Friday, September 6, 2013

அன்பே ஆண்டவன்.

இறைவன் இல்லை என்றே தோன்றுமே ,
இன்றைய உலகின் செயல்களால்.
இன்றுமட்டுமல்ல ,அகிலத்திலே,
இதிகாசங்கள் ,சரித்திரத்திலே.
இராவணன் ,இராமன் 
இருவருமே இறுதிவரை நிம்மதியாக இல்லை.
பாண் டவர்களும் இல்லை.
துரியோதனனும் இல்லை.

ஹிரண்யகஷ்யப்  தன்னையே இறைவன் என்றாலும் 
தன்  தனயன் ப்ர்ஹ்லாதனால் நிம்மதி இல்லை.
ஹரிஷ்ச்சந்திரன்  உண்மையே 
பேசியதால் அவனுக்கு  நிம்மதியில்லை.
புத்தர் அனைத்தும் துறந்து ,மகாவீரர் முற்றிலும் 
துறந்து   துன்பத்திலிருந்து 
விடுதலை காண வாழ்ந்த வாழ்க்கை
அன்பே ,அஹிம்சையே அன்புக்குவழி 

ஆசையே துன்பத்திற்கு காரணம் 
ஆடம்பரம் பயங்கரம் .
இன்னலே  உலகம்.
இறைபக்தியே இன்பம்.
இறை பக்தியே அமைதி.
இறையன்பே உயர்வுக்கு வழி .
அந்த இறைவனுக்கே பணத்தாசை காட்டும் மனிதன்.
காணிக்கை செலுத்தி காரியவேற்றி.
காணிக்கை செலுத்தியோர் 
நிரந்தர வெற்றி அடைந்ததும் இல்லை;
காணிக்கை செலுத்தாதோர் 
நிரந்தர தோல்வி அடைந்ததும் இல்லை.
ஆட்டுக்கு வால் அளந்து வைத்தான் ஆண்டவன்.
நாயைகுளிப்பாட்டி  நடுவீட்டில் வைத்தாலும் 
பாலை நக்கித்தான் குடிக்கும்.
இயற்கை குணம் மாறாது.
கோடி ரூபாய்  இருந்தாலும் 
புலியை பூனை யாக்க முடியாது.
இயற்கை செயற்கை ஆக இயற்கை ஆனாலும் 
இயற்கை  இயற்கைதான்.
பணத்தால் சாதிக்க முடியாமல் தான் 
சாமியார்களை நாடுகின்றனர்.
ஹோமம் யாகம் செய்கின்றனர்.
சரணாகதி அடையவப்பான் ஆண்டவன்.
அன்பே  ஆண்டவன். 



2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான கருத்துக்கள் ஐயா...

ananthako said...

nanri thanapaal.