Tuesday, September 8, 2015

அருள் தரும் பக்தி பெருக வா ! வா !

தடைகளைப்  போக்கும் இறைவன்
  வினைகளைப்போக்கும் விக்னேஷ்வர் 
சக்தி   தரும்  சக்தி விநாயகர் 

மனக்கிலேசம் போக்கும் மணக்குள விநாயகர்,

வல்லமை  தரும் வல்லப விநாயகர் 

முக்திதரும் முக்குருணிவினாயகர் 

ஆற்றில் குளித்தவுடன் மிக மடியுடன்  வணங்க 

ஆற்றங்கரை அரசரடி  விநாயகர்,

மூஞ்சூறு வாஹனன்  அன்னை தந்தையே 

வையகம் என்று காட்டிய ஐங்கரன் 

கேட்டவரம் தரும் கற்பக விநாயகர் ,
உச்சியில் அமர்ந்து ஊர் காக்கும் உச்சிப்பிள்ளையார் 
பூனாவின் தௌலத்  பிள்ளையார் ,

அங்கிங்கெனாதபடி ஏழைகளுக்கருளும் 
நடைபாதை விநாயகர் மரத்தடி விநாயகர் 

அவரின் அழகு உருவம் செய்து அதன் நலங்கெட எறிவது 

அன்புள்ளோரின்  அடாவடி செயலன்றோ ?
அதை ஊக்குவிப்போர் மத நலம் விரும்புவோர் என்றால் 

மதியுள்ளோர் சிந்திப்பீர்!

மத நல்லிணக்கம் ஒற்றுமை வலிமை கீழ்காணும் படத்தின் 
அலங்கோலமே என்றால்  நான் வணங்கும்  யானைமுகனே! 
இது சரியா /
நலமா ?
விநாயகா !உனக்கு ஏற்படும் அவமானம் எனக்கு வேதனை !
வேழமுகத்தோனே !மக்கள் மனம் மாறி உன்னை விசர்ஜனம் என்ற பெயரில் 
அலைமோத துண்டாக்கும் மூட நம்பிக்கை பக்தியைப் போக்க வா!

வருக!இந்த மதியீன பக்தியைப்போக்கி

 அருள் தரும் பக்தி 

பெருக வா ! வா  ! 


No comments: