Friday, October 28, 2016

ராமசரிதமானஸ் தொடர்ச்சி --சுந்தரகாண்டம் பக்கம் பதிமூன்று

 
 சீதை  ஹனுமனிடம் ,

  ஹனுமானே!

 ராமரிடம்  இந்திரனின்  புத்திரன்  ஜெயந்தனின்

   மரணச் செய்தி  சொல்லவும்.

  அவரின்  பாணங்களின்  சக்தியை  நினைஊட்டவும் .

  ஒரு  மாதத்தில்  வந்து என்னை  மீட்கவில்லை  என்றால்

  என்னை  உயிருடன்  காண முடியாது  என்று  சொல்லவும்.

    நீ சொல் !  நான்  எப்படி உயிருடன்  இருப்பது ?

   நீயும்  இப்பொழுது செல்லப்  போகிறாய்.

 உன்னைப்பார்த்து  சற்றே மனம்

குளிர்ந்தது.

 மீண்டும்  அதே இரவு-பகல்.

என்றார்..

  ஹனுமான்  அவருக்கு  பலவிதத்தில்  தைரியம்  கூறி ,

அவர்  பாதங்களை

வணங்கி  புறப்பட்டார்.

  போகும் பொழுது  அவர் பெரும்  குரலில்  கர்ஜித்தார்.

அதனால்  பயந்த  பல  அரக்கிகளின்

  கர்பங்கள்  கலைந்தன.

 கடல் தாண்டி  வந்ததும்  தன் மகிழ்ச்சியின்
 ஆரவார  சிரிப்பு  சிரித்தார்.

வானரங்கள்  ஹனுமானின்  முகத்தில்  மகிழ்ச்சியும்
 உடலில்  ஒரு தேஜஸையும்  கண்டனர்.
இதெல்லாம்  ராமரின் செயல்  என்றே கருதினர்.

  எல்லோரும்  அங்கதனின்  அனுமதியுடன்  மதுவனத்தில்  நுழைந்தனர்.

எல்லோரும்  பழங்களை  சாப்பிட்டனர்.

தடுக்க  வந்த  வனக்காவலர்களை

விரட்டினர்.

  அவர்கள் சுக்ரீவனிடம்   சென்று  இளவரசர்
 காட்டை பாழ் படுத்துகின்றார் என்றனர்.
இதைக்கேட்டதும்  சுக்ரீவன் மிகவும்  மகிழ்ந்தான்.

இதெல்லாம்  ராமச்சந்திர பிரபுவின்

 செயல் என்றே  நினைத்தான் .

 சீதையின்  செய்தி  கிடைக்கவில்லை  என்றால்

அவர்கள் மதுவன  பழங்களை  சாப்பிடமுடியாது  என்று

 சுக்ரீவன்  நினைக்கும்  போதே

அங்கு வானர கூட்டங்கள் வந்துவிட்டன.


   அனைவரும்  சுக்ரீவனை  வணங்கினர்.

எல்லோரையும்  சுக்ரீவன்  மிகவும்  அன்போடு  சந்தித்தான்.
 எல்லோரின் நலனையும்  விசாரித்தான்.

 எல்லோரும் கூறினர்--ராமரின்  கிருபையால்
  அவர்
 ஒப்படைத்த  பணி
சிறப்பாக  முடிந்துவிட்டது.

  ஹனுமான் தான் காரியத்தை  வெற்றியுடன்  முடித்தார்.
 வானரங்களின்  உயிர்களைக்  காப்பாற்றினார்.

  பிறகு  சுக்ரீவன் , ஹனுமான்  அனைவரும்  சேர்ந்து
இராமரை  சந்திக்கச்   சென்றனர்.

  ராமர்  வானரங்கள்  சேர்ந்து வருவதைப்
 பார்த்து  மிகவும்  மகிழ்ந்தார் .
இரண்டு சகோதரர்களும் பளிங்குப் பாறையில்  அமர்ந்திருந்தனர்.
 எல்லோரும்  சென்று  ராமரின்  பாதங்களில்   விழுந்து  வணங்கினர்.

   தயாநிதி ராமர்  அனைவரையும்
ஆலிங்கனம்  செய்து நலம்  விசாரித்தார்,

வானரங்கள்  அவரிடம்
 உங்கள்  கிருபையால்  நலமே  என்றனர்.
  

No comments: