Wednesday, January 6, 2016

மகிழ்ச்சியானமுகம்

முகம் மகிழ்ச்சியாக இருந்தால்
மற்றவர்களை வசப்படுத்துவது
எளிது.
மலர்ந்த முகம் அகத்தில் இருப்பதை அறிவது கடினம்.
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பர்.
இதற்கும் மேல் பணிவு.
கல்வி பணிவைக் கொடுக்கும்.
பணிவு செல்வத்தைக் கொடுக்கும்.
விஷ்வாமித்திரர்  தன் கோபத்தால்
தவவலிமை இழந்தார்.
அன்பு அனுசரணையைத் தரும்.
கண்டிப்பு என்பது அன்பும் சேர்ந்திருந்தால் உயர்வு உண்டாகும்.
இறைவனைக் காண விரும்புவோர்
இவ்வையகத்தில்  உயர
பற்றற்ற வாழ்வை வலியறுத்தினாலும்
இறைப்பற்றை மிகவும் வலியுறுத்தினர்.
கபீர் சொல்கிறார் ....
மிகப் பெரிய நூல்களைப்பயில்வதால் யாரும்
பண்டிதர் ஆவதில்லை.
அன்பு என்ற இரண்டரை எழுத்தை
அறிந்தவர்கள்  அறிஞர்ஆகிறார்கள்
ப்யார் ப்ரேம் இஷ்க் அன்பு எல்லாமே
இரண்டரை எழுத்து .
ஆன்மீகம் அறத்துடன்  கூடிய அன்பை பின்பற்றத் தூண்டுகிறது
தானதர்மம் பரோபகாரத்தை விளக்கு கிறது.
மன அமைதிக்கு வழிகாட்டுகிறது.



No comments: