Wednesday, September 24, 2014

திருமலை சென்றால் திருப்பமா? ராஜா தமிழன் D யின் ஐயம் போக்க விடை.

திருமலை போனால் திருப்பம் வருமா?
தமிழன் ஐயாவுக்கு இதில் ஓர் ஐயம்.
இறைவன் ஒருவனை காணமுடியாது.
உணரமுடியும்.முயற்சி செய்தால் . என்
வாழ்வில் ஒரு உயர்வு, திருப்பதி சென்றதால்.
திருப்பதி செல்ல தூண்டியவர் ஒரு கிறிஸ்தவர் செல்வதாஸ்.
சென்னை வெஸ்லி பள்ளியில் தலைமை யா சி ரியர்.
பட்டதாரி  ஆசியராக பணி யாற்றிய என்னை
முதுகலை படிக்கத்தூண்டி விண்ணப்பமும் பணமும் கட்டியவர்,
அருள்வாக்குபோல் நாலாண்டு இப்பள்ளியில்
பின்னர்  பாருங்கள் என்றார்.நானோ ஹிந்தி ஆசிரியர்.
தமிழகத்தில் பணி கிடப்பது அரிது. அதிலும் முதுகலைப் பட்டதாரி  பணி அரிதிலும் அரிது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் திருப்பதி,
முதுகலை  முதலாண்டு தேர்வு எழுதி ,திருமலை சென்றால்
ராஜகோபுரத்தில் இருந்து நேரடி கர்பக்கிரகாம்
ஏழுமலையானின்  முதல் தரிசனம்.வரிசையில் நிற்கா
வர்ணனை செய்ய வார்த்தையில்லா ப்ரஹ்மானந்த தரிசனம்.
இரண்டாம் ஆண்டு  அவ்வாறே. பெரும்  கூட்டத்தில் நான்,
ஒருவர் கை பிடித்து நேரடியாக ராஜகோபுரத்தில் இருந்து மூலஸ்த்தான  மூலவர் வெங்கடாசலபதி தரிசனம்.
அழைத்துச் சென்றவர் தரிஷனம் முடியும் வரை உடன் இருந்தார்
பெயர் கேட்டேன் ,வெங்கடாசலம் என்றார்.அனைவருக்கும் உணவளிப்பவன் என்றார் .பின்னர் காணவில்லை.இது ஒரு தெய்வீகம்.தேர்வுமுடிவுகள் வந்ததும் உடனே
திருவெல்லிக்கேணி ஹிந்து மேல் நிலைப்பள்ளியில்
மேல் நிலை ஹிந்தி ஆசிரியர் நியமனம்.
என் முயற்சிக்கு பக்க துணை அவனருள்,
அப்பள்ளியில் எதிர்பாரா திருப்பங்கள்.
நான் ஒரு ஹிந்தி ஆசிரியர்,
silver tounge srinivsஆச்சாரியார் ,வெள்ளி நாக்கு ஸ்ரீநிவாசாச்சாரியார்
அமர்ந்த தலைமை ஆசிரியர் நாற்காலியில்
அமரச்செய்தான் வேங்கடவன். இறைவன் சக்தி ,என் உயிரை எடுத்து மீண்டும் மீண்டும் கொடுத்ததற்கு என்னுடன் பணியாற்றிய  ஆசிரியர்களே நேரடி சாக்க்ஷி.இன்று இந்த
திருமலை  தெய்வத்தின் அருளால்  திருமலை சென்றால் திருப்பம் என்பதற்கு சான்று  என் வாழ்க்கை.கண்ணதாசன் அவர்களும் இதை உணர்ந்து எழுதி உள்ளார்.

No comments: