Monday, October 19, 2015

அதுவே அன்பின் நிலை .

  • What's on your mind?
    1. News Feed

      அன்புள்ள முகநூல் நண்பர்களே !
      வணக்கம்.
      ஆன்மிகம் என்பது நமக்கு
      அறியா புரியா தெளியாத
      அளவுக்கு வாணிக நோக்கம்
      மேலோங்கி காணப்படுகிறது..
      மேலோட்டமாக மக்கள் இறைவன் அருள் பெற
      பணம் தேவை ,பொருளே ஆதாரம் என்ற பொருளற்ற
      எண்ணங்களில் சிந்தனைகளில் ஆன்மீக வேடதாரிகளை
      நம்பியே இறையன்பு சுழல்கிறது.
      ஆழ்ந்து தியானம் செய்யும் பழக்கம் போய்
      நமக்காக பிரார்த்தனை செய்யும் முகவர்களிடம்
      பணத்தைக்கொடுத்து அவர்களை ஸ்வர்ண சிம்மாசனத்தில் அமர்த்துகிறோம்.
      இறைவனனின் கருணை பெற மனத்தில் அவனை நிலை நாட்டவேண்டும்.
      பணத்தாலும் பரிகாரங்களாலும் அதிகாரத்தாலும்
      வெளி ஆடம்பர பூஜைகளாலும் ,
      விநாயகர் விசர்ஜனத்தாலும்
      கட்டாய துன்புறுத்தி வசூல் செய்து குடித்துவிட்டு
      இறைவன் முன் ஆடுவதாலும் ஒரு மதம் உயராது.
      வெளி ஆடம்பரமற்ற ஆழ்நிலை தியானத்தால் தான் ரமணர் ,சங்கரர் ,ராமானுஜர் ,புத்தர் மகாவீரர் ,
      முஹம்மது நபி போன்ற இறைதூதர்கள் இறைவனைக்
      கண்டு களித்தனர்.
      பிரஹ்லாதன் ,பக்த துருவன் ,நந்தனார் ,கண்ணப்பநாயனார் போன்றோர் இறைவனை நேரடியாக தரிசித்தவர்கள். குஹன்,சபரி போன்றோர் ராமாயணத்தில் இறைவனைக்கண்டனர்.
      எளிய தியானம் ,மனதில் நேர்மை இறைவழிபாடு
      இறைவன் அருள் தரும் . அறம் ,தானம் சிந்தனைகள் வேண்டும்.கடமை செய்யவேண்டும்.
      அதற்காக ஆன்மிகம் ஆடம்பரம் என்று
      பால் அபிஷேகம் செய்து இன்று நடிகர் நடிகை கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு மதிகெட்டு மாயையைத் தூண்டுகிறது.
      பகவான் நாராயணன் நாரதரை விட சிறந்த பக்தன்
      ஒருவிவசாயி என்றார்.
      நாரதர் அவன் இல்லம் சென்று சோதித்த போது
      அவன் இறைவன் நாமம் காலை மதியம் இரவு என்று மூன்று முறை சொல்லி கடமை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். நாரதருக்குப் புரியவில்லை.
      நேரடியாக இறைவனிடமே விளக்கம் கேட்டார்.
      மனிதனுக்கு எவ்வளவு பிரச்சனைகள். குடும்பம் ,மனைவி,மக்கள் ,நண்பர்கள் என்று
      உலக உறவுகளுக்கிடையில்
      இறைவனை வழிபடுகிறான் என்றால்
      அவனே சிறந்த பக்தன். உனக்கு என் நாம ஸ்மரணையே
      தொழில். அவனுக்குத் தொழிலுக்கிடையில்
      நாம ஸ்மரணை. நீயே சொல். யார் பக்தன் ?
      இது அனைவரும் அறிந்த கதை. ஆனால் அடிக்கடி நினைவு படுத்தவேண்டிய கதை.
      வெளி ஆடம்பரமற்ற தானே இறைவனை வழிபட்டு அவன் கருணை பெறவேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையில் ஒரு முகவர் தேவையா?
      குரு தேவை. அவர் ஞானம் தருபவராக இருக்கவேண்டுமே தவிர ஞானம் தர பொருள் கேட்பவராக இருக்கக்கூடாது.
      எளிய வாழ்க்கை வாழ்பவராக இருக்கவேண்டுமே தவிர
      வைரக்கிரீடம் ஸ்வர்ண சிம்மாசனத்தில் அமரவிரும்புவராக இருக்கக்கூடாது.
      ரமண மகர்ஷி, யோகிராஜ் சரத் குமார் .ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்றோர் எளிய பக்தியில் இறைவனை நேரடியாக தரிசனம் செய்தனர்.
      நண்பர்களே !சிந்தியுங்கள்.
      கடமைக்குமுதலிடம் .பக்திக்கு பிரதான இடம் . குறைந்த நேரம் . கடமைக்கு அதிகநேரம். இதுவே ஆனந்த வாழ்க்கை.
      சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
      இறைவழிபாட்டில் ஆடம்பரம் தேவை இல்லை.
      அதில் இறைவன் ஆனந்தப்படுகிறார் என்பது அஞ்ஞானம்.
      மெய்ஞானம் இல்லை.அதுவே  அன்பின் நிலை .
      இறை அன்பின் எல்லை.


    No comments: