Monday, January 25, 2016

மரணபயமும் மதவேற்றுமைகளும்

கடவுளின்  ஆற்றல் மறுக்கப்படுவதில்லை.
கடவுளின் அன்பு கருணை அருட்பார்வை
அனைரும் விரும்பு கிறார்கள்.
சத்தியம் நேர்மை தானதர்மம பாவ புண்ணியம்

அனைவராலும் விரும்பபபடுகிறது.
ஆனால் மனிதஇனத்தில் ஒற்றுமை இல்லை.
ஏன்.? ஏன்?
இயற்கையின் வேற்றுமைகள்
செழிப்பு.,வரட்சி., குளிர்,.மலை., தீவு வேற்றுமை
மாமிச பகஷினி , சாகபக்ஷினி,  அனைத்தும் சாப்பிடும் மனித இனம். அதிலும் நாட் டுக்கு நாடு.,மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் உடை உணவு வகைகள்,
மொழி வேற்றுமைகள்  எழுத்து றே்றுமைகள்
வேற்றுமைகள் நிறைந்த உலகில் ஒற்றுமை எங்கே.?
அது தான் மனிதம் .மனிதநேயம். இரக்கம.இன்பம் துயரம்
நோய்.மூப்பு மரணம்.
மரண அச்சத்தில் எந்த இஸ்லாமியனும் இந்து அளிக்கும்
இரத்ததானத்தை மறுப்பதில்லை.
எந்த இந்துவும்  முஸ்லிம் இரத்தத்தை மறுப்பதில்லை.
உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி பார்ப்பதில்லை.
டாக்டர் சிகிச்சைக்கு வேண்டும்.சிறந்த மருத்துவர்.
இந்துக்கு இந்து டாக்டர்
முஸ்லீமுக்கு முஸ்லிம் டாக்டர்
கிறிஸ்தவருக்கு கிறிஸ்தவ டாக்டர்
என்றோ தன் மத நோயாளிக்கு மட்டுமே சிகிச்சை
மற்ற மத நோயாளிக்கு இல்லை என்றோ
பாகுபாடு பார்ப்பதில்லை.
மனிதன் தன் உயிர் போகும் நிலையில்
மதங்களை கண்டு கொள்வதில்லை.
இந்த மரண பய நேர ஒற்றுமை
எப்பொழுதும் இருந்தால் வையகத்தில்
மதத்தின் பெயரால் கடவுளின்  பெயரால்
பைபிள,குரான்,கீதை.குரு கிரந்தஸாகப்
மஹாவீரர் திரிரத்தினம் புத்தர் எண்வகை மார்க்கம்
என்ற வேற்றுமை எனபதில் காணும்
சத்தியம்.,அஹிம்சை, தான தர்மம் ஏற்றால்
மத இன ஜாதி கடவுள் ஊர்வல பதட்டம் எதுவும்
இல்லா ஒற்றுமை காணும் உலகு.

No comments: