Friday, June 8, 2012

VINDAIYANA PRAARTHTHANAIKAL.

அன்பு  என்பது எதிர்பாராமல் வரக்கூடியது.மனித இனம் ஏதாவது ஒன்றின் மேல்
அன்பு வைத்து அது பிரிந்தால் வேதனைப்பட்டு அந்த அன்பால் தன்  உயிரையும்
விடும் இனம்.காதலிக்காக ,காதலுனுக்கா,நாட்டிற்காக,தங்கைக்காக ,தம்பிக்காக,
தந்தைக்காக,தாய்க்காக ,ஊருக்காக ,மொழிக்காக,தன இனத்திற்காக,உலக மக்களுக்காக,ஜாதிக்காக,மதத்திற்காக  என பற்று வைத்து மகான் ஆனவர்களும்,இவர்களைப்பின் பற்றி இவர்களின் புகழுக்கு அஸ்திவாரக் karkalaaka   அடங்கி யாவர்களும் உண்டு.இது போற்றுவதற்குரிய
பற்று.

ஆனால்  பண வெறி கொண்டு நியாயத்திற்கு எதிராக அக்ரமங்கள் செய்யும்
சுயந லக்காதலர்கள் ,நீதிதேவனை கொள்பவர்கள்,நாட்டை காட்டிக்கொடுப்பவர்கள்,
மது.மாது மீது காதல் கொண்டு போதை வெறியில் வீட்டிற்கு
 அவமானம் தேடுபவர்கள், சூதாடிகள்,கிரிக்கட் கொள்ளையர்கள்,மணல் கொள்ளையர்கள்,பதவி வெறிபிடித்தவர்கள்,சுடு காட்டில் பிணம் எரிக்க பணம் பிடுங்குபவர்கள் ,பிணவறையில் பிணம் உறவினர்களிடம் கொடுக்க கையூட்டு
வாங்குபவர்கள்,விபத்து நடந்த பரிதப நிலையில் கொள்ளை அடிப்பவர்கள்,
இவர்களை எல்லாம் தப்ப வைக்கும் அதிகாரிகள் அரசியல் வாதிகள்,பத்திரப்பதிவு பதிவாளர்கள்  ,காவல் துறையினர் ,அறிதும் அறியாமல் அமைதி காத்து வாழும் மக்கள்,இவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆண்டவன்
விந்தை உலக மிது.கோயில்களில் நடக்கும் அநியாயங்கள்.
இந்த சூழலில் நாம் வாழ்கிறோம்.
இவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க இயற்கை தேவனிடம் பிரார்த்தனைகள்.

Wednesday, June 6, 2012

education and future india.

 எனது அகவை . கூடுகிறது .

எனது தந்தையின் குறைந்தவருமானத்தில் அம்மாவின் முயற்சியால் எனது படிப்பு  புகுமுக வகுப்புடன் முடிந்தது.இந்தி எதிப்புக்கிடையே எனது தாயார் ஹிந்தி வகுப்பு நடத்தினார்.எனக்கும் ஹிந்தி பயில ஹிந்தி ஆசிரியராக வாய்ப்பு கிடைத்தது.ஹிந்தி வகுப்பில் படித்துக்கொண்டே அஞ்சல் வழியில் டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்தேன்.மூன்றாண்டின் சிலவு 600/
தான்.வெங்கடேஸ்வர பல்கலைக்கழக முது கலைப் பட்டம் தனித்தேர்வராக எழுத  அனுமதிக்கட்டணம் 100/ரூபாய் மட்டும் திருப்பதி சென்று தேர்வு எழுத ஈராண்டு  சிலவு ரூ.200/-மதுரை பல்கலைக்கழக பி .எட் ..ரூ.1000/-.
ஹிமாச்சல் பிரதேச எம்.எட் --ரூ.600/-
மொத்தம்  ரூ.2500/ரூபாயில் இரண்டு இளங்கலை,இரண்டு முதுகலைப்பட்டங்கள்.
 இன்று எனது பேத்தி எல்.கே.ஜி.சிலவு ---நன்கொடையுடன் 50.000+15000=65000/
சீருடை தைக்க கூலி ரூ.250/
அதிக மான கட்டணம்  என்றால் அதைப்பொருட்படுத்தாமல் கடன் வாங்கியும்
சேர்க்க தயார்.இந்நிலையில்  பொதுமக்கள் அரசுப்பள்ளியில் சேர்க்க தயாராக இல்லை.முன்னாள் கல்வித்துறை இயக்குனர் டைடஸ்  ஒரு பொது நிகழ்ச்சியில்  அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதைவிட கல்லைக்கட்டி கிணற்றில் குழந்தைகளைபோடலாம் என்பது.
பொது மக்கள் அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்காமல் தனியார் உதவி பெறா பள்ளியில் குழந் தை களைச்   சே ர்த்துவிட்டு கட்டணம் உயர்விற்கு போராடுவது ஒரு கேளிக்கூத்தாகிறது.
இதற்கு அரசும் குழு அமைத்து நாடகமாடுகிறது.
பேருந்துவசதி,குளிர்சாதன வசதி,விடுப்பில் செல்லாத ஆசிரியர்கள் ,தனிவகுப்புகள்,சுத்தமான கழிவறைகள் ,எந்த அரசுப்பள்ளியில் இருக்கின்றன.
அரசியல் தலைவர்கள்,பெருபுள்ளிகள்,அரசு அதிகாரிகள்,அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என எல்லோரும் விரும்புவது  தனியார் பள்ளிகள்.
தனியார் கல்லூரிகள்.
பின்பு  ஏன்  போராட்டம்.வசதி இல்லை என்றால் அரசுப்பளியில் சேர்க்கலாமே ?
மன சாட்சி உள்ளவர்கள்  சேர்க்க ஆலோசனை கூறமுடியுமா?
அரசு நடத்தும் போலி நாடகம் மக்களுக்கு புரியவில்லை என்றால்
யார் குற்றம்/.

Saturday, June 2, 2012

arul puriyattum

அருள் நெறியில் சென்றால் ஆனந்தமாக இருக்கலாம்.ஆனால் அருள்நெறி பிரசாரம் செய்பவர்கள். ஆணவமாகவும்,மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை,பொருளாசை என்ற ரீதியில் ஆன்மிகத்தை அசிங்கமாக்கும் அவலங்கள் எதிர்கால இளைஞர்களை எப்படி மாற்றும் என்பது கவலைக்குறியதாக்குகிறது. மெய்வழிச்சாலை முதல் பிரேமானந்தா வரை, பூஜ்ய சத்யசாய் பாபா சமாதி நிலை அடைந்த பிறகு அங்கங்கே கிடைத்த கோடிக்கணக்கான பணங்கள், மடாலயங்களில் சேரும் கோடிக்கணக்கான பணம், அதற்கு வரி கிடையாது. ரசீதுகள் கிடையாது, பலர் நம்பிக்கையின் அடிப்படையில் தங்கத்தை கட்டி பண உண்டியலில் போடுகிறார்கள்.

கல்கி சாமியார் என்று யார் சாமியார் ஆனாலும் பணமும்,வெள்ளியும் தங்கமும் சேர்க்கிறது,வேலூர் பொற்கோயில்,மேல்வருத்தூர் கோயில் வளம் கொழிக்கும் ஆன்மீக தலங்கள்.வட இந்திய யாத்திரையில் சனிசிங்கனாபூர்,திரிகம்பகேஸ்வரர் கோயில்,

என அனைத்திலும் உண்டியலும் கிடையாது.சீரடி பாபாவின் அன்பர்கள் அடையும் ஆனந்தத்திற்கு வரம்பே இல்லை.ராகவேந்திரர்

அன்பர்கள் அருள்கடாக்ஷம் அடைந்து பேரானந்தம் அடைகிறார்கள்.பண்டரிபுரம் பற்றி கூறத்தேவை இல்லை.திருப்பதி,பழனி வேங்கடவன்,முருகன் அருள் இன்னும் பக்தர்களை பக்தி பரவசப்படுத்துகிறது. திருவண்ணாமலை கிரிவலம் சென்றவர்கள் நானும் தான்.

அங்கு சுற்றி சில தவறுகள் நடந்தாலும் அனைத்து புனித க்ஷேத்திரங்களும் மீண்டும் மீண்டும் செல்லத்தூண்டுகிறது.

சங்கரன்கோயில் ,திருநெல்வேலி ,நவ திருப்பதி,கும்பகோணம்,நவக்ரக ஹஸ்தலங்கள்,வைதீஸ்வரன் கோயில்,திருக்கடையூர்,

சமயபுரம்,திருவானைக்காவல்,ஸ்ரீ ரங்கம்,திருநள்ளாறு என நான் சென்று வந்த புண்ணிய ஸ்தலங்கள் அனைத்துமே

ஆனந்தம் அளிப்பவை.பேரானந்தம் தரும் க்ஷேத்ரங்கள்.அறிவியல் வளர்ச்சியுடன் ஆன்மீக வளர்ச்சி இந்தியாவில் வளர் வதை

சுயநல ஆதீனங்கள்,ஆஷ்ராமங்கள்,மடாலயங்கள்,போலி சாமியார்கள்,போலி சாதுக்கள் போன்றவர்கள் இடையூறு செய்வதை

ஒரு மாபெரும் சக்தி வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.மக்கள் தான் தன் ஞான திருஷ்டியால் இதை அறிந்து புரிந்து

மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் .இதற்கு ஆண்டவன் அருள் புரிய பிரார்த்தனைகள்.