Wednesday, July 31, 2013

அதில் தான் உலகத்தின் அடக்கம்

இறைவன் யார்?
ஒருவரா?பலரா?
உருவம் உள்ளவரா ?இல்லையா?
இறைவனைக் காண முடியுமா?முடியாதா?
இதற்கு  விடைகள் ,விளக்கங்கள்,விவாதங்கள்.சண்டைகள்.
கடவுள் ஒருவரே.உருவமற்றவர்.
ஒளிமயமானவர்.ஜ்யோதி ஸ்வரூபி. உருவமற்றவர்.
கடவுளை உணரமுடியும் .காண முடியாது.
கடவுள் எங்கிருக்கிறார்?
ஒரே பதில் மேலோகத்தில்.
பூலோகம் தவிர ஒரு லோகம் உள்ளது.
கடவுள் மனித உருவத்தில் உதவுவார்.
உதவுபவர் கடவுள்.
உதவுபவருக்கு  நன்றி.வணக்கம்.
இந்த நன்றி,வணக்கத்திற்கு மேல் நன்றிகாட்ட மனிதன் 
பயன் படுத்துவது  அவன் உருவம்.
அவன் உருவம் கல்லால் செதுக்கப்பட்டது.
ஓவியங்களால் வரையப்பட்டது.
இன்று புகைப்படம்.
ஆக ஒரு உருவம் தேவைப்படுகிறது .
இறைவன் இல்லை என்பவர்கள் வீட்டில் 
இந்தக் கருத்தை நிலைநாட்டும் தலைவர் படம் இருக்கும்.
அவரது கொள்கைகள்,கோட்பாடுகள் தான் நூல் வடிவில் உள்ளதே.
படம் எதற்கு?என்று  அதைக் கழட்டி எறிந்தால் 
அது அந்தத் தலைவனுக்கு அவமானம்.
ஒருவரை கவுரவிக்க உருவம் தேவைப்படுகிறது.
ஒரு தலைவரை கவுரவிக்க 
முச்சந்தியிலும் ,நாற்சந்தி யிலும்  சிலைகள் வைக்கப்படுகின்றன.
இது அரசியல் தலைவர்கள் சிலைகள்.
கிட்டத் தட்ட ஒரு உருவ வழிபாடு.
பிறந்தநாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் நிற்கச் செல்லும் நாள் மாலை அணிவிக்கிறார்கள்.
தேர்தல் வெற்றி பெற்ற பின் மாலை அணிவிக்கிறார்கள்.
இந்த தலைவர் சிலைகளை அவரின்
 கொள்கைகள் ஏற்பவர்கள் மட்டும்  வழிபடுவார்கள்.
எதிரணியினர்  தங்கள் தலைவரை வழிபடுவர்.
இது உருவ வழிபாட்டில் வேற்றுமை.
இந்த அரசியல் தலைவர்கள் வழிபாட்டில் உள்ள ஒற்றுமை,வேற்றுமை,
புகழ்ச்சி,இகழ்ச்சி ,உடைத்தல்,செருப்புமாலை அணிவித்தல்,
அவமானப்படுத்தல்,இயற்கையால் சிதைந்துபோதல்,
பறவைகளின் எச்சம்  எப்படி எல்லாம் நடக்கின்றன.
ஆக இன்று நாம் ஒருவகையில் 
தலைவரை சிலை வைத்துவணங்குகிறோம்.
உருவ வழிபாடு பகுத்தறிவுப் பாசறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் அது இறைவழி பாடல்ல.
இன்றைய சமுதாயத்தை வழிநடத்தியவர்;புரட்சி செய்தவர்,
சீர் திருத்தவாதி.நாட்டிற்கு நல்லது செய்பவர்.
அவரது சிறந்த கொள்கைகள் சமாதி ஆகக் கூடாது.
எதிர்காலத்தில் நினைவில் கொல்லவேண்டும.
பின்பற்றவேண்டும்.

இதையே மாற்றி சிந்தியுங்கள்.
மக்களை நெறிப்படுத்த,நல்ல ஒழுக்கங்கள்,உண்மை,நேர்மை,பரோபகாரம்,தானம்,தர்மம் ,அற்புத சக்தி 
தீயது தடுத்தல்,அன்பு,பண்பு,தன்னலம் கருதாநிலை,
தீய வற்றை பின்பற்றாமை,புலால் உண்ணாமை,
மனக்கட்டுப்பாடு,உடல் ஆரோக்கியம்,பிரமச்சரியம் 
மன அமைதி,கள்ளுண்ணாமை ,பிறன் மனை நோக்காமை 
பேரா ராசைப்படாமை, கோபப்படாமை ,
இதற்காக வழிகாட்டிய ஆன்மீகப்பெரியார்கள்
ஷங்கரர்,ராமானுஜர்,மத்துவாசாரியார், ராகவேந்திரர்,ஷீரடி சாய்பாபா,
புத்தர்,மகாவீரர்,ஏசுநாதர்,நபிகள்நாயகம்  போன்றவர்களை வழிபடுவது 
சிலைவைப்பது விக்கிரகங்கள் வைப்பது 
ஆன்மீக உருவ வழிபாடு.
இவர்கள் மனித நலனுக்காக,ஒற்றுமைக்காக 
உயரிய கொள்கைகள் பரப்பியவர்கள்.
பதவிக்காக அல்ல.ராஜ்யத்தை ஆள அல்ல.
அவர்களது உருவழிபாடு  காலத்தால் அழியாமல் காக்கப் படுகின்றன.
சுயநலத் தொண்டர்கள் இதை இரண்டாக உடைத்து மனித வேற்றுமை ஏற்படுத்துகிறார்கள்.

இப்படி உருவ வழிபாடு அரசியல் ஆன்மீகத்தில் ஏற்படுகின்றன.
இரண்டுமே மனித சமுதாய நன்மைக்கு. 
இரண்டுக்கும் உள்ள வேறு பாடு 
 ஒன்று நாட்டுக்குநாடு மாறுபடுகின்றன.
ஆன்மீகக் கோட்பாடுகள் மாறுபடுவதில்லை
.,கடமை,
சத்தியம்,நேர்மை,பரோபகாரம்,தியாகம் 
வையகம் வாழ்க போன்றவை .

இப்பொழுது சிலர் எங்களுக்கு உருவ வழிபாடு பிடிக்காது 
இயற்கையை வழிபடுவோம் என்கின்றனர்.
அதைத்தான் சனாதனதர்மம்  நவக்ரஹ வழிபாடகக்
கூறி ஆன்மிகம் என்ற பாதையில் பெரும் அறிவியல் புரட்சி செய்துள்ளது.

உருவ வழிபாடு அவசியமாகிறது.அதைப்படைத்தவன் மனிதன்.

இந்து மதம் இரண்டையும் ஏற்கிறது.
உருவமும் அருவமும் ஆனாய்  என்பது இந்து மதம்.
அதில் அனைத்து மதங்களும் சங்கமமாகி.
இந்துமதம் பெருங்கடலாகி 
பொறுமை,சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டி விளங்குகிறது.
அதனால் அது போற்றப்படுவதாக உள்ளது.

 இந்து மதம் தூற்று வோரைப்பற்றி எதிர்ப்பலை  வீசுவதில்லை.
இதில் பல ஆசாரிய மார்கங்கள் உள்ளன.
துவைதம்,அத்வைதம்,விசிஷ்டாத்வைதம்.
இராமலிங்க அடிகள் அருட்பெருஞ்சோதி,தனிப் பெருங் கருணை.
ஒளிவடிவம்,ஓங்கார ரூபம் ஒலிவடிவம்.
உருவமற்ற சிவலிங்கம்.அதில் தான் உலகத்தின் அடக்கம்.
ஓம் நமசிவாய..
Tuesday, July 30, 2013

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

 இறை வழிபாடு பற்றிய பல்வேறு கருத்துக்கள்,நம்பிக்கை ,அவநம்பிக்கை ,வுருவ அருவ வழிபாடுஎன  நமது  ஆன்மீக பூமி பாரதத்தில் இருப்பது போல் வேறு எங்கும் கிடையாது.காரணம் ,இங்கு வேலை இன்மை. மற்றொன்று சுலபமாக பொருளீட்டலாம் என்ற எண்ணம்.

விவேக்கின் பாவாடை சாமியார் , நாசர் சாமியார் ஆகி பணக்காரர் ஆவது,கோயில்  தேங்காய் உடைப்பு,
பராசக்தி வசனங்கள், இறைவன் படங்களில் செருப்படி,ஆலயங்களில் இறை எதிர்ப்பு வாசகங்கள்,
கடவுள் இல்லை,இல்லை இல்லவே இல்லை என்று ஆலயங்கள் முன் எழுதுவது,ஆலய மதில் சுவர் சுற்றி சிறுநீர் கழிப்பது,ஆலயங்களில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு, ஆலய அர்ச்சகர்கள் அவமதிப்பு,

அத்தனையயும் சகிக்கும்  ஒரே மதம் இந்துமதம்.

மற்ற மதங்களின் தேவாலயங்களில்  இருக்கும் தூய்மை,வழி பாட்டு நேரத்தில்   அமைதி,ஒழுக்கம்,
தூய்மை  இந்து கோயில்களில் உள்ளதா?

தேர்வு எண்கள் எழுதுவது, காதல் வசனம் எழுதுவது,எழுமலைவேங்கடேசா  ..பச்சைக்கொடி காட்டுராஜா எனப் பாடுவது,பக்தியுள்ள விநாயகரை நவீன கால விநாயகராக கிரிக்கட் பிள்ளையார்,கம்ப்யுடர் பிள்ளையார் என்று மாற்றி ரசிப்பது.

இதையெல்லாம் சகித்து வாழும் இந்துமதம்.

Monday, July 29, 2013

மெய்யன்பு காட்டுங்கள் . இறைவன் அருள் கிட்டும்.

இறைவன் வேறு ;மதம் வேறு; மத பேதம்  வேறு;

இறைவன்  உருவமும் அருவமும் ஆனவன்.

சனாதன தர்மத்தில்  தமிழ் பக்தி இலக்கியங்களில்

அருவம்  உருவம் பற்றி ஆழ்ந்த கருத்துகள் ,கோட்பாடுகள்

விளக்கப்பட்டுள்ளன.

சிவ  லிங்கம் உருவமற்றது. ஆதி  சிவன். இந்த உருவமற்ற
வழிபாடு  தான்  பின்னர் உருவ வழிபாடுகளாக மாறி உள்ளது.

மத என்றல்  கருத்து.  மத பேதம்  என்றால் கருத்து வேறுபாடு.

மதம்  என்றால் ஆணவம். இந்த கருத்து வேறு பாட்டால்
உருவானது மதம்.
மதம் என்பது  இறை தூதர்களால் ,மனிதர்களை நெறிப்படுத்த
அமைக்கப்பட்டது.
கருத்துக்கள் ,எண்ணங்கள்,சிந்தனைகள் காலத்திற்கேற்ப மாறுபடுபவை.
இயற்கையே மாறிக்கொண்டுதானே  இருக்கின்றன.

நான் குழந்தையாக இருந்தபோது இருந்த நீரின் சுவை இப்பொழுது இல்லை.

பழங்களின் மனமும் சுவையும் மாறி உள்ளன.
,வெண்பா,நாலடி   குறள்  என்பதெல்லாம் மாறி  ஹைக்கூ கவிதைகள் வெளிவந்துவிட்டன.

அதிகமாக எழுதி கதை கரு புரியவைக்காமல்,ஓரிரு வரிகளிலே சொல்லி
புரியும் அளவுக்கு அறிவுத் திறன்  இளைஞர்களிடம் வளர்ந்து உள்ளது.

காலை வணக்கம் என்பது ஆங்கிலேயர் வருகையால் வந்தது.தமிழில் ஆரம்ப காலங்களில்  காலை வணக்கம் .மாலைவணக்கம் ,மதிய வணக்கம் என்றெல்லாம் கூறுவது நமது கலாசாரம் மாறுவது போல் தோன்றினாலும்
இப்பொழுது காலை வணக்கம் ,இரவு வணக்கம் என்று பழகிவிட்டது.

உணவுவகைகளில் பெரும் மற்றம்.. நான் கொண்டுவா என்பது எதோ ஆணவத்தைக் கொண்டுவா என்பது போல் உள்ளது.

வறுத்த சாதம் fried rice ,pizza  bel poori,paani poori. கர்ட் ரைஸ்  எப்படி மாறிவிட்டோம்.
 இப்படி எல்லாமே மாறும் போது கருத்து வேறுபாடு தோன்றி மதம் பிடித்து
அறநெறி காட்டும் மதங்கள் பல  தோன்றின.

இன்னும் எளிய  விளக்கம்;  அண்ணாதுரை  பேரறிஞர் . அவர் தோற்றுவித்த தி.மு.க . திமுக வின் மூலம் தி.க . தி.க.வின் மூலம் நீதிக் கட்சி. justice party. இன்று  அண்ணாவின் கொள்கைகள் ஏற்று கருத்துவேறுபாட்டால் பிரிந்தது--
அ .தி.மு.க. ,ம.தி.மு.க.,தி. தே தி .மு.க.. ஒரே தலைவர் அண்ணா.ஆனால் இரு அண்ணாவின் நாமம் என்று  சொல்லி கலைஞர் புகழோ ,அம்மாவின் புகழோ
பேசப்படுகிறது. இருவரையும் இகழ்ந்து  பல கட்சிகள் தோன்றி தாயக மறுமலர்ச்சி  தோன்றி மறைந்தும் வாழ்ந்தும் வாழாமலும் இருக்கின்றன.
இதற்கெல்லாம் மூலமாக பெரியார் ,அண்ணா  வாழ்ந்தனர்.
இவ்வாறே மத பேதங்கள்  ஏற்பட்டன. இந்த ஆணவம்,ஒருவரை நேர்மை அற்றவர் என்று ஒருமுறை தூற்றுகிறது; அதே வாய் அவர்களைப் போற்றுகிறது.

இந்த எளிய அடிப்படை அரசியல்.

மதங்களும் அப்படியே ( மதபேதத்தால்)  கருத்து வேறுபாட்டால் தோன்றி ,
 வேறு படுத்தி  பக்தர்களின் மனதில் வெறுப்பு,கொலைவெறி ஏற்படுத்தி
மடாலயங்களில் வெள்ளியிலும் தங்கத்திலும் ,தங்க சிம்மாசனத்திலும் அமர்ந்து  மயக்கும் மொழிகளால் ,சித்துவிளையாட்டுகளால் கோடிக்கணக்கில் சேர்த்து சுக போக வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டியது காணிக்கை;அதற்காக அவர்கள் காட்டும் வேடிக்கை ஒரு சிறந்த இயக்கத்தில் சிறப்பாக காட்டப்படும் திரைப்படக் காட்சி போன்றது.

அதற்குத்தான் சித்தர்கள் பரதேசிகளாக ,பித்தர்காளாக வாழ்ந்து பாட்டுக்கள் பாடினர்
நட்ட கல்லும் பேசுமோ? என்று.

இந்த ஆடம்பரங்கள் தவிர்த்து  ஆன்பும் சிரத்தையும் பக்தியும் தான் இறைப்பற்று.

இறைவன்  வேறு. மக்களை நெறிப்படுத்தும் மதங்கள் வேறு. ஒன்று மெய்ஞானம் ; மற்றொன்று நீதி போதனை.

மெய்ஞானம் இறைவனை நேராகக் காண்பது.மதம் என்ற நீதி போதனை வழிகாட்டுவது.
வழிகாட்டி GUIDE  தன்  வருமானத்தில் குறியாக இருப்பான்.

தன்  குறிக்கோள் வழியில் செல்பவர்கள் கவனமாக செல்லவேண்டும்.

அதற்குத்தான்

அங்குஇங்கு  எனாதபடி ஆனந்த பூர்த்தியாகி  அருளோடு எங்கும் இருப்பவன் ஆண்டவன் என்று  குமரகுருபரர் பாடுகிறார்.

அன்பே ஆண்டவன். பக்தி நெறி காட்டும் மதாசாரியார்களிடம் கவனம் தேவை.
அவர்கள் மடத்தின் அதிபதிகள். மடாதிபதிகள். அதிபதி என்றால் செல்வம்.
அங்கு செல்வம் சேரும். செல்வோருக்கு இறை அருள் கிட்டுமா?
சிந்திப்பீர். கலியுகத்தில் மெய்யன்பு காட்டுங்கள் . இறைவன் அருள் கிட்டும்.
அன்பே ஆண்டவன்பக்தர் ராதேஷ்யாம்.

பக்தி

  ஹிந்திக் கதையின் சுருக்கம்;

     ஒரு சிற்றூரில் ஒரு குடிசையில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். குடிசைக்கு அருகில் ஒரு தேநீர் அங்காடி நடத்திவந்தார்.அவர்  எப்பொழுதும்

ராமாயணம் படிப்பார்.ஹனுமான் சாலிசா படிப்பார்.ஆனால் ராதேஷ்யாம் என்று கூறுவார். அவரை  அனைவரும் பக்தர் என்றே  நினைத்தனர்.

   அந்த ஊரில் கிருஷ்ணர் கோயில் திருவிழாக்கள் விமர்சையாக நடக்கும்

இவர் செல்ல மாட்டார்.  சிலர் இவரை ராம பக்தர் ;கிருஷ்ணரைப் பிடிக்காது என்றனர்; சிலர் ராதேஷ்யாம் என்று இவர் கூறுவதால் கிருஷ்ணா பக்தர்  என்றனர்.

இவர் கடையில் தேநீர் அருந்தி பணம் தராமல் செல்பவர்களும் உண்டு.அவர்களை அடிக்க தடி எடுத்துக்கொண்டு துரத்துவார்.ஆனால் அடிக்கமாட்டார். அந்த இளைஞர்கள்  ராதே ஷ்யாம் என்று சொல்லி ஓடுவார்கள்.இது அன்றாடம் நடக்கும் காட்சி.சிறுவர்களும் ராதேஷ்யாம் என்பார்கள்.

எப்பொழுதும் ராமாயணம் சத்தமாக பாராயணம் செய்வார்.

இவ்வாறு ௨௦ ஆண்டுகளாக இவரது குரல் அந்த ஊரில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீர் என்று அவரது குடிலில் இருந்து  பாராயண ஒலி வரவில்லை.இரண்டு மூன்று நாட்களாக வராததால் ஊர்ப் பெரியவர்கள் சென்று பார்த்தனர்.
அவர் உடல்நலம் சரில்லை;ஆனால் ராதேஷ்யாம் என்ற முனகல் மட்டும்.
அனைவரும் அவரை வைத்யரிடம் அழைத்துச் சென்றனர். முதுமையின்
காரணமாக  அவர் வுயிர் பிரிந்தது.
அனைவரும் அவர் பக்தியைப் பாராட்டினர்..செய்திதாளில் அவரைப் புகழ்த்து
செய்திகள் வந்தன. பக்தி மகான் என்று போற்றப்பட்டார்.

அவர் குடில் அவர் நினைவுச் சின்னமாகியது.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நடுத்தர வாலிபர் அவரைத் தேடி வந்தார்.
அவர் அந்த பெரியவரின் மகன். பெயர் ராதேஷ்யாம்.
அந்த மகனின் பெயரைத்தான் அந்த பெரியவர்  இறுதி  மூச்சுவரை
கூறிவந்தார்  என்பது பின்னர் தெரிந்தது.

பக்தர் ராதேஷ்யாம்.

Saturday, July 27, 2013

ஐயமில்லை.சிந்தித்துப்பாருங்கள்.

இறைவனை வழிபட  மந்திரங்கள் அறியவில்லை?
 பக்திப் பாடல்கள்  பாட இனிமையான குரல்வளம் இல்லை.
சுலோகங்கள் தெரியாது. யாரும் கற்றுத்தரவில்லை.
கோயிலுக்கு சென்றால் கூட்டம் அதிகம்.தள்ளுமுள்ளு வேறு.
பலவித கட்டண முக்கியஸ்தர்கள் தரிசனத்தால் ,
காலதாமதம் வேறு.
இன்னும் பல காரணங்கள்.

இறைவன் வழிபட
அன்பு,சிரத்தை,பக்தி போதும்.
நமக்கு ஸ்தோத்திரங்கள் தெரியவில்லை.
நியமங்கள் தெரியாது.
நான் வழிபட ஒரு வழிகாட்டி தேவை .
நான் இருக்கும் பகுதியில் ஆலயமும் கிடையாது.

புரோகிதர்களும் கிடையாது.

எல்லாம் விதிப்படி நடக்கும்.

என்று அலுத்துக்கொள்பவர்கள்  இருக்கிறார்கள்.

மந்திரங்கள் ,நியமங்கள் தெரிந்து ,வலைத்தளம் மூலம்
வழிபடுவோரும் உண்டு.
இப்பொழுது நாம் பக்தி வரலாற்றில்
நாம ஜபம் மட்டும் ஜபித்து புகழ்பெற்றவர்கள் பற்றி
சிந்தித்தால்  நமக்கு  இறைவனின் அருள் கிட்டும்.
கலியுகத்தில்  அறிவியல் ஆட்சி.
தொழில் என்பது குலத்தொழில் என்று மாறி
அனைவரும்  கல்வி என்ற உயர் நிலை.
இது சமுதாயப் புரட்சி.
வரவேற்கும் ஒன்று.
தொலைதூர வேலைவாய்ப்புகள்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்.
என்னதான் பிசி ஆக இருந்தாலும் ,
பொருளாதார தன்னிறைவு பெற்றாலும்
அறிவுத் திறன் அதிகமாக பெற்றாலும்
மனித சக்திக்கு   அப்பாற்பட்ட ஒரு சக்தி
மனிதர்களை ஆட்டிப்படைப்பதை உணராதவர்கள்
உலகில் இருக்க முடியாது.
ஆகையால் இன்னல் வரும் போது
இறைவனை வழிபட நாம ஸ்மரணை போதும்.
இதை சித்தர்களும் ,பலவித ஆன்மீகப் பெரியவர்களும்
கூறிஉள்ளனர்.
இன்றும் இந்த நாம ஜபத்தை  வலியுறுத்தி வருகின்றனர்.
 ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் ரத்னாகர் ,ஒருமுனிவரின்
ம ரா என்று உபதேசித்த இரண்டு எழுத்து ராமா  என்ற
ராம ஜெபமாக  மாறி, அவன் வால்மீகி முனிவராக
புகழ் பெற்றது ராமாயணம்  எழதியது
அனைவரும் அறிந்த கதை.
இறைவன் அருளும் அதனால் மிகப் பெரிய சாதனைகள் செய்திட
இறை நாம ஜபம் போதும் என்பதே.
நாரத முனிவர் நாம ஸ்மரணை செய்பவர்.
துருவன் ,பிரஹ்லாதன் அனைவரும் நாம ஸ்மரணை செய்த பக்தர்கள்.
ரமண மஹர்ஷி  16 வயதில் மௌனமான சாதனை  ஆரம்பித்தவர்.
துளசிதாசர் ராம நாம ஜெபத்தின் மகிமை கூறும்போது
"ரா" என்ற எழுத்து சொல்லும் போது  பாபங்கள் வெளி ஏறி விடும்.
"ம் " சொல்லும் போது மீண்டும் பாபங்கள் வராது,
ராம்,ராம் என்றாலே இறைவனருள் கிட்டும் என்கிறார்.
புரந்தரதாசர் நாம மகிமை அறிந்து இறைவனின் கருணை பெற்ற பக்தர்.
இறைவனின் நாம ஜபம் உள்ளும் புறமும் ஒளி  தரும்
 என்பார் துளசிதாசர்.
கபீர்  ராமநாமத்தை உச்சரிப்பதை மேன்மையாக  கருதுபவர்.
அவர் ராமர் என்றாலே கடவுள் என்ற பொருள் கொண்டவர்.
அருணகிரிநாதர்  இறைவனால் தடுத்தாட் கொண்டு
சும்மா இரு என்ற உபதேசம் பெற்று 
ஐம்புலன்கள் அடக்கி தவம் செய்து
திருப்புகழ் அம்ருதம் படைத்தவர்.
நந்தனாரின் பக்தி.
மீரா ,ஆண்டாள் கண்ணப்பர்  போன்றோர் 
 பக்திமட்டும் தெரிந்தவர்கள் . எனவே
நாம ஜபம் கலியுகத்தில் இன்னல் 
களைந்து நன்மைதரும்.
     அடுத்து அனைவரின் மனதிலும் எந்த இறைவனை வழிபடுவது?
ஓம் கணேசாய நமஹ  என்பதா,முருகா என்பதா,சிவா என்பதா ,,ராமா என்பதா,,கிருஷ்ணா என்பதா,
அல்லா என்பதா,ஏசுவே என்பதா  என்ற பல கேள்விகள் எழும்.
அதற்கு விடை தேசப்பிதா மகாத்மாவின் சுதந்திரப்போராட்ட பஜனை
இறைவன் ஒருவனே என்பது.  ஈஸ்வர் அல்லா தேரே நாம் ,சப்கோ சன்மதி தே பகவான்  என்பது.இதை கபீர்தாசர் வலியுறுத்துகிறார்.
ஹரிஜன் என்ற சொல்லை முதலில் பயன் படுத்தியதும் கபீர் தான்.
அனைவரும் ஹரியின் மக்கள்  என்றார்.நாடும் சொத்தும் உயிரும் அளிப்பவர் இறைவன் என்றால் ,அந்த இறைவனை அளிப்பவர் ஹரிஜனம் என்பர்.
 நீங்கள் எளிய  முறையில் இறைவனின் நாமம் பெறலாம்.
முருகதாசன்,கண்ணதாசன், சக்தி தாசன் ,அம்பாள் அடியாள்,தொண்டரடிப்பொடியாழ்வார் ,
கருமாரிதாசன் ,காயத்திரி ஸ்வாமிகள்,எத்தனையோ அடியார்கள். ஹனுமத் தாசர்கள்,சாய் ராம்,அல்லா ,இயேசு.
இது எப்படி சாத்தியம்?
நீங்கள் நாம ஸ்மரணை  அல்லது இறைவன் பிராத்தனை  என்பதை ஆரம்பியுங்கள்.
ஒரு அதிர்வலை ஒரு குறிப்பிட்ட நாமம் ஜெபிக்கும் போது  வரும். அதை உங்கள் ஆழ்மனம் உணரும்.
உருவமற்ற இறை உணர்வும் அதிர்வலையை உண்டாக்கும்.
அந்த நாமத்தை  விடாது பற்றுங்கள்.
இது எப்படி சாத்தியம்?
அதுதான் பிரம்ம ரஹசியம்.
நீங்கள் சாய் பஜன் செல்கிறீர்கள்.
மாதா அம்ருதனந்தா கூட்டத்திற்கு செல்கிறீர்கள்.
ரவிசங்கர்,மேலும் பல புகழ் பெற்ற ஆஷ்ரமங்களுக்கு செல்கிறீர்கள்.
ஆனால் செல்பவர்கள் எல்லாம் அந்த அந்த இடத்தில் மனம் ஈடுபடாது.
ஒரு குறிப்பிட்ட வழிபாடு 
உங்கள் மனத்தைக் கவரும்.
ஸ்வாமி  விவேகானந்தர் நாத்திகத்திலிருந்து  விடுபட்டு குருவைத் தேடி அலைந்தார்.குரு நல்ல சிஷ்யனை எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஸ்ரீ ராம கிருஷ்ணா பரமஹம்சரிடம் அவர் மனம் ஒன்றியது. இதுதான் ஆழ்  மன உணர்வு.
அந்த உணர்வு ஏற்பட கலியுகத்தில் 
இருக்குமிடம் போதும்.
கபீர் கூறுகிறார்-
ஜபமாலை கையில் ,
வாயின் உச்சரிப்போ இறைநாமம். 
மனமோ உலகியல் எண்ணங்களால் பத்து
திக்கும் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது.
பல ஆண்டு,பல யுகம் கழிந்துவிட்டது.
இறைவனருள் கிட்டவில்லை.
உண்மை பக்தி,சிரத்தை,மன ஒருமைப்பாடு சேர்ந்ததே நாம ஜபம்.
நீண்ட பஜனைப்பாடல் 
ராகம் ஆரோஹனம்,அவரோஹனம் என்று ஓடும்.
நாம ஜபம் அப்படி அல்ல.
அதை உறுதியாகப் பற்றி 
நாம ஜபம் 45 நாட்கள் செய்து பாருங்கள்.
இறைவனை உணரும் பிரம்மானந்த  உணர்வு வரும் ..
அதை வெளியில் வர்ணிக்க இயலாது.உணரத்தான் முடியும்.
உங்கள் எண்ணங்களில் ஒரு நிலைத்த தன்மை ஏற்படும்.
மன சஞ்சலம் ஏற்படாது.
இது தான் நாம ஜப  மகிமை.
இந்த நாட்கள் வெற்றியாக அமையவும் ஒரு கருணை வேண்டும்.
ஜபித்துப்பாருங்கள். உணர்ந்து மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கி  சாதனை செய்யுங்கள்.
அன்பே ஆண்டவன்.
கலியுகத்தில் ஆண்டவன் மூலம் நமக்கு அளித்த பணியை  நேர்மையுடன் செய்தாலே இறைவன் அருள் கிட்டும். நம் பணியையே நேர்மையாக கடமை உணர்வுடன் செய்வதிலேயே சிக்கல்.
மாயை .சஞ்சலம்.
இதிலிருந்து விடுபட நாம ஜெபத்தில் ஈடுபடுங்கள்.
இரு  கண்ணுக்குப் புலப்படாத துளிகளால்  உருவாகிய சரீரம் இது.
.சிந்தித்துப்பாருங்கள்.
களிமண்ணால் செய்த /கல்லால் செய்த உருவம் அல்ல.
கண்ணுக்குத்தெரியா  காதல் அணுக்களால் 
ஆனசரீரம்.
அது இறைவனால் படைக்கப்பட்டது.
ஐயமில்லை.
அன்பே ஆண்டவன்.
எல்லாம் சரிதான் அமைதி எங்கே?

இறைவன் இந்நில  உலகில்  இம்மையில் நன்மை அளிப்பவரே.

இறைவனின் அருள் பெற மந்திரங்கள்  தேவையா?

இன்றியமையா மந்திரங்கள் ,ஸ்தோத்திரங்கள் உண்டு -அவை

மறுப்பதற்கு இல்லை. அது ஏமாற்றத்திற்காகப் பயன்  படுத்தவரை;

அந்த மந்திரங்களே வணிக மூலதனமாகும் போது ,

சோம்பேறிகளும்,ஏமாற்று வாதிகளும் முளைத்து வளர்வது இயல்பே அன்றோ.

கிராமத்து அக்ரகாரங்கள் காணாமல் போகின்றன;
அங்கே சந்தியா வந்தனங்கள்  எங்கே என்றும் தேடும் நிலை.
சந்தியா மகளை அம்மா என்றால் பதவி கிடைக்கும்;
வந்தனங்களால்  வறுமை மிஞ்சும்  என ஏளனம். அதன் பலன்
வேதம் ஓதும் வேதியர்க்கு ஓர் மழை  இன்றி ,
வேதனை மிஞ்சும் வாழ்க்கை. இதை
கலியுக தர்மம் என்றே கூறுவோர். இந்நிலையிலும்
ஹோமத்தை மந்திரத்தை கேலி செய்தோர்  இன்று
ஆலயம் தோறும் அலையும் காட்சி;
யாகங்கள் ரகசியமாய் செய்யும் காட்சி.
சாயி பாதங்களில் விழுந்த காட்சி.
நாத்திகவாதம்  கண்ணதாசனாகி ,
அர்த்தமுள்ள ஹிந்துமதம் எழுதி,
கனகதார ஸ்தோத்திரம் தமிழில் வழங்கிய காட்சி,
கனகக் கலசங்களும் ,கொடிக்கம்பங்களும்
கனக ஆலயங்களும் பெருகும் காட்சி.
பக்தர்கள் கூட்டத்தால் ஆலயங்கள் பெருகி
வேதமந்திரங்கள் ,மந்திரகோஷங்கள் ,கோடி அர்ச்சனைகள்,
லக்ஷார்ச்சனைகள்  என  பெருகும் காட்சி.

எல்லாம் சரிதான்  அமைதி எங்கே?
மன நிறைவுதான் எங்கே? அது அங்கே ,
எங்கே உண்மை அன்பே அங்கே.


Friday, July 26, 2013

அதில் சஞ்சலம் கூடாது

அனுதினமும்  அங்கிங்கெனாதபடி  எங்கும் ,

தூணிலும் துரும்பிலும் இருக்கும்  இறைவன் ,

இன்னல் தீர்ப்பான் என்ற முடிவு இறுதியாக்கப்பட வேண்டும்.

ஆனால் அலைபாயும் மனம்  உறுதியாக இருப்பதில்லை.

அனைத்து மனித மனத்திலும் ஒரு உள்ளுணர்வு தோன்றும்.

ஒரு மகிழ்ச்சி தோன்றும்;
 அடிவயிற்றில்  ஒரு  கலக்கம் தோன்றும்.

ஒருவரைச் சந்திக்கச் செல்லும்  போது  ,
அவரால்  காரியம் நடக்குமா?நடக்காதா?என்ற
உணர்வு அவரைச்  சந்திக்கத் தூண்டும்  அல்லது தடுக்கும்.
சில செயல்களில் நம்மை யும்  அறியாமல்  பெரும் வெற்றி கிடைக்கும்.
சில செயல்களில்  பெரும் தோல்வி ஏற்படும்.
பெரும் முயற்சியால் தோல்வியும்,முயற்சியே இன்றி வெற்றியும்
எதிர்பாராமல் புதியவர்கள் உதவிசெய்வதும் ,
அதில் பெரும் வெற்றி அடைவதும்  ஆண்டவன் செயலாகும்.
கைம்மாறு கருதாமல் நம் வாழ்க்கையில் பலர் உதவுவார்கள்;
நாம் அவர்களுக்கு  முற்றிலும் அறிமுகமாகதவர்களாக இருப்போம்.
நம்மில் நம் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
நம் குறிக்கோளை அடையும் வரை உடன் இருப்பார்கள்.
பின்னர் நாம் அவர்களை நினைத்துப் போற்றிக்கொண்டே இருப்போம்.
சிலர் நம்மிடம் பயன் எதிர்பார்த்து நிபந்தனை இட்டு உதவி செய்வார்கள்.
சிலர் கையூட்டு வழங்கி வெற்றி பெற கரம் கொடுப்பார்கள் .
எப்படியோ ஒரு உதவிக்கரம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
மருத்துவமனை செல்லும்போது திடீரென்று ஒருவர் இந்த மருத்துவரிடம் செல்வதைவிட
அந்த மருத்துவரிடம் சென்றால்  நல்லது என்பர். அதில் மிகப்பலன் இருக்கும்.
சிலர் வழிகாட்டுதல் தவறாகவும் இருக்கும்.
நண்பர்கள் பலவிதத்திலும் உதவுவார்கள்.
இது அனைவருக்கும் கிட்டுமா? என்றால் கேள்விக்குறிதான்.
நன்மையே செய்யும் உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள்,எதிர்பாரா அறிமுகமில்லாதவர்கள் உதவி
வெற்றி,பாராட்டு ,புகழ் ,மன நிறைவு  முற்றிலும் இறைவனை சரணடைந்தவர்களுக்கு
ஒதுங்கி இருந்தாலும் கிட்டும்.
ஆனால் மனம் ஒன்றுபட்டு மாற்று சிந்தனை இன்றி ,
லௌகீக பற்றின்றி ஆண்டவன் மேல் அன்பு,சிரத்தை ,பக்தி காட்டவேண்டும்.
அது குறைந்த பட்சம் நமது வட்டத்தில் ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கும்.
இவன் என்ன செய்யப்போகின்றான் என்று அசடு வழிய நாம் இருந்தாலும்
நமது வட்டத்தில் ஒரு மதிப்பு உண்டாகும்.
அன்பே ஆண்டவன். அதில் சஞ்சலம் கூடாது.Wednesday, July 24, 2013

ஆண்டவனுக்கு செலுத்தும் அன்பு காணிக்கை.

இறைவனைப்பற்றியும்  பல விமர்சனங்கள். நான் குழந்தையாய் இருக்கும்போது இறைவனை மிகுந்த சிரத்தை பக்தியுடன் வழிபடவேண்டும்.குளித்து திருநீர் பூசி தெய்வீகம் தோன்ற செல்வோம்.இன்று இருப்பதுபோல் ஆலயங்களைச் சுற்றி கடைகள் கடைதெருக்கள் கிடையாது.

குறிப்பாக பழனி மலைக்கு யானைப்பதை ,படிகள் பாதை இரண்டு. மேலே ஏறும்போது யானைப்பதையில் செல்வோம். படிகளில் இறங்கும் போது எளிதாக இருக்கும்.

மலை ஏறுமுன்  பாதவிநாயகர் வளம் வருவோம்.வள வந்து ஏறுவது சுலபமாக இருக்கும். இப்பொழுது நடமாடும் வியாபாரிகள் கூட்டமும் ,பக்தர்கள் கூட்டமும் தள்ளு முள்ளுதான்.

நான் சிறுவயதாக இருக்கும் போது என்னிடம் மலை ஏறும்போது ஏறி இறங்கி ஏறுவோம் தெரியுமா?என்பார். எனக்குத் தெரியாது என்றதும் ,பாதவினாயகர் ஏறி இறங்கி நடந்து பின்னர் ஏறவேண்டும்  என்றார். அங்கு கருப்பணசாமி ஒன்று உண்டு. அதுவும் சக்திவாய்ந்தது.ஒவ்வொரு மண்டபத்திலும் விநாயகர் இருப்பார்.நடுவில் இடும்பன் மலை. யானைப்பதையில் ஏறும்போது பலர் இடும்பன் கோயிலுக்கு செல்ல முடியாது. வழியில் வள்ளி சுனை . இன்று அதில் பெரும் மாற்றம்;

நாங்கள் மூலஸ்தானம் செல்வதற்குள் நல்ல நறுமணம் வீசும்.அங்கங்கு பண்டாரங்களின் அறைகள் இருக்கும்.அவர்கள் கொடுக்கும் தீர்த்தம்,விபூதி ,இராக்கால சந்தானம் ,பஞ்சாமிர்தம் ,மலை வாழைப்பழ மணம்   இன்று கிடையாது. அந்த பண்டாரங்களின் கூட்டமும் கிடையாது. பலர் போலியாக ஏமாற்றத் துவங்கியதும் உண்மையானவர்களைக் கண்டுபிடித்து ,போலிகளை விரட்டி விட்டனர்.

அன்றைய பழனிக்கும் இன்றைய பழனிக்கும் பெரும் வித்தியாசம் .பேருந்து நிலையம் பெரிது. ஆனால் இறங்கி  வெளியே வந்ததும் நறுமணம் இல்லை. சிறுநீர் துர் நாற்றம். கோடிக்கணக்கில் வருமானமும் பக்தர் கூட்டமும் இப்பொழுது பெருகிவிட்டது. ஆனால் அதற்கேற்ற சுகாதாரம் கிடையாது.
புனித வையாபுரிக்குளம் சாக்கடைக் குளமாக மாறிவிட்டது.

நடைபாதை முழுவதும் கடைகளின் ஆக்கிரமிப்பு.

புனித தலத்தை மிகப் புனிதமாக வைக்க முருக பக்தர்கள் முயலவேண்டும்.
இன்றைய சூழலில் அதுவே ஆண்டவனுக்கு செலுத்தும் அன்பு காணிக்கை. அதுதான் இறைவனின்
அருள் தரும்.

Tuesday, July 23, 2013

பழி-பாவத்திற்கு அஞ்சி வாழ்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அன்பே ஆண்டவன்  என்றால்

வெறுப்பு என்ற சொல் ஏன்?

அதுவும் ஆண்டவன் ஏற்படுத்தியதே.

அமிர்தமும் ஆலகால விஷமும்

படைத்தாலும்   அதை அறிவு

அனைத்து ஜீவனுக்கும் கொடுத்தாலும்

மனிதர்களுக்கும்  அதிகமாகவே.

அதனால் அவன் தானம் செய்கிறான்.

அதனால் அவன் கஞ்சனாகிறான்.

அதனால் அவன் பேரசைப்படுகிறான்.

அதனால்  அவன் ஆணவத்தில்  அழிகிறான்.

அதனால் அவன் கோபப் படுகிறான்.

அதனால் அவன்  தன் எதிர்காலத்திற்கு

சேமிப்பதில் நிகழ்கால மகிழ்ச்சியை இழக்கிறான்.

அவன் நினைக்கிறான் எனக்குள்ள தீய குணங்களும்

ஆண்டவன் அளித்ததே;  ஆனால்

அந்த  தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்லதை ஏற்க

அறிவுரையை அளிப்பதும் ஆண்டவனே;

இராவணனின் தீய எண்ணம் மாற அறிவுரை பெற்றும்

ஏற்காமல் அழிந்ததும்  இறைவன் கொடுத்த

நல்லறிவு  ஏற்காததே;

தீயவை செய்தபின் அவையில் பறைசாட்ட முடியுமோ?

நல்லவை செய்தால் நாலுபேரிடம்  கூறத் தோன்றும்.

தீயவை   அகத்தில் இருந்து வேதனை தரும்.

வெறுப்பை  அன்பாக மாற்றும் அறிவளித்த ஆண்டவன்,

ஆகவே அன்பே ஆண்டவன்;
 நல்லதை செய்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அசோகன் செய்த தீயவை  அவன் செய்த அறச்செயலால்  போற்றப்பட்டன.

கர்ணன் தன வீரனாக இருந்தும் தீய நட்பால் களங்கமடைந்தான்.

அவள் அன்னையோ  மந்திரம் சோதிக்க அன்னையானாள்.

ஊர்ப்பழி ஏற்காமல் இருக்க ஆற்றில் எறிந்தாள். ஆனால்

பழி ஏற்காமல் இருக்க முடியவில்லை.

பழி-பாவத்திற்கு அஞ்சி வாழ்வதே ஆண்டவனுக்கு காணிக்கை.

அன்பே ஆண்டவன்.


Sunday, July 21, 2013

இன்றும் தொடரும் கதை.

புண்ணிய  பூமி பாரதத்தில் ,

புகழ் மிக்க மன்னர்கள் ,

ஆன்மீகவாதிகள் ,

கவிஞர்கள்

கலைஞர்கள்

மத குருமார்கள்,

பலர் தோன்றினாலும்

இன்னும்  பலர்

நாகரீகம் அடையவில்லை.

முடி ஆட்சி மறைந்து,

அன்னியர்கள் ஆட்சிகள் அழிந்து

அறுபத்தேழு  ஆண்டுகள் கழிந்து விட்டன.

இன்றும் குப்பைகள் கொட்டுவதில்

ஒரு ஒழுங்குமுறை  வரவில்லை.

கண்ட இடங்களில் எச்சில் துப்புவது மறையவில்லை.


பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்

வேலைநிறுத்தங்கள்,சாலை மறியல்,போக்குவரத்து தடை

ஓயவில்லை.சட்டம் -ஒழுங்கு  எங்கே என்று தேடும் நிலை.

அரசியல் படுகொலைகள்,மதவாத பயங்கரங்கள்,

இன-ஜாதிப் படுகொலைகள் பெருகிய வண்ணமே உள்ளன.

கல்வியில் உள்ள ஏற்ற தாழ்வுகள் மாறவில்லை.

பொருள் இருந்தால் தரமான கல்வி;பொருள் இல்லை என்றால்

சத்துணவுக் கல்வி என கல்வியிலும் சமதர்மம் இல்லை.

மத சார்பற்ற நாடு என அரசியல் அமைப்புச்  சட்டம்.

ஒட்டு டுவங்கிக்காக ,மதங்களைப் பிரித்து ,

மனிதர்களைப் பிரித்து,மன எண்ணங்களில் விஷம் கக்கி

மன மகிழ்ச்சியுடன் ஆட்சிபீடத்தில் அமரும் மக்கள் தலைவர்கள்.

ஆன்மீக வாதிகளும் அரசியல்வாதிகளும்

 கோடியில் சுகம் காணும்

பாக்ய சாலிகள்.

பாரதம் பகவானின் அருள் பெற்ற நாடு.

இங்கே அன்னியர்கள் புகுந்து தன இரத்தத்தைத் தந்து

ஈரரக் கலந்து மக்களை ஏமாற்றும் விந்தை.

வாழ்வது இங்கே?சொத்துக்கள் தங்கள் நாட்டிலே.

முகலாயர்காலம் முதல் இன்றுவரை அரசியல் விந்தைகள்.

அன்றும் அந்நியர்களுக்கு ஆதரவு தரும் கூட்டம்,

இன்றும் தொடரும் கதை.

இந்து மதத் தலைவர்கள் படுகொலை ,

அதற்கு இல்லை தலைவர்கள் குரல்.

அரசியல் கொலைகள்.அந்த அந்த கட்சிகளின் கூக்குரல் கள்.

அரசர்கள் செய்த செயல்கள்

 இன்று மக்களாட்சியிலும் தொடர்கின்றன.

அன்று நேரடி கொலைகள்.அன்றும் கூலிப்படை.

இன்றும் கூலிப்படை மறைமுகமாக.

அனைத்தும் ஆண்டவன் விளையாட்டு என்றால்,

ஆண்டவன் அளித்த அறிவு,

மனிதப்  பண்புகள் அகன்றதேன்.

சுயநலமே  இவ்வுலக வாழ்க்கை என்றால்,

புலிகளுக்கும்  மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு.

நீதிநெறி இல்லா மானுடன் வாழ்ந்து பயனென்ன?

புலம்பித் தவிக்கும் கூட்டம் ஒன்று  இப்புவியில்

இருப்பதாலே புவி வாழ்கிறதே.

அந்த புண்ணிய ஆத்மாக்களுக்கு வந்தனம்.

அந்த ஆத்மாக்களையும் படைத்த

ஆண்டவன் அருளுக்காக

ஆண்டவனுக்கு வந்தனம். 

Friday, July 19, 2013

வரவே வராதே.

அன்பில்லா  ஆண்டவன் இன்னல் வரும்போது .

இம்மையில் நன்மை வரும்போது

"தான்" என்ற  ஆணவம் ,ஆண்டவனை  மறக்கச் செய்யும்.

கபீர் சொல்கிறார் --ஆண்டவன் மேல் அன்பு செலுத்தும் வழி மிக்க  குறுகியது.

                                         அதில்  நான் என்ற அஹம்பாவத்திற்கே  இடமில்லை.

                                            அந்த அன்பு வழியில்  இறைப்பற்று ஒன்றே இருக்க              வேண்டும். 


2.துன்பத்தில்   அனைவரும்  இறைவனைப் போற்றுகின்றனர்.
 இன்பத்தில்  இறைவனை யாரும் நினைப்பதில்லை.
இன்பத்திலும்  இறைவனை  நினைத்தால் .
துன்பம் என்ற ஒன்று வருமா?  வரவே வராதே.


SATY SAAYEE MESSAGE.

Date Saturday, 20 July 2013 ( As it appeared in Prasanthinilayam)
THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
A true devotee will have no eye on the profit of any
kind that can be derived from their service. If you
quarrel with your spouse and desist from food for a day,
that does not count as fasting in the book of God. Also
praising one God as great and decrying another is
incorrect. Any of these acts reflect the fact that you are
unaware of the elementary rules of spiritual
discipline.Dhana (wealth) is the currency of the
world. Sadhana (Spiritual Practice) is the currency of
the spirit. Be an example to others through your
conduct - sweet speech, humility, reverence to elders
and steadfastness in truth and faith. This way you will
influence more people into practicing spirituality; it is better than establishing societies,
collecting donations or running temples. The Lord looks for sincerity, simplicity and steady joy
in the contemplation of His Name and Form.(Divine Discourse, Aug 19, 1964.)

Monday, July 15, 2013

அன்பே ஆண்டவன் காண்

 அன்பே
 ஆண்டவன் ,
அகிலத்தில் .

 வெறுப்பில் ,வெகுளியில் ,

புறத்தே  இருப்பான்  ஆண்டவனே.

ஓருயிர் அளிக்க ஈரைந்து மாதங்கள் .

ஓருயிர்  அழிக்க ஓரிரண்டு நாழிகை .(கரு)


அழிப்பது  அரை நாழிகை.

 அளிப்பது  அரை நாழிகை. (பணம்)

எளிது.அழிப்பது ;எளிது சொல்வது.

எளிதல்ல  ஆக்கம்.

ஆக்கிய நம்மை,

அன்னை ,தந்தை  என்றாலும் ,

அறிவும் ஆக்கமும் ஊக்கமும்

அளிப்பவன்   யாரெனெ  உணர்வீர்.

அறிவை அளித்தால் ,

அறிவை அளியுங்கள்.

அலைமகள் அளித்தால் ,

ஆஸ்தியை அளியுங்கள்.

அழியும் உலகம் இது.--நீங்கள்

பெற்றதை  மற்றவர்களுக்கு

அளித்து  அகம் மகிழ  ஆண்டவனிடம்

அன்பு காட்டுங்கள்.

அளிக்க அளிக்க அழியாது அன்பும் ,ஆஸ்தியும்.

அளிப்பதில் இன்பம்  மற்றவருக்கு --

பெற்றவர்கள் வாழ்த்த,

பேரின்பம் காணலாமே.

பேரின்பம் என்பது  ஆண்டவன் கருணை.

பெருந்துன்பம் என்பது ஈயாத்  தன்மை.

ஈவதில்   இன்பமே காண் .

அன்பு பெருகும். ஆஸ்தி சுருங்கும்.

வள்ளல்கள் வாழ்கிறார்கள்.

அன்பில் அருள் கிட்டும்.

அளிப்பதில் செல்வம் பெருகும்.

அன்பே ஆண்டவன் காண்
மற்றவர்களை அழிப்பதில்  துன்பமே காண் .


Thursday, July 11, 2013

அகிலத்தில் வாழலாம் சாந்தியுடனே !!!

பற்றுகளில்  இரண்டு உண்டு. 
அகப்பற்று.புறப்பற்று.
உலகில் இவ்வுலகு;
அவ்வுலகு என்று இரண்டு.

இவ்வுலகு சிந்தனைகள் ,

இம்மையில் இன்பம் தரும்.

இவ்வுலக இன்பங்களின் 

இறுதியில் துன்பங்கள் .

காரணம்  ஆசைகள்.

அறிவியல் கண்டுபிடிப்புகள்.

அதன் பயனாக  ,உடல் உழைப்பு ,குறைவு.

நடப்பது குறைவு.

உணவு மேசை  சாப்பாடு.

மேலைநாட்டில்  அவர்கள் உணவு முறை.

நம் நாட்டு உணவு முறை .

அவர்கள் கை கழுவா சாப்பாடு.

நாம் கையால் சாப்பாடு.

கழுவும் முறையில் மா பெரும்  வேறு பாடு.

உடை  நமது நாட்டின்  சீதோஷ்ணத்திற்கேற்ப,

தளர்ந்த ஆடைகள்.

காலணி  வெயிலுக்கேற்ற 

காலுறை இன்றி இருக்க வேண்டும்.

நமது இளம் பிஞ்சுகள் வெயிலில் காலுறை 

மாலை வந்து கழற்றினால் ஒரு துர்நாற்றம்.

உள்ளாடை இறுக்கம்,வியர்வை அதனால் சொறி படை.

இது உலக மருத்துவக்  கழகத்தால் உரைக்கப்பட்ட 

ஆராய்ச்சி உண்மை. 

இவ்வுலகப் பற்றால் அறிவியல் கலந்த  ஆன்மீக 

பழக்க வழக்கங்கள்  உணவுப் பழக்கங்கள்,

பல நோயிக்குக் காரணம் என்பது  அறிவியல் உண்மை.

இயற்கையோடு இணையா வாழ்க்கை ,இன்னல் தரும் வாழ்க்கை யே .

புறப்பற்று நம்மை ஆசைக்கும் ,ஆடம்பரத்திற்கும் இடமளித்து.

பந்த பாசத்தை அறுக்கும் ஒரு இன்னல் பற்று.

அகப்பற்று அவ்வுலகப் பற்று.

அதில் ஆசைக்கு இடமில்லை.

அன்பிற்கு இடம் உண்டு. நம் 

பண்பிற்கும் பண்பாட்டிற்கும் இடம் உண்டு.

ஆரோக்ய உணவிற்கும் இடம் உண்டு,

ஆயுள் நீள் வளர்வதற்கும் இடம் உண்டு.

அவ்வுலக நினைப்பில் இன்பமே  உண்டு.

ஆன்மீகத்தில் ஆடைகளில் தளர்ச்சி.

அதனால் இல்லை மன இறுக்கம்.

ஆன்மீகத்தில் உடற்பயிற்சி ,

தோப்புக்கரணம்,நவ க்ரஹ பிரதட்சிணம் .

உள் ,வெளி  புற பிரகாரம் ,

சாஷ்டாங்க நமஸ்காரம்,

சூர்ய  நமஸ்காரம்,

யோகா, இது உடற்பயிற்சி.

உணவு விஷயத்தில் ,

ஏகாதசி விரதம்,

உணவு செரிக்கும் இயந்திரத்திற்கு ஒய்வு.

காலையில் ஸ்நானம்  நாள் முழுவதும் 

சுறு சுறுப்பு.

இறைவழிபாடு மந்திர உச்சாடனம் 

அனைத்துமே  அன்புக்கு,அமைதிக்கு,மன மகிழ்ச்சிக்கு ,மன நிறைவுக்கு.

அதனால் அன்பே ஆண்டவன். இதுவே அகப்பற்று.

ஆன்மீகப் பாதை தவறுதல் ஆன்மிகம் வளர்த்த பாரத நாட்டில் தான் 

இயல்பாக மாறும் இன்றைய நிலை. 

மற்ற மதங்கள் ஆடைகள் மாற்றவில்லை. 

ஆகாரத்தில் மாற்றமில்லை. 

ஆசாரத்தில் மாற்றமில்லை.

ஒற்றுமையில் ஒப்பில்லை.

பற்றுக இறைவனை;நம் வழியில்.

ஆசாரம் என்பது அறிவியல் உண்மை.

யோகக் கலை  அமெரிக்காவில் அங்கீகரித்த கலை.

அன்பே ஆண்டவன்.அகப்பற்று ஆண்டவன் மீது வைத்தால்,

அகிலத்தில் வாழலாம் சாந்தியுடனே !!!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

Wednesday, July 10, 2013

மன சாட்சி வெல்கிறது.

இறைவன்  பலகோடி ஜீவராசிகளைப் படைத்துள்ளான்.

அதில் வலிமை உள்ள ஜீவராசிகளையும் அடக்கி ஆளும் திறமை

மனிதனுக்கே  உண்டு.

மனிதனைத்தவிர  மற்ற ஜீவராசிகளும்  தன்னை பாதுகாத்துக் கொள்ள  சக்தியும் அறிவும் பெற்றுள்ளன. ஆனால் மனிதன் தன்னை பாதுகாத்துக்கொள்ள பல சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளான்.

சிங்கமோ ,புலியோ ,கரடியோ, சிறுத்தையோ  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள

துப்பாக்கி,தலைக் கவசம், வெடிகுண்டுகள் வைத்துக்கொள்ளும் அறிவு பெற்றிருக்கவில்லை.

அறிவில் உயர்ந்த மனிதன்  ஏன்  பல இன்னல்களை  எதிர்கொள்ள நேரிடுகிறது?

அனைத்தையும் வெல்லும் திறன் கொண்ட மனிதனுக்கு ,

  மனத்தை மட்டும் கட்டுப்படுத்த முடியா நிலை
.
 அதன் விளைவு,

 பேராசை,பெண்ணாசை,பொன்னாசை ,பொறாமை .

அவன் மனத்தை ஒருமுகப் படுத்தினாலும் ,தீய எண்ணங்கள் ,பழக்கங்களுக்கு

அடிமையாகும் குணம் எங்கிருந்து வருகிறது,

ஒவ்வொரு மனிதனும் தன்னை குணஷீலனாக ,

சத்தியவானாக ,

நீதிமானாக

வெளிச்சம் காட்டவே விரும்புகிறான்.

 பலர் முன்னிலையில் தன்னை ஒரு

அயோக்யன்,கொலை ,கொள்ளை அடிப்பவன் ,

மோசக்காரன் ,ஊழல் வாதி

என்று கூறும் மனோ திடம் ஒருவருக்கும் இல்லை.

குறிப்பாக அநீதி செய்பவனின் தவறுகளைச்

 சுட்டி காட்டுபவன்

 பலருக்கு

விரோதியாகிறான்.

 அது ஏன் ?

ஏன் ? என்ற வினா ?

இறைவனின் மேல் பற்று உள்ளவர்கள்

மதங்கள் ,ஜாதி ,கடவுளின் நாமங்கள்

பெயரால் மனிதர்களுக்குள்

வேற்றுமை,வெறுப்பு ,உயர்வு ,தாழ்வுகளை

ஏற்படுத்தி  உலகில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றனர்.

இதற்கு ஆண்டவன் அளித்த அறிவுத்திறனே காரணமாகிறது.

அறிவுச் செல்வத்தை விட   தனம் அதாவது  பொருட்செல்வம்  பெற்ற மனிதன்

உலகியல் இன்பங்களால்  பேராசை அடைகிறான்.

இந்த செல்வங்கள்

/அசைய அசையும் சொத்துக்கள் மேல் உள்ள ஆசைகள் அதிகமானவர்கள்

அடிமனதில் பெரும் உருவாக்குகின்றன.

தாக்கத்தை ஏற்படுத்தி

உலகில் அமைதியின்மை ஏற்பட வழி  வகுக்கிறது.

புத்தர்,மகாவீரர்,சங்கரர். ராமானுஜர்  போன்றோர் ஆசை அகற்றி ஆண்டவன்

மேல்  பற்றுவை என்றனர்.

அந்த இறைப்பற்று இன்று பல ஆஷ்ரமங்களையும் ,

ஆலயங்களையும் உருவாக்கி  அங்கும்  ஊழல்.

 செல்வம் கொழிக்கும் இடங்கள். ஊழலின்றி இருக்குமா/?

ஆனால் இதைத்  தெரிந்தும் ,அறிந்தும் ,புரிந்தும் இறைவன் நாமாக்கள்

எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ ,அங்கு சென்றால் மன அமைதி.மன

திருப்தி.ஒரு மகிழ்ச்சி.நமக்கு ஆண்டவன் அருள் உண்டு என்ற பூர்ண

விசுவாசம்.

நம் உள்ளம் உண்மையானது. நமக்கு அளித்த

செல்வம்,தொழில்,வேலைவாய்ப்பு .பதவி வுயர்வு  அனைத்திற்கும்

மூலம் ஆண்டவனே  என்ற எண்ணம் பெரும்பாலனவர்கள் மனதில்

எழுவதன் மூலம் அறம்  வளர்கிறது.

ஊழல் குறைக்கிறது.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  என்ற உணர்வு மேலோங்குகிறது.

மன சாட்சி  வெல்கிறது.

 அங்குதான் ஆண்டவன் அன்பே உருவமாக காட்சி அளிக்கிறான்.Saturday, July 6, 2013

आस्तिक या नास्तिक

सुना, जाना, समझा,
जो मिन्नतें करते रहते हैं ,
उनके लिये काशाय और कमंडल;
तरु तले रहते हैं,अनासक्त जीवन जीते हैं;
वह है निष्काम भक्ति;
जो कुछ मांगते हैं ,
तब भक्ति सकाम हो जाती है;
अब आप कहिये -आप नास्तिक या आस्तिक.
आगे मंदिर में हीरा,चाँदी,सोना ,रुपये के बंडल
भरा पड़ा है ,क्या आपने कुछ चढ़ाया हैं;
क्या आप ने भक्ति के नाम ,
सोने का घड़ा,हीरे का किरीट बनाया हैं? या बनवाया है;
ए सब जो करते हैं वे हैं शासक.
ए बाह्याडंबर की भक्ति का आधार अर्थ.(धन)
तब सच्ची भक्ति अर्थहीन हो जाता है;
निष्काम भक्ति तो कौपीन धारण कर बैठना;
महावीर ने तो वह भी त्याग दिया;
आज़ कल के आश्रम कितना आडंबर,
वहां के बिस्तर का दाम चन्द लाख;चंदा दिये हैं श्रन्धालुओं ने;
खासकर राजनैतिक नेता से सम्बंधित;
करोड़ों क्या,रुपये गिनने में आय कर अधिकारी थक जाते हैं;
उत्तरखण्ड के सन्यासियों के यहाँ करोड़ों रुपये थे; वे वहाँ से हिलने नहीं तैयार;
बोलिये साहब आप आस्तिक हैं या नास्तिक;
क्या आपकी माँग क्या मामूली हैं ,
जिन्होने सोने के मंदिर बनवाये,सोने की मूर्तियाँ बनवाई;
अपने काले धन के बंडल डाले;
उनके विरुद्ध मांग; वे करते हैं हवन;
वे करते हैं प्रायश्चित ;रेशम की साडियाँ जलाते हैं;
बोलिये भक्त आजकल के हैं कैसे?
क्या आप भले ही आस्तिक हो या नास्तिक
रुपये बन-बनाते हैं सब कुछ; ज़रा सोचिये कभी शासक कभी पूजा की हैं;

उनके पैसे लेकर पूजा-यज्ञ करने वाले सच्चे वेदों के पण्डित;
वे चारों वेदों को एक भ्रष्टाचारी मंत्री को बचाने करते हैं प्रार्थना;
क्या ईश्वर आपकी मांग पूरी करेगा?या वेदाध्ययन के पण्डित के हवन-पूजा पाठ का. अब बोलिये,आप आस्तिक या नास्तिक; आपकी भक्ति सकाम है या निष्काम. 

Thursday, July 4, 2013

அவனின்றி அணுவும் அசையாது.

இறைவன்  இந்த உலகை படைத்துள்ளான்.

அவனது  படைப்பு விசித்திரம்.

பூசணிக்காய் ,ஆலமரத்துப்  பழம்  இரண்டையும் ஒப்பிட்டுக் 

கூறும் கதை அனைவரும் அறிந்ததே.

மரத்தின் மேல் இருந்து பூசணிக்காய் விழுவதும் .

ஆலம்  பழம்  விழுவதும்  எப்படி ?

அவ்வாறே ஒவ்வொன்றையும்  படைத்த ஆண்டவன்,


கொசுக்கள்,ஈக்கள், மூட்டைப்பூச்சிகள் போன்ற சிறு  ஜீவன்களால்

  மனிதனை ஆட்டிப்படைப்பது  விந்தையிலும் விந்தை.

அதில் மூட்டைப்பூச்சி உள்ளதே  அது பக்கத்து வீட்டில் தேடினாலும்

 கிடைக்காது. ஒரு வீட்டில் புகுந்தால் பெருகிக்கொண்டே இருக்கும்.

இது ஒரு அதிசய மாக இருக்கும்.

அவ்வாறே கொசு ஒரு வீட்டில் சிலரைக் கடிக்காது.

சிலரை கடிக்கும்.

கொசு கடித்த அனைவருக்கும்  நோய்கள் வராது.

ஆனால் பாதிக்கப்பட்டவரைக்  கடித்து  மற்றவர்கள் இரத்தம் 

உறிஞ்சினால் பரவும்.

இதுவும் ஒரு விசித்திர நிகழ்வே.

இந்த  கொசுக்களை அளிக்க ,மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க 


மருந்து கண்டுபிடித்த மூளையின்  படைப்பு.

நோய்கள்  மனிதனுக்கு ஒரு எச்சரிக்கை. 

அதிலிருந்து  தப்ப உரிய நேரத்தில் உரிய மருத்துவர் கிடைப்பது 

வரப்பிரசாதம்.

பல கோடீஸ்வரர்களின்  நோய் தீர்க்கப்படாமல் அவஸ்தைப்  

பட்டுக்கொண்டே  இருப்பார்கள் .

அடிக்கடி மருத்துவர்களின்  ஆலோசனை பெறுபவர்களும் 

அல்பாயுசுடன்  இறந்துவிடுவர்.

இந்த சமுதாய நிகழ்வுகள் மட்டும் நடை பெறவில்லை என்றால் 

நீதி,நியாயம் ,தானம் ,தர்மம் ,இரக்கம் ,கடமை உணர்வு  எதுவும் 

இருக்காது.

இந்நிலையில்  ஆண்டவனின் சம தர்மம், ஆண்டவனுக்கு முன் யாவரும் 

சமம்.

அரசன் அன்று, கொள்வான் அரசன், தெய்வம் நின்று கொல்லும் .
ள் ,ல்  எழுத்து  மாற்றம்  எப்படி ஏற்பட்டது. அதன் பொருள் எப்படி விபரீதம் 

இதை எல்லாம் ஒரு  அறிவின் ஆற்றலா?

அந்த அறிவு ஏன்  அனைவருக்கும் சமமானதாக இல்லை?

இதை எந்த அறிவியல் மேதையாலும் கூற முடியாது.


குற்றம் புரியும் அறிவுள்ளவன் மரணம் வரை தப்பிவிடும் ஆற்றல் சிலருக்கு உண்டு.
அவன் வாரிசுகள் படும் அவஸ்தை  கொள்வான்//கொ ல் வான்  என்ற முறையில் தான்.

ஹிந்தியில் सबहीं नचावत राम गोसाई   எல்லோரையும் ஆண்டவன் ஆட்டுவிக்கிறான்  என்ற ஒரு நாவல்.

அதில் ஒரு கொலைக் குற்றவாளி காவலில் இருந்து தப்பிக்கிறான்.
அவனுக்கு கிராமத்துப்பெண் அடைக்கலம் தருகிறாள்.
அவன் திருந்தி ,அவன் மகன்  நாட்டின் உள்துறை அமைச்சராகிறான். 
அவன் மூலம் குற்றங்கள் , அவன்  மரணத்திற்குப்பின் அரச மரியாதை உடன் 
அடக்கம் செய்யப்படுகிறான். இதெல்லாம் ஆட்டிவைப்பவன் இறைவனே என்ற நாவல்.

நமக்குள் இருக்கும்  திறமை,அறிவு ,சொல்வன்மை
 அனைத்தும் எப்படி வந்தது ?
நம்முடன் படித்த நம்மைவிட அறிவாளி என்று நினைத்த தோழர்கள் 

எப்படி உள்ளனர்.?

சிலரின் முகப்பொலிவு அனைவரையும் கவரும். சிலரைப்பர்த்த்தாலே வெறுப்பு தோன்றும், பலவாய்ப்புகள் கிடைத்தும் கை நழுவிவிடும்.

இதெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் ,

நமக்குமேல்  ஒருவன் உள்ளான்.

அவன் நம்மை ஆட்டிபடைக்கின்றான்.

அவன் மேல் அன்பு  வைத்தால் இம்மையில் நன்மை உண்டாகும்.

அவனின்றி அணுவும் அசையாது.