Wednesday, June 6, 2012

education and future india.

 எனது அகவை . கூடுகிறது .

எனது தந்தையின் குறைந்தவருமானத்தில் அம்மாவின் முயற்சியால் எனது படிப்பு  புகுமுக வகுப்புடன் முடிந்தது.இந்தி எதிப்புக்கிடையே எனது தாயார் ஹிந்தி வகுப்பு நடத்தினார்.எனக்கும் ஹிந்தி பயில ஹிந்தி ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது.ஹிந்தி வகுப்பில் படித்துக்கொண்டே அஞ்சல் வழியில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தேன்.மூன்றாண்டின் சிலவு 600/
தான்.வெங்கடேஸ்வர பல்கலைக்கழக முது கலைப் பட்டம் தனித்தேர்வராக எழுத  அனுமதிக்கட்டணம் 100/ரூபாய் மட்டும் திருப்பதி சென்று தேர்வு எழுத ஈராண்டு  சிலவு ரூ.200/-மதுரை பல்கலைக்கழக பி .எட் ..ரூ.1000/-.
ஹிமாச்சல் பிரதேச எம்.எட் --ரூ.600/-
மொத்தம்  ரூ.2500/ரூபாயில் இரண்டு இளங்கலை,இரண்டு முதுகலைப்பட்டங்கள்.
 இன்று எனது பேத்தி எல்.கே.ஜி.சிலவு ---நன்கொடையுடன் 50.000+15000=65000/
சீருடை தைக்க கூலி ரூ.250/
அதிக மான கட்டணம்  என்றால் அதைப்பொருட்படுத்தாமல் கடன் வாங்கியும்
சேர்க்க தயார்.இந்நிலையில்  பொதுமக்கள் அரசுப்பள்ளியில் சேர்க்க தயாராக இல்லை.முன்னாள் கல்வித்துறை இயக்குனர் டைடஸ்  ஒரு பொது நிகழ்ச்சியில்  அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதைவிட கல்லைக்கட்டி கிணற்றில் குழந்தைகளைபோடலாம் என்பது.
பொது மக்கள் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல் தனியார் உதவி பெறா பள்ளியில் குழந் தை களைச்   சே ர்த்துவிட்டு கட்டணம் உயர்விற்கு போராடுவது ஒரு கேளிக்கூத்தாகிறது.
இதற்கு அரசும் குழு அமைத்து நாடகமாடுகிறது.
பேருந்துவசதி,குளிர்சாதன வசதி,விடுப்பில் செல்லாத ஆசிரியர்கள் ,தனிவகுப்புகள்,சுத்தமான கழிவறைகள் ,எந்த அரசுப்பள்ளியில் இருக்கின்றன.
அரசியல் தலைவர்கள்,பெருபுள்ளிகள்,அரசு அதிகாரிகள்,அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என எல்லோரும் விரும்புவது  தனியார் பள்ளிகள்.
தனியார் கல்லூரிகள்.
பின்பு  ஏன்  போராட்டம்.வசதி இல்லை என்றால் அரசுப்பளியில் சேர்க்கலாமே ?
மன சாட்சி உள்ளவர்கள்  சேர்க்க ஆலோசனை கூறமுடியுமா?
அரசு நடத்தும் போலி நாடகம் மக்களுக்கு புரியவில்லை என்றால்
யார் குற்றம்/.

No comments: