Wednesday, February 1, 2012

kabeerin paarvaiyil bhaktiyum anbum kabeer eeradi.

kabeer::---- bakthiyum anbum
(௧)
जब लग नाता जगत का,तब लग बकती न होय.
नाता तोड़ी हरी भाजी,भक्त कहावै सोय.

கபீரின் நோக்கில் பக்தன் என்பவன் உலகின் பற்றைத் துறந்தவன்.
உலகப்பற்றைத் துறந்தவன் இறைவனை வழிபடுகிறான்.அவன் தான் பக்தன்
என்று சொல்லப்படுகிறான்.

(2 )
कामी ,क्रोधी ,लालची,इन ते भक्ति न होय.
भक्ति  करै कोई  सूरमा,जाति बरन कुल खोय.

உண்மை யான   பக்தன்  யார்  என்ற  என்று இன்றைய போலி பக்தர்களின்
நிலையை எலாம் நூற்றாண்டிலேயே கபீர் உணர்த்தியுள்ளார்.
பெண்ணாசை பிடித்தவன்,கோபக்காரன்,பேராசை உள்ளவன் பக்தனாக  முடியாது. இனம்,ஜாதி  ,குலம் ,வண்ணம் போன்ற வேறுபாடு பார்க்காத
சூரன் தான் பக்தி செலுத்தமுடியும்.
(இன்றைய பக்தி ஆசார்யார்களிடம் உலகப்பற்றும், ஆடம்பரமும்,பணம் பணம் ,பொன் என்ற ஆசைகளும் ,தீக்ஷை பெற குறைந்த பக்ஷம் பணமே பிரதானம்.பத்தாயிரம் இல்லாமல் சில பக்தர்கள்,கடவுள் என்று கூறும் ஆஷ்ரமத்தில் நுழைய முடியாது.)இது கபீரின் தீர்க்ஹா தரிசனம் என்றே கூறலாம்.
(௩)
जल ज्यों प्यारा माछरी,लोभी प्यारा दाम.
माता प्यारा बालका,भक्त प्यारा नाम.
இறையன்பனின்  பற்று இறைவன் மேல் அளவு கடந்து இருக்கும்.
மீனிற்கு தண்ணீர் மேல் அன்பு. பிரிந்தால் உயிர்  போய்  விடும்.
பெராசைக்காரனுக்கு பொருள்கள் மேல் ஆசை.அவனுக்கு தான் விரும்புவது மற்றவர்களிடம் கண்டாலே வேதனைதான்.ஈன்றெடுத்த தாயிக்கு
தன குழந்தையின் மீது அளவற்ற பாசம்.அவ்வாறே பக்தன் தன்
இறைவன் நாமத்தில் அன்பு வைக்கிறான்.
(4)
भक्ति गेंद चौगान की,भावै  कोई लै जाय.
कह कबीर कछु भेद नहीं ,कहा रंक कह राय.

கபீர் இறைவன் மேல் உள்ள  பக்தி  பந்து போன்ற ஒரு விளையாட்டுப் பொருள்
என்கிறார். அந்த பக்தி என்ற பந்தை யார் வேண்டுமானாலும் எடுத்து
ஆனந்தமாக  விளையாடலாம்.இதில் பணக்காரன் ஏழை என்ற வேறுபாடு
கிடையாது.கடவுளுக்கு ஏழை-பணக்காரன் இருவருமே சமம்
தான்.இறைவனை  ADAIYA உண்மையான பக்தி தான் அவசியம்.உயர்ந்த -
தாழ்ந்த ஜாதி இன வேறு பாடு கிடையாது.
(பணம் படைத்தவனும் மகிழ்ச்சி  இன்றி  உள்ளான்)(பக்தி தான் அமைதி தரும்)
(5)

अर्ब खरब  लौं दर्ब  है, उय अस्त लौं राज.
भक्ति महातम ना तुले,ये सब कौने काज.

கபீர் பக்தியின் மகத்துவத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது  என்கிறார்.
பணத்திற்கும் செலவத்திற்கும் கோடி-லக்ஷம் என்ற அளவிற்குத்தான் மரியாதை.ஒரு ராஜ்யத்தின் எல்லை எழுச்சியும் வீழ்ச்சி  வரை தான். 
அளவிட முடியாத செல்வம் ,ராஜ்ஜியம் பக்தி என்ற மகாத்மியத்தின் முன்
துச்சமானது.நிலையற்ற செல்வம்.நிலையில்லா பக்தி.













No comments: