Thursday, October 31, 2013

இறைச் சிந்தனைகள்.

இறைச் சிந்தனைகள்.
ஆண்டவனைப் பற்றியும் அவனை அறியும் வழி முறைகளைப்பற்றியும் அறிவியல் போன்று  இதுதான் என்று வரையறுக்க முடியாது.ஏனென்றால் ஒரு சனாதன வாதியிடம்  கேட்டால் என்ன  சொல்லுவார்?
ஒரு இஸ்லாம் மதவாதியிடம் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்.?
ஒரு கிறிஸ்தவ ஃபாதரிடம் கேட்டால் என்ன சொல்லுவார்?
மூவருமே  கடவுள்  இருப்பார் என்பதை உறுதியாகக் கூறுவார்கள்.
ஆனால்  இறைவனை வணங்கும் விதம் முற்றிலும் வேறு பட்டது.
சனாதன தர்மத்தின் சிறப்பே இதுதான்.இப்படித்தான்  என்று சொல்லவில்லை.அவர்களிடம்  இறைவன் உருவமற்றது தானே?என்றால், ஆம் என்பர். உருவமுள்ள வழி பாட்டுக்குத  தானே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றால் ஆம் என்ற பதில் வரும்.
என்னய்யா இது என்றால் ஞானம் வரும் வரை அப்படித்தான் என்பார்கள்.
நான் என்ன ஞான சூனியமா?உருவமா ?உருவமற்றதா?சொல்லுங்கய்யா?
எப்படி இயலும்? இயற்கைகளின் விந்தைகள் அனைத்தும் இறைவன் தானே?
ஹிந்து மதத்தில் நவக்ரஹ வழிபாடு உண்டு.
இதன் உருவங்களை இப்படி என்று முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக வழிகாட்டியதுடன் அந்த சிலைகளை கோயில்களில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.நம் தாத்தா இவர்தான்.காந்திதேசத்தந்தை  இவர்தான் என்பதை எப்படி நம்புகிறோமோ  அப்படித்தான் நாம் இவைகளை நம்ப வேண்டும்  .என்பதில் ஏன் ஐயம் ஏற்படுகிறது.?
காரணம் ஒரு நிச்சயமற்ற தன்மை மனதில் ஏற்படுவதே?
  அதற்குத்தான் ஞானம் வேண்டும்.
இந்த மனக் குழப்பத்திற்குக் காரணமே ஒரு ஆவல்.ஆர்வம்.இறைவனின் காட்சி,பேட்டி,வரம், ஆற்றல்  நாம் இந்த அழியும் உலகில் எதையும் சாத்தித்து நிலைத்து இருக்கலாமே என்ற எண்ணம்.இந்த உலகமே மாற்றம் அடையும்.இன்றைய தொழில் நுட்பம் நிலையானதல்ல.
இன்றைய நடைமுறைகள் நிலையானவை அல்ல .உறுதிவாய்ந்த என்று மனிதன் நினைப்பதெல்லாம் எங்கே?
ஆளும் நிர்வாக நடைமுறைகள் மாறுகின்றன.தலைவர்களின் கொள்கைகள் மாறுகின்றன. ஒரே கட்சி பிளவு படுகிறது.இவ்வாறே  இறைவன் ஒருவனே.மனிதன் தன் வசதிக்காக  ஒரு உருவத்தை சிருஷ்டித்துக்கொண்டு  வழிபடுகிறான். அவன் மனம் அதில் ஒன்ருபடுவதால் ஆற்றல் பெறுகிறான்.
பலர் தவம் செய்கின்றனர். ஞானம் பெறுகின்றனர். அவர்களுக்கு முன் எந்த உருவமும் கிடையாது.
முஹம்மது நபி இருண்ட குஹையில் தான் பைகாம் இறைச்செய்தி பெற்றார்.புத்தர் ஞானம் தேடி தவம் செய்தார். அவர் முன் உருவம் கிடையாது. வால்மீகி ராம்,ராம் என்று தவம் செய்தார்.அவர் முன் உருவம் கிடையாது.இவ்வாறே தவ வலிமை பெற்றவர்கள் நாம  ஜபம் தான் செய்தனரே தவிர
ஆடம்பரமாக மடாலயங்களில் தங்களுக்கே அபிஷேகம் செய்தும் தங்க மகுடம் சூட்டியும் ஆன்மிகம் வளர்க்கவில்லை.
இந்த கலியுகத்தில்  அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபடுவதால் ஒரு வித அச்சத்தின் காரணமாக சாஸ்திரிகள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு சொல்லக் கூட முடியாமல் அவசர அவசரமாக செய்து முடித்து ஆத்ம திருப்தி அடைகின்றனர். சாஸ்த்திரிகளும் தன் வருமானமே போதும் என்ற நிலையில் மந்திரத்தால் காதுகுத்தல்,ஹோமம் வளர்க்காமல் ஹோமம் செய்தல்.ஒரே நாளில் பலரின் சடங்குகள் ஏற்று துரித கதியில் முடித்தல் போன்றவை செயல்படுகிறது.
இந்த நிலைமாற முடியாத சூழல்  இருதரப்பினருக்கும்.வால்மீகியே நாம ஜபம் தான் செய்தார்.பல அரக்கர்கள் வரம் பெற்று தேவர்களையே ஆட்டுவித்ததும் நாமஜபத்தால் தான்.
அனைத்து மதங்களிலும் உருவமற்ற இறைவனையும் நாம ஜபத்திற்கு விசேஷ மகத்துவம் அளிக்கப்படுகிறது. ஆகையால்  கலியுகத்தில் இறைவனருள் பெற நாம ஜபங்கள் செய்யுங்கள்.
அதுவே பக்திக்கும் முக்திக்கும்  இறைவன் க்ருபா கடாக்ஷம் பெறவும் சிறந்த வழி.ஆடம்பர பக்தியை ஆண்டவன் விருபுவதில்லை. நாம ஜெபமே சிறந்தது. அதுவே கலியுகத்தில் உடனடி பலன் தருவது.அதுவே இறையன்பைப் பெற எளிய உயர்ந்த மார்க்கம்.

No comments: