Sunday, December 17, 2017

சந்நியாச யோகம் தொடர்ச்சி கீதை

    யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும்  உள்ள  வேறுபாடு

யோகி  வினையாற்றுகிறான்.ஆனால் பலனில் சற்றும் விருப்பமின்றி  வாழ்கிறான்.  அவன் மனம் எப்பொழுதும்
நிறைவாக  சாந்தியாக  இருக்கும்.
உடல் வேறு .ஆத்மா  வேறு.  தன்னை வசப்படுத்தியவன்
கர்மங்களை  எல்லாம் ஒதுக்கிவிட்டு ,ஒன்றும்  செய்யாது
மகிழ்ச்சியாக    இருக்கிறான்.

 கர்மங்களில்    நித்திய கர்மங்கள் -அதாவது அன்றாடம் கட்டாயமாக    செய்யவேண்டியது. அந்த   கர்மங்களை  செய்தால்   புண்ணியமில்லை,ஆனால் செய்யாவிட்டால் உடல்  இன்னலுறும் .காலைக்கடன் ,நீராடுவது,வழிபடுவது .
அன்றாடம் செய்யவேண்டும்.

காரண கர்மம்--  இது  விஷேசகாலங்களில்  செய்யப்படும்
கர்மமாகும்.
காம்ய கர்மம் --விருப்பத்திற்காக பலன்களை எதிர்பார்த்து
செய்யப்படும்   வினைகள்.
நிஷித்த கர்மம்--தடை செய்யப்பட கர்மங்கள்.
இவைகளைச் செய்யவே கூடாது.
இந்த வினைப்பலன் என்பது தெய்வீகமல்ல.
இயற்கையாக இயல்பாகச்   செய்ய வேண்டியவை.

   
  பரமாத்மா இவ்வுலகில்  செய்யப்படும்  புண்ணிய -பாபங்களை  கவனிப்பதில்லை.    இங்கு ஞானம்   உள்ள  மனிதன்    அக்ஞானத்தால்  ஞானம் மறைக்கப்படுகிறது .

திருமண பந்தம்  வேண்டுமா ? வேண்டாமா ?என்ற  வினா எழும்    போது   வேண்டும்  என்பதே இயல்பு.  அப்படித் தன்னை  லௌகீகத்தில்  இணைத்துக் கொள்ளும்போது

அவன் உலகியலில் கட்டுப்படுகிறான்.  சித்தார்த்தர் கட்டுண்டார் . ஆனால் விலகிச் சென்றார்.    அவர்  யதார்த்த

நிலையில்  இருந்து ஒரு  ஆதர்சத்தைத் தேடி  தனது அனைத்து
ராஜபோகங்களையும் துறந்தார்.  அவர் இயற்கை  பந்தத்தில்
இருந்து  விடுபட்டார்.   இதில் தான் வேதாந்த சாரம் அடங்கியுள்ள து. விவேகானந்தர், ஆதி சங்கரர் இயற்கை ஆசாபாச பந்தங்களை விடுத்து தெய்வீக  அதாவது அலௌகீக பந்தங்களில் ஈடுபட்டனர். ஸ்ரீ ரமண மகரிஷியும் அப்படியே.

சூரியன்  உதித்தால்  இருள்  விலகுகிறது.  அவ்வாறே ஞானமும்  அக்ஞானத்தை அளிக்கும் ஒளியாகும் .
ஆத்மா ஞானம்    என்பது பரபிரம்ம    ஞானமே.
  ஞானம் வந்தபின் பிரம்மமே  அனைத்தும் என்ற  எண்ணம்  மேலோங்கும்.  அதையே அவர்கள் புகலிடம்   என்று பிரம்மத்தில்  உறுதியாக  இருப்பார்கள். ஞானத்தால்  பாவங்களைப்  போக்கிவிடுவர். அத்தகையோருக்கு  மறு பிறவி இருக்காது.
 ஞானம் பெற்ற   ஞானி  மனதில் உலகியல் படைப்புகள்  அனைத்துமே     சமம் தான்.  அறிவில்    சான்றோன்  அந்தணன்,பசு ,யானை ,நாய்,நாயையே உண்ணும் கீழோன்
என     அனைத்தையும்   சமமாகவே நோக்குவார்கள். கருத்துவார்கள்.
மனம்  சம  நிலை அடைந்து விட்டால்  மனத்தை உறுதிப்படுத்திவி ட்டால், இம்மையில்   இயல்பான
குணத்தை ,இயற்கையை   வென்றவனாகிறான்.
பிரம்மம்   சமநிலையுடையது.  எவ்வித குற்றம்  குறை
   இல்லாதது.   ஞானிகள்  இதை  அறிந்து  பிரம்மத்தில்
நிலைத்து ஐக்கியமாகி விடுகின்றனர்.
இந்த   ஐக்கிய   ஞானம்   பெற்றபின்     அவன் குழப்ப  நிலையில்  இருந்து   முற்றிலும்   விலகிவிடுகிறான்.

அவனுக்கு பிரியமானவைகள் பெறுவ தால்  இனிமையும் இல்லை.
பிரியமில்லாததைப் பெறுவதால்  இன்னலும் இல்லை.

Friday, December 15, 2017

சந்நியாச யோகம்

  ஸ்ரீ கிருஷ்ண  பகவானின்   கர்ம யோகம் ,
ஞானகர்ம  சந்நியாசயோகம்
இரண்டையும் கேட்டு   அர்ஜுனன்
தெளிவடைய வில்லை .

  அவன் மேலும்  விளக்கம் கேட்க  ஆரம்பித்தான்.

கர்மத்தை செய்யச் சொல்கிறீர்கள்.
கர்மத்தை விட்டுவிடச் சொல்கிறீர்கள் ,
இந்த இரண்டிலும்  எது  சிறந்தது  என 

உறுதி நிச்சயக்கிப்பட்டதை எனக்குச்    சொல்லவும். என்றான். 

ஸ்ரீ கிருஷ்ணர்     மேலும்  விளக்க  ஆரம்பித்தார்.


       இதற்கு   கர்ம சந்நியாச யோகம், கர்மயோகம் ஆகிய  இரண்டுமே  மிகச் சிறப்பைத் தரக்கூடியது தான்.
 ஆனால் இரண்டையும் ஒப்பிடும்போது 
சந்நியாசத்தை  விட  கர்மயோகம்  மேலானது.

  வெறுப்பையும்  விருப்பையும் 
  மனதில்  வைத்துக்   கொள்ளாது
 இருப்பவன்
நித்திய   சந்நியாசி.
இவ்வுலக   வாழ்க்கையும் ,
அவ்வுலக   வாழ்க்கையும் 
 அதாவது  இம்மையும் ,மறுமையும்   
 சம  நிலையாக  எவ்வித  பற்றும்  இல்லாதவன் 
  எளிதாக  உலகியல்  பந்தங்களில் இருந்தும்
 விடுபட்டு  உயர்ந்த   நிலையை 
அடைந்து விடுகிறான்.
 சிறு குழந்தைகள்  தான்   
கர்மசன்னியாசமும்  சாஸ்த்திரத்தின்  ஆழ்ந்த    கருத்துக்களையும் அறியாமல்
இரண்டையும்  வேறாகக்    கருதுவர்.
 இரண்டும் ஒன்றே ஆகும். 
ஒன்றை   பின்பற்றி   இரண்டின்     பலனையும்   அறியலாம்.      அறிவினால்  இயற்கையின்      இயல்பை 
அறிவதே    சாங்க்யம்,   
 இதுவே  ஞான மார்க்கமாகும்.
கர்மயோகத்தில்   ஈடுபடாமல் 
   கர்மத்தின்    துறவறம் 
இன்றியமையாதது. 

 கர்ம  யோகத்தில்  ஈடுபட்டவன்
     தெளிவான  மனதுடையவன்.
   உடலின்பங்ககளை  வென்றவன்.
புலன்  அடக்கம் உடையவன். 
அனைத்தும்   ஆத்மாவெனக்  காண்பவன்.
   உலக  மாயையில் இருந்து விடுபட்டவன்.

   அவன்     தத்துவம்  அறிந்த   யோகி.
 அவன் தன்  ஒவ்வொரு  செயலையும் 
  தானே  செய்வதாக    அறிய  மாட்டான். 

பார்த்தல்,கேட்டல்,    தொடுதல்  ,நடத்தல், தூக்கம்,  சுவாசம்,
பேச்சு ,  என அனைத்திலும்     தன்   
தொடர்பு    இல்லை  என்று   கருதுபவன்.
   கண் மூடி தியானம் செய்தாலும்
  திறந்தாலும்
 புலன்கள்  அதன் போக்கில்
போகின்றவை  என்று அறிந்தவன்.
 ஆகையால் அவன் செயல்கள்
அவனால் செய்யப் படுவதில்லை
 என   உணர்ந்தவன். 
ஒவ்வொரு செயலின் கர்த்தா  இறைவனே  என்று     இறைவனைச் சார்ந்து 
பற்றுதல்களை புறந்தள்ளி 
   தாமரை  இலை 
தண்ணீர்     போன்று    பாவங்களில்
   இருந்து  முக்தி அடைந்து     
கர்மங்களில்  ஈடுபடுவான்.

யோகிகள்    பற்றுக்களைத்  துறந்து   
மனத் தூய்மைக்காக 
 உடல்,உள்ளம் ,அறிவால்,
புலன்களால் கர்மங்களை  செய்கிறான்.

Wednesday, December 13, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்-௬


       அபான வாயுவில் பிராணவாயுவையும் ,
பிராணவாயுவில்  அபானனையும்
ஆகுதி செய்து இவ்வாயுக்களின் போக்கைத்தடுத்து பிராணாயாமத்தில்  ஈடுபடவேண்டும்.

பிராணாயமம் செய்தால் சுவாசம் சீரடைகிறது.  இந்த மூச்சுவிடுவதில்  நம் உள்ளத்தின் உண்டாகும் மனோபாவங்கள் வெளிப்படும்.  சாதாரண    உடற் பயிற்சி
ஓட்டத்தில் வரும்  மூச்சுக்காற்று  ஒருவிதமாக இருக்கும்.
பயத்தில் ஓடும்போது ஒருவிதம், காமத்தில் ஒருவிதம்,
கோபத்தில் ஒருவிதம் , அன்பில் ஒருவிதம், நோயில் ஒருவிதம்
என மன நிலைக்கேற்ற  மூச்சு. இதைக்கட்டுக்குள்
கொண்டுவர பிராணாயமம் தேவைப்படுகிறது.

நமது  சுவாசம் மூக்கு வழியாகவே   இருக்கவேண்டும்.

மூக்கில்   உள்  செல்லும் வாயு  அபானன் . இதை பூரகம் என்பர்.

.வெளிப்படுத்தும் வாயு   பிராணன்.  இதை ரேசகம் என்பர்.
பிராணவாயுவை உள்ளே வெளியே அடக்குதல் கும்பகம்.
 இந்த  பிராணாயாமப்  பயிற்சி முறைப்படி செய்யவேண்டும்.

  இப்படியே   வேள்விகளும்  முறைப்படி  செய்தால் பாபத்தைப்  போக்கலாம்.  முனிவர்கள் இப்படியே  வேள்வியால்    பாவத்தைப் போக்கியுளனர்.
வேள்வி செய்யாதவர்களுக்கு  இவ்வுலகமும் இல்லை.
அவ்வுலகமும்  இல்லை. வேதத்தில் பலவித வேள்விகள்
விளக்கப்பட்டுள்ளது. 
  இந்த  வேள்விகளில் பொருட்களைக்கொண்டு  செய்யும் வேள்வியை   விட ஞானத்தால்  செய்யப்படும் வேள்வியே மிக  உயர்ந்தது.  உலகியல்     கர்மம்  ஞானத்தில்  முற்றுப்பெறுகிறது.

ஞான வேள்வியை பணிந்தும் ,கேட்டும், பணிவிடைய செய்தும்  அறிந்து செய்யவேண்டும்.

அந்த ஞானம்  பெற்றால்  உலகியல் மயக்கம் ஏற்படாது.
அனைத்தையும்  ஒன்றாக  ஒரு  பரம்பொருளாகக் காண்பது
ஞானம்.   மிகப்பெரிய பாவிகளும்  ஞானம் பெற்றால் பாபா விமோசனம்  பெறுவார்கள்.  ஞானக்கனல் நமது தீய நல்ல 
கர்மங்களையெல்லாம்  எரித்துவிடும். விறகுகள் தீயில் எரிந்து சாம்பலாவது போல.
இவ்வுலகில்  ஞானத்திற்கு    இணையானது எதுவுமே இல்லை.
 ஞானம்  பெறுபவன்   மிகச் சிரத்தையுடவன். ஐம்புலன்களை  அடக்கியவன்,  பரத்தைச் சார்ந்திருப்பவன்.   அவன்  ஞானத்தால் சாந்தி அடைகிறான்.

     அறிவில்லாதவன் , சிரத்தை இல்லாதவன் ,
சந்தேகப் படுபவன் , இவ்வுலகிலும் அமைதி பெறாதவன் . அவ்வுலகிலும்   அமைதிபெறமுடியாதவன்.
அவனுக்கு எங்கும் சுகம் இல்லை. 

யோகத்தால் கர்மத்தை விட்டுவிடவேண்டும். 
ஞானத்தால் சந்தேகத்தை விட்டுவிடவேண்டும்.
ஆத்ம சொரூபத்தில் திளைத்திருந்தால் கர்மங்கள்
மீண்டும்  செய்யத் தூண்டப் படுவதில்லை.

அஞ்ஞானத்தை  விட்டு  ஆத்மாவின் ஐயத்தைப் போக்கி
 ஞானம் பெற வேண்டும்.

   ஞான கர்ம சந்நியாச யோகம்.

Tuesday, December 12, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்.- 5 ௫கீதை

     பாவத்தை அடையாதவர் யார் ? என்பதை பகவான் கூறுகிறார் --
ஆசையற்றவன்,
 பற்றற்றவன் ,
புலன்களையும்  மனதையும் அடக்கியவன்.
 செல்வங்களைத் துறந்தவன் ,
உடலால் கர்மங்களைச்செய்பவன்  ,பலனை எதிர்பார்க்காதவன் ,
எதிர்பாராமல் கிடைப்பதில் மகிழ்பவன்,
பொறாமை   இல்லாதவன் , வெற்றி -தோல்விகளைச் சமமாக நினைப்பவன் ,
நடுநிலையாளன் ,கடமையை வேள்வியாகச் செய்பவன்,
ஞான வேள்வியில் அனைத்தையும்
பிரம்ம   ஸ்வரூபமாக  நினைப்பவன் ,
ஐம்புலன்களை  அடக்குதல்,
ஐம்புலன்களிலும்  இறைவனையே காண்பவன் , கேட்டால் இறைவனின் செய்திகள், பார்த்தால் அங்கிங்கெனாதபடி  எங்கும் எதிலும்
பகவானே .
 வள்ளுவர்  கடவுள் வாழ்த்தில் -

பொறிவாயில்  ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்  என்கிறார்.

மனதை ஆத்மாவிற்காகவே   ஒதுக்குதல் , அடக்குதல்,

திரவிய யக்ஞம் , தபோ யக்ஞம் ,யோக  யக்ஞம் .
இந்த வேள்வியில் தன்னிடம் இருப்பதை எடுத்து வழங்குதல்.
ஞானத்தைக்  கொடுத்தால் ஞானம் வளரும் , திரவியம்   கொடுத்தால்  திரவியம் கிடைக்கும், ,
இந்த ஞான   வேள்வி  யின் யதார்த்தம் இதுதான்.

ஞான கர்ம சந்நியாச யோகம் -கீதை -௪.

           இவ்வுலகில்  ஞானிகளால் 
 பண்டிதன் என்று  புகழப்படுபவன்,
ஆசையற்றவன்.
 அவனது செயல்கள்
ஞானாக்னியால்    எரிக்கப்பட்டவை.
 எவ்வித உறுதிமொழி
யும்  ஏற்கப்படாதவை.
 அத்தகையோர்  வினைப்பயனை 

எதிர்பாப்பதில்லை.
 யாரையும்  சார்ந்திருப்பதில்லை.
 அத்தகையோர்    செய்யும்  கர்மம்  கர்மமாக  ஏற்றுக்கொள்ளப்  படுவதில்லை. 

ஆசிரியர்  நன்கு எழுதிய  மாணவனுக்கு
அதிக  மதிப்பெண் தருகிறார்.
  சரியாக  எழுதாத மாணவன்
குறைந்த மதிப்பெண் பெறுகிறான்.
அதிக மதிப்பெண்   பெற்ற  மாணவனின்
   பெற்றோர்கள்  மகிழ்கிறார்கள்.
குறைந்த     மதிப்பெண் பெற்ற 
மாணவனின்   பெற்றோர்கள்
வருந்துகிறார்கள். 
இதற்கு ஆசிரியர் பொறுப்பல்ல.
 மகிழ்வு ,வேதனைக்கு    ஆசிரியரின்
 கர்மா பொறுப்பல்ல,

Monday, December 11, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

ஞான கர்ம சந்நியாச யோகம் --கீதை-௩.

  பகவானை  அறிய வழி என்பதை
 ஸ்ரீ கிருஷ்ணன்  கூறுவது;-

பக்தனுக்கு  வினை யாற்றுவதில் 
 வினைப்பலனில்  
கடுகளவிலும்  ஆசை
   இருக்கக் கூடாது.
  கர்மங்களில் ஈடுபடுவதால் 
கர்மபலனை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
கர்ம பலனானால்
 ஆசைகள் அதிகரிக்கின்றன.
 பகவான் கர்மங்களுக்கும் 
ஆசைகளுக்கும் அப்பாற்பட்டவர்.
அவ்வாறே  பகவானின் வடிவை
அருளைப் பெற விரும்புபவர்கள்
ஆணவமற்று,ஆசையற்று  இருக்கவேண்டும்.
எந்த கர்மங்களும் கட்டுப்படுத்தக்  கூடாது.

     முமுக்ஷு என்று முடிக்கிறவனுக்குக்
கொடுத்திருக்கும் லக்ஷணங்கள் ,
அவன் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு
ஸாதனையில் உச்சிக்குப் போனவன் என்று
 
   தன்  தெய்வத்தின்  குரலில்  மஹா பெரியவா கூறுகிறார்.
அந்த முன்னாளைய முமுக்ஷுக்கள்  இதை அறிந்தே
கர்மங்களைச் செய்தனர்.
இப்படி தொன்று தொட்டு வரும் முறையையே
ஸ்ரீகிருஷ்ணர்    அர்ஜுனனுக்கு சொல்கிறார்.
 மனம் என்ற ஒன்று இல்லை
என்ற   நிலைக்கு  வரவேண்டும்.
 கர்மங்களில்  ஆசைகள் இருக்கக் கூடாது.

  மனிதர்களுக்கு  கர்மம் எது
?அகர்மம் எது ? என்று தெரிவதில்லை.
 ஞானிகளே   இவ்விஷயத்தில்   தெளிவடைவதில்லை.
அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர்  கர்மங்களைப் பற்றியும் ,
கேடுகளில் இருந்து விடுபடுவது பற்றியும்   விளக்குகிறார்.

  நாம் செய்யும் கர்மத்தின் போக்கைத் 
தெரிந்து  கொண்டால் ,
விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரிந்துவிடும்.
இதில்  கர்மம்  என்பது 
 உடலால் நடைபெறும் செயல்களாகும் .

அகர்மம் என்பது ஞானத்தால் செய்யபடுவது.
  சரீர கர்மங்கள் சில இயற்கையாக ஏற்படுவது,
அதில் சில காலைக்கடன் போன்றவை
  கட்டாயம் கழிக்கக் கூடியது.
இதைத் தடுக்க முடியாது.
ஆனால்  பாலின  கவர்ச்சி என்பதைக்
 கட்டுப்படுத்தலாம்.
வீணாக ஒழிந்து ஒட்டு கேட்கக் கூடாது.
தீயவைகளைப்பேசி  பரப்பக்கூடாது.
என்று புலன்களைக் கட்டுப்படுத்தும் போக்கில் 
நாம்  நம் கர்ம வினைகளின் நல்ல
தீய போக்கை அறிந்துகொள்ளலாம்.

 மாற்றான் மனைவியை நோக்குதல் சரீர பாவம்.
  அவதூறு பொய்யாக பரப்புதல் நாக்கின் தவறு .
 இதை எல்லாம்  நாம்  தவிர்த்து  ஆசையில்லாமல்
இருப்பதையே  முமுக்ஷுக்கள் செய்து முக்திபெற்றனர்.
 ஞானம் பெற்றனர்.

 கண்ககள் நல்லவைகளைப் பார்க்கும் போது
 நம்  செயல் போக்கு நமக்கு உணர்த்தும் .
 தவறான பார்வை  கெட்டபார்வை என்பது
 எதைப்    பார்க்கக் கூடாதோ அதைப்பார்ப்பது.
 ஞானத்தால் செய்யப்படும்    செயல்  அறிந்தே   செய்யப்படுவது.

அறிந்தே செய்யப்படும் காரியங்களின்
போக்கில்   நமது தீய வினை  புரிந்து விடும்.

ஊழல் புரிந்து பணம் சேர்ப்பது , அறிந்து பொய் பேசுவது ,

கையூட்டு பெறுவது, கடமையில்  கவன மின்மை,

 அலட்சியப்போக்கு , நேர்மையற்ற செயல் இவை
 தெரிந்தே   செய்வது. இதில்  வெற்றி  கிட்டினாலும் 
ஆண்டவனின்  தண்டனையில் இருந்து தப்ப    முடியாது.


ஆகையால் நமது வினைகள் உடலாக இருந்தாலும் சரி ,
அறிவால்  செய்யப்படும்  கர்மமானாலும் சரி 
அதன் தன்மையை ஸ்ரீ கிருஷ்ண பகவான்   அறிந்து
அதற்கேற்றபடி    அருள் புரிவார்  என்பதே
இந்த கர்ம   வினைப்  பயனாகும்.

கர்மத்தில் அகர்மத்தையும் , அகர்மத்தில்  கர்மத்தையும் காண்போன்  மக்களுள்  மேதாவி.
அவனே  யோகி.
அவனே   எல்லாம்  செய்து  முடித்தவன் .
என்று ஸ்ரீ பகவானே அர்ஜுனனுக்குத் 
 தெளிவு படுத்துகிறார்.

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை

ஞான கர்ம சந்நியாச யோகம் --௨. கீதை 

  வழிபடுவது என்பது  எளிதல்ல.
ஒவ்வொருவரும்  ஆண்டவனிடம்
ஒவ்வொருவித  வேண்டுகோள்கள் வைப்பார்.
பிரசாதமும் வகை வகையாக.
சக்கரைப்பொங்கல், வெண்பொங்கல் ,
கல்கண்டு  பொங்கல்,.
அவ்வாறே வழிபடும் முறை ,
அணுகுமுறை ,கோரிக்கை  அவரவர்களுக்கு
ஏற்ற அனுக்ரஹம். கடவுளின்  கருணை    என்கிறார்
பகவான் கிருஷ்ணர்.
நாடு வாழவேண்டும் , வையகம் வாழவேண்டும்,
நான் மட்டும் வாழவேண்டும்.
என் மக்கள் வாழவேண்டும்.
இப்படியே தான்  அதிகமானவர்கள் கோரிக்கை இருக்கும்.
இறைவனிடம் நீயே கதி ,எனக்கு முக்தி என்பது
எத்தனை பேரின்  கோரிக்கையாக இருக்கும்.
இறைவனே உன்னடி  சரணம் . நானே உன்    குழந்தை .
எனக்கு  நீதான் வேண்டும் . உன் அருள்மட்டும் போதும்.
உயர்வு,செல்வம் ,மரியாதை எல்லாமே   மாயை.
கர்மவினைப்படி  இறைவா!
என்னைப்படைத்த  நோக்கம் அறிந்தவன்  நீ.
உன் விருப்பப்படி   என்னை    வழி நடத்திச்  செல்.
 என்று முற்றிலும் அவனை நம்பி 
   எவ்வித  ஆசையும் இன்றி  ஆத்மஞான  பிரார்த்தனை. முடியுமா ?
இதையெல்லாம் கண்காணித்தே 
ஆண்டவன் அருள் பொழிவார்.என்று
 கிருஷ்ண பகவான் தன்னைப்பற்றிய
விளக்கத்தை  அளிக்கிறார்.

   தங்கள் கர்ம   பலனை  உடனடியாக  பெற
இறைவனை வழிபடுகிறார்கள்.
 உலகில்  பணியாற்றியதும்  ஊதியம்
கிடைக்கிறது. 
  வழிபடாமல்  எதிர்ப்பவர்களும்
உயர் நிலையில்     இருக்கிறார்கள் .
 
 இது கர்ம வினை ,பூர்வ ஜன்ம
புண்ணியம்  .பலவிதத்தில் இறைவன்
 ஆராய்ந்து  உயர் ,  தாழ்     நிலைகளில் 
வைப்பதாக
 ஸ்ரீ கிருஷ்ண    பகவான்   தான் தான்
  அனைத்தும்   என்கிறார்.


  அறிவு ,செயல் ,ஞானம் ,குணம்,நடத்தை
 ஆகியவற்றின்  அடிப்படையில்     நான்கு 
வர்ணங்களைப்  படித்ததாகக்
கூறுகிறார்.  ஆனால் நிறம் கொண்டு  பிரிக்கவில்லை.
இயல்பைக்கொண்டே  பிரிக்கிறார்.