Friday, October 21, 2016

துளசிதாஸ் ---ராமச்சரிதமானஸ் --சுந்தரகாண்டம் . முன்னுரை ---1

          ராமாயணம்   பாரதத்தின்  தெய்வீக  நூல்.--


அனைத்து  மாநில  மொழிகளிலும்  ராமாயணம்
  மாநில  பண்பாட்டின்  படி
சற்றே  மாற்றி  எழுதப்பட்டுள்ளது.

       அந்த  அந்த  மாநில  மொழியின்

   ரா மாயணத்திற்கு   தனி சிறப்பு  உண்டு.
.
கம்பர்   கழகம்  ஒவ்வொரு   ஆண்டும்

  சிறப்பான   சொல் அரங்கம் ,

பட்டிமன்றம் , சொற்பொழிவுகள் , கவிதை அரங்கம்

  மிக  சிறப்பாக  நடத்திவருவது   அந்த  நூலின்  மாண்பாகும்.



  சிறப்பாக   நீதியரசர்   மு.மு,  இஸ்மாயிலின்  பற்று

 அளவிற்கரியதாக  இருந்தது.

       ஹிந்தியில்   துளசிதாசரின்  ராமாயணம்  சமஸ்கிருதம்

  மூல நூலை  விட  சிறப்பு பெற்று

 ஒவ்வொரு  வீட்டிலும்   பூஜை செய்யப்படுகிறது.

      ஹனுமான்  சாலீசா  படிப்பது அனைத்து

 இன்னல்களையும்  போக்கி

மனதிற்கு  சுகம்  அளிக்கக்கூடியது.

 மன நிறைவைத் தரக்கூடியது.

    பக்தர்களுக்கு  வரப்பிரசாதமாகும்.

           தமிழகத்தில் ராமருக்கு  எதிர்ப்பு  போல்

  வட  நாட்டிலும்  மூலக் கதை
 அடிப்படையில்  விமர்சனம்  செய்யப்பட்டாலும்
  அது மிகமிகக்  குறைவு.

        இன்று   முதல்   துளசி  இராமாயணத்தின்
      சுந்தரகாண்டத்த்தின்

    தமிழ்  மொழியாக்கம்  எழுதுகிறேன்.



  நான்  தமிழில்  புலமை  பெற்றதில்லை.


  பிழைகள்  இருந்தால்  சுட்டிக்காட்டவும்.

  தவறுகளையும்  சுட்டிக்காட்டவும்.

  இந்த  சுந்தரகாண்டம்   மொழிபெயர்ப்பு

   வெற்றிகரமாக   எழுதி  முடிக்க

   மூலப்பரம்பொருள்
   மூஷிகவாகனன்   அருள்  கடாக்ஷம்   வேண்டுகிறேன்.

          முருகப்பெருமானின்   அருளும்  சிவனருளும் துர்க்கை  அருளும்  வேண்டுகிறேன்.

  ராமதூதர்    ஒப்பில்லா  பலம்  வாய்ந்தவர்  ஸ்ரீ  ஹனுமான்  அருள்  கிடைக்கட்டும்.



  ஸ்ரீ ராமர்  கிருபையும்  வேண்டும்.
 துளசிதாஸ்  மானசீக  குருவாக  துதித்து துவங்குகிறேன்.

இது   கவிதைநடையில் புரியாநிலையில்  எழுதப்படவில்லை.

உரைநடையில்  அனைவரும்  புரியும் வண்ணம் எளிய தமிழில் எழுதப் பட்டுள்ளது.









No comments: