Sunday, December 7, 2014

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!

பாரினில் பகவான் உள்ளான்  என்பதை

பரிதியின்  பிரகாசம் பிரதிபலிக்கும்.

பரிதியின் வெப்பம்   தணியும் போது

நிலவின் குளிர்ச்சி தெளிய வைக்கும்

வைகறைப் பொழுதில் பனித்துளிகள்

இறைவனின் இயற்கையைச் சித்தரிக்கும்.

இயற்கையின் மாற்றங்கள் ,

இயற்கையின் இன்பங்கள் ,

இயற்கையின் இன்னல்கள் ,

இயற்கையின் படைப்புகள்

இறைவனின் லீலைகள். இதற்கிடையில்

அறிவியல்  அற்புதங்கள் -அதில்

அநேக மாற்றங்கள் , அவைகளை
அனுபவிக்க  பொருளாதார
ஏற்ற தாழ்வுகள்.


இயற்கைசெல்வங்கள்

ஏற்ற-தாழ்வு பார்ப்பதில்லை .

இயற்கை இன்பங்களில்

சமத்துவமே.

இயற்கை இன்னல்களில்

 சமத்துவமே.

இயற்கையின்  பிறப்பில்

சமத்துவமே.

இயற்கையின்  இறப்பில்

சமத்துவமே.

பூவின் இயற்கை ஆனந்தம்

பூவின்  மனம்  இயற்கை ஆனந்தம்

இதில்  இல்லை ஏற்றத்தாழ்வு.

இயற்கை  செயrகையானால்  அதில்
அழகு  புட்டியில் அடித்தல்
ஏற்றத்தாழ்வுகள்.

இயற்கை ஆண்டவனின் இயல்பு

இதிலே சமத்துவம்.

இறைவனை  உணரும் ஆனந்தம்.

ஆலயங்களில் அடைத்து வைத்தால்

அங்கே ஏற்றதாழ்வுகள் ,

அன்புள்ள இறைவனை
இயற்கையாக வழிபட்டால்

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!








No comments: