Monday, March 5, 2012

அன்பு  என்பது இயற்கையாக ஏற்படவேண்டும்.அது தற்காலிக ஏமாற்றும் அன்பாக இருக்கக்கூடாது.நிரந்தரமாக இருக்கவேண்டும்.அதில் சிற்றலைகள்   பேரலைகள் எழக்கூடாது.ஆழ்கடல் அமைதி வேண்டும்.அசைவு சிறிதும் இருக்கக்கூடாது.ஐயத்திற்கு அப்பாற் பட்டதே உண்மையான அன்பு
அதிலும் இறைவன் மீது ஏற்படும் அன்பு எத்தகையதாக இருக்கவேண்டும்.
இரு நண்பர்கள்-காதலர்கள்-கணவன்-மனைவி  இவர்களை சந்தேகம் ஆட்டிப்படைத்தால் கொலை  வரை சென்று விடுகிறது.தற்கொலையில் முடிகிறது.மன முறிவால் மண முறிவு ஏற்படுகிறது.சிலர் மானம் போகிறது என்பர்.
இறைவன் மனிதனைப்படைத்து,ஆசா-பாசங்களைப் படைத்து,துன்பம்-இன்பங்களையும் படைத்து,தான் படைத்த மனிதன் தன்னை நேசிக்கிறானா,
என்ற ஒரே சோதனை வைக்கிறான்.மனிதன் தன் சாதனைகளால்,மாயையின் வசப்பட்டு, இறைவனை நினைப்பதில்லை.
இறைவன் மனிதர்களை மட்டும்  அறிவாற்றல் உள்ளவனாக,ஆற்றல் மிக்கவனாக,இயற்கையை வசப்படுத்துபவனாக வல்லவனாக படைக்கிறான்.
அனால் மனிதன் தன் அறிவால் தனக்கு மேல் இருக்கும் சக்தியை மறந்து
நேர்மை அற்ற வழியில் செல்கிறான்.பயன்? இயற்கைக்கு கட்டுப்படா
உலகியல் வாழ்வில் உழன்று  துன்பங்களுக்கு இடையில் கிடைக்கும் சிறிய அளவிலான இன்பத்தை  பெரிதாகக் கருதி அதுதான் முன்னேற்றம் என்று
தவறான நோக்கில் செல்கிறான்.இறுதியில் அவனுக்கு துன்பமே மிஞ்சுகிறது.

No comments: