Monday, September 23, 2013

அதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.

அன்பே ஆண்டவன் என்றார்;
அன்பே சிவம் என்றார்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்,
ஆங்காங்கு ஆலயம் எழுப்பவும் செய்தார்.
இன்பம் பெற ஆலயம்;
இன்னல் தீர ஆலயம்
உடல் நோய் தீர ஆலயம்
உளச்சோர்வு நீங்க ஆலயம்.
ஊக்கம் பெற ஆலயம்
ஊர் மகிழ ஆலயம்.
எண்சான் உடலுக்கு  நன்மைதர
ஏற்றமிகு  வழியும் காட்டிச்சென்றார்.
ஏகதந்தன் மூஷிகவாகனனுக்கு மோதகம் என்றார்.
முக்கண்ணனை  வணங்க வில்வம் என்றார்.
நாற்கரனை வணங்க ,இலக்குமியை வணங்க
துளசி தளம் என்றார்.
ஐந்து கரத்தினை வணங்க அருகம்புல் என்றார்.
ஆறுமுகத்தானை வணங்க பஞ்சாம்ர்தம் என்றார்.
மாரியம்மனை வணங்க வேப்பில்லை என்றார்,
இதெல்லாம் இறைவனுக்குப்படைத்து
 குப்பையில் போட  அல்ல.
பிரசாதமாக சாப்பிடவுமே.
உள் பிரகாரம் ,வெளிப்ப்ரகாரம்
தோப்புக்கரணம் ,நவ க்ரஹப் பிரகாரம்
சாஷ்டாங்க நமஸ்காரம் ,
சூர்ய நமஸ்காரம்  இன்னும் எத்தனையோ?
உடற்பயிற்சி முறைகள்  ஆலயவழிபாடு.
நெகம் கடிக்காதே ;குளித்துக் குடி;
கால்களை சுத்தம் செய்.கால்கழுவும் சடங்கு;
பல நோய்கள் கால் ,நெகம் மூலம் பரவும்.
எல்லாமே அறிவியல்;பக்தி என்ற போர்வை;
ஆலயவழிபாடு சம்பிரதாயங்கள்
ஆலய அமைப்பு, தீர்த்தம் அனைத்துமே
உடல்நலம் பேண. ஊர்நலம் காக்க.
வைகறைத் துயில் எழு.
மார்கழி குளிர்  குளித்து ஆலய வழிபாடு.
அன்று முழுதும் புத்துணர்வு.
ஆழ்ந்து உணர்ந்து ஞானம் பெற்றால்
ஆலயம் ஒரு உடல் நல மருத்துவ மனை.
அதற்குத்தான் ஆசார அனுஷ்டான முறைகள்.
பானகம் ,நீர்மோர் ,பாசிப்பருப்பு ,அனைத்துமே
உடல் நலம் காக்கும்.
தெரிந்து கொள்வீர் ஆலய வழிபாடு முறைகள்,
அதுவே ஆனந்தம் தரும். ஆரோக்கியம் தரும்.
அதுவே ஆஸ்தி தரும்.உயர்வு தரும்.
ஆலயம் சென்று நிதானமாக வழிபடுங்கள்.
குறுக்கு வழி என்றுமே கூடாது.
சில புதிய பழக்கங்கள் பகட்டு ஆடம்பரங்கள்.
யாருக்கும் பயன்படா வீண் சிலவுகள்.
சித்தித்து இறைவனை தக்க முறையில்
வழிபடுங்கள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
மனக்கட்டுப்பாடு இறை வழியில் மட்டுமே,