Wednesday, September 30, 2015

எதிலும் எங்கும் அதிசயம்.

அவனியில் பாரினில் உலகில்    வையகத்தில் ஜகத்தினில்

ஒரே உலகம் எத்தனை சொற்கள் ,இவை தோன்றியது எப்படி?

இதில் வேற்றுமொளிகலப்புகள் வேறு ,

ஆடி அந்தமில்லா அந்த கடவுள் இறைவன் பகவான்

பகலவன் பரிதி சூரியன் ஒளி  வெளிச்சம்
பகட்டு ஆடம்பரம்  மாயை ஆட்டுவிக்கும் எண்ணங்கள்

மலைக்கிறோம் பிரமிக்கிறோம் திகைக்கிறோம்

வார்த்தைகள் விளையாடுகின்றன வையகத்தில்.
அனைத்தும் ஆறறிவு  பெற்ற மனிதனை வியக்க வைக்கின்றன.
அனைத்திலும் ஒரு புதுமை.
பூவில் ,மனத்தில் ,பலன்களில் இலைகளில்
அவற்றின் சுவைகளில் அனைத்திலும் பிரமிப்பு.
நீரின் சுவை ,பாலின் சுவை தேனின் சுவை

அவனின் சுவை அறியா மானிடனின் சுவை

அவன் சுவை அறிந்த ஞானியின் செயல்பாடு
உருவமா?அருவமா ?
மதமா ?மாற்றமா ? மனிதநேயமா ?
அனைத்திலும் ஆண்டவனின் அதிசயம் அற்புதம் .
மதங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் அனைத்தும் மீறிய காதல்

நாடு ,இனம் குணம் மீறிய திருமணங்கள்,

எதிலும் எங்கும் அதிசயம்.

valaippathivar santhippu --2015- அருள் புரிய பிரார்த்தனைகள்.

இறைவன்  அவனியில் பல லீலைகள் செய்கிறான் .
அதில் ஒன்று  பொழுதுபோக்கு .

மற்றொன்று அறிவுக்குவழி  காட்டி.

அனைத்திற்கும் இணைப்பு நட்பு.

நட்பு என்பது சந்திக்காமாலேயே .

அவர்களை சந்திக்க ஒரு ஏற்பாடு .

பல எண்ணங்கள் ,வேறுபட்ட சிந்தனைகள், 

சமுதாய நிலை வெளிப்படுத்தி ஒரு வி ழிப்புணர்வு 

அதற்கு வலைப்பூ இடுகைகள்.வலைப்பதிவாளர் சந்திப்பு .

11-10-2015

புதிய    ந ட்புகள். மூத்தகுடிமக்கள்  இது தன்  விருப்பத்தால் கூடும் கூட்டம்.
அன்புக் கூட்டம். .இந்த  ஏற்பாட்டு எண்ணம் ஏற்பட 

காரணகர்த்தா இறைவன். 
இந்த வலைப்பூ சமுதாயத்தில் ஒரு சிரிப்பு ,சிந்தனை 
கல்வி ,கணினி ,அரசியல் ,மொழி என்ற விழிப்புணர்வு 

இந்த உணர்வை ஏற்படுத்திய இறைவன் 
விழா சிறக்க அருள் புரிய பிரார்த்தனைகள்.

Tuesday, September 29, 2015

அங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.

ஆண்டவன்  மனதில் இருக்கின்றானா ?இல்லையா ?

என்ற வினா விற்கு இருக்கிறான் என்றே  சொல்லவேண்டும் .

இல்லை என்போருக்கும் ஒரு உணர்வு வரும்.

அதை மறுப்போர் மன சாட்சி இல்லாதவர்.

முயற்சியில் மேன்மை என்போர்  எத்தனை பேரோ 

முன்னேறியவர் பலர் கூறும் கூற்று 

எல்லாப்புகழும்  இறைவனுக்கே.

முயற்சி கடின உழைப்பு எல்லோருமே தான்.

அதில் முன்னேறியவர்கள் எத்தனை பேர் என்ற நிலை.

முன்னேற்றம் பலருக்கு தன்னிலை அறியாமலே.

எப்படி இருந்தோம் ,நமக்குஇந்த வாய்ப்பு எப்படி கிட்டியது?

என்பதிலே ஒரு விடை. அதற்கு நம் முன்னேற்றம்.

மூவர் தொடங்கும் வாணிகத்தில் ஒருவருக்கு ஏற்றம்.

அந்தக்கடையில் அன்பு அனுசரணை ,

அவன் தம்பி கடைக்குப் போகப் பிடிக்கவில்லை 

அண்ணன் தம்பி பெற்றோர் ஒருவரே 
ஆனால் குணம் வேறு .

பண்பு வேறு 
அணுகுமுறை வேறு.
ஆற்றல் வேறு .
அங்கே அதில் இருக்கிறான் ஆண்டவன்.






Sunday, September 27, 2015

வையகத்தில் வளம் வருகிறது. வலம் வருகிறது,

மனிதர்  உயர்ந்தவர்  அல்லது  தாழ்ந்தவர்  என்ற நிலை 
 
 
அறிவு,திறமை ,ஆற்றல் ,செயலாற்றல் ,பேச்சாற்றல் பாடல் ஆடல் இசை 
 
 
என்ற அளவீட்டில் இருந்தால் நலம்.
 
 
ஆனால்  மதம் ,ஜாதி,  என்ற அடிப்படையில் உயர்வு தாழ்வு என்று ஒதுக்கி வைப்பதால் தான் ஹிந்துமதம்  ஒற்றுமை இன்றி 
 
ஒரே குரலோசை இன்றி பின்னடைந்தும் உயர்ந்தே காணப்படுகிறது.
 
 
அகில உலகில் வியாபித்திருந்த
ஹிந்து மதம் அதாவது சனாதன தர்மம் 
 
இந்தியா நேபாளம் என்று குறுகினாலும் 
 
மீண்டும் வையகத்தில் ஒளிர்கிறது என்றால் 
 
அது எந்த மதத்தையும் தூஷிக்கவில்லை.
 
இறைவனை உருவமும் அருவமாகக் கருதுகிறது.
 
 
அஹம் ப்ரஹ்மாஷ்மி 
ஆத்மா பரமாத்மா ஒன்று 
 
அத்வைத்துவம் 
 
ஆத்மா பரமாத்மா வேறு த்வைத்துவம் 
என அனைத்து நிலையிலும் இணங்கி
இணைந்து செல்லும் இந்துமதத்திற்கு 
இணையான  மதம் 
இல்லை என்பதால் தான் 
சூபி சம்பிரதாயத்தில்  அன்பே ஆண்டவன் என்று
 
 ஹிந்துக்கதைகளை கையாண்டனர்.
 
அனைத்துமதங்களும் ஆசை காட்டியோ 
 
மிரட்டியோ   மதமாற்றம் செய்தனர்.
 
எத்தகைய சூழலிலும் 
 
அஹிம்சை சத்தியம் அன்பு என்ற நிலையில் 
 
சனாதன தர்மம் தனித்து நிற்கிறது.
 
கொலைவெறி தீவிரவாதம் குறைந்து 
வளரும்  மதம் அன்பே ஆண்டவனாகிறது.
 
யோகா நாள் இதற்கு ஒரு முன்னோடி யாக
வையகத்தில் வளம் வருகிறது.
வலம்  வருகிறது,
 
 
 
 
 
 


அந்த முயற்சிக்கேற்ற ஆற்றல்

இறைவனின்  அருள் 
 
 
 
தியானம்
 
 
பஜனை
 
 
 
ஸ்லோகம்
 
 
 
ஹோமம் யாகம் 
 
 
 
இவைகள்  எப்படி இறைவனின் அருள் தரும் ?
 
 
மனம் ஒருமைப்பாடு தியானம்.
 
 
இதற்கே இறைவன் அருளவேண்டும்.
 
 
துருவனுக்கும் வால்மீகிக்கும் 
 
அருணகிரிக்கும்  துளசிதாசருக்கும் 
 
 
அவர்கள்  வாழ்வின் தாக்கம்  இறை அருள் பெறச்செய்தது.
 
 
சங்கரர் ,ராமானுஜர் ,பக்த  தியாகராஜர் ,ரமணர் ,
 
 
இவர்கள் பிறவியிலேயே  இறை அருள் பெற்றவர்கள்.
 
 
நாம் நம் கடமையில் நேர்மையாக இருந்தால் இறை அருள் பெறலாம்.
 
ரைதாஸ்  தன கடமையால் இறை அருள் பெற்றவர்.
 
ஒவ்வொரு தெய்வீக  மஹா புருஷர்களின் 
 
வாழ்க்கை இறைவன் அருளியவிதம் 
 
நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும்  அருளிய விதம் 
 
கேட்டவர்களுக்கும் அருளியவிதம் 
 
இனிய குரல் ,இணையற்ற எழுத்தாற்றல் ,செல்வநிலை 
 
பதவி  அனைத்தும் மனித முயற்சியால் கிடைக்கிறது என்பதை விட 
 
அந்த முயற்சிக்கேற்ற ஆற்றல் இறைவனின் அருள்.
 
 


Friday, September 25, 2015

மும்மூர்த்திகள் அருள் பெற :--

அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில்  பல பாடல்கள்

மனித குலத்திற்கு நன்மை தருவன,

அதை பக்தி சிரத்தையுடன் பாடினாலோ ,படித்தாலோ எண்ணமெல்லாம்

நிறைவேறும்  என்று அபிராமி அந்தாதி  மூலமும் உறையும் என்ற சிறு நூலில்

திரு  N .சிவராமன்  என்ற வழக்கறிஞர் எழுதி உள்ளார்.

1. மும்மூர்த்திகள் அருள் பெற :--



       "ஏந்தும்  அடியவர் ஈரே

      ழுலகினும்  படைத்தும்


       காத்தும் அழித்தும் திரிபவ


    ராம் கமழ் பூங்கடம்பு

  சாத்தும் குழல் அணங்கே மணம்

நானும் நின் தாள்  இணைக்கு என்

நாத்தங்கு புண் மொழி ஏறிய

வாறு நகை யுடை த்தே.


 

உயரவும் வீழவும்

இன்று பிரதோஷம் ,

முகநூலில்  பல விஷயங்கள்.

நான் அறியாதது .

எனக்குப் புரியாதது .

இறைவன்  ஒய்வு பெற்ற எனக்குப்

பொழுதுபோக்க ,இறை ஞானம் பெறவே இந்த

முகநூல் ,இடுகை ,கணினி ,யூ ட்யுப்  போன்றவற்றை த்

தரும்  அறிவியல் மென் பொருள் மேதைகளைப் படைத்தார் போலும்.
இருப்பினும் இந்த மாயை மனிதர்களுக்கு வேண்டிய பல

நற்குணங்களைக் குறைக்கிறது.

பலருக்கு மலச்சிக்கல்.
பலருக்கு மனச்சிக்கல்.
செவிப்பசி
ஞானப்பசி
அகராதி
பல நல்லவிஷயங்கள் இருந்தும்
கால நேர சந்தர்பம் இல்லாமல்
இதில் மூழ்குவது

பிறர் சொல்வது கேட்பதில்லை.
ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் கை பேசி .
ஒலிஒளி விளையாட்டுக்கள்
பெற்றோருக்குத்தேரியாமல் பல விஷயங்கள்

இது அறிவுக்கு அவசியம் .

அறிவுகெட்டு ஞான சூனியத்திற்கும் .

மின்சாரம் இன்றி  எப்பயனும் இல்லை.
ஆனால் தவறாக கையாண்டால் உயிர் போகும் அபாயம்.

அவ்வாறே கணினி கைபேசி உயரவும் வீழவும் காரணமாகிறது.

 

Wednesday, September 23, 2015

உணர்வோர் இல்லாமல் இல்லை.

ஆண்டவன் அனுக்ரஹம்    யாருக்குஇருக்கும் ?
என்ற வினாவிற்கு வினா   யாருக்கு இல்லை ?

காரணம் அவன் கொடுத்த ஞானம் .அறிவு .

ஆனால்தெளிவு  எத்தனை பேருக்கு ?

அதில் தான் வேறுபாடு .

ஒருவன் ஆலயம் தினந்தோறும் செல்வதால் 
அவன்  அருள் கிட்டுமா?
அர்ச்சகரும் தினந்தோறும் போகிறார் .
ஆலயவாசலில் யாசகம் செய்வோரும் போகிறார்கள்.
பக்தர்களும் போகிறார்கள்.
இந்த பக்தர்களில் தான் எத்தனை வகை.
ஜோதிடர் சொன்னார் என்று செல்பவர்கள்.
நன்மை கிடைக்குமென்று செல்பவர்கள்.
பிரசாதத்திற்காக செல்பவர்கள் 
ஒவ்வொரு சன்னதியிலும் அந்த அந்த ஆண்டவன் 
ஸ்லோகம் சொல்லி செல்பவர்கள் 
நிதானமாக நடப்பவர்கள் 
துரித கதியில் நடப்பவர்கள் 
நவக்ரஹம் சுற்றுபவர்கள் 
உள்ப்ரகாரம்  வெளிப்பிரகாரம் தூணில் இருக்கும் ஆஞ்சநேயர் ,முருகன் 
என்று ஒன்றுவிடாமல் செல்பவர்கள் 
தோப்புக்கரணம் போட்டு விநாயகர் வழிபாடு செய்பவர்கள் 
நண்பர்களைப்பார்த்து அரட்டை அடிக்கவோ வேறு உதவிகளோ கேட்க வருபவர்கள்  என எத்தனைவித பக்தர்கள்.
இத்தனை பேரையும்   கவரும் ஆலயங்கள் ஆண்டவர்கள்.
ஆலயத்திற்கு  ஆண்டவனால் பெருமையா /ஆலயநிர்வாகிகளால் /அர்ச்சகர்களாலா ?
ஆஸ்தியாலா ?பிரசாதவிநியோகத்தாலா ?

இதெல்லாம் கடந்த கருனையாலா ?
புதிய கோயில்களில் கூட்டம் ,பெரும் கோவில்களில் கூட்டம் 
பழ ம் கோயில்களை  கவனிக்காமல் செல்வது 
இப்படியெல்லாம் வெளிஆடம்பர  லௌகீகங்களுக்கு   அப்பால் 

பக்தி பெருக்கெடுக்கிறது என்றால்  அவன் கருணை அனைவருக்குமே .
நாம் காட்டும் உண்மையான பக்தி நமக்கு முன்னேற்றம் தருகிறது .
முருகன் கோவிலுக்கு ஒரு கூட்டம் திருப்பதி கோவிலுக்கு கூட்டம் 
கருப்பணசாமி .முனீஸ்வரன் என்று செல்லும் கூட்டம் மீண்டும் மீண்டும் செல்கிறது  என்றால் அது அவனின் பெருங் கருணையே .
அன்புக்கு அவனடிமை .இதை உணர்வோர் இல்லாமல் இல்லை.


Monday, September 21, 2015

கல்லாக் கவி கபீரின் வாக்கு.

ஆண்டவன்  அன்புக்குள்ளே ,
மனிதனின்  மனதிற்குள்ளே ;
அரக்கர்கள் அவனியிலே ஆரவாரம் ;
அவர்கள் பெற்ற வரங்களோ பக்தியாலே;
அசுரர்கள் ஈடுபட்ட தவ வலிமை மன ஈடுபாடு
ஆறாம் வளர்ப்போருக்கு இல்லையா என்ன /?
சிந்திப்பீர் !முழுமன  ஒருமைப்பாடுடன்

ஒழிப்பீர் தீமைகளை ! அதற்கே வரம் பெறுவீர் !

குற்றமில்லை; குறையுமில்லை இந்த வையகத்தே ;
கூறுமடியார்கள் தீர்க்கவே  ஆறுமுகத்தில் ஒருமுகம்;

நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே என்று
 இறைவன் என்றறிந்தாலும் கூறும்  ஆற்றல்

தேவர்களைக் காப்பாற்ற ததிசியின் முதுகெலும்பு
இந்திர பதவி காக்க  மகாபலியின் மூன்றடி தானம்,
தர்ம தேவதைக்கே புண்ணியங்கள் தானம் செய்த  கர்ணன்
இல்லையா ! மனித ஆற்றல் !
தியானத்தால் பெறுவீர் சக்தி !
அவன் அருள் இருந்தால் வையகமே எதிரியானாலும்
மயிரையும் பிடுங்கபுடியாது என்றா கல்லாக் கவி கபீரின் வாக்கு.
அபிராமிப்பட்டரின் அமாவாசை பௌர்ணமி யான கதை.
ஆற்றலை அறிவீர் ! தியானத்தின் மகிமை உணர்வீர் !

Saturday, September 19, 2015

அதுதான் ஆண்டவன் .


இந்த உலகில் தோன்றி தவறு செய்யாமல் 

வாழ்ந்தவர் என்பது இல்லை .

ராமாவதாரத்திலும் சரி ,

க்ரிஷ்ணவதாரத்திலும் 


சித்தார்த்தர் புத்தராவதிலும் சரி 

இந்த அவதாரபுருஷர்கள் எல்லாம் 

இந்த உலக மாயையில் 

சிக்கி உலகம் பொய்யானது 

நிலையற்றது 

அனைத்தும் அழியக்கூடியது .

மாற்றம் பெறக்கூடியது 
ஆசைகளைத் தூண்டக்   கூ டியது 
என்றெல்லாம் அனுபவ ரீதியாக
கூறி சென்றுள்ளனர் .

புதியன புகுதல் பழையன  கழிதல் 

என்பதற்கே ஆறு பருவகாலங்கள்.
இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் வருகின்றன.
பருவகாலங்களுக்கேற்ற பழங்கள் .பூக்கள் 
பூக்கள் காலையில் மலர்ந்து மாலையில் வாடுகின்றன.

ஈசலுக்கு அன்றே மரணம்.
புதிய வெள்ளம் 
புதுமை விரும்பும் மனிதர்கள்.
பக்தியிலும் புதுமை ;
இறைவன் கோயில்கள் சிமென்ட்டில் சுதை சிற்பங்கள்,
மனமாற்றங்கள் 
இதெற்கெல்லாம்  அழியாத ஒன்று உண்டு 
மாறாத ஒன்று உண்டு 
தெரியாமல் காணாமல் உணரும் பொருள் பொதிந்த உண்மை உண்டு.

அதுதான்  ஆண்டவன் . 


    

Friday, September 18, 2015

ஜபமாலையைப் போட்டுவிடு.

இறைவன்   வழிபாடு என்பது மிக அவசியம் என்பதற்கு 

வள்ளுவர் குரல்  அவர் தம் குறளில் 

ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவனடி சேராதார். "


மனிதப் பிறவியில் எதிர்நீச்சல் போடவேண்டியுள்ளது.

கடல் அலைபோல் அவனது வாழ்க்கை அலை மடித்துக்கொண்டே உள்ளது.

தேவைகள் அதிகமாகிறது 
ஆசைகள் அதிகமாகிறது .

ஆடம்பரங்கள் அதிகமாகின்றன.

இன்றைய புதுமை நாளைய பழமை ஆகிறது.
இதில் நாம் முன்னேற  போட்டித்தேர்வுகள் ,போட்டிகள், சிபாரிசுகள் 
லஞ்சங்கள் ஊழல் கள் ,வாய்ப்புகள் இழப்புகள் 
கோபதாபங்கள் ,.

அதில் சில திமிங்கிலங்கள் ,சுறாக்கள்,சிப்பிகள், 
ஆழங்கள் ,

இவைகளையும் மீறி இந்த பிறவிப்பெருங்கடலில்  

நமக்கு ஒரு ஆன்மபலம் வேண்டும் .
ஒரு முன்னேற்றம் வேண்டும்.
நமதுவட்டத்திலேனும்  மரியாதை வேண்டும் 
ஆரோக்யமான சூழல் ,உடல் ,மனம் வேண்டும் .
மன நிறைவு வேண்டும்.
மனசஞ்சலம் இன்றி ஒருமை வேண்டும் .

இதற்கு இறைவனின் அருள் வேண்டும்.
அவன் கருணை நிதிவேண்டும் 
கபீர் சொல்கிறார் --
உன் கடவுளைத்தேடி அங்குமிங்கும் அலையாதே .
உன் கடவுள் உனக்குள் இருக்கிறார்.
பூவில் மணம்  இருப்பதுபோல் .
கஸ்தூரி மானில் கஸ்தூரி இருப்பதுபோல்.

கையில் ஜபமாலை சுற்றுகிறது.
மனம் அலைபாய்கிறது.
இறைவனிடம் மனம் ஐக்கியப்படவில்லை .
பல காலங்கள் கழிந்துவிட்டன.
இறைவன் தரிசனம் இல்லை.
ஜபமாலையைப்  போட்டுவிடு.
மனம் என்ற மாலைசுற்றுவதை  நிறுத்தி 
மனதை முழுவதும் அவனிடம் செலுத்து .
இறைவனைக் காணலாம்.


Thursday, September 17, 2015

ஆன்மீக ஆற்றல் ஆண்டவன் அன்பிற்கு வழிகாட்டி.

அன்பு தருவது ஆன்மிகம் ,
பண்பு தருவது ஆன்மிகம் 
பரோபகாரம் தான தர்மம் 
புலன் அடக்கம் ,
மன ஒருமைப்பாடு 
உடலாரோக்கியம் 
அனைத்தும் தருவது ஆன்மீகம் 
உலகியல் பற்றை ஒதுக்க உதவுவது 

உயிர் பிரியா உடலைக்காப்பது 
ஆன்மீகம் .
வள்ளலார்  வேண்டலும் இதுவே .

ஆசைகளடக்க ,சத்தியம் காக்க 
அஹிம்சை வளரத் தேவை ஆன்மிகம்.
இல்லறத்தில் நல்லறம் காண 
உபவாசம்  வ்ரதம்  அண்டப் பிரதக்ஷணம் 
கிரிவலம் .சூர்ய  நமஸ்காரம் 
தோப்புக்கரணம் என உடற்பயிற்சிக்கு 
ஆதாரம் ஆன்மிகம் 
ப்ராணாயாமம்   (மூச்சுப்பயிற்சி )
ஆயுள் விருத்திக்கு அவசியம் 
ஆலயம் சென்றால் உள் ப்ரகாரம் 
வெளிப்ரஹாரம்  நவக்ர்ஹம் சுற்று என்றே 
ஆரோக்கிய வழிகாட்டி .
துளசி, வில்வம் ,அருகம்புல் என மூலிகை மருத்துவம் 
ஆன்மீக ஆற்றல் ஆண்டவன் அன்பிற்கு வழிகாட்டி.


Monday, September 14, 2015

வையகமும் மனிதனும்

மனிதன்  பிறக்கும்  போது  அறிவும்
ஆற்றலும்  உள்ளவனாக இருந்தாலும்  அவனது சூழல் அவனை  மே தையாகவோ வீரனாகவோ கோழையாகவோ
முட்டாளாகவோ மாற்றுகிறது
என்று கூறுபவர்கள் சத்சங்கத்தின்
மகத்துவம் கூறுவர்
ஆனால்சத்சங்கத்தில்
இருக்கும் அனைவரும்ஞானம்
பெறாவிட்டாலும் சேவைமனப்பான்மையோடு
வாழ்கின்றனர்
தானதர்ம காரியங்களில்
ஈடுபடுகின்றனர்
சத்சங்க்தில் துப்புரவு

பணியாற்றுபவர்  பெறும்
ஞானம்  அப்பகுதியை சுத்தமாக வைப்பதே
அவர் தினந்தோறும்
விழா ஆரம்பம் முதல் இறுதி வரை
அஙகேயே இருந்தாலும்  மனம்அதில் லயிப்பதில்லை
சுத்தம் செய்வது சாப்படுவது
ஆடை தோற்றம் ஆபரணம் என்றெல்லாம் அலைபாய்வதில்லை
தனக்கு ஒரு உயர்நிலை ஏறபடுத்திக் கொள்ள முடியும் என்று
முயல்வதில்லை
எனவே சத்சஙகத்தை மீறிய ஒரு
ஆற்றல்  மனிதனை உயர்விக்கிறது
அதுவே இறை அருள்
இறை அருளால் மனதில் ஏற்படும்
உந்துணர்வு
மனம் எண்ணம் செயல் ஏற்றம் எல்லாமே இறை அருள்தான்
சத்சஙகம் நெறிபடுத்தும்
மனஒருமைப்பாடான தியானம்
அன்பின் சமர்ப்பணம்
இறைஅருளால் உயர்பதவி கொடுக்கும்



Tuesday, September 8, 2015

அருள் தரும் பக்தி பெருக வா ! வா !

தடைகளைப்  போக்கும் இறைவன்
  வினைகளைப்போக்கும் விக்னேஷ்வர் 
சக்தி   தரும்  சக்தி விநாயகர் 

மனக்கிலேசம் போக்கும் மணக்குள விநாயகர்,

வல்லமை  தரும் வல்லப விநாயகர் 

முக்திதரும் முக்குருணிவினாயகர் 

ஆற்றில் குளித்தவுடன் மிக மடியுடன்  வணங்க 

ஆற்றங்கரை அரசரடி  விநாயகர்,

மூஞ்சூறு வாஹனன்  அன்னை தந்தையே 

வையகம் என்று காட்டிய ஐங்கரன் 

கேட்டவரம் தரும் கற்பக விநாயகர் ,
உச்சியில் அமர்ந்து ஊர் காக்கும் உச்சிப்பிள்ளையார் 
பூனாவின் தௌலத்  பிள்ளையார் ,

அங்கிங்கெனாதபடி ஏழைகளுக்கருளும் 
நடைபாதை விநாயகர் மரத்தடி விநாயகர் 

அவரின் அழகு உருவம் செய்து அதன் நலங்கெட எறிவது 

அன்புள்ளோரின்  அடாவடி செயலன்றோ ?
அதை ஊக்குவிப்போர் மத நலம் விரும்புவோர் என்றால் 

மதியுள்ளோர் சிந்திப்பீர்!

மத நல்லிணக்கம் ஒற்றுமை வலிமை கீழ்காணும் படத்தின் 
அலங்கோலமே என்றால்  நான் வணங்கும்  யானைமுகனே! 
இது சரியா /
நலமா ?
விநாயகா !உனக்கு ஏற்படும் அவமானம் எனக்கு வேதனை !
வேழமுகத்தோனே !மக்கள் மனம் மாறி உன்னை விசர்ஜனம் என்ற பெயரில் 
அலைமோத துண்டாக்கும் மூட நம்பிக்கை பக்தியைப் போக்க வா!

வருக!இந்த மதியீன பக்தியைப்போக்கி

 அருள் தரும் பக்தி 

பெருக வா ! வா  !