Thursday, July 11, 2013

அகிலத்தில் வாழலாம் சாந்தியுடனே !!!

பற்றுகளில்  இரண்டு உண்டு. 
அகப்பற்று.புறப்பற்று.
உலகில் இவ்வுலகு;
அவ்வுலகு என்று இரண்டு.

இவ்வுலகு சிந்தனைகள் ,

இம்மையில் இன்பம் தரும்.

இவ்வுலக இன்பங்களின் 

இறுதியில் துன்பங்கள் .

காரணம்  ஆசைகள்.

அறிவியல் கண்டுபிடிப்புகள்.

அதன் பயனாக  ,உடல் உழைப்பு ,குறைவு.

நடப்பது குறைவு.

உணவு மேசை  சாப்பாடு.

மேலைநாட்டில்  அவர்கள் உணவு முறை.

நம் நாட்டு உணவு முறை .

அவர்கள் கை கழுவா சாப்பாடு.

நாம் கையால் சாப்பாடு.

கழுவும் முறையில் மா பெரும்  வேறு பாடு.

உடை  நமது நாட்டின்  சீதோஷ்ணத்திற்கேற்ப,

தளர்ந்த ஆடைகள்.

காலணி  வெயிலுக்கேற்ற 

காலுறை இன்றி இருக்க வேண்டும்.

நமது இளம் பிஞ்சுகள் வெயிலில் காலுறை 

மாலை வந்து கழற்றினால் ஒரு துர்நாற்றம்.

உள்ளாடை இறுக்கம்,வியர்வை அதனால் சொறி படை.

இது உலக மருத்துவக்  கழகத்தால் உரைக்கப்பட்ட 

ஆராய்ச்சி உண்மை. 

இவ்வுலகப் பற்றால் அறிவியல் கலந்த  ஆன்மீக 

பழக்க வழக்கங்கள்  உணவுப் பழக்கங்கள்,

பல நோயிக்குக் காரணம் என்பது  அறிவியல் உண்மை.

இயற்கையோடு இணையா வாழ்க்கை ,இன்னல் தரும் வாழ்க்கை யே .

புறப்பற்று நம்மை ஆசைக்கும் ,ஆடம்பரத்திற்கும் இடமளித்து.

பந்த பாசத்தை அறுக்கும் ஒரு இன்னல் பற்று.

அகப்பற்று அவ்வுலகப் பற்று.

அதில் ஆசைக்கு இடமில்லை.

அன்பிற்கு இடம் உண்டு. நம் 

பண்பிற்கும் பண்பாட்டிற்கும் இடம் உண்டு.

ஆரோக்ய உணவிற்கும் இடம் உண்டு,

ஆயுள் நீள் வளர்வதற்கும் இடம் உண்டு.

அவ்வுலக நினைப்பில் இன்பமே  உண்டு.

ஆன்மீகத்தில் ஆடைகளில் தளர்ச்சி.

அதனால் இல்லை மன இறுக்கம்.

ஆன்மீகத்தில் உடற்பயிற்சி ,

தோப்புக்கரணம்,நவ க்ரஹ பிரதட்சிணம் .

உள் ,வெளி  புற பிரகாரம் ,

சாஷ்டாங்க நமஸ்காரம்,

சூர்ய  நமஸ்காரம்,

யோகா, இது உடற்பயிற்சி.

உணவு விஷயத்தில் ,

ஏகாதசி விரதம்,

உணவு செரிக்கும் இயந்திரத்திற்கு ஒய்வு.

காலையில் ஸ்நானம்  நாள் முழுவதும் 

சுறு சுறுப்பு.

இறைவழிபாடு மந்திர உச்சாடனம் 

அனைத்துமே  அன்புக்கு,அமைதிக்கு,மன மகிழ்ச்சிக்கு ,மன நிறைவுக்கு.

அதனால் அன்பே ஆண்டவன். இதுவே அகப்பற்று.

ஆன்மீகப் பாதை தவறுதல் ஆன்மிகம் வளர்த்த பாரத நாட்டில் தான் 

இயல்பாக மாறும் இன்றைய நிலை. 

மற்ற மதங்கள் ஆடைகள் மாற்றவில்லை. 

ஆகாரத்தில் மாற்றமில்லை. 

ஆசாரத்தில் மாற்றமில்லை.

ஒற்றுமையில் ஒப்பில்லை.

பற்றுக இறைவனை;நம் வழியில்.

ஆசாரம் என்பது அறிவியல் உண்மை.

யோகக் கலை  அமெரிக்காவில் அங்கீகரித்த கலை.

அன்பே ஆண்டவன்.அகப்பற்று ஆண்டவன் மீது வைத்தால்,

அகிலத்தில் வாழலாம் சாந்தியுடனே !!!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!













No comments: