
விதைத்தவன் அவன்
துதிப்போர்கள் நாம்.
அவனுக்கு பயந்து நடந்தால்
நாளும் இன்பமே.

ஆன்மீக நாடு


ஆன்மீக நாடு
ஆலயங்கள் அதிகம்.
அன்றாட செய்தித்தாள்கள்
கற்பழிப்பு ,கொலை , கொள்ளை
ஊழல், கருப்புப்பணம் . 
நீதிபதிகள் தீர்ப்பே சரியில்லை -சொல்வது
ஒரு நீதிபதி.
தான் கொடுத்த தீர்ப்புக்கு தவறென்று கண்ணீர்.
மற்றொரு நீதிபதி தீர்ப்பு தவறு என்று வாதம்
என்னத்தைச் சொல்ல.
எண்ணத்தை பகர்கிறேன் .
ஊழலுக்கு எதிரான ௫௦௦,௧௫௦௦ ரூபாய்கள் செல்லாது என அறிவிப்பு.
மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால் மாயா, மம்தா, ஸ்டாலின் ,கனி,லாலு
ஒன்று சேரப்போகிறார்களாம்.
ஊழல் பேர்வழிகள்
இரண்டுஜி மூனுஜி என்னாச்சு?
காவேரி நீர் பிரச்சனை ஒன்று சேரா கட்சிகள்
கள்ள நோட்டு ஒழிப்பில் ஒன்று சேர்கின்ற தாம்.
நாற்பதாண்டு மாறி மாறி ஆட்சி என்ன ஆச்சு.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
ஊழலும் அதிகம்.
நீதிமன்றம் சரியில்லை .
சாமான்யன் சொல்லவில்லை
நீதிபதி சொல்லுகிறார்.
ஆன்மீக நாடு.
ஆலயங்கள் அதிகம்.
ஊழல்கள் அதிகம் .
ஆலயங்கள் தோறும்
ஏமாற்றுவோர் அதிகம்.
திருடர்கள் ஜாக்கிரதை.
மணிபர்ஸ் ஜாக்கிரதை
ஏமாற வேண்டாம் ஏமாறவேண்டாம்
நான் சொல்லவில்லை
ஒலிபெருக்கி கூவுகிறது.
ஆங்காங்கே எழுதி வைத்த
அறிவிப்புகள்
கூறுகின்றன.-நான் சொல்லவில்லை
நாளேடுகள்
சொல்கின்றன.
ஆன்மீக நாடு
ஆலயங்கள் அதிகம் .
ராவணர்களும் அதிகம்
பீஷ்ம பிதா மகன்களும் அதிகம்
சூர்ப்பனைகிகளும் அதிகம்
பெண்கள் கடத்தல் ,
மாற்றான் மனைவி கடத்தல்,
மாற்றான் கணவன் கடத்தல்
காவலர்கள் மோசம்
நான் சொல்லவில்லை
இந்த சின்னத்திரை
நாடகங்கள் சொல்கின்றது.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
ஊழல்கள் அதிகம்
லஞ்சங்கள் அதிகம்,
வைரக்கிரீடம் ,
தங்க கவசம் ஊழல் பணத்தில் வேள்வி
தேர்தல் வெற்றி, நீதிமன்ற தீர்ப்பு
எல்லாமே சாதகம் -நான்
சொல்லவில்லை நாடே சொல்லுது.
வாதங்கள் முடிந்தும்
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதற்குள்ளே ஒரு நாடகம்
நான் சொல்லவில்லை
நாடே பேசுது.
ஆன்மீக நாடு ஆலயங்கள் அதிகம்
உண்மை பேசினால் நாடு இழப்பாய் ,
மனைவி விற் பாய் ,
சுடுக்காட்டு காவலனாவாய் -எச்சரிக்கை
நான் சொல்லவில்லை
கதை சொல்லுது.
ஆன்மீக நாடு .
ஆலயங்கள் அதிகம்
ஊழல்கள் அதிகம் .
தமிழ்க்கடவுள்
சொக்காய் போட்ட வட இந்தியக் கடவுள்
மக்களுக்கு பொதுவான கடவுள் இல்லை
ஜாதிக்கு ஒரு கடவுள்
சாதிக்க கடவுள் இல்லை
கிரிஷ்ணனை வழிபடுவோருக்கு
கருப்பணசாமி பிடிக்காது.
கிருஷ்ணன் என்றால் கருப்பு
வடமொழி சொன்னால் கடவுள் கேட்கும்
தமிழ் மொழி சொன்னால்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
வடகலை தென்கலை கச்சேரிக்கு போகுது .
நாமம்   போடு வதில் சண்டை
நாமாவளி சொல்லுவதில் சண்டை
வடமொழி அர்ச்சனை
தென்மொழி அர்ச்சனை
தமிழில் அர்ச்சனை
ஆண்டவனுக்கு தெரிந்த மொழி எது?
சுப்பன் என்றால் தாழ்ந்த இனம்
சுப்பிரமணி என்றால் உயர்ந்த இனம் .
ஆலயங்கள் அதிகம்
ஆன்மிகம் அதிகம்
வேற்றுமைகள் அதிகம் .
இறைவா! ஆண்டவா! பகவானே! கடவுளே !
இந்த அழைப்பில் ஜாதி தெரியும்
மதம் தெரியும்.
இனம் தெரியும் .
வேற்றுமை தெரியும்.
ஆன்மீக நாடு,
ஆலயங்கள் அதிகம் .

Friday, November 11, 2016

பாரத மொழிகள்

kaalai  வணக்கம் .
கா லை  வணக்கம்.
கொஞ்சும்  தமிழ்
இறைவன் வளர்த்த மொழிகள்
பிடித்த  மொழிகள்
ஆதிமொழிகள்
தமிழும்  சமஸ்கிருதமும்.

திருக்குறள் உலகப் பொதுமறை .

இறைவனின்  சிறப்பைத்   திருக்குறள்

குறிப்பிட்ட நாமாவளி இன்றி
யாதும்  ஊரே  யாவரும்  கேளீர் --என்றும்
வையகம் வாழ்க என்றும்
கூறும்  பாரத  மொழிகள்.
அனைத்து மொழிகளிலும்
வரகவிகள் , தெய்வீக ஒழுக்க நெறி  வாழ்க்கை .
வள்ளுவர் எவ்வளவு  எளிதாக விளக்குகிறார் :-
ஆமை  போல்  ஐந்தடக்கல்  ஆற்றின் ,
எழுமையும்  ஏமாப்புடைத்து.
 
ஐந்து உணர்வு உறுப்புகள்  இவைதான்
அனைத்து நன்மை தீமைகளுக்குக்
களுக்கும்   மூலமாக    ஆண்டவன்  படைத்துள்ளான்.
நல்லதைப்   பார்த்தால்   நினைவில்
நிற்பது     மிகக்  கடினம் .
தீயவை  மறக்காது .
ஒரு   திருக்குறளை   ஆபாசமாக  
நண்பன்  எழுதிக்
கொடுத்தால் ,  எட்டுவயதில்  கேட்டது 
என்பதுவயதிலும்  மறக்காது.
அதே   வள்ளுவர் குறள்  மறந்து விடுகிறது.
திரைப்பட     பாடல்  நினைவு  இருப்பது போல்
கடவுள்  வாழ்த்துக்கள்  நினைவில் இருக்காது.
கடவுள் உருவம் கண்களில்  பதியாது .
கட்டழகிகளின்  உருவும் கண்ணை விட்டு விலகாது.

அதற்குத்தான்  கபீர்  ,
கருவிழியை   கட்டிலாக்கி ,
அதில்  ஆண்டவனை  படுக்கவைத்து,
கண்     இமையை  என்ற கதவால் மூடி
வெளியேறவிடாமல்
தியானிப்பதே   தியானம். என்கிறார்.
வடமொழி, கடினமான தமிழ் மொழி
அதைவிட எளிய கிச்சடி மொழி. இது     படிக்காத
கபீரின்  உபதேசம் .

திருக்குறள்
மலர்    மிசை ஏகினான்  மானடி சேர்ந்தார்  நிலமிசை  நீடு  வாழ்வார்.

கபீர் சொல்கீறார் --
கெட்டட்டவனைப்  பார்க்கச்  சென்றேன் ,
கேட்டவன்   உலகில் யாரும்  இல்லை.
என்   மனதில்  தேடுகின்றேன்  என்னைப்போல்
கெட்டவன்  யாரும் இல்லை.
இதை  வெளிநாட்டு அறிஞன் சொல்கிறான் என்றால்  அவன்  அறிவாளி
உன்னையே
  நீ
  அறிவாய்..

அவனுக்கு  முன்பே  வள்ளுவர் ,
ஏதிலார் குற்றம்  போல்  தன் குற்றம் காணின்
தீதில்லை மண்ணும் உயிருக்கு. .

தெய்வீகப்புலவர்   வள்ளுவர்.

படிக்காத  குரு  பக்தியால் உயர்ந்தவர் கபீர்.

இந்திய   மொழிகள்  அனைத்திலும்  தெய்வீக சிந்தனைகள்.
ஆனால் நாம்  ஆங்கில மோகத்தால்
அரிய  ஒழுக்கம்  நேர்மை தரும் இலக்கியங்களை
கேட்பதில்லை .
விளைவு     காதல், பெற்றோரை  மதியாமை,
தனியாக    வாழ்தல் , நிம்மதி இன்மை,
தலாக் , திருமணமின்றி சேர்ந்து வாழ்தல்.
தற்கொலை , சேர்ந்து தற்கொலை , ஆணவக்கொலை, கள்ளக் காதலால் மனைவி கொலை. கணவன் கொலை, குழந்தை கொலை, குழந்தைகளால் பெற்றோர்  கொலை.

  முதலில் ஒழுக்கம். ஆனால்  இன்று சுட்டி டி வி யில்
அம்மா அப்பாவை அடித்தார் . திட்டினார், கல்லூரி சென்றால் காதலிப்பேன் பாய் பிரண்டு  என்று
பிஞ்சு   மனதில் நஞ்சைக்  கலக்கும்
தொகுப்பாளர் . ரசிக்கும்  பெற்றோர்கள் . சமுதாயம்.
சிந்திப்பீர்.
இந்திய மொழிகள் -வடமொழி , தமிழ்  மிகப் பழமையான மொழிகள்.
அவைகளில்   இருந்து தோன்றிய வடமொழிகள்,
தென்   மொழிகள்
அறிய    தெய்வீக  நூல்கள் கொண்டவை.
அறிவோம் .  படிப்போம். பின்பற்றுவோம் .

" ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

Wednesday, November 9, 2016

சரணம் !

காலை வணக்கம் .
இன்றைய நாள்
இனிய நாளாக ,
இறைவனின் அருள் பெறுகின்ற நாளாக

இதயம் இறைவனையே சரணடையும் நாளாக
அமைய வாழ்த்துக்கள்.
குருவாரம் குரு பகவான் அருள்,
சதி சாய் அருள்
ஆஞ்சநேயன் அருள்
நல்லதே , நா நயமானதே
நன்மை பயப்பதே,
நாடி வந்தோருக்கு உதவிகள் புரிந்தே,
நித்தமும் நின் கருணை உண்டென்று
நீயே எனக்கு கதி என்று
நெஞ்சில் உன்னைத்தவிர
வேறு நினைவின்றி
நேர்மை வழியில் செல்ல
எனக்கு அருள்வாய்
நொடிப் பொழுதிலும் உன்னை - மறவா
நோய் தந்தருள வேண்டுகிறேன்.
அன்பே சரணம் .
ஆறுதலே சரணம்
இறைவனே சரணம்
ஈகையே சரணம்
என்னருளே சரணம்
ஏற்றம் தருபவனே சரணம்
ஐயமின்றி உன்னடி சரணம்.
ஒப்பில்லா தூமணியே சரணம்.
ஓம் -ஓங்கார மூர்த்தியே சரணம்.
ஔசதமே சரணம் .
சரணம் !சரணம்! சரணம்!விதித்தவன் அவன் ; துதிப்பவர்கள் நாம் --பக்கம் இரண்டு.

நாடு   விடுதலை  பெற்றது.
நாட்டிற்காக  பாடுபட்டு

 சிறை  சென்றவர்கள் ,
எல்லாவற்றையும் நாட்டிற்காக
 அற்பணித்தவர்கள்.
குடும்பத்தை , மனைவியை
 குழந்தைகளை
சொத்து சுகம்  அனைத்தையும்
 துறந்தவர்கள்.
நாட்டின்  சுதந்திரம்  முன்னேற்றம்  தவிர
எந்த   சிந்தனையும்  இல்லாதவர்கள்.
ஆங்கில ஆட்சியின்  சம்பளம்  வாங்கி
நாட்டு பக்தர்களையே  அடித்த
நம்நாட்டு கைக்கூலிகள்.
சர் ,ராவ் பஹாதூர்  ,என்று பட்டம்  பதவி  வாங்கிய
பட்டதாரிகள்.
இவர்கள்  எல்லோரும்  படித்தாலும்
மேதையாக  இருந்தாலும்
ஜாதிகளால்  மக்களைப்  பிரிக்கவும்
  காரணமானவர்கள்.
இந்த  அறிவாளிகள்  மதி  வேலை செய்யவில்லை.
விதி  வேலை   செய்தது.
மதிவேலை  செய்யும்   போது
பட்டத்தை பதவியைத்   துறந்தனர்.
 இந்தியர்களின்  தலை எழுத்தை
மாற்றப் போராடிய தலைவர்கள் .

அப்பொழுதும்  மதம் , ஜாதிகள் , உயர் ஜாதிகள் ,
 தாழ்ந்த ஜாதிகள்   இவர்களுக்குள்
இருந்த  வேற்றுமைகள்   மதியை  இழக்கச்செய்தது.
அப்பொழுது தான்  காந்திஜீ,
 நாட்டின்  தலைவராக  உருவெடுத்தார்.
மக்களின்  ஒற்றுமைக்காக
 ஹரிஜனன் என்ற  பெயரை உபயோகித்தார்.
ஹரிஜன ஆலயப்பிரவேசம் .
ஜமன்லால்  பஜாஜ்  மூலம் மக்களின்
 மனம் மாற்றி
ஆலயப்பிரவேசம் .
விதி  என்று ஒதுங்கிய  ஜாதி

மதியை  விட  விதி  என்று
ஒதுக்கப்பட்ட  இனம்
சமுதாயத்தில்  அந்தஸ்தைப் பெற்றது.
நேரம்  காலம்  அனைத்தும்
பாரத  விடுதலைக்கு    ஏற்ற
 சூழல்  உண்டானாலும்
தீவிரவாதம் மிதவாதம்
என்று   விதி விளையாடியது.
ஒரு  கலெக்டர் இந்திய கூலிப்படை
இந்திய  தேசபக்த்தர்களை
சத்யாக்ராஹிகளை பிரம்பால்  அடித்தது.
சுதந்திரப்போராட்டத்தின்
ஒருபகுதி  "வந்தேமாதரம்  "என்று
பிரம்படி  பட்டே  இரத்தம்  சிந்தியது.
தீவிரவாதிகளை  ஆங்கிலேயர்களால்
சமாளிக்க  முடியவில்லை.
தண்டவாளங்கள்  தகர்க்கப்பட்டது.
தந்திக் கம்பங்கள் செயலிழந்தன.
பல  ஆங்கிலேய  உய்ர்பதவியினர்
உயிர் எடுத்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்  படை
 தாக்க தயாரானது. 
இங்குதான் பாரதத்தின்  மதி  மங்கி
நேருவை  தலைவராக்கியது.
விதி   நாட்டை முன்னேற்றினாலும்
பாரதீய  ஒற்றுமைக்கான தேசீயக் கல்விக் கொள்கை
 மாநிலக்கல்வியாக    மாறியது.
மாநிலக்கட்சிகள்  தோன்றின.
ஊழல்வாதிகள் நாட்டின்  முன்னேற்றத்தில்
இந்தியர்களின்  மொழிகள் , கலைகள்
பண்பாடு  மாறத் துவங்கின.
உணவு ,உடை  மாறத் தொடங்கின.
விவசாய  கிராமங்கள் காலியாகத்துவங்கி உள்ளன.
விளை  நிலங்கள்  வீட்டுமனைகளாக
பொறியியல்  கல்லூரிகளாக  மாறிவருகின்றன,
பல  ஏரிகள் , குளங்கள் , கண்மாய்கள்  நீளம் அகலம்
குறைந்தோ  அல்லது முற்றிலும்
காணாமலோ
 போய்விட்டன.
போய்க்கொண்டிருக்கின்றன.
கல்வி  வாணிகமாகிக் கொண்டிருக்கிறது.
ஆலயங்களின்  இயற்கை  பக்தி , அமைதி சூழல்கள்
மறைந்து
வணிகர்களின் வளாகங்களாக ,
பக்தியும்  வணிகக் கண்ணோட்டத்துடன்
மாறி வருகின்றன.
எத்தனை  வெளி ஆடம்பரங்கள்.
தங்கரதம் , வைரக்கிரீடம் ,வெள்ளிரதம்.
இறைவன்  அருள் பெற  இவைகளை  இழுக்கக்  கட்டணம்.
அதில்  ஒரேநாளில்  நூறுபேர்  பணம்  கட்டி  இழுப்பது
இப்படி  ஒரு பக்கம்  மதியின் தாக்கம்.
மறுபக்கம்  விதியின்  தாக்கம்
நமுட்டுச் சிற்றிப்புடன்  சந்தர்பம்
 எதிர்நோக்கிக் கொண்டுள்ளது.
இப்பொழுது  விதியா?  மதியா ? மாயையின்  மயக்கமா ?
மதி இருந்தும்  மதுக்கடை செல்வது விதி  என்றே ஏற்கவேண்டும்.
விதித்தவன்   அவன்; துதிப்பவர்கள்  நாம்.
தேச பக்தர்கள், தேச துரோகிகள் , ஊழல்வாதிகள்
இது விதித்தவன்  அவன்.
துதிப்பவர்கள்  நாம்.Monday, November 7, 2016

விதித்தவன் அவன் . துதிப்பவர்கள் நாம் . பலன் ?நம் கையிலா ?--1

  

இன்று நான் என்னுடன் பணியாற்றியவரும் ,
கலைத்துறையிலும் ஆன்மீகத்திலும்
மிக ஈடுபாடும் ஆழ்ந்த நுண்ணறிவும்
நடிப்பில் சிறந்தவருமான நண்பர் டிகால். என்று பள்ளியில் அறிந்த கல்யாண்ஜி என்று வையகம்
அறிந்த கல்யாண்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அவர் எனக்கு அளித்த தலைப்பு :--
"விதித்தவன் அவன் , துதிப்பவர்கள் நாம் ".

நம் ஜாதகம் எழுதும் போது வடமொழியில்

ஒரு வாசகம் இருக்கும் .

"ஜனனி ஜன்ம சௌக்கியானாம் ,
பதவி பூர்வ புண்யானாம் " ,
லிக்யதே ஜன்ம பத்திரிகா.

என்னதான் தவ வலிமை பெற்றாலும் ,
வரங்கள் பெற்றாலும் ,
புகழ் பெற்றாலும் பல்லாயிரம் கோடிகள்
கருப்புப்பணம் சிலவு செய்தாலும்
பதுக்கி வைத்தாலும்
அறவழி தவறினால் ,
கடமை தவறினால்,
வாய்மை தவறினால்,
நேர்மை தவறினால்,
அதிகார துஷ்ப்ரயோகம் செய்தால்
ஊழலில் ஈடுபட்டால் ,
தேச துரோக செயலில் ஈடுபட்டால்,
கலியுக தண்டனை இப்பிறவியிலேயே .
அடுத்த பிறவி என்பது நாம்
அறியமுடியா ஒரு சூக்ஷமம்.
நீங்கள் சமுதாயத்தை ஆராய்ந்தால்
தெரியும்.
தசரத சக்கரவர்த்தியின் இன்னல்,
ராமரின் துயரம்
இன்றைய தலைவர்கள்,
நடிக நடிகர்கள்
புகழ்பெற்றவர்கள்
உலகின் உயரிய விருது பெற்றவர்கள்
ஏன் தத்துவமேதை கள்,
சாக்ரடிஸ் போன்றவர்கள்,
அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கை
ஜவஹர்லால் நேரு , இந்திரா ,
அனைவரும் வேதனைப் பட்டவர்களே.
புத்திர சோகம் ,
நல்ல கணவன் , மனைவி ,குடும்பம்
அமையாதவர்கள்.
அவர்கள் அடையும் மகிழ்ச்சி பணம் ,புகழ்,
நவீன வசதிகள் போன்றவை .
ஆடம்பரம் வெளித்தோற்றங்கள்.
தனிமையில் அவர்கள் அமர்ந்து தன்னைப்பற்றிய
தன் குடும்பம் பற்றிய சிந்தனை செய்யாதவர்கள்.
ஒரு வார்டு கவுன்சிலர் மனைவியிடம் கேளுங்கள் :
" அது எங்கே வீட்டுல இருக்கு. ஊர்க்கவலையே பெரிசா இருக்கு.
எப்போ போகுது எப்போ வருதுன்னு தெரியாது. "

ஆனால் அவருக்கு அந்த ஊரில்
நல்ல பெயர் இருக்கும்.
சமுதாயம் மதிக்கும்.
அடுத்த தேர்தலில் அவரை மக்கள்
விரும்பினாலும்
விதி பணபலம் தேர்தலில்
டெபாசிட் இழக்கச் செய்யும்
பெருந்தலைவர் காமராசர் எதிரியும் புகழும் உத்தமர் . கக்கன்ஜி போன்றோரின் தோல்வி
விதியின் வலிமையையே மதியைவிட உயர்ந்தது என்பதற்கு சான்றுகள்.
பணபலம் மதி பலத்தை இல்லாமல் செய்யும்
என்ற மக்களின் இன்னல் விதியே
மாயை முன் மதி மாது , மதுவிற்கு விதி விளையாடும்
அதற்கு ராவணன் ஒரு உதாரணம்.
முகலாயர்களின் ஆட்சி ஆங்கிலேயர்களால்
கவிழ்ந்ததும் விதி மதியை செயல்படாமல் செய்ததே.
காந்தி வாங்கிய கன்னத்தில் அறையும் அவமானமும் ,
நமது நாட்டிற்கு விடுதலை.
நாட்டின் ஒற்றுமைக்கு ஆதாராம்.
நேதாஜியின் படை பலம்.
தீவீரவாதிகளின் ஹிம்சை அரசியல்.
அனால் தடி அடிபட்டு இரத்தம் சிந்தி
சத்தியா கிரகம் , அஹிம்சை தான்
உலக அளவில் பேசப்படுகிறது.
இதிலும் விதியார் பக்கமோ அவர்களுக்கே புகழ்.

பதவி. நேருவின் விதி சுபாஸ் சந்திர போசை ஒளித்தது.
நேரு ஒளி பெற்றார்.
ஆங்கிலம் வளர்ந்தது. பாரத மொழிகள்
வாழ்வாதரமில்லை என்ற நிலை வந்தது.
பாரதக் கலைகள் மறைந்தன.
கதாநாயகி முந்தானை தூக்கி போடும்
மாயை மக்களை கவர்ந்தது.
மதியா ? விதியா?
மதி மயங்கி , விதி விளையாடிக்கொண்டிருக்கிறது.