Sunday, February 15, 2015

உடன் அளிப்பான் என்பதில் ஐயம் உண்டா ?

இறைவன்  நம்  மதத்தில்  ,

அசுரர்களுக்கு  அரிய சக்தி அளித்து ,

அஞ்சும் அளவிற்கு அவனியல் ஆட்சி செய்யும் 

ஆற்றல் அளித்து ,தேவர்களை அஞ்சி ஓடும் நிலைக்குத்  தள்ளி  இறுதியில் வதம் செய்யும் கதைகள் அதிகம்.

  தேவர்கள் ஆண்டவனை மறந்த நிலையில் 

அசுரர்கள்  தவம் கடும் தவம் செய்து வரம் 

பெறுவதும் ,அசுரர்கள் கொடுமைக்குப்பின் 

தேவர்கள்  இறைவனை மண்டி இட்டு வேண்டுவதும் ,இறைவன் காப்பதும் 

நமக்கு இறைவனை சதசர்வ காலமும் 

பிரார்த்தனை செய்தால்  அசுர சக்தியின் ஆற்றல் 

நம்மை எதுவும் செய்யாது என்பதே தத்துவம்.

நம்மில் எத்தனைபேர் நேர்மையுடன் தினந்தோறும் 

இறைவனை  வழிபடுகிறோம் ?

என்று ஒரு நொடி சிந்த்தித்தால் அசுரர்களுக்கே 

வரம் அளிப்பவன் உண்மை பக்தர்களுக்கு 

உடன் அளிப்பான் என்பதில்  ஐயம் உண்டா ?




Saturday, February 14, 2015

முகவர் தேவையா ?ஒரு பொறி போதுமே .

எங்கும் நிறைந்துள்ள இறைவனைக்கண்டவர்களின்
வரலாற்றை மிக பக்தி சிரத்தை உடன் படித்தால்
இறைவனுக்கும் இறைவனுடன் பேட்டிகண்ட அருளாளனுக்கும்
இடையில் எந்த முகவரும் இருந்ததில்லை.
ஆதிசங்கரர் ,புத்தர்,முஹம்மது நபி ,ஏசுநாதர் இவர்களுக்கு
இறைவன் அளித்த ஞானம் நேரடியானது.
ஞானம் பெற்றோருக்கு அடியார்கள் கூட்டம் பெருகியது.
பின்னர் ஏற்பட்டதே குரு பரம்பரை.
ராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் சரி ,
ராமநாமஹரிஷியின் வரலாற்றிலும் சரி
பக்த தியாகராஜர் வாழ்க்கையிலும் சரி
இறைவன் நேரடி அருளே.
கபீர் ,துளசி தாசர் ,ரைதாஸ் ,நந்தனார் ,கண்ணப்பர் வள்ளலார்,பாம்பன் சுவாமிகள்,எத்தனையோ மகான்கள்
இறைவனின் அருளை ஒரு சிறிய உந்துதலால் தன் சுய ஈடுபாட்டால் உணர்ந்தவர்களே.
ஒரு சிறு அனல் அல்லது பாரதி சொன்னதுபோல் ஒரு அக்னிக்குஞ்சு பக்தர்மனத்தில் பதிந்தால் மனம் சிதறாமல்
ஒரு மன நிலை ஆழ் மன தியானம் ஏற்படும் .
துருவனுக்கும் அப்படியே ,பிரஹலாதனுக்கும் அப்படியே.
இந்நிலையில் இறைவனை அடைய சிறு தூண்டுதல் போதும்.
முகவர்கள் வேண்டியதில்லை.
மந்திரங்கள் வேண்டியதில்லை.
தந்திரங்கள் வேண்டாம்.
இறைவனின் முழு பாதுகாப்பும் கிடைக்கும்.
மனச்சஞ்சலம் ஓடிவிடும் .

Monday, February 2, 2015

ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.

தைப்  பூசத்  திருவிழா ,

தையல் நாயகியின்  அருமைப் புதல்வல்வன் 

கார்த்திகைப்  பெண்களின்   கரங்களில் தவழ்ந்தவன்,

கந்தன்  கலியுகவரதன்  அபிஷேகப் பிரியன் ,

காவடிகள் எடுத்துவரும் பக்தர்களின் 

கவலைகள் போக்குபவன் ,அருளாளன் .

அருணகிரிக்கும் பாம்பன் சாமிகளுக்கும் 

பொய்யாமொழி  புலவருக்கும் ,

திருமுர்காற்றுப்படை எழுதிய நக்கீரனுக்கும் 

எத்தனையோ கோடி பக்தர்களுக்கும் 

எண்ணற்ற வரமும்  அளித்து ,

ஏற்றமிகு வாழ்வளித்தவன்  .

அறுபடை வாசன் ,

அவன் அருள் பெறவே இன்று போற்றிடுங்கள் .


முருகா முருகா முருகா என்றாலே 

முக்தி கிடைத்திடும் .

வேலா,வேலா என்றாலே வல்வினை தீர்ந்து 

வெற்றிகளும் குவிழ்ந்திடும்.

கந்தா ,கந்தா ,கந்தா என்றாலே 

கண்ட வினைகள் தீர்ந்து விடும்.

கலியுக  பாவிகளின் பாதிப்பு வராது.

கந்தா ,கடம்பா ,கதிர்வேலா ,முருகா என்ற நாமங்கள் 

கனிவுதரும் ,கஷ்டங்கள் தீர்க்கும் ,முக்தி ஞானம் பிறக்கும் .

தைப்பூச நாளில் தையல்நாயகி ,

மலைமகள் ,பெரியநாயகி ,உமையாள் 

என்ற உன்னத நாமமமுடையாளின் 

உத்தம புதல்வனை ,தந்தைக்கு உபதேசித்த ஞானவேலனை 

போற்றுவோம் , ஜெபிப்போம் .ஜெயம் பெறுவோம்.