Friday, December 6, 2013

அது எத்தனை பேரால் முடியும்?

நல்லவர்கள்  நாட்டில்  இல்லாமல் இல்லை.

நல்லவர்கள்  உலகில் இருக்கிறார்கள்.

நல்லவர்களின் பிரார்த்தனை வீண் போவதில்லை.

நாடு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவரும் நலம் பெறவேண்டும் .

சர்வ ஜனாம் சுகினோ பவந்து.

லோகா சமஸ்தா  ஸுகினோ பவந்து.

நாட்டில்  நல்லவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

நிம்மதி என்பது  மன தளவில் வரவேண்டும்.

பொருளாதார நிறைவு, தார நிறைவு ,அனைத்து வெளி ஆடம்பர சுகங்கள் வேறு.
மன நிறைவு இல்லை என்றால்  மகிழ்ச்சி இருக்காது.

இதையே கபீர் தாசர் சிதை சவத்தை எரிக்கும் .

சின்தா  அதாவது கவலை உயிருடன் உள்ளவரை எரிக்கும்.

உயிருடன் எரிந்தால்  ,ஒரு ஊதுபத்தி எரியும் போது கைபட்டாலே தாங்க

முடியாது. உடல் முழுவதும் பற்றி எரிந்தால்,அப்பப்பா,

நினைத்தாலே பயங்கரமாக இருக்கும்.

கவலை இன்றி இருக்க மனத் தூய்மை மட்டும் போதுமா?

நாம் செய்த கர்மங்களில் ,செய்யும் கர்மங்களில் ,செய்யப்போகும் கர்மங்களில்

  ஒரு நேர்மை வேண்டும்.நா நயம் வேண்டும்.ஐம்புலன் அடக்கம் வேண்டும்.


பணிவு வேண்டும்.அறிவுத்திறன் வேண்டும்.ஒழுக்கம் வேண்டும்.

உண்மை வேண்டும்.வீரம் வேண்டும்.செல்வம் வேண்டும். மானம்,மரியாதை

வர வேண்டும். இதற்கெல்லாம் முன்வினைப்பயனோ அல்லது இந்த
ஜன்மத்தில்  இறைவன் அருள் வேண்டும்
இதற்கு  என்ன செய்ய வேண்டும்?
மனைவி அமைவது,கணவன் அமைவது,ஸத்புத்திரர்கள்  பிறப்பது  எல்லாம் மனிதன் கையிலா உள்ளது. ஒரு மன நலம் குன்றியவனுக்கு குழந்தை பிறக்கிறது. பைத்தியக்காரிக்கு குழந்தை பிறக்கிறது.பணக்கார நண்பனுக்கு சந்தான பாக்கியமில்லை. இவை களெல்லாம்  நாம் சமுதாயத்தைப்  பார்த்து புரிந்து தெளிந்து அறிந்து  இறைவனை வழிபட வேண்டும். அப்பொழுது கிடைக்கும்  இறைவனின் அருளும் இறைவனின் க்ருபாகடாக்ஷமும் முழுவதுமாக கிடைக்கும். இதற்கு பக்தி சிரத்தையுடன் பூர்ண சரணாகதி அவசியம். அதில் கிடைக்கும் பேரானந்தம் உலகப்பற்று எவ்வளவு இன்னல் என்பதை உணர்த்தி  அதில் தாமரை இல்லை தண்ணீர் போல் பட்டும் படாமல்

விலக்கிவைத்து  பேரின்பத்தைத் தரும்.அது எத்தனை பேரால் முடியும்?

அதனால் தான் தெய்வீக மனிதர்களாக சிலர் வணங்கப்பட்டு பூஜிக்கப்படுகிரார்கள்.



1 comment:

sury siva said...

chaah gayi chintha miti manuvaan beparvaah; jinko kachoo na chahiyee, ohi shahamshaah.
aana enakku oru chaah irukku. pesanum ungaloda. cell no. givuungalen.
subbu thatha.