Wednesday, September 3, 2014

இறைவன் எங்கே ?

இறைவன் எங்கே?
என்ற வினா?
விடையோ பல?

தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்.

எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன்.

அவன் வடிவம்?
ஒளி.ஒலி,ஒழி வடிவம் .

அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி 
எங்கும் பிரகாசமாய் இருப்பவன் ஆண்டவன்.

ஒலிவடிவமாய் அசரீரியாய் ஆகஷ்வாணி 
மூலம் அருள்வாக்கு தருபவன் ஆண்டவன்.

மறைமுகப்போருளாய்   பல்வேறு வடிவங்களில் 

உதவுபவன் கடவுள்.

இதை ஞானஒளி என்பர்.
தெய்வீக  ஒலி பெற்றவர் நபிகள் நாயகம்.
மறை ஒலி பெற்றவர்கள் பலர்.
சூக்ஷ்ம ஞான ஒலி பெற்றவர்கள் ரிஷி-முனிகள்.
அனைவருக்கும் எளிய முறையில் 
எளிய மொழியில் இறைமார்க்கம் கூறுபவர்கள் 
கவிஞர்கள்.
காகம் கரைதல்,பறவை ஒலிகளின் மாற்றம் 
நாய் குறைத்தலில் மாற்றம் 
மணி அடித்தல்மங்கள் வாத்யம் .,
சாவுமணி போன்றவை சூசகம் அதாவது 
நல்லது கெட்டது நடப்பதை அறிவிப்பது.
மனிதன் முன் பின் தெரியாதவன் 
நமது இன்னல் நேரத்தில் வந்து  எதிர்பாராமல் உதவுவது 
மறை அருள்.

கர்ணனை வண்டுதுளைத்து 
அவனது கல்விக்கு தடையானது மறை அருள்.
எதுவுமே செய்யாமல் பலர் உதவிபெறச் செய்வது கருணை.
ஒரு மருத்துவர் நமது உயிரைக்காப்பற்றினால் 
அவர் தெய்வம் .மனித வடிவில்.
ஒரு ஆசிரியர் அறிவுபெறச் செய்தால் தெய்வம்.
இறைவன்  நம்மைப்படைத்தான் என்றால் 
நமது தாய் தந்தை மூலம் 
மூலம் அவன் நேர் அன்னை யும் பிதாவும்.
இப்படியே இறைவன் 
பலவடிவங்களில் நமக்கு  
ஒளியாக .ஒலியாக வளியாக,வழியாக,வலியாக
வலுமை கொடுத்து உணரவைக்கிறான்.
நமக்கு உணவு ,வாழ்க்கை வசதிகள் 
தருபவன் நமக்கு வேலை அளிக்கும் அரசு,
தனியார் துறை,
கடை  முதலாளி,
பள்ளிநிர்வாகம்,
நமது நிர்வாகம்
எப்படி நம் நிலை இருந்தாலும் 
நமக்குமேல் இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆற்றல் 
இறைவன்.ஆண்டவன் நம்மை ஆள்பவன்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது.

No comments: