Saturday, December 27, 2014

இறை அருளார் கூறும் அறவுரை.

உள்ளம்  உலகியலுக்கே தரும் முதலிடம்.-அவனியில் 

உள்ள தெல்லாம் உண்மையல்ல---அதில் 

உள்ளப்போராட்டம் ,உள்சுழல் ,வெளிசுழல் 

சுழலில் சுழன்று சூக்ஷமம்  மறந்து --சுகம் 

சுற்றமும் நட்பும் என்றே  உழன்று மெய் 

மறந்து முறை மறந்து  காலம் மறந்து 

காலன் வரும் நேரத்தில் கண் கலங்கி என்ன பயன் ?

அசாஸ்வத உலகை சாஸ்வதம் என நினைத்து 

அசாத்ய சாதனைகள்  பல புரிய 

அன்றாடம் உழைத்து அலுத்து அலைந்து 

அவனை சிவனை உலகநாதனை மறந்து ,
ஆஸ்திகள் சேர்த்து ஓய்ந்த காலம் ,
உற்றார் -சுற்றத்தார் வெறுக்கும் நேரம் 
உலகநாதனை உள்ளத்தில் அமர்த்தி என்ன பயன்?

ஊரார் போற்றும்  வினைகள் பல செய்தாலும் 

உலகம் போற்றும் உத்தமர் ஆனாலும் ,

உலகை விட்டு உயிர் பிரியும் காலம் வரும்,-அதனால் 

வேதங்களும் ஆன்மீகப் பெரியோரும் 

மதங்களும் இறையாளர்களும் கூறும் அறிவுரை:-

மன்னில் இருக்கும் மனிதர்கள் மற்றவை படைக்கும் 

பகவானை அறியுங்கள் ;

பகவானை பிரார்த்தனைசெய்யுங்கள்,

பாரினில்  அமைதி ,மனநிறைவு ,இன்னலின்றி 

மன உறுதி வாழ்க்கை -இதெல்லாம் 

இறைப்பற்று ,தியானம்  ஒன்றே.

இதை மீண்டும் மீண்டும் சொல்வதே 

இன்றைய இளம் தலைமுறைக்கு உகந்ததென்றே 

இறை அருளார் கூறும் அறவுரை.








           







Saturday, December 20, 2014

மனசாந்தி அடைவான் அன்பன்

 ॐ शरवणभव.


ஷண்முகம் சத்குணம் ஷைவம் குமாரம் குலபூஷணம்

தேவசேனாம் பதிம் வந்தேசர்வ  கார்யார்த்த சித்தயே;

அனைத்திலும் வெற்றி பெற அவனியில் 

அவதரித்த அருட் தெய்வமவன் ஆறுமுகம் .

அழகின் அவதாரம் அபிஷேகப்பிரியனவன்.

அறுபடைவீடுகளில் அவன் அருளாடல் 

அன்பர்களுக்கருளும் திருவிளையாடல்.

ஆண்டிவேடம் பூண்டு அலங்காரப்பிரியனாகி 

அரசாலங்காரத்தில்அத்புத அருளாளன் அவன்.

அவனடி பணிந்து அடைக்கலமடைந்தோருக்கு

அருள்மழை பொழிந்து இன்னல்தீர்க்கும் இனியவனவன்.

யானைமுகத்தம்பியவன் ",யாமிருக்க பயம் ஏன்?"என்றே 

யாவரையும் காக்கும்  யம பயம் நீக்கும் ப்ரத்யக்ஷமவன்.

பிரார்த்தனை   செய்தோர் பிரகாரம் செய்வோர் 

பலன்கள் பெரும் அதிசயம் புரியும் பழநிமலைவாசன்.

அவனடிசரணடைந்து மனமகிழ்ச்சி மனசாந்தி அடைவான் அன்பன்.







Friday, December 19, 2014

அவனியின் அமைதியும் உண்டு /

சனாதன தர்மம் ,
அதில்  சகலமும் சங்கமம்.

ஞானமும் உண்டு ,
பிரேமையும் உண்டு ,
அருவமும் உண்டு .
உருவமும் உண்டு .
உள்ளத்தில் உறவும் உண்டு ,
எண்ணத்தில் ஏற்றம் உண்டு -

அன்பிற்கும் அஹிம்சைக்கும்

மார்க்கம் உண்டு.

வையகம் வாழ ,

வையகம் ஒரு குடும்பம்  என்ற

அவனியின் ஒற்றுமைக்கும்

வாசகங்கள்  பல உண்டு.

வள்ளலாரின்  வாக்கியம்

அருட்பெருஞ்சோதி ,
அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும் கருணை  என்ற
வாசம் உண்டு.
சிந்துவை ஹிந்து என்று
அயல் நாட்டினர் கொடுத்த சொல்லே
மதமானது என்றால்
அதன் சாகர சங்கமத்தில்
சைவமும் உண்டு .
வைணமும் உண்டு.
அறிஞர் பலர் ,ஞானிகள் பலர் . அதனால்

சைவத்திலும் வைணவத்திலும்

பல பேதங்கள் உண்டு.

கிரமதேவதைகள் உண்டு.

ராமாயணம் ,மகாபாரதமும்

நாடோடிப்பாடலிலும் உண்டு.

நாட்டு நலம் மட்டுமல்ல
சர்வஜனோ சுகிநோபவந்து என்ற
உலக மக்கள் நலமாக வாழும்
பிரார்த்தனைகளும்  உண்டு.
கன்னப்பருக்கும் பெருமை உண்டு .
நந்தனாருக்கும் நற்புகழும் உண்டு.
சனாதன தர்மத்தில் சாகர சங்கமும்
அவனியின் அமைதியும் உண்டு /.









,

கடவுள்

  இறைவன்
 இரைஅளிப்பவன்.

இகபர சுகம் அளிப்பவன்.

சத்தியமும் அசத்தியமும்

ஜகத்தினில்  காட்டுபவன்.

அஹிம்சையும் ஹிம்சையும்

அவனியில் காட்டி ,

மனதில் ஈவு இரக்கம் கொடுத்தவன்

ஈஸ்வரன்.

ஈஷ்வரனின்  லீலை .
அதி அற்புதம் ;
அதி  அதிசயம்
அதி  ரகசியம்.
அவன் உணர்வு ,
அவன் தியானம்- அதி
பேரானந்தம்.
சிவ-சிவ- என்று சொல்
சித்தம்  சிதறாது.
சிவகுமரனின் ஆராதனை
சிக்கலைத் தீர்க்கும் .
சித்தி விநாயகரின் ஆராதனை பல
சித்திகள் தரும்.









Thursday, December 18, 2014

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.






ஆறுமுகம்  நாம்  காணும் ஆசைமுகம்

அன்புமுகம் ;அருள்முகம்;

அறுபடை வீட்டினில் ஆறுமுகம்

அன்பருக்கு அருளும் நன் நெஞ்சம்.

வடக்கே இருந்து வந்து ,

தென்னகம் காக்கும்  கலியுக தெய்வம்.

தேனும் தினைமாவும் விரும்பும் பிரசாதம் ,

பஞ்சாமிர்தம் அவனுக்கு  பிடிக்கும் .

பாலாபீஷேகப் பிரியனவன் ,

பாலமுருகனவன்  பழனியிலே.

தகப்பன் ஸ்வாமியவன் சுவாமி மலையினிலே.

அருணகிரி பிழைபொறுத்து

திருப்புகழ்  படவைத்த தமிழன்பன்.

தாயைப்பாட மறுத்த பொய்யாமொழியை
முட்டையைப்  பாடவைத்த முருகனவன்.

கிருபானந்தவாரியாரின் அருட் கடவுள்,

பாம்பன் சுவாமிகளுக்கு காட்சி

அளித்த  மயூரநாதன் .

அவனியில் அவன் லீலை சூர சம்ஹாரம்.

அவன் மெய்ப்பதம் போற்றுவோம் ,

அக அமைதி அக மகிழ்ச்சி பெறுவோம்.



யானைமுகன் அருளவேண்டும்.




முருகா , முருகா ,முருகா -என்றே 

நெஞ்சுருக  நேசமிக்க நாம ஜபம் 

நாளும்  ஆழ்மனம் வைத்து செப்பினால்- நாம் 

விரும்பும் பலன்கள் பெற வித்தாகும்.

வித்தாகி விருக்ஷமுமாகி  பூவாகி 

காயாகி ,கனியாகி ,சுவையாகி 

தித்திக்கும்  வாழ்க்கையது.

ஜன்மப் பகை நீங்கும் ,
ஜனன தோஷம் நீங்கும் 
ஜகத்தினில் பாவம் போகும் ,
ஜாமம் எட்டிலும் பயம் போகும்.

ஜாக்கிரதை என்றசொல்லுக்கு இடமில்லை,
சரவணன் சடுதில் வந்து காப்பான்.

சத்தியம் வேண்டும் ,
ஒருமை மனம் வேண்டும் ,
மனதினில் நேர்மை வேண்டும் ,
மனம் முழுதும் முருகனின் 
மூலம் வேண்டும்;
வேல் வேண்டும் ;அவன்
 கொடி சேவல் வேண்டும்.
மயில் வாஹனம் வேண்டும் .
அகம் முழுதும் ஆறுமுகன் 
எண்ணம் வேண்டும்.
சித்தம் முழுதும்  சிங்கார வேலன் 

சிந்தனை வேண்டும்.
அலைபாயும் ஆசைகளை 
அடக்கவே வேண்டும் .
ஆறுமுகம் கருணை பெற 
யானைமுகன் அருளவேண்டும்.




Saturday, December 13, 2014

அவன்விதி ஆண்டவன் அசைவில்.

 பாரினில் பகவான்  இல்லை என்றும் 

உள்ளான் என்றும் 

தர்மம் அதர்மம்  இதில் 

தர்மம் தவித்தலும் 

அதர்மத்தின்  ஆராவாரமும் 

அனுதினமும்  பார்க்கும் காட்சிகள்.

நீதிமன்றதீர்ப்புக்குப்பின்னும் 

தீர்ப்பு ஏற்கா மக்கள் கூட்டம்.
இது  இன்றா ,நேற்றா 

புராண காலம்  முதல் இன்றுவரை,
ஹரிச்சந்திரன் காலம் ,
பிரஹலாதனின் காலம் 
ஏகலவ்யனின் கதை 
என்றெல்லாம் நாம் படித்து அறிந்தும் 

தெளிவு பெறாதது யார் குற்றம்?

பணம்  குவிக்க அதர்மம் ,
அதர்மத்தை தர்மமாகக 
தான தர்மம்.
விந்தையிலும் விந்தை மனிதன்.
விதியையே மதியால் மாற்றும் 

அதி புத்திசாலி.
ஆனால் 

அவன்விதி ஆண்டவன் அசைவில்.


Tuesday, December 9, 2014

வையகத்தில் இன்பம் பெற !

  ஞானம்  கொடுத்தாண்டவன் ,

ஞாலத்தில் படைத்தான்

 பல மொழிகள்.

இறைவன் படைப்பில்

 எவற்றிலும் ஒரு மேன்மை.

தீயவை  அழிப்பில்

மனிதனுக்கு சக்தி.

கொசுக்கள் ஏன்?

அறிவுள்ள மனிதன்

 தேக்கிவைக்கும்

கழிவுநீரால்.

இயற்கையையும்  தேக்கி

இயல்பாக  வாழும் ஆற்றல்,

பனி மழை,

வெளியே

சில் சில்
காற்று.

வீட்டுக்குள்

அனல் காற்று .

இது அறிவியல் அறிவு .

அவன் அளித்தது.

ஆனால்  தக்க ஆடை இன்றி

உலாவு வது  கடினம்.-இது

இறைவனின்  எச்சரிக்கை.--நான்

அளித்த ஞானம்  ,

ஒருவரையரையுள்

உன் வெற்றி.

என் சக்தி  உணர்ந்தேசெயல்  படு.

என்னை உணர்ந்தே செயல் படு.

எண்ணியே  செயல் படு.

சித்தத்துள் என்னை வை.

சிந்தனையில் என்னை வை .

சீரிய வாழ்வில்

சத்தியத்தைக் கடைப்பிடி.

சாந்தியைப் பெறுக,

சந்தோசம்  பெருக.!.

வையகத்தில்  இன்பம்  பெற !







Monday, December 8, 2014

அகத்தில் அமர்த்தலாம் குடி.

ஆண்டவனைத் தேடிச்செல்வோர் ,

அறிவிலிகள் ;

ஆண்டவனைத் தன்னிடத்தே வரவழைப்போர்

ஞானிகள்.

ஆஷ்ரமங்களில்  கூட்டம் கூட்டுவோர்

ஆனந்தம் உணர்வோர்  --ஆனால்
அங்கும் உண்டு எத்தர்கள் .

ஞானம் தரும் இடங்கள் ஆஷ்ரமங்கள்,

அக்ஞானம் ஒழிக்கும் இடம் ஆஷ்ரமங்கள்.

அன்னதானம் வழங்கும் இடம்  ஆஷ்ரமங்கள் .

அங்கு  சேரும் பணங்கள் ,

சிலருக்கு பாதை மாற்றும்

      பலருக்கு போதை தரும்.

அதில் சேரும் சொத்துக்கள்

உடனடி தானதர்மங்கள் ஆனால்
உள்ளத்தில் இருப்பான் ஆண்டவன்.

உண்மை  தோற்றங்கள் ஜீவசமாதி ஆனபின்
வழித்தோன்றல்கள் வழிமாறி திசைமாறி
வசை மாரி யில் குளித்தே
வஞ்சகம் பல புரிவார்.--எனவே

நெஞ்சகத்தில் அவனை வைத்து
நேர்மையுடன் பூஜித்தால் .இச்
ஜகத்தில் இன்னலின்றி
ஜகந்நாதனை  அகத்தில்
அமர்த்தலாம் குடி.





Sunday, December 7, 2014

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!

பாரினில் பகவான் உள்ளான்  என்பதை

பரிதியின்  பிரகாசம் பிரதிபலிக்கும்.

பரிதியின் வெப்பம்   தணியும் போது

நிலவின் குளிர்ச்சி தெளிய வைக்கும்

வைகறைப் பொழுதில் பனித்துளிகள்

இறைவனின் இயற்கையைச் சித்தரிக்கும்.

இயற்கையின் மாற்றங்கள் ,

இயற்கையின் இன்பங்கள் ,

இயற்கையின் இன்னல்கள் ,

இயற்கையின் படைப்புகள்

இறைவனின் லீலைகள். இதற்கிடையில்

அறிவியல்  அற்புதங்கள் -அதில்

அநேக மாற்றங்கள் , அவைகளை
அனுபவிக்க  பொருளாதார
ஏற்ற தாழ்வுகள்.


இயற்கைசெல்வங்கள்

ஏற்ற-தாழ்வு பார்ப்பதில்லை .

இயற்கை இன்பங்களில்

சமத்துவமே.

இயற்கை இன்னல்களில்

 சமத்துவமே.

இயற்கையின்  பிறப்பில்

சமத்துவமே.

இயற்கையின்  இறப்பில்

சமத்துவமே.

பூவின் இயற்கை ஆனந்தம்

பூவின்  மனம்  இயற்கை ஆனந்தம்

இதில்  இல்லை ஏற்றத்தாழ்வு.

இயற்கை  செயrகையானால்  அதில்
அழகு  புட்டியில் அடித்தல்
ஏற்றத்தாழ்வுகள்.

இயற்கை ஆண்டவனின் இயல்பு

இதிலே சமத்துவம்.

இறைவனை  உணரும் ஆனந்தம்.

ஆலயங்களில் அடைத்து வைத்தால்

அங்கே ஏற்றதாழ்வுகள் ,

அன்புள்ள இறைவனை
இயற்கையாக வழிபட்டால்

இன்பமே !சமரசமே!சமத்துவமே !!சாந்தியே!!








Saturday, December 6, 2014

vruddhaavastha
वृद्धावस्था 
अवस्थाएँ   चार  तो 
बालावस्था  में अवलंबित ,
जवानी में वीर धीर  गंभीर 
जवानी का जोश.
प्रौढावस्था   एक तरह का ढीलापन 
वृद्धावस्था तो बैठकर सोचना 
कैसा था गुजारा हुआ ज़माना?
हम ने क्या सोचा ?
हमने क्या किया?
हमने कितना कमाया ?
कितना भोगा ?कितना त्यागा?
अच्छे  कितने ?बुरे कितने ?
कितने  को लाभ पहुँचा?
कितने को बुरा/
कितना प्यार मिला? कितना नफरत ?
कितना खोया?कितना पाया?
कितनी सम्पत्ती जोड़ी ?
कितनी  छोडी?
कितनों को छेड़ा?
कितनों  को छोड़ा?
इतने हिसाब -किताब ?
उठने का बल नहीं ?
घुटने के बल सरकना भी दुर्बल.
विचारों की तरंगें तो उठती रहती है.
जब तक साँस,तब तक आशा..
झुर्रियों का चेहरा ,
हाथों का कम्पन 
पर  विचारोंके ज्वार -भाटा
यही है विरुद्धावस्था   वृद्धावस्था  में.

Friday, December 5, 2014

அருள் தருவாய் ஆண்டவரே.

அவனியில் அவனை உணர்ந்தார் ,
 அகமகிழ்ந்தார் ,அவனைப் புகழ்ந்தார் .
அகாராதியில் சொல் இல்லை,
 அகிலத்தில் நாட்டம் இல்லை,
அகிலம் நிலையில்லை.
அகில சுகம் நிரந்தரமில்லை.
ஆண்டவனே  எனக்கெல்லாம் .
வேண்டியது நான் பெறவே 
வேண்டாத தெய்வமில்லை.
அதிகம் எனக்கு ஆசையில்லை.

பத்து ஏக்கரில் ஒரு ஆஷ்ரம்,
அவனே நான் என்று அமர 
ஒரு பொன்னால் வேய்ந்த அரியாசனம்,
என் புகழ்பாட ஒரு கூட்டம்.
சீடர்கள் கூட்டம் வரவேற்க ,
சிஷ்யாக்கள் கூட்டம் சேர,
உன்புகழ் பாட ,என் தனம் சேர,
தானம் செய்ய ;தர்மம் செய்ய;
உன்னை  மறந்து நானே நீயாக 
அகிலத்தில் பவனி வர 
அருள் தருவாய் ஆண்டவரே,




Wednesday, December 3, 2014

PRACTICAL WORLD



EVERY ONE KNOWS
 THE MERITS AND DEMERITS OF   
DISHONESTY.
BUT 
IN THIS PRACTICAL WORLD SOME
MATERIAL  BENIFITS  
MAINLY MONEY  DIVERTS   HIM

 TO DO    ANY THING  AGAINST  HONESTY.


ONE MORE THING BLOOD RELATIONS AND FRIENDS

HOW  CAN HE    ESCAPE?
ONLY ONE SOURCE  AND PUNISHMENT 

CREATED BY THE  CREATER.
AGE     AND DEATH.
THIS IS PRACTICAL   AND ALSO THEORITICAL.
NO ONE CAN  SAVED HIMSELF   WITH HIS MONEY 
OR   HIGHER POSTS.
SO   SINS SALARY IS  DEATH.

His quick treatment.

                                                           in this modern world
 many   want  a honest life .
but 
money ,need of money ,
keeps  silent  on few dishonest.
why?
fear?
no.
they can't do against any thing  ,because 
those  merciless  characters are created by almighty.
He will do correct thing in correct time.
we should pray for His quick treatment.

ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

அன்பே  ஆண்டவன்  என்றார்  ,
 அறிவும் ஞானமும் ஆண்டவன் என்றார் ,
 ஞானம் பெற்றோர்
உலகியலுக்கு உள்ளத்தில் இடம் அளித்தால்
உள்ளத்தில் ஊறு என்றார்.
எண்ணத்தில் ஏற்றமும் ,
உதவும் போக்கும் ,
ஞானத்திலே கண்டார்.,
ஞாலத்தில் இன்பமே இல்லை என்றார்.
நான்குவகை உணர்வுகளற்ற நிலை
அன்பே  என்றால் ஆண்டாள் ,
அனுதினமும் மூவெட்டு மணியும்
அவனையே நினைப்பதை
அவனியில் கூறியோர் ,
உலகியலில் சுழன்று  வந்தோர்.
அருணகிரி  ,பர்த்ரு ஹரி ,பட்டினத்தார்
பட்டறிவு  நமக்கும் பட்ட பின்பே,
கண்ணதாசன் பட்டறிவு அர்த்தமுள்ள  ஹிந்துமதம்.

இது ஆரம்பத்தில் இளமையில்  சொன்னால்

ஒத்தவயதில் ஒப்பாது.

முதுமையில்  சொன்னால் ,
பெருசுசொல்லுது என்பர்.
அதற்கென்று ஞானம் பெற்றோர்  சொல்லால்
அவனி பெரும் சாந்தி.
அவனிடம் பெருகும் பற்று.
பகலவன் கண்ட பணிபோன்று
துன்பங்கள்  அகன்று
இன்பங்கள்  தெய்வீக பற்று பெருகும்.

ஞானமும் அன்பும் வந்தால்
ஞாலத்தில் ஆண்டவன் அருள் கிட்டும்.

s



Monday, December 1, 2014

prayer

what  a wonderful and  strange world ,

where we are living .
we are believing  two authorities.

one is govt. and other is spiritual.
modern age when we  open
the page of news paper,

we  can read the news   which says 

both are corrupted.
both  are willig money ,
they  never think black or white.
now those are totally surrender towards the God
our prayer should   be 
as follows:
oh  Almighty ! protect the world 
from these corrupted fellows  
who are supporting  bribery , corruption ,and black money  and fifth colmnist.