Thursday, November 26, 2015

1. மங்களம் . கரிமுகத்தோனே !

1. மங்களம் .
கரிமுகத்தோனே !

பரிதி  இருளைப் போக்குவது போல் -உன் 

 தாமரைச்   சரணங்களை துதிப்போரின் 
தடைகளை போக்கும் 
தேவ தேவனே! போற்றி ! போற்றி!

ஒவ்வொரு நற்காரியத்துவக்கத்தின் 
நாயகனே! 
கல்வித்துவக்கம் , திருமணம் ,புதுமனை புகுவிழா ,
போர் ,சங்கட காலங்களில் 
உன்னை பல பெயர்களில் 
போற்றி வழிபடுகின்றனர் .
ஏகதந்தன் என்றும் கபிலன் என்றும் ,
கஜகர்ணன் என்றும் லம்போதரன் என்றும் ,
விகடன் ,விக்னநாஷன்  என்றும் 
விநாயகன் ,தூம்ரகேது ,கணநாயகன் என்றும் 
பாலச்சந்திரன்  கஜானன் என்றும் 
பன்னிரண்டு பெயர்களில் துதிப்போருக்கு 
எவ்வித தடைகளும் வராமல் காப்பாய்.

வடமொழி 
स  जयति सिंधुरवदनो  देवो यत्पादपंकजस्मरणम्। 
वासरमणिरिव   तमसां  राशीन्नाशयति विघ्नानाम।। . 
समुखश्चैकदंतश्च कपिलो गजकर्णकः। 
लम्बोदरश्च विकटो विघ्ननाशो  विनायकः। 
धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः।
द्वादशैतानि नामानि यः  पठेच्छृणुयादपि। 

No comments: