Sunday, February 21, 2016

ஆண்டவன்

பணம் இருந்தாலே பக்தி ஆலய தரிசனம்  என்று வணக ரீதியில் ஆன்மீகம் மாறிவிட்டது

Saturday, February 20, 2016

ஓம் நமச்சிவாய

ஓம் நமச்சிவாய என்றாலே

சிக்கல் தீரும்.
சிந்தனைகள் வளரும்
சினம்  தனியும்.
சித்தம் தெளியும்
  சித்தம் சிதறாது.
ஞானம் பிறக்கும்
ஞாலம் மறக்கும் .
பற்று ஒழியும்.
முக்தி கிடக்கும்.
ஓம் நமச்சிவாய!
ஓம் நமச்சிவாய!



Thursday, February 18, 2016

ஜகத்தினை வென்றீடுவேன்

வேண்டும்   வேண்டுதல்கள்  பல ,வேங்கடேசா .
திரு  வேங்கட வாசா.
திருமகள் அருள் வேண்டும் .
கலைமகள் அருள் வேண்டும் .
மலைமகள் சக்தி வேண்டும் .
இவ்வாறே  வேண்டுதல்கள்  .
உன்னருள் இருந்தால் போதும்
உலகியல்  துன்பம் இல்லை .
கலியுக தெய்வம் நீயே .
கந்தனின் மாமனே.--அவன் கலியுகவரதன்
நீயோ  சுந்தர வரதன்.

அவன் க்ஷேத்திரத்தில்  நான் பிறந்தேன் .
உன் க்ஷேத்திரத்தில்  உன் அருள் பெற்றேன் .
உன் க்ருபாகடாக்ஷம்  போதுமப்பா !

ஜகத்தினை வென்றீடுவேன் .

photo.JPG.jpg

Wednesday, February 17, 2016

ஸனா தன தர்மமும் தர்ம சங்கடங்களும்

உள்ளத்தை சாட்சியாக வைத்து
உலகநாதன்  விஸ்வநாத்  ஜகன்னாத்  ப்ரேரணயைில்
  இந்திய மத ஒற்றுமை விஷயத்தில்
இறைவன் என்ற பெயரில்  ஏமாற்றுவோர் கூட்டம் அதிகம்
தக்ஷிணை தான் வாழ்வாதாரம் என்ற அந்தணர்  வாழ்க்கை.
அறவோர். ஆசைப்படாதவர்கள்
உணவு உடை உறையுள் உண்மை
வேதம் பூஜை அர்ச்சனை
வையக நலம் என்று வாழ்பவர்கள்
வாழ்ந்தவர்கள்.
இறை சக்தியால் வாழும் ஒரு படைப்பு .
காலமாற்றம்.
வெளிநாட்டினர் படைஎடுப்பு.
ஆலயங்களில் கொள்ளை.சிலைகள் உடைப்பு.
ரசனை கலைஞர்களின் அழகு படைப்பு  சிற்பிகளின்
உழைப்பு
அறியா முகலாயகர்கள்
அவர்களிடமிருந்து ஆலயங்களை
காப்பாற்ற நடத்திய போராட்டங்கள்
அந்தணர்களா விடுதலைக்குப்பின்
ஆலய நிலங்களை அபகரித்தனர்?
ஆலயங்கள் அருகில் கடைகளை அமைத்தனர்?
ஆலய அறங்காவலர்கள் அந்தணர்களா .?
நுழைவுக்கட்டணம்
வாங்குவது வரவு சி லவு  அனைத்தும் அந்தணர்களா .?
ஆனால் வருமானமில்லா
விவசாயி கள்   தற்கொலை.
ஆனால் ஏழை அந்தணன்
வேறு தொழிலகளில்.
ஆலயங்கள் சுரண்டல்
உண்டியல் எண்ணல்
ஆலய மேம்பாடு எதிலும் அந்தணர்கள் இல்லை.
இன்று அவரகளுக்கு ஏற்ற வருமானம் இல்லை.
பல ஆலயங்கள் இருள் மயம் .
அரிய பெரிய சிலைகள்  மண்டபங்கள்  மறைத்து அங்காடிகள் .
ஆலயம் மறைக்கும் அளவுக்கு கட்டடங்கள்.
பரிகாரம் என்ற பெயரில் ஏமாற்றங்கள்.
ஆலயம் முன் ஆண்டவன்
இல் லை என்ற வாசகத்துடன் சிலை.
ஆண்டவன் கோயில் இடித்தால் பாதுகாப்பில்லை.
ஆண்டவன் இல்லை என்ற சிறு கூட்டத்திற்கு  சிலைக்கு  பாதுகாப்பு.
அந்தணர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஐயர் கோவில்  ஐயங்கார் கோவில்  பார்வையில் வெறுப்பு.
இந்த இறைப்பேராட்டம் இறைவன் காக்க முடியா குழப்ப நிலை.
இதுவே ஸனாதன தர்மம்.
ஹிந்து என்ற மதமில்லை.
இறைவன் தான் காக்க வேண்டும்
லை

Friday, February 12, 2016

தசரத சக்கரவர்த்தியும் அழுதார்

பகவானின் லீலைகள் 
பாமரனின்  ஜப-தப ப்ரார்த்தனைகளுக்குப் புரியவில்லை.

கர்மா என்கின்றனர் . 
பூர்வ ஜன்ம கர்மா , இந்த ஜன்ம கர்மா ,ஏழேழு ஜன்ம கர்மா 

ஆனால்  அனுபவ ரீதியில் பார்த்தால்  எல்லாமே உண்மை.

இருப்பினும் கலியுக  தர்மம்  பொருளாதார மேம்பாட்டில் 
மனக் கஷ்டம். 
பதவி  வசதி புகழ் 
ஆனால் பிரியமானவர்கள்  பிரிந்து போகும் காட்சி.
பணம் இருந்தும்  மன நிறைவு இல்லா காட்சி.
அன்புள்ள  ஆண்டவனைக்  காண 
அருள் பெற  அறிந்த பாவ மன்னிப்பு  மீண்டும் செய்யாமை.
அறியா பாவ மன்னிப்பு. 
உறவு நட்பு செய்யும் பாவங்களை சகித்தல் உதவுதல் 
இப்படியே ஆராய்ந்தால்  மனித துன்பங்களுக்கு 
கர்மம் அதாவது நமது செயல் ,சிந்தனை ,எண்ணங்களே 
காரணங்களாகத் தோன்றுகின்றன.
தசரத  சக்கரவர்த்தியும் அழுதார் .
ராமனும் அழுதார்.
ஆட்சியில் இருந்தோர்  உள்ளோர் அனைவருக்கும் 

மன நிம்மதியில்லா   வாழ்க்கைதான்  பூமியில். 

Tuesday, February 9, 2016

காலை வணக்கம்

கடவுளை இறைவனை பகவானை சாமியை ஈஸ்வரனை
வழிபட்டு  போற்றி
வணங்கி தொழுது
கடமையாற்றி
சேவை புரிந்து
தொண்டாற்றி
தொண்டரடிப்பொடியராக
வாழ்வதே இறை அருள் பெற
இனிய வழி.
மனித நேயம் மனித ஒற்றுமை
ஆணவம் சுயநலமின்றி வாழ்வதே.
இல்லாதவர்களுக்கு உதவினால்
நாமே அவனுக்கு நடமாடும் தெய்வம்.
தான தர்மம் நம்மை போற்றும்.
இறைவன் அருள் கிட்டும்

Wednesday, February 3, 2016

இறைவனும் மனிதனும்

இந்நிலவுலகில்  அனைத்துமே
இருவகை நல்லது கெட்டது.
ருசி மட்டும் ஆறு.
இயற்கை மணம் இதுவரை
வரையருக்கப்படவில்லை
உப்பு இனிப்பு புளிப்பு கசப்பு
துவர்ப்பு காரம் அனைத்தும் கலந்த பச்சடியும் உண்டு.
ஆனால் மணம் என்பது தனி.
அது கலக்கப்படுவது இல்லை.
மல்லிகை மணம் ரோஜா மணம்
கலக்க முடியாது .
வண்ணத்தில் கலவைஉண்டு.
இப்படி தனித்துவம் காட்டும் உலகில்
மனித மனத்தில் ஒருவரை இப்படித்தான் என்று நிர்ணயிக்க முடியாது.
கொடுங்கோலர்களுக்கும் சில நல்ல குணம் உண்டு. திடமனதிலும் சில பலஹீன இச்சைகள் உண்டு
இராவணண் பலஹீனம் சகோதரி மீது கொண்டபாசம்.
சகோதரியை  அவமதித்த சீதையை பலிவாங்குவதுதான் .சீதையின் அழகில் மயங்கினாலும்  மனமாற்றம் செய்ய விரும்பினானே ஒழிய பலாத்காரமாக அடைய விரும்பவில்லை. இந்த ஒரே ஆணவமும் சபலமும் அவனது பலஹீனமாகியது. சூர்ப்பணகா இல்லையேல் ராமாயணம் இல்லை.
த்ரௌபதி இல்லை என்றால் மஹாபாரதம் இல்லை.
சம்ராட் அசோக் கொடியவன்.
ஆனால் அவன் நல்லவனாக மாற புத்தமதம் காரணமாகியது.
கர்ணணிடம்   செஞ்சோற்றுக்கடன் மட்டுமல்ல தாயின் பற்றற்ற  நிலை அவனை வேதனக்கு ஆளாக்கியது.
தாயன்பு  பெண்ணின் கல் நெஞ்சம்
மகன் என்று அறிந்தும்  அமைதி காத்தது பெண்ணின் குணம் இதுதான் என்று வரையருக்கமுடியா நிலை
மணமும்  மனமும் என்ற பொழுது
மணக்கலலை  கிடையாது .மணமும் மனமும் இப்படித் தான்  என்று வரையறுக்கமுடியாது. இது இயற்கையில் இறைவனின் சூக்ஷ்மம்.
~