Sunday, June 23, 2013

அன்பே ஆண்டவன். பவித்திரமான பக்தியே ஆண்டவன் அருளாகும்.

ஆண்டவன்  அருள் ஆடம்பரத்தால் ,

பொன்னும் பொருளாலும்   கிட்டுமென்றால்,

வைரக்கிரீடத்தாலும் , பொன்-நகையாலும்

காணிக்கையால் காட்சி கிடைக்கும் என்றால் ,

வேள்விகள்-யாகங்கள்  ப்ராயச்சித்தத்தால்

இறைவன்   கருணை  கிட்டும் என்றால்,

நந்தனார் சரித்திரம் இல்லை.

கண்ணப்பர்  சரித்திரம் இல்லை.
துருவ நக்ஷத்திரக்   கதையோ,

பிரஹ்லாதன் கதையோ ,

அருணகிரிநாதர்,அப்பர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் இல்லை.

ஆதி சங்கரர் இல்லை;துளசிதாசர் இல்லை.கபீர் இல்லை;

பாண்டுரங்கன் விட்டல்  இல்லை;பண்டரிபுரமே இல்லை;

ராமகிருஷ்ண பரமஹம்சர்

விவேகானந்தர் இல்லை. யாருமே இல்லை.

முஹம்மது நபி இல்லை; ஏசுநாதர் இல்லை.

உண்மையான அருளாளர்களுக்கு ,

இறை அன்பே போதுமன்றோ.

லௌகீக சுகங்களுடன் இன்றைய ஆஷ்ரமங்கள்.

பொன்னும் பொருளும் கறுப்புப்பணமும் குவிந்து கிடக்கும்

கருவூலங்கள். களங்கங்களின்  புகலிடங்கள்.

மெய்வழி பொய்வழி ஆன கதை.

நித்தியானந்தம்,பிரேமானந்தம்,சதுர்வேதி கதைகள்,

உள்ளத்தூய்மையுடனான  அன்பே ,

பவித்திரமான பக்தியே ஆண்டவன்  அருளாகும்.









1 comment:

Unknown said...

அன்பிலர் எல்லாம் தமக்குரிஅர் ..அன்புடையர் என்பும் உரியர் பிரர்கு . if we live for others ..then there is no obstacle ...in moving towards the almighty..that is the basic principle of hindu dharna..