Sunday, August 30, 2015

குறை ஒன்றுமில்லை

இறைவன்  இருக்கிறானா /
ஆண்டவன்  யாரை ஆதரிக்கிறான் /?
எத்தனையோ பக்தர்கள்  வறுமையிலும் துன்பத்திலும் 
மூழ்கி  அவனையே சரணாகதி என்று இருக்கும்போது 

அசுரர்கள் தீயவர்கள் ஊழல் புரிவோர் என்போர் கோலோச்சும் நிலையில் .

ஏன் ?ஏன் ?ஏன் ? என்ற வினா ?

உலகப்பற்று  இல்லா தவர்களுக்கே  இறைவன் அருள்.
அவர்கள் நல்வழி காட்டுவதே உலகில் உள்ளோருக்கு.

இவ்வழி  நல்வழி ,அவ்வழி  தீய வழி  என்று தான் கூறுவார்கள்  அடியார்கள்.

இங்கு சமுத்திரம் ஆழம் . குளிக்காதீர்கள்; அலையின் வேகம் அதிகம்.

இது ஒரு எச்சரிக்கை. மீறி சென்றால் அதற்கான பலனை அனுபவிக்கவேண்டும். இது அரசாங்கத் தவறல்ல.

குடி  குடி கெடுக்கும் -சிறிய எழுத்து . சாராயக் கடை பெரிய எழுத்து.
 பெரிய எழுத்து கவர்ச்சி; சிறிய எழுத்து எச்சரிக்கை.
இதை கவனித்து செல்பவர்  குடும்பத்தில் மகிழ்ச்சி.
இன்று குடும்பமே குடிப்பது மேல் நாட்டு சூழ்ச்சி.
 இவ்வாறே இறையடிமைகள்  பல எச்சரிக்கை இடுகின்றனர்.

இறைவனால் ஞானம்  பெற்றவர்கள்.
அறம்  செய விரும்பு.
வாய்மை வெல்லும்.
இதை உணரமுடியுமா ?
ஒரு  வருவாய் ஆய்வாளர் ,ஒரு துணைப்பதிவாளர் 
ஒரு காவலர் ஒரு சுகாதார அலுவலர் ஒரு போக்குவரத்து லைசன்ச்தருபவர் 
ஒரு அமைச்சர் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் 
சட்டத்தை மதிப்பதில்லை . தண்டனை பெறுவதில்லை.
நாம்  அவர்களை ஒப்பிடக்கூடாது.

நம் நிலை என்ன /?நாம் நிம்மதியாக மன நிறைவுடன் இருக்கிறோமா /?
இதுதான் முக்கியம்.
இறைவன் ஆட்டுவிக்கிறான். நாம் அவனிடம் சரணாகதி அடைகிறோம்.
இன்ப துன்பங்கள் எல்லாம் அவன் தருபவை.
தசரதர் சக்கரவர்த்தி. ஆனால் அவருக்கென்று குழந்தைகள் இல்லை.
அனைத்தும் இருந்தும் புத்திரசோக மரணம்.
இதுதான் இறை ரகசியம்.
இயேசு இயேசு என்று புகழும் இயேசுவின் மரணம் சிலுவையில் இரத்தம் சிந்தியது தான்.
பல து ன்பங்கள் ,இன்பங்கள் பதவி யாலோ செல்வத்தாலோ கிடைப்பதில்லை.
துன்பம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிவா  என்று புத்தர் சொன்னால் 

துன்பமில்லா வீடில்லை. 
அரச குமாரர் சித்தார்த்தருக்கு வாழ்க்கையில் வெறுப்பு.
பிணியில்ல மூப்பில்லா மரணமில்லா மனிதன்  இருக்க  முடியாது 

இது இறைவனின் ஏற்பாடு.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.
நாம்  நினைப்போம்  அவனுக்கு என்ன குறை ?
குறை ஒன்றுமில்லை  என்று பாடிய எம். எஸ். நிறையாக வாழ்ந்தாரா/?

 இறைவன் நமக்களித்த வாழ்க்கை இனிமை என்பதே 
மன நிறைவு . சாந்தி.

No comments: